Sponsored


nilaa vadhani _ deepavali kondattamum thindattamum

Discussion in 'Articles/Essay' started by Lady's Wings, Nov 11, 2016.

Sponsored


  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,366
    Likes Received:
    3,350
    Trophy Points:
    113
    Admin Post

    Sponsored


    டியர் மேடம்

    இந்த வாய்ப்பை எனக்கு அளித்த லேடீஸ் விங்க்ஸ் கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற கதாசிரியர்களைப் போல நான் அனுபவம் மிக்கவள் அல்ல..ஏதோ தோன்றியதை எழுதும் கத்துக்குட்டி.. அவ்வளவே...எனது எழுத்துக்களில் உள்ள நிறை குறைகளை எதிர்பார்க்கிறேன்..

    அன்புடன் ,
    நிலாவதனி


    தீபாவளி...கொண்டாட்டமும் திண்டாட்டமும்...

    தீபாவளின்னாலே முதல்ல நம்ம ஞாபகத்துக்கு வருவது இந்த வருஷம் அக்டோபர் ல வருதா அல்லது நவம்பரா? எப்போ வந்தாலும் அன்னிக்கு லீவு நாளா அல்லது வார நாளா? லீவு நாள்ல தீபாவளி வந்துட்டுன்னு வையுங்களேன்...குட்டீஸ் ல ஆரம்பிச்சு வேலைக்குப் போகிற எல்லாருக்குமே புஸ்ஸுன்னு காத்து போன பீலிங் தான் முதல்ல வரும். அப்புறமா அப்படியே மனசத் தேத்திக்கிட்டு, கிட்டத்தட்ட ஆடிக்கழிவுல ஆரம்பிச்சு ட்ரெஸ் எடுக்க ஆரம்பிச்சோம்னு வைங்க..அப்படியே தீபாவளி அன்னைக்குக் காலை வரைக்கும் நல்லாருக்கா நல்லா இல்லையான்னு ஒத்தையா ரெட்டையா போட்டுப் பாத்து, அதுக்கப்புறமா பக்கத்து வீடு எதிர்த்த வீடு, நண்பர்கள் அப்படி இப்படி எல்லாருடைய கருத்தையும் தேர்தல் கணிப்பு மாதிரி கேட்டு, நல்லாருக்குன்னு ஒருத்தர் சொன்னாலே முகத்துல ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிய விடுவோம் பாருங்க...அங்க ஆரம்பிக்குதுங்க கொண்டாட்டம்.

    அடுத்து நமக்கு, அதாவது இளசுகள் குட்டீஸ்கள், இவங்களுக்கெல்லாம் பட்டாசு தான் முக்கியம்..இல்லிங்களா...எது இருக்கோ இல்லையோ சூப்பரா வெடி போட்டாதான் அது தீபாவளி மாதிரியே இருக்கும்..அப்படித்தானே? பண்டிகை நெருங்க நெருங்க எந்த சத்தமுமே இல்லாம, அமைதியா இருந்தா, எல்லாப் பெரியவங்களுமே சொல்றதக் கேட்டுருப்போம்..”என்ன இந்த வருஷம் பண்டிகை வந்த மாதிரியே இல்லையே...ஒரு வெடிச் சத்தம் கூடக் காணோமே” அப்படின்னு...சோ, வெடியும் புஸ்வானமும் இருந்தா தான் தீபாவளின்னு நம்ம மனசுல பதிஞ்சு போயிடுச்சு..இது அடுத்த கொண்டாட்டம்.

    வெடியோட விலை வருஷத்துக்கு வருஷம் ஏறிக்கிட்டே தான் போகுது..ஆனா நாம வாங்காம இருக்கோமா அல்லது வெடி போடாமதான் இருக்கோமா..சிறுசுங்க இருந்தா அதுங்க சந்தோஷமே அதில தாங்க..அம்மா, அக்கா, அண்ணன் , பாட்டி தாத்தான்னு யார யாரையோ காக்கா பிடிச்சு, அப்பாக்கிட்ட கொஞ்சூண்டாச்சும் வெடி வாங்கி வெடிச்சாதான் அந்தப் பிள்ளைங்களுக்கு சந்தோஷமே..அதோட பக்கத்து வீட்டுப் பிள்ளைங்களோட என்ன வகை வெடியெல்லாம் இருக்குன்னு கம்பேர் பண்ணிப் பாக்க முடியும்..ஹி ஹி...அது ஒரு தனி ஜாலி தாங்க..
    அடுத்துப் பாத்திங்கன்னா, தீபாவளிப் பட்சணம்...உடம்புக்கு முடியாம இருந்தாலும் சரி..வீட்டுக்கு விருந்தாட யாரும் வராட்டாலும் சரி..ஏதாவது ஒரு பண்டம் செஞ்சே ஆகணும் அப்படிங்கறது தீபாவளி பண்டிகையோட விதி..அதாவது ரூல்...இது கொஞ்சம் நியூட்டன் மூன்றாம் விதி மாதிரிங்க..ஏன்னா , இந்தப் பண்டிகைக்கு நாம குடுத்தா தான் அடுத்த பண்டிகைக்கு அவங்க குடுப்பாங்க..அப்படித்தான் நானெல்லாம் சின்னப்புள்ளையா இருக்கும்போது நினைச்சிருக்கேன்...ஏன்னா அந்த வயசு அப்படி..இப்படி அம்மா, ஆச்சி எல்லாரும் சேந்து செஞ்சு வச்சிருக்கற பண்டங்கள, அவங்களுக்குத் தெரியாமையே எடுத்துச் சாப்பிடுறது இருக்கு பாருங்க...ஸ்ஸ்ஸ்ஸ்...அட அட ...அந்த சுகமே தனி தாங்க..எல்லாருக்குமே அந்த அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். இதுவும் ஒரு கொண்டாட்டம் தானே..என்னதான் கடைல எல்லா விதமான பண்டங்களும் கிடைச்சாலும், நம்ம வீட்டுல, நம்ம சொந்தங்கள் பர பரன்னு செய்ய மெனக்கெடரத பாக்கும் போது, அம்மா பிசையற மாவுல கையை விட்டு வாங்கிக் கட்டிக்கும்போது, எல்லாமே தனிக் கொண்டாட்டம்தானுங்களே...


    அதோட போச்சா...எப்பப் பாத்தாலும் எந்திடா அம்மா, ஏலே தம்பி எந்திரிப்பா , இப்போ எந்திரிக்கப் போறியா இல்ல தண்ணியைக் கோரி ஊத்தட்டா...இப்படியெல்லாம் டிசைன் டிசைனா சுப்ரபாதம் பாடற அம்மா, தீபாவளி அன்னைக்கு விடிஞ்சும் விடியாம பாட ஆரம்பிச்சுடுவாங்க..ஆனா பாருங்க...அன்னைக்கு அம்மா முகத்துல ஒரு மகிழ்ச்சி தெரியும்...காலையிலே குளிச்சு முழுகி மங்களகரமா குங்கமத்தோட, “சும்மா” கட்டிக்கிட வாங்கின புடவையை சுத்திக்கிட்டு நம்மள எழுப்பற அழகே தனி தாங்க...அன்னிக்கு நம்மள எழுப்பும்போது அம்மாக்கும் கோபம் வராது...நமக்கும் கோபம் வராது..இது வருஷத்துக்கொரு முறை கிடைக்க கொண்டாட்டம்.
     
    benzishafeek likes this.
     
  2. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,366
    Likes Received:
    3,350
    Trophy Points:
    113
    Admin Post
    அப்புறம், வருஷம் முழுதும் எண்ணெய் காணாத தலை, அன்னிக்குதான் பளபளன்னு கண்டிஷனர் போட்ட மாதிரி சும்மா மினுமினுன்னு மின்னும்..ஒரு மாசமோ அல்லது ஒரு ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே எடுத்து வச்சு, எப்பப் பாத்தாலும் எடுத்து எடுத்துப் பாத்திட்டு வச்சிருக்கற, அந்த வருஷத்துல அறிமுகப்படுத்தப்பட்ட புது டிரஸ்சை போட்டுக்கிட்டு, அப்படியே கண்ணாடில முன்னாடியும் பின்னாடியும் திரும்பிப் பாத்திட்டு, சர்ருன்னு வண்டியோ அல்லது சைக்கிளோ எடுத்துக்கிட்டு, “டேய்..ஒரு வாய் சாப்பிட்டுப் போடா”ன்னு அம்மா கூப்பிடற சத்தம் காத்தோட போக, தெருவ ஒரு ரவுண்ட் அடிக்கிறதுல இருக்குது பாருங்க அதுதாங்க உச்சகட்ட சந்தோஷம்.

    அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்து, பெரியவங்க கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அவங்க குடுக்கற காசை சந்தோஷமா வாங்கிக்கிட்டு, பட்சணங்கள பக்கத்து வீடுகளுக்குக் குடுத்து, அவங்க நம்மைப் பாத்து “அழகா இருக்கே டிரஸ்” னு சொல்றப்போ லேசா வெக்கப்பட்டுக்கிட்டு , உடை வாங்கிய கதையை அவிழ்த்து விடுவோம் பாருங்க..இது அடுத்த சந்தோஷம்..

    கிடைச்ச பணத்தை, எண்ணிப் பாத்து, தம்பி தங்கைகளோட கூடவா அல்லது குறையவான்னு கணக்குப் போட்டுப் பாத்து, உண்டியல் காசு இந்த வாட்டி செமையா சேந்துருக்குன்னு சந்தோஷமா மூட்டை கட்டறது...இந்த காச வச்சு என்னவெல்லாம் பண்ணலாம்னு யோசிக்கறது அடுத்த சந்தோஷம்..இல்லையா...
    வெளியூர் ல வேலை பாக்கிறவங்களுக்கு, ஆபீஸ் ல லீவு கிடைக்கறது பெரும்பாடு தான் போங்க.ரெண்டு மாசம் முன்னாடியே லீவ் அப்ளை பண்ணினாலும், கடைசி நிமிஷம் வரைக்கும் பிபி ஏற வச்சு, தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி எட்டு மணிக்கு லீவ் சாங்க்ஷன் பண்ணுவாங்க...அதுல அவங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியல..சரின்னு சந்தோஷமா வெளிய வரும்போது தான்,.அய்யயோ, டிக்கெட் கான்சல் பண்ணிட்டோமேன்னு தோணும். அப்புறம் ஓடி ஓடி பாக் பண்ணிட்டு, கிடைக்கற பஸ் ல ஏறி உக்காந்து, ஊரில் இருந்து கிளம்பிட்டியான்னு கேக்கற கேள்விக்கு பதில் சொல்லி, மிச்ச மீதி வேலைய பக்கத்து சீட் காரனுக்கு அப்டேட் பண்ணி...உப்ப்ப்...என்னடா வாழ்க்கை இதுன்னு நொந்து, அப்படியே கண் அசந்து போக விடிஞ்சும் விடியாம,சொந்த ஊருக்கு வந்து மண்ணுல கால் வச்சதுமே, அவ்வளவு நேரம் இருந்த சலிப்பு பறந்து போக எதையோ சாதிச்ச உணர்வு வரும் பாருங்க...சூப்பர் பீலிங் போங்க...


    தீபாவளி அன்னைக்கு முதல் நாள் வீதி உலா போறது ரொம்ப ஜாலி இல்லையா..கூட்ட நெரிசல்ல வேடிக்கை பாத்துக்கிட்டே, நாம நகராம, கூட்டமே நம்மளை நகர்த்தி அடுத்த கடைக்கு கூட்டிப்போறது, சின்ன சின்ன சாமான்கள்,வீட்டுக்குத் தேவையான, மறந்து போன பொருடகள வாங்குறது, எந்தப் பிளானும் பண்ணாம போகிற போக்குல ஜஸ்ட் ஜாலி வாக் போறது, ஜிலு ஜிலு லைட்டிங் ஊரெங்கும் வெளிச்சமோ வெளிச்சமா இருக்க அப்படியே எல்லோருடைய பரபரப்பு + மகிழ்ச்சி நிறைந்த முகம் பாக்கறதே சந்தோஷமா இருக்குமே...


    கூலி வேலை பாக்கறவங்க, அதிகாலைப் பொழுதுல, ரெண்டு கையிலயும் குழந்தைங்களைப் பிடிச்சுக்கிட்டு, ரோட்டுக்கடைல பேரம் பேசி துணிமணி, தின்பண்டம், பட்டாசுன்னு அவங்க கை நிறைய வாங்கிக் குடுக்கும் போது ஓட்டைப் பல்லும் ஒழுகும் மூக்குமாய் சிரிக்கும்போது, அதைப் பார்க்கும் போதே நம்ம மனசு நிறைஞ்சு போகும் தெரியுமா?
    இப்படி அவங்க இவங்கன்னு இல்லாம எல்லோர் மனசுலயும் சந்தோச மத்தாப்புக்களைப் பூக்கச் செய்வது தான் தீபாவளி.


    எப்பவும் விருந்து சாப்பாட்டுல, முதல்ல இனிப்பு வைக்கறது எல்லா உணர்வுகளையும் விழிப்பு நிலையில வச்சு ,சந்தோஷமான உணர்வை உண்டாக்கத்தான் அப்படிங்கறது நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். அது மாதிரி தான், தீபாவளிப் பண்டிகையோட கொண்டாட்டம் பற்றி முதல்ல சொல்லிட்டேன்.

    இப்பத் திண்டாட்டத்தைப் பற்றி பாப்போமா...

    தீபாவளி நெருங்க நெருங்கக் குடும்பத் தலைவருக்கும் தலைவிக்கும் தாங்க பிரச்சினை ஜாஸ்தி..அதிலும் இந்த மிடில் கிளாஸ் மற்றும் அப்பெர் மிடில் கிளாஸ் ரொம்பவே பாவம். ஏன்னு கேட்டிங்கன்னா, பெரிய பணக்காரங்களுக்கு தினம் தினம் தீபாவளி தான். அதே மாதிரி இல்லாது பட்ட ஏழைகளுக்கும் தீபாவளி எல்லா நாட்களையும் போல இதுவும் ஒண்ணுதான்..ஆனா இடையில மாட்டிகிட்டு முழிக்கிற நமக்கு...அய்யய்யோ..

    பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தற மக்களுக்கு பண்டிகை சமயம் வந்தாலே திண்டாட்டம் தாங்க...ஏன்னா எக்ஸ்ட்ரா செலவு ரொம்பவே வரும். என்னதான் போனஸ் அது இதுன்னு வந்தாலும், துணிமணி, புதுசா எதாச்சும் ஆபர் போட்டிருந்தா ,பழச குடுத்திட்டுப புதுசு வாங்கறது, பலகாரம் செய்ய வழக்கமா வாங்குற சாமான்களை விட டபுள் மடங்கு வாங்கறதுன்னு ஏகப்பட்ட செலவு வரும். சில வீடுகள்ல இந்த சமயம் மட்டும் தான் புதுத் துணி எடுக்கற வழக்கம் இருக்கும்..அப்போ கூட ரெண்டு எடுத்துப்பாங்க நம்ம குடும்பத் தலைவிங்க..கடைல போய் நின்னுக்கிட்டு, “ஏங்க, இது நல்லாருக்கு..இதையும் சேத்துப் பில் போட்டுடவான்னு” அவங்க கேக்கும் போது நம்ம ஆளுக்கும் வேணாம்னு சொல்ல மனசு வராதுங்க...சரின்னு சொல்லிட்டு வாங்கிட்டு வந்துடுவாங்க..ஆனா பட்ஜெட் இடிக்கும் போது கத்துவாங்க பாருங்க..முழி பிதுங்கிடும்..அப்புறம் கடன உடனை வாங்கி சமாளிப்பாங்க.. பாவங்க அவங்க
     
    benzishafeek likes this.
     
  3. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,366
    Likes Received:
    3,350
    Trophy Points:
    113
    Admin Post
    அப்புறம் பெண்களைக் கட்டிக்குடுத்த வீடுன்னு வச்சுக்கோங்களேன். தலை தீபாவளிக் கொண்டாட்டம்னு ஆரம்பிக்கறது வீட்டுல உள்ளவங்களுக்கு பெரும் திண்டாட்டம் தான் போங்க.. பொண்ணுக்குப் பட்டுப்புடவை, மாப்பிள்ளைக்கு ட்ரெஸ் னு ஆரம்பிச்சு சீர் அது இதுன்னு செமையா செலவு இழுத்திடும்..இந்த சமயத்துல ஆகற செலவு அம்மாடியோ...

    அதே மாதிரி குட்டீஸ் இருக்கற வீடுகள்ல கண்டிப்பா வெடி வாங்கியே ஆகணும்.. அப்பா கூட வண்டியில உக்காந்துகிட்டு, தீபாவளிக்கு முதல்நாள் பசங்க வாங்கப் போவாங்க..ஏன்னா சின்னப்புள்ளைங்க இருக்கற வீட்டுல முன்னாடியே வாங்கி வச்சிக்கிட்டு வெடிய பாதுகாக்க முடியாது இல்லையா அதான். அப்படிப் போகும்போது வாய் மூடாம பசங்க பேசுவாங்க பாருங்க...”அப்பா எனக்கு சீனி வெடி ,மத்தாப்பு ,புஸ்வானம் வேணும்..அப்புறம் வானத்துல போய் கலர் கலரா வெடிக்கற வெடியும் வேணும்..” அப்படின்னு அடுக்கிகிட்டே போவாங்க..எல்லாத்துக்கும் அப்பா சரிடா வாங்கலாம்...அப்படி சொல்லிக்கிட்டே வண்டி ஓட்டறதுல கவனமா இருப்பார் அவர்..ஆனா அவர் சரின்னு சொன்னதுதான் தப்பாப் போய்டும்..கைகேயி கிட்ட குடுத்த வரம் மாதிரி ஆகிப் போயிடும். இவருக்கு இருக்கற பிரச்சனையில வெடியோட வகையும் விலையும் தெரியாம, கூட்ட நெரிசல்ல பிள்ளைகளைப் பத்திரமா கூட்டிப்போகிறதுல மட்டுமே இவர் கவனம் இருந்துருக்கும். ஆனா பசங்களுக்கு அப்பா ஒகே சொல்லிட்டாருன்னு தோணும். அங்க போய்ப் பாத்தா ஒவ்வொரு வெடியும் இவர் பணப்பைக்கு நெருப்பில்லாமலே வேட்டு வைக்கும்.அப்புறம் பிள்ளைங்கள சமாதானப் படுத்தி அப்படி இப்படி வெடி வாங்கிட்டு வரதுக்குள்ள தாவு தீர்ந்திடும். இது திண்டாட்டம் தானே..

    அதோட நிக்காது...அக்கா தங்கை இருந்தா அவங்களுக்கு தாய் வீட்டு சீர் அது இதுன்னு ஏகப்பட்ட கெடுபிடி இருக்கும்..எல்லாம் செய்தும் சில குறைகளை சொல்லும்போது, அட ச்சே...இவ்வளவு பண்ணியும் இவங்களுக்குப் போதாதா? அப்படியும் தோணும்..இதுல கட்டினவ குத்திக் காட்டுனாங்கன்னு வைங்க..மனுஷனுக்கு தீபாவளி ஏன் வருதுன்னு வருத்தப்படுவார்.

    எல்லாம் ஒரு வாரத்துக்குத் தான்..அதுக்கப்புறம்,

    தலை தீபாவளியில்,பொண்ணு மாப்பிள்ளை வெடி போட்ட நிகழ்வு, மாப்பிள்ளை பொண்ணை பத்திரமா பாத்துப்பார்னு நம்பிக்கை கொடுத்த நிறைவு, திரும்பி வீட்டுக்குப் போகும்போது, இவ்வளவு செலவாகிட்டேன்னு நினைச்ச மனசு,பிள்ளை கையில் மறுபடி பணத்தை திணிச்சு உடம்பைப் பாத்துக்கோம்மா பத்திரம்..அப்படின்னு சொல்ற கனிவு...எல்லாமே மனசுக்கு சந்தோஷம் தாங்க.
    “டேய் , போதுண்டா வெடிச்சது..மிச்சம் இருந்தா எடுத்து பத்திரமா வை..அடுத்த வருஷம் காய வச்சு வெடிக்கலாம்..அடுத்த வாட்டி நிறைய வாங்கித்தறேண்டா அப்பா” என்று குடுக்கும் வாக்குறுதி..


    “ஏம்மா...பலகாரம் செய்யறது,வேலை செய்யறதுன்னு ஓயாம அலைஞ்சே...சித்த நேரம் படுத்து எந்திரி”ன்னு சொல்ற மாமியாரோட அன்பு..
    “இந்தத் தடவை எல்லாருக்கும் எடுத்ததால உனக்கு மட்டும் கொஞ்சம் சரி இல்லை புடவை..அடுத்த வாட்டி உனக்கு தான் முதல்ல துணி எடுக்கிறோம் சரியா? என்று சொல்லும் கணவனின் இதம்.
    இதெல்லாமே திண்டாட்டத்துலயும் ஒரு கொண்டாட்டம் தாங்க..



    அப்படி இப்படி பொருளாதார ரீதியா ஏகத்துக்கும் திண்டாட்டம் இருந்தாலும் அடுத்த வருஷ தீபாவளிய ஆவலோடு எதிர் பார்க்கிறோமா இல்லையா?
    இந்த வருஷ தீபாவளில இல்லாத சந்தோஷத்தை அடுத்தவருஷம் ஏற்படுத்தணும்னு நினைக்கிறோமா இல்லையா?


    அடுத்தத் தடவை தீபாவளிக்கு மூணு மாசம் முன்னாடியே டிக்கெட் புக் பண்ணிடனும்..அப்போ இந்த அவஸ்தை இருக்காது இப்படி நினைக்கிறோமா இல்லையா?
    இந்த தடவை அப்பா எல்லாருக்கும் செய்த மாதிரி, அடுத்த வருஷம் முதல் சம்பளம் வாங்கி, எல்லாருக்கும் என்னோட செலவில் தான் துணி எடுக்கணும் அப்படின்னு நினைக்கிற மகனோட மனசு..


    அம்மா வீட்டுல இருந்து இனி நிறைய வாங்கக் கூடாது...அப்பா அம்மா பாவம்..எவ்வளவு செலவு...இப்படி நினைக்கற மகளோட மனசு..
    இந்த தடவை சித்தப்பா வீட்டுக்கும் போகல, மாமா வீட்டுக்கும் போகல..அடுத்த தடவையாச்சும் போகணும்..உறவு விட்டுப் போயிடக்கூடாதுன்னு நினைக்கற பல பேரோட நினைப்பு...


    இது எல்லாமே, திண்டாட்டம் இருந்தாலும், உறவுகள் கூடி உன்னதக் கவிதை படைக்கும் கொண்டாட்ட தினம் தான் தீபாவளின்னு நிரூபிக்குது இல்லையா..தினம் தினம் ஒரே மாதிரியான வாழ்க்கைக்கு, இயந்திரத்தனமா இயங்கிக்கிட்டு இருக்கற வாழ்க்கைக்கான ரிப்றேஷ்மென்ட் தான் இந்தத் தீபாவளி என்று சொன்னால் அதில் தவறில்லை தானே..

    *************

    அன்புடன் ,
    நிலாவதனி

     
    benzishafeek and Srjee like this.
     
  4. swathikummara

    swathikummara Wings New wings

    Messages:
    25
    Likes Received:
    8
    Trophy Points:
    23
    Pustaka is the best website for Ebooks. Here you can download all Tamil Short stories, Here you can download all Ebooks for free, Rent, Subscription
    http://www.pustaka.co.in/ebook/library
     
     
Loading...

Share This Page

Sponsored