Sponsored


deepavali kondattamum thindattamum _Ila

Discussion in 'Articles/Essay' started by Lady's Wings, Nov 11, 2016.

Sponsored


  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,366
    Likes Received:
    3,350
    Trophy Points:
    113
    Admin Post

    Sponsored


    தீபாவளி.... கொண்டாட்டமும் திண்டாட்டமும்.....

    வணக்கம் நட்புக்களே....

    இப்படி ஒரு கட்டுரை தலைப்பை கொடுத்த நம் லேடிஸ் விங்க்ஸ் தளத்திற்கு முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    தீபாவளி.... இந்த ஒரு வார்த்தை சிறிய வயதில் பல வண்ணங்களை விதைத்த பெருங் கனவாய் இருந்து இருக்கிறது.


    ஒவ்வொரு தீபாவளிக்கும், தீபாவளி முதல் நாளன்று வெளிச்சங்கள் உமிழும் கடை வீதியின் இருபுறமும் சிறு வணிகர்கள் வைத்திருக்கும் துணிக் கடை முதல், தள்ளு வண்டிக் கடை வரை வேடிக்கை பார்த்த படி, பிடித்த பொருளை பேரம் பேசி வாங்கி தரும் அம்மாவின் முந்தானையை பிடித்த படி வலம் வருவதில் தொடங்கி விடும் குழந்தைகளின் தீபவாளி கொண்டாட்டம்.

    வாங்கி வரும் கொள்ளுப் பட்டாசிற்கு துப்பாக்கி கிடைக்காமல் மிளகு நசுக்க வீட்டில் இருக்கும் குண்டாங்கல்லை எடுத்து துப்பாக்கியாக்கிய சுவாரசியங்கள் மிகுந்தவை சிறுவயது தீபவாளி கொண்டாட்டங்கள்.

    எந்த பலகாரம் வீட்டில் இருந்தாலும் எதிர் வீட்டில் இருந்து வரும் பலகாரங்களுக்காக வீட்டில் தம்பி தங்கைகளுடன் அடிதடி நடக்கும் அழகிய நாட்கள் அவை.

    இதுவரை எத்தனையோ தீபவாளி கொண்டாட்டங்களை கடந்து வந்து இருந்தாலும், பழமை என்னும் பாம்புத் தோல் உரித்து ஒவ்வொரு முறையும் புதிதாய் மினுக்குவதால் தீபாவளிகள் எப்பொழுதும் சுவாரசியம் மிக்கவையே.

    இந்த ஒருப் பண்டிகையின் போது தான் அனைவரும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து, “ஆ...’’ என்று வேடிக்கைப் பார்க்காமால் வானத்தை நிமிர்ந்து வான வேடிக்கைகள் பார்கிறார்கள்.


    தீபாவளியின் வானம் மட்டும் அல்ல.... தீபாவளிகளோடு இணைந்த நினைவுகளும் என்றும் வண்ண வண்ண நினைவுகள் சுமந்தவை எனலாம். அழகிய நினைவோடு இந்த அழகிய தலைப்பை தந்த தளத்திற்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.


    நன்றி...!
    வணக்கம்....!
     
     
  2. swathikummara

    swathikummara Wings New wings

    Messages:
    25
    Likes Received:
    8
    Trophy Points:
    23
    Pustaka is the best website for Ebooks. Here you can download all Tamil Short stories, Here you can download all Ebooks for free, Rent, Subscription
    http://www.pustaka.co.in/ebook/library
     
     
  3. swathikummara

    swathikummara Wings New wings

    Messages:
    25
    Likes Received:
    8
    Trophy Points:
    23
    Pustaka is the best website for Ebooks. Here you can download all Tamil Short stories, Here you can download all Ebooks for free, Rent, Subscription
    http://www.pustaka.co.in/ebook/library
     
     
Loading...

Share This Page

Sponsored