Sponsored


Thirikadugam

Discussion in 'Good Morning Everybody......!!!' started by Pattu, Oct 15, 2016.

Sponsored


  1. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113

    Sponsored


    திரிகடுகம்

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் வரிசையில் மற்றொரு நூல் திரிகடுகம்.
    .
    திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு,திப்பிலி
    ஆகிய மூன்று மருத்துவ குணம் பெற்ற பொருட்களைக் குறிக்கும்.இம்மூன்று மருந்து பொருட்களும் உடல் நலத்தைக் கொடுப்பது போல, நூறு செய்யுட்களைக் கொண்ட திரிகடுகம் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களைச் சொல்கிறது.இவை உயிர் நலத்தை பேணுவனவாகும்.ஆகவேதான் இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது.
     
     
  2. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    ஆசிரியர்
    திரிகடுகம் என்ற உயிர் மருந்து நூலை ஆக்கியவர் நல்லாதனார். ஆதனார் என்பது இயற்பெயர். ‘நல்’ என்பது அடைமொழி. காப்புச் செய்யுளில், பூவை வண்ணன் ஆகிய திருமால் உலகம் அளந்தது, குருந்தமரம் சாய்த்தது, மாயச் சகடம் உதைத்தது ஆகியவை பற்றிக் கூறியிருப்பதால் இவர் வைணவ சமயத்தவர் என்பது பெறப்படும். இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

    உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
    அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
    திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
    மருவு நல்லாதன் மருந்து.

    என வரும் பாயிரச் செய்யுளும் இதையே உணர்த்துகின்றது.

    இந்நூலில் ஒவ்வொரு பாடலிலும் மும்மூன்று செய்திகளை ஒரு பொதுக் கருத்தோடு இணைத்துக் கூறும் முறை போற்றுதற்குரியது. பொதுக் கருத்துக்கள் ஈற்றடியில் வற்புறுத்தப்படுகின்றன.
     
    Kalyani P, vaisri02, sugatha and 7 others like this.
     
  3. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    நூல் அமைப்பும் சிறப்பும்

    திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார்.

    திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும் அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.

    இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும். ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.

    இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது. இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது. இது இல்லறத்தின் உயர்வை உணர்த்தும் வகையில் விளங்குகிறது.
     
    Kalyani P, vaisri02, beem and 8 others like this.
     
  4. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    கடவுள் வாழ்த்து

    கண்ணகல் ஞாலம் அளந்துதூஉம் காமருசீர்த்
    தண்ணறும் பூங்குருந்தம் பாய்த்ததூஉம் - நண்ணிய
    மாயச் சகடம் உதைத்தூஉம் இம்மூன்றும்
    பூவைப்பூ வண்ணன் அடி.


    உலகத்தை அளந்ததும், குளிர்ச்சியான மலர்களை உடைய குருந்த மரத்தைச் சாய்த்தும், வஞ்சகமான வண்டியை உதைத்ததும் ஆகிய மூன்றும் நிகழ்த்திய திருமாலின் அடிகளை வணங்கினால் அனைத்து தீமைகளும் போகுமே.

    சகடம் - வண்டி
     
    Kalyani P, vaisri02, beem and 13 others like this.
     
  5. ugina

    ugina Bronze Wings New wings

    Messages:
    1,570
    Likes Received:
    1,062
    Trophy Points:
    113
    thanks pattu
     
    beem, Pattu and venila like this.
     
  6. afnaan

    afnaan Bronze Wings New wings

    Messages:
    1,532
    Likes Received:
    3,228
    Trophy Points:
    133
    Thanks...sis
     
    beem, Pattu and venila like this.
     
  7. Srjee

    Srjee Bronze Wings New wings

    Messages:
    1,680
    Likes Received:
    3,076
    Trophy Points:
    133
    Thanks sis
     
    beem, Pattu and venila like this.
     
  8. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,187
    Likes Received:
    2,035
    Trophy Points:
    133
    Nice One Pattu Mam!!
     
    Pattu and beem like this.
     
  9. Sree

    Sree Wings New wings

    Messages:
    1,037
    Likes Received:
    296
    Trophy Points:
    83
    Thanks Pattu Maami.
     
    Pattu and beem like this.
     
  10. ashwinisundar

    ashwinisundar Contributor New wings

    Messages:
    2,299
    Likes Received:
    291
    Trophy Points:
    83
    hi Pattu

    thank you so much for thirikadugam
     
    Pattu and beem like this.
     

Share This Page

Sponsored