Sponsored


Naan Aval Sontham_ Anne Nilany

Discussion in 'Short Stories' started by Lady's Wings, Nov 12, 2016.

Sponsored


 1. Lady's Wings

  Lady's Wings Roots of LW Staff Member Administrator

  Messages:
  1,434
  Likes Received:
  3,359
  Trophy Points:
  113
  Admin Post

  Sponsored


  நான் அவள் சொந்தம்
  “சொல்லுங்க நிதேஷ்... பேசணும் என்று வர சொல்லிற்று இப்படி பேசாமலே இருந்தால் எப்படி?” என்றாள் தன் கையில் இருந்த hot choclate ஐ ருசித்து பருகியவாறே ரௌத்திரி.

  அவள் கிள்ளை மொழி மேலும் மேலும் ஊட்டிய எரிச்சலை பொறுத்தவறே ‘ஆமா..., சொல்லணும்...., ஆனால் எப்படி ஆரம்பிக்கிறது என்னுதான் தெரியல்ல....”
  அதை கேட்டு ஏதோ பெரிய ஹாஷ்யத்தை கேட்டுவிட்டது போல் கொட்டிவிட்ட சதங்கைகள் போல் அவள் சிரிக்க, இவன் பொறுமையும் நிற்கவா போகவா என்று கேட்டுக்கொண்டு இருந்தது.


  அவன் மன நிலை அவளிற்கு புரியவில்லையா, இல்லை புரிந்து கொள்ள அவள் விரும்பவில்லையா என்பது அவள் மட்டுமே அறிந்தது.

  “ok நிதேஷ்! நீங்க பேச சங்கட படுறது எனக்கு புரியுது. but எனக்கு தெரியாமல் எதுவும் நடக்கல்ல...., நடக்கவும் மாட்டாது நிதேஷ். உங்க காதல் விவகாரம் எனக்கு தெரியும்.” என்று கூறியவாறு தன் விழிகளை பாதி மேல் உயர்த்தி அவனை ௬ர்மையாக பார்த்தாள்.

  இதை கேட்டு அவன் அதிர்வான் என்று அவள் எதிர்பார்க்க, அவனோ எந்த சலனமும் இன்றி அமர்ந்திருந்தான். யப்பா.., ஒருவழியா மெயின் மேட்டர்க்கு வந்திட்டா” என்னும் திருப்தி தான் அவன் மனதில் எழுந்தது. அடுத்து தன் வார்த்தைகளை மிகவும் கவனாமாக பிரயோகிக்க எண்ணியவனாக மௌனமாகவே இருந்தான் நிதேஷ்.
  அவன் எதுவும் ௬றப்போவது இல்லை என்பதை உணர்ந்தவளாக “look நிதேஷ் நமக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு. இன்னும் ஒரு மாதத்தில கல்யாணம். நான் தான் உங்க மனைவி. இத யாராலையும் மாற்ற முடியாது.... மாறவும் ௬டாது. அதுக்கு நான் ஒத்துக்கவும் மாட்டேன். புரிஞ்சுதா.” கட்டளையாகவே வந்தது அவளது சொல் அம்புகள்.


  “ஆனால் ஏன்!!! அவ உன் தங்கை இல்லையா!!!” ஆதங்கத்துடன் கேட்டவனை அஹங்காரமாக பார்த்தாள் ரௌத்ரி.
  “யாருக்கு யாரு தங்கை....” முறை தவறி பிறந்தவங்களேல்லாம் முறைய பிறந்தவங்களோட கிட்டத்திலையும் வர முடியாது. எனக்கு வேலைக்காரிய கூட இருக்க அருகதை இல்லாத ஒருத்திய ௬டிற்று வந்து எங்௬டவே எனக்கு சரிசமாம வளக்க எங்கப்பாவுக்கு என்ன தைரியம் இருக்கனும். அவள பாத்து பாத்தே எங்கம்மாவுக்கு அவர் பண்ணின துரோகத்த ஒவ்வொரு நிமிஷமும் எனையும் எங்கம்மாவையும் வலிக்க வலிக்க உணரவச்சாரே.... இப்போ அவரோட அந்த செல்ல பொண்ணு...... ரெம்ப ரெம்ப துடிக்க போறா....” அவள் வார்த்தைகளில் இருந்த கொடூரம் அவள் முகத்திலும் தெரிந்தது.


  “அதாவது உங்க அக்க தங்கை சண்டையில நானும் என் காதலும் பகடைக்காய் ஆயிடோம் இல்ல.”

  “மறுபடியும் சொல்லுறேன் அவ என் தங்கை இல்ல. எங்கப்போவோட வப்பாட்டி பொண்ணு.”

  “வப்பாட்டியா!!!!!!!”

  “ofcose..... அவ அம்மா எங்கப்போவோட முன்னாள் காதலியா இருக்கலாம். ஆனாலும் முறையா அவர் எங்கம்மாவ தானே முதல்ல கல்யாணம் பண்ணிகிட்டாரு. அதுக்கு அப்புறம் அவள விட்டு தொலைக வேண்டியது தானே! அத விட்டுட்டு, கட்டிகிட்டு திருட்டுத்தனமா குடும்பம் நடத்தி இவளையும் பெத்து இருக்காரு. அதுக்கு அப்புறம் அந்த பொம்பளைக்கு எங்கம்மாவ பத்தி தெரியவர அவ இவர வெளிய விட்டு கதவசாத்திட்டா. விட்டுது சனியன் என்று அப்படியே நின்மதியா இருந்திருப்போம், ஆனா எங்க விட்டுது!!! அப்பா பண்ணின துரோகத்த தாங்க முடியாம 2 வருஷத்திலேயே அவ மண்டைய போட்டுட்டா...., இவர் என்னடான்னா இந்த சனியன வீட்டுக்கு ௬டிற்று வந்து, எனக்கு தங்கை என்னுட்டாரு....

  சிறு வயதில் இருந்தே யாரிடமும் ௬ற முடியாமல் தனக்குள்ளேயே வைத்து புளுங்கியத்தை இப்பொழுது கொட்டிதீர்த்தாள் ரௌத்திரி. உள்ளிருந்ததை வெளியே கொட்டியதும் கொஞ்சமாவது அடங்க வேண்டிய அவளது ஆத்திரமும் ஆதங்கமும் அடங்க மறுத்தது.

  எந்த குறுக்கீடும் செய்யாமல் அமைதியாகவே கேட்டுக்கொண்டிருந்தான் நிதேஷ். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்மையையும் அவள் வாயில் இருந்து வாங்குவதே அவன் குறிக்கோளாக இருந்தது.
   
   
 2. Lady's Wings

  Lady's Wings Roots of LW Staff Member Administrator

  Messages:
  1,434
  Likes Received:
  3,359
  Trophy Points:
  113
  Admin Post
  “Look நிதேஷ்! உங்களுக்கு அவ இனிமே கடந்த காலம். நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் இனிமே நான் தான். அவள விட நான் உங்களுக்கு better choice. அப்பாவோட சொத்தில பாதி அவளுக்கு பாதி எனக்கு. ஆனால் அம்மாவோடது பூராவும் எனக்கு தான். அதில அவ சொந்தம் கொண்டாட முடியாது. அவங்கம்மா ஒரு அன்னாடங்காட்ச்சி. அதனால தான் தாத்தா அவள எங்கப்பாவுக்கு கட்டிவைக்க முடியாதுன்னாரு. you know! எங்கம்மா multy millinor ஓட ஒரே வாரிசு. பாட்டி கொஞ்சம் கட்டாம்பெட்டி தான், but தாத்தா! அவங்க எது கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டாரு.. அப்படி தான் எங்கப்பாவையும் கைய காட்டினாங்களாம்....

  சரி.... அதெல்லாம் எதுக்கு இப்போ! நான் சொல்ல வர்றது என்னான்னு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறன். உங்க காதலி, sorry sorry, முன்னாள் காதலி, நிவேதாவ விட அழகில, படிப்பில, அந்தஸ்தில என்று எல்லா வகையிலும் நான் தான் உயர்ந்தவ எங்கிறத உங்களால மறுக்க முடியாது இல்லையா! எத்தனையோ பெரிய பெரிய பணக்காரங்க எல்லாம் என்னைய கட்டிக்கிறதுக்கு காத்திட்டு இருக்கிறப்போ நான் உங்கள தேர்ந்தெடுத்திருக்கேன்....”

  “ஆமா..மா..., எவ்வளவு அழகா plan பண்ணி எனக்கும் உங்களுக்கும் நிச்சியதார்த்ததை முடிச்சிருக்கீங்க” அவன் வார்த்தைகளில் கிண்டல் அப்பட்டமாக தெரிந்தது.
  “நீங்க கிண்டல் பண்ணினாலும் அது உண்மை தானே நிதேஷ். என்னோட planல எந்த இடத்திலும் விரிசல் கிடையாது. நம்ம நிச்சயதார்த்தம் எல்லா பத்திரிகையிலையும் tv chennels லையும் வந்தாச்சு. இனி நீங்க ஏதாவது பண்ணினீங்க என்றால்..... என்னா ஆகும் என்று நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை என்று நினைக்கிறேன்.


  “இல்லை..., பரவாயில்ல.... அப்படி நாங்க ஏதாவது பண்ணினா என்ன பண்ணுவீங்க எங்கிரத்தையும் நீங்களே உங்க வாயால சொல்லிடுங்க.... அதையும் கேட்டு தெரிஞ்சுக்கிரேனே....”

  “ஹ்ம்ம்ம்...., உங்க ஆசைய கெடுப்பான் ஏன்! சொல்லுறேன் கேளுங்க.... ஒண்ணு ‘எனக்கு நிச்சயம் பண்ணின உங்கள அவ வளச்சு போட்டுகிட்டா, உங்க ரெண்டு பேருக்குள்ளையும் கள்ளகாதல்’ என்று சொல்லி அசிங்க படுத்தி, உங்கரெண்டுபேர் மேலையும் கேஸ் படுவேன். இல்லை நீங்க ரெண்டு பேரும் முன்னமே காதலிச்சவங்க நான் தான் குறுக்கே வந்தேன் என்று உண்மைய நீங்க சொல்ல நினச்சாலும், ‘ஆமா... ரெண்டுபேரும் திட்டம் போட்டு என் சொத்துக்காக என்னைய ஏமாத்தி இருக்காங்க...’ என்று சொல்லி ஒரு வழி பண்ணிட மாட்டேன்... so புரிஞ்சு நடந்துக்குங்க நிதேஷ்....”

  அப்பட்டமான தன் மிரட்டலில் மிரண்டுவிடுவான் என்று அவள் நினைக்க அவனோ வாய்விட்டு சிரித்தான். சிரித்து முடித்தவன் “என்னே.... உங்கள் காதல்.... ஆஹா... புல்லரிக்குது போங்க...., என் மேல உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற இந்த அதீத காதலுக்கான ஒரே கரணம், நான் உங்க தங்கை நிவேதவோட காதலன் எங்கிறது மட்டும் தான் இல்லையா மிஸ் ரௌத்திரி!”

  அவனுடைய இந்த கேலி கலந்த கேள்வியில் வாயடைத்து போனல் அது ரௌத்திரி அல்லவே!
  அவள் மிடுக்கு குறையாமலே சொன்னாள் “நான் உங்களுக்கு கிடைகிறது உங்களோட அதிஸ்ரம் மிஸ்டர் நிதேஷ்.”


  “ஆனால் நான் அதிஸ்ரம் என்று நினைக்கிறது என் காதலியே எனக்கு மனைவியாக வர்ரத தான் மிஸ் ரௌத்திரி”.
  oooo....., come on, don
  `t toke rabish நிதேஷ்.


  wait... wait... medam.... இவ்வளவு நேரமும் நீங்க பேசினீங்க, நான் கேட்டேன். இப்போ நான் பேசுறத நீங்க கேளுங்க. அதுக்கு முன்னாடி உங்களுக்கு 2 பேரை அறிமுக படுத்துறேன். என்றாவன் சற்று தள்ளி நின்ற ஓர் இளைஞனுக்கு கை காட்டினான். அதை எற்க்கொண்டதற்கு அடையாளமாக அவனும் தலையை ஆட்டிவிட்டு வேறு ஒருவனுக்கு கைகாட்டினான். சற்று நேரத்தில் அங்கு வந்த அவர்கள் இருவரும் மெனு கட்டிற்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த ஒரு குட்டி வீடியோ கேமரா வை எடுத்து, உடனேய அதை தாங்கள் வைத்திருந்த லேப்டாப்ல் போட்டு அவ்வளவு நேராமும் அவர்கள் இருவரும் பேசியதை அழகாக திரையிட்டு காட்டினார்கள்.

  பின் நிதேஷின் தலை அசைபிற்கு ஏற்ப எல்லாவற்றையும் எடுத்துகொண்டு அவர்கள் சென்றுவிட, பேய் அறைந்தது போல் இருக்கும் ரௌத்திரியை சற்று இளக்காரமாகவே பார்த்தான் நிதேஷ்.

  “நீங்க உங்க தங்கைய பத்தி சரியாதான் கணிச்சிருகீங்க ரௌத்திரி. பாசத்துக்கு கட்டுபடுற அவ உங்களை எதிர்த்து சுண்டுவிரல் கூட அசைக்க மாட்டேங்கிறா. ஆனால் என்னைய பத்தி தப்பா கணிச்சிட்டீங்க. இதுக்கே இப்படி ஷாக் ஆனா எப்படி! உங்களுக்கு இன்னுமொரு surpriceம் இருக்கு ரௌத்திரி என்றவன் திரும்பி பார்க்க அங்கே வந்து நின்றார்கள் அவள் பெற்றோர்கள்.”
  அவர்களை கண்டது தன்னையாரியாமலே இருக்கையை விட்டு எழுந்தாள் ரௌத்திரி. கோபம் மின்னும் கண்களுடன் தந்தையையும், அழுது வற்றிப்போன கண்களுடன் தயையும் கண்டவுடன் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றிருந்தாள் அவள்.


  “காதல என்னைய மாதிரியே நீயும் சாதாரணமா நினச்சிட்டே இல்ல... உங்கப்பா தான் வேற ஒருத்திய காதலிக்கிறேன் என்று சொன்னாப்பவே நான் கேட்டிருக்கணும். அவர் காதல சாதாரணமா நினச்சு, அவர் மனச என்னால ஜெய்க்க முடியும் என்று நினச்சு கல்யாணம் பண்ணிகிட்டது என்னோட தப்பு.....” என்ற தாயுடைய வார்த்தைகள் அவளிற்கு கண்கெட்ட பிறகு பார்க்க கிடைத்த சூரிய உதயம் ஆகியது.
   
   
 3. Lady's Wings

  Lady's Wings Roots of LW Staff Member Administrator

  Messages:
  1,434
  Likes Received:
  3,359
  Trophy Points:
  113
  Admin Post
  போதாததிற்கு தந்தை வேறு “உங்கிட்ட இந்த அளவுக்கு ஒரு வன்மத்தை நான் எதிர்பக்கல்ல! ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா ஒத்துமையா இருப்பீங்க என்று தான் நினச்சேன்.... உங்கம்மாவே அவளை தன் பொண்ணா எதுகிட்டதுக்கு அப்புறம் இப்படி ஒரு பகை உணர்வு உனக்குள்ள வளரும் என்று நான் நினச்சு பாக்கல்ல. எல்லாம் என் தப்பு தான் என்றவர்” நிதேஷ்ஐ ஓர் அடிபட்ட பார்வை பார்த்தவாறே தன் மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டார்.

  தாய் தந்தையர் வெளியேறிய பின் தொப்பென இருக்கையில் இருந்தவள் தன் முன்னாள் நிதேஷ் வைத்த தண்ணீரை எடுத்து மட மடவென பருகினாள்.
  அவள் தன்னை நிலைபடுத்திக்கொள்ள அவகாசம் கொடுத்தவன் “இப்போ நான் எதுவும் சொல்லாமலே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும் என்று நினைக்கிறன். அமர்த்தலாக அவன் கூறியதை கேட்டவள் தன் பேருக்கு ஏற்றாற்போல் ரௌத்ரமாக அவனை பார்த்தாள்.


  உன் பார்வை என்னை ஒன்றும் செய்யாது பெண்ணே என்பதுபோல் அவன் தன் பாணியில் அமர்த்தலாக பேச தொடங்கினான். “சில பேருக்கு யார் ௬டையாவது போட்டி போடணும். யாரையாவது அழவைகனும். அப்படி பண்ணுறப்போ அவங்களுக்கு தாங்க ஏதொ பெருசா ஜெய்ச்சிட்ட மாதிரி ஒரு பீலிங். மத்தவங்கள விட நான் உயர்ந்தவ எங்கிறத நிருபிக்கிறதா நினச்சு தங்கள சுத்தி தனிமைய ஏற்படுத்திகிராங்க. தன்னை தானே தனித்துவமா காட்ட நினச்சு உண்மையான அன்பை இழக்கிராங்க. நீங்களும் அந்த வகைய சேர்ந்தவங்க தான் ரௌத்திரி.

  தன்னையும் தன்னுடைய உணர்வுகளையும் அவன் புரிந்து கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவன் அப்படி கூறியதை பொறுக்க முடியாதவளாக “போதும் நிதேஷ்! கூட பொறந்தவங்களே ஒருத்தர ஒருத்தர் கொல்ல நினைக்கிற இந்த காலத்தில எங்கம்மாவோட சக்காளத்திக்கு பொறந்தவ மேல நான் பாசம் காட்டணுமா.... என் வீடுக்குள்ள வந்து எனக்கு போட்டியா எங்க அம்மா அப்பா பாசத்த பங்கு போட்டவ மேல நான் பாசபயிர வழக்கனுமா!”

  ரௌத்திரியின் கொதிப்பிற்கு மாறாக அமைதியாக மீண்டும் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி அவள் முன்னாள் நீட்டியவன்
  “பாசம் எங்கிறது கொடுக்க கொடுக்க ௬டுறதே தவிர குறையிறது இல்ல ரௌத்திரி. உங்களுக்கு வீடுக்குள்ளேயே நிவேதா வந்த படியா நீங்க அவ மேல வெறுப்ப வளத்துக்கிட்டீங்க. அதுக்கு உங்களுக்கு ஒரு காரணமும் கிடச்சுது. அப்படி அவ இல்லை என்றால் உங்களுக்கு வெறுப்பு பாராட்டுறதுக்கு வெளியா யாரையாவது தேடி இருப்பீங்க. அக்கம் பக்கத்திலையோ..., இல்லை ஸ்கூல்லையோ... யாராவது ஒருத்தர் உங்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தை முன்னிட்டு கிடச்சிருபாங்க.”


  “என்னைய பத்தி ரெம்ப தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க நிதேஷ்!”

  “ok, விட்டுடலாம்...., உங்கள பத்தின ஆராட்ச்சி எனக்கு முக்கியம் இல்லை மிஸ் ரௌத்திரி. எனக்கு என் வாழ்க்கை தான் முக்கியம். அடுத்தவங்க வழியில நான் குறுக்கிட மாட்டேன். அதே போல என் வளியிலையும் யாரும் குறுக்க வர விட மாட்டேன். நான் என்ன சொல்ல வர்றேன் என்று உங்களுக்கு புரிஞ்சிருக்கும்.....

  நான் அவள் சொந்தம். அவளுக்கு மட்டும் தான் நான் சொந்தம். நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது, இந்த நிச்சயதார்த்தத்தை நல்ல முறையில ரத்து பண்ணிடுங்க. இதுக்கு மீறியும் நீங்க உங்க புத்திசாலித்தனத்தை எங்கிட்ட காட்ட மாட்டீங்க என்று நினைக்கிறன். நீங்க தடுக்கில பஞ்சால் நான் இடுக்கில பாய்வேன் எங்கிறது உங்களுக்கு புரிஞ்சிருக்கும் இல்லையா.

  “ஆகவேண்டிய காரியத்தை பாருங்க. goodbye மிஸ் ரௌத்திரி. உங்க தங்கய கேட்டதா சொல்லுங்க.” என்று கூறியவன் அதற்கு மேல் அவளை திரும்பியும் பாராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

  பகை.... கோபம்.... பழிவாங்கல்..... இப்படிபட்ட உணர்வுகளுக்கு வழிவிட்ட மனது அடிபட்டு நிற்கும் போது அரவணைக்க யாரும் இல்லது தனிமைபட்டு நின்றாள் ரௌத்திரி. இப்போது வீடுக்கு போய் தாய் தந்தை சகோதரியை சந்திக்க வேண்டுமே....
  அடுத்து என்ன என்பது சுத்தமாக புரியாத நிலை........


  சுபம்
   
   
 4. AmmuJ

  AmmuJ Pillars of LW LW WRITER

  Messages:
  1,498
  Likes Received:
  998
  Trophy Points:
  113
  Nice story pa..superb..
   
  annedavi likes this.
   
 5. geetharavi

  geetharavi Wings New wings

  Messages:
  1,007
  Likes Received:
  126
  Trophy Points:
  63
  wowww super a eruiku
   
  annedavi likes this.
   
 6. barathy

  barathy Contributor New wings

  Messages:
  1,414
  Likes Received:
  260
  Trophy Points:
  83
  Nice story pa......super
   
  annedavi likes this.
   
 7. rajan_alli

  rajan_alli Wings New wings

  Messages:
  939
  Likes Received:
  135
  Trophy Points:
  43
  Very well-written & melodramatic family story. Loved the way it is written.

  Wish you all the very best Devi!
   
  annedavi likes this.
   
 8. Deepa123

  Deepa123 Wings New wings

  Messages:
  518
  Likes Received:
  467
  Trophy Points:
  83
  Nice story
   
  annedavi likes this.
   
 9. spmeyyammaisp

  spmeyyammaisp Contributor New wings

  Messages:
  1,682
  Likes Received:
  107
  Trophy Points:
  63
  super kuttiya, nice story.
   
  annedavi likes this.
   
 10. vetrikalpanavel

  vetrikalpanavel Wings New wings

  Messages:
  357
  Likes Received:
  106
  Trophy Points:
  63
   
Loading...

Share This Page

Sponsored