Sponsored


deepavali kondattamum thindattamum

Discussion in 'Articles/Essay' started by Lady's Wings, Nov 11, 2016.

Sponsored


  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,393
    Likes Received:
    3,359
    Trophy Points:
    113
    Admin Post

    Sponsored


    தீபவாளி கொண்டாட்டமும் திண்டாட்டமும்.

    தீபவாளி என்பதின் பொருள் தீபங்களின் வரிசை என்பதாகும். தீபாவளிப் பண்டிகைகள் ஏன் கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றி இந்துப் புராணம் பல நூறுக் காரணங்களை முன் வைத்தாலும்,

    நாம் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடுவதன் முழுமையான அர்த்தம், மனதில் இருக்கும் அறியாமை இருள் அகற்றி, அங்கே ஞான ஒளியேற்றி, பரஸ்பரம் தங்கள் அன்பை மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளவும், உறவுகளை மேம்படுத்தவும் மட்டுமே தீபாவளிப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.

    முற்காலத்தில் தீபங்களின் மூலம் மட்டும் ரசிக்கப்பட்டு வந்த ஒளி வெள்ளம் கால மாற்றத்தால் வான வேடிக்கைகளாகவும், அதிர்வேட்டுக்களாகவும் மாற்றம் பெற்றன.

    நாம் தீபாவளித் திருநாளில் பயன்படுத்தும் பட்டாசுகள், நான்கு ஆண்டு வாகன ஓட்டிகள் காற்றில் வெளிவிடும் கரியமில வாயுவை ஒரே நாளில் வெளியிட்டு நம் சுற்றுக் சூழலின் சமநிலையை பாதிக்கின்றன.

    அதனால் பட்டாசை வெடிக்காதீர்கள்..... அனைவரும் தீபத்தை ஏற்றி மட்டும் தீபவாளிக் கொண்டாடுங்கள் என நான் சொல்ல வரவில்லை. முடிந்த அளவு பட்டாசுகள் பயன்படுத்தும் அளவை குறைக்கும் படி மிகத் தாழ்மையாய் கேட்டுக்கொள்கிறேன்.

    ஒவ்வொரு வருடமும் தீபவாளி திருநாளில் ஏற்படும் தீ விபத்துகளில் 10000 அதிகமானோர் பாதிக்கப்படுவதாய் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதில் உயிர்சேதம் ஏற்படாவிட்டாலும், உயிர்க் கொல்லும் வலியை சுமக்கும் அனைவரும் 8 முதல் 16 வயது நிரம்பிய குழந்தைகள்.

    இன்றைக்கு நிறைய பள்ளிகள் தீபவாளிப் பண்டிகையை பட்டாசுகள் வெடிக்காமல் கொண்டாட சொல்லி அறிவுறுத்தி வருகின்றன.

    என்னுடைய வேண்டுதல் எல்லாம், ஒரு குழுவாக குழந்தைகள் கூடி பட்டாசுகளை வெடிக்கும் போது அவர்கள் பயன்படுத்தும் வெடிப் பொருட்களின் அளவு குறையும்.

    வேடந்தாங்கல் அருகே உள்ள கிராமத்தில் எத்தனையோ வருடமாக தீபவாளிப் பண்டிகையே கொண்டாடாமல் இருக்கிறார்கள். காரணம் அங்கே இருக்கும் பறவைகள் வெடி சந்தத்தில் பயந்து இடம் மாற முயற்சிக்கும் என்பதால்.

    நாம் அனைவரும் அக்கிராம மக்கள் ஆக முடியாது. ஆயினும் வெடிகளைக் கொஞ்சமே கொஞ்சம் குறைத்து நாம் வாழும் சுற்று சூழலுக்கும் நம்மால் முடிந்த நன்மை பயப்போம்.

    தீபவாளி முடிந்த மறுநாள் வெடிகளை வெடித்த இளம் சிறார் கைகள் சில விதைகளை விதைக்கட்டும்.

    ஒரு படி முன் எடுத்து வைப்போம். சுற்று சூழல் காக்கும் தீபவாளிப் பண்டிகையைக் கொண்டாடத் துவங்க.


    என் படைப்பை வாசித்த அனைவருக்கும் நன்றி....!
     
     
  2. swathikummara

    swathikummara Wings New wings

    Messages:
    25
    Likes Received:
    8
    Trophy Points:
    23
    Pustaka is the best website for Ebooks. Here you can download all Tamil Short stories, Here you can download all Ebooks for free, Rent, Subscription
    http://www.pustaka.co.in/ebook/library
     
     
Loading...

Share This Page

Sponsored