Sponsored


Ragasiya Thirumanam _ SK

Discussion in 'Short Stories' started by Lady's Wings, Nov 16, 2016.

Sponsored


  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,434
    Likes Received:
    3,359
    Trophy Points:
    113
    Admin Post

    Sponsored


    இரகசியத் திருமணம்
    வசுமதி வந்ததில் இருந்து வாசுதேவனும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார் , எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் வசுமதி முகத்தில் இன்று மலை அளவு சோகம் , அதுவும் தன் தோழி வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று மிகவும் சந்தோசமாக சென்றவள் இப்படி வரும் அளவிற்கு என்ன ஆனதோ ?. என்று கவலை கொண்டு , அதை கேட்டார்.

    "வசு ! வசு ! "என்றார் .
    வசு : " ம் " என்றாள்
    "வசு என்னம்மா ஆச்சி ?"
    வசு பதிலே சொல்லாமல் மெளனமாக இருந்தார் . அவர் கண்கள் அழுகைக்கான அறிகுறியோடு இருந்தன .
    வாசு அழுத்திக் கேட்டதும் , அழுகையினிடையே சொன்னார் . மறுநாள் தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க தோழி வீட்டிற்கு சென்ற வசு உள்ளே செல்லும் முன் அங்கு தன் மகள் குரல் கேட்டு அங்கேயே நின்றிருக்கிறார் " இன்று முக்கியமான வேலை இருப்பதால் வீட்டிற்கு வர நேரமாகும்" என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்ற மகள் மதுமதி இப்போது தன் தோழி வீட்டில் ( அவள் தோழியின் மகளும் (கவிதா ), அவள் மகளும் தோழிகள் ) அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாளே என்ற எண்ணத்தில் .

    மேலும் அவர்கள் பேசுவது காதில் விழ அதிர்ந்து விட்டார் .

    தோழிகள் பேசியது


    மது : " ஹேய்! கவி ! எல்லா ஏற்பாடும் பக்கா தானே ?"
    கவி : " அதெல்லாம் ஓகே தான் , அப்பாவும் , அம்மாவும் நாளைக்கு சரியான நேரத்துக்கு வந்துடுவாங்களா ? "
    மது : " அதெல்லாம் வந்துடுவாங்க , அவங்ககிட்ட என் தோழிக்குத் திருமணம் என்று பொய் சொல்லி , நாளைக்கு கட்டாயம் வரணும் என்று சொல்லி உறுதி வாங்கிட்டேன் ."
    கவி : " இது சரியா வருமா மது !?. அவங்க வீட்டுக் கல்யாணம் என்று தெரியாமலேயே நாளைக்கு வரப்போறாங்க , வந்து பார்த்ததும் அதிர்ச்சி ஆகிடுவாங்க"
    ஆனால் ....."
    மது :" என்னடி ஆனால் ?"
    கவி : " இல்லைடி இதை அவங்ககிட்ட சொல்லி அவங்க சம்மதத்தோடு செய்தால் நல்லது தானே ?. "
    மது : " நான் சின்ன வயசில் இருந்து அவங்களை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறேன், நிச்சயமா அவங்க சம்மதிக்க மாட்டாங்க , அதான் அவங்களுக்குத் தெரியாமல் இந்த ஏற்பாடு. எல்லோரும் இருக்கும்போது அவங்க ஒன்னும் மறுக்க முடியாது ."
    கவி : " அப்பறம் உன் விருப்பம் "


    இதைக் கேட்டதும் அப்படியே வீட்டிற்கு வந்துவிட்டார்.

    இதைச் சொல்லி அழுததும் வாசு சிறிது நேரம் அமைதியாய் இருந்தார் . வசு கணவரிடம் இருந்து எந்த பதிலோ , ஆறுதலோ அல்லது எந்த ஒரு வார்த்தையும் வரவில்லை என்றதும் அவரிடம் நேரிடையாகக் கேட்டார் .
    அதற்கு வாசு " வசு ! அது தான் அவளுக்கு சந்தோசம் என்றால், நாம் ஏன் அதை மறுக்கணும்?, நம் குழந்தைக்கு நல்லது , கெட்டது சொல்லி வளர்த்திருக்கிறோம் , இதுவரை அவள் எடுத்த முடிவு எதுவும் தவறாகப் போனதில்லை , இந்த உடை தனக்கு நல்லா இருக்கும், இந்த படிப்பு எனக்குத் தேவை , இந்த வேலை நல்ல வேலை என்று சரியாகத் தேர்வு செய்யத் தெரிந்த நம் பெண் , நிச்சயமாக நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, ஏன் ? உனக்கு அந்த நம்பிக்கை இல்லையா ?." என்று கேட்டார் .
     
     
  2. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,434
    Likes Received:
    3,359
    Trophy Points:
    113
    Admin Post
    வசு:" ஐயோ ! என்னங்க இப்படி சொல்லிட்டீங்க ! . அந்த நம்பிக்கை எனக்கு இருக்குங்க , ஆனால் அவள் நம் மேல் நம்பிக்கை வைத்து நம்மிடம் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் , மனதுக்கு சந்தோசமாக இருந்திருக்கும் ."
    வாசு :" அதனால் என்னமா !,நமக்கு தெரியாது என்று நினைத்து அவள் எல்லா ஏற்பாடும் பண்ணிவிட்டாள், நாளைக்கு நமக்கு தெரியும் போது நாமும் அவளுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் ஆசிர்வதித்து விட்டு வருவோம் ".
    வசு :" சரிங்க நீங்க எது சொல்றீங்களோ அதுவே தாங்க என்னோடதும் , "

    வசு , வாசு என்னதான் பேசிக்கொண்டாலும் மனது கிடந்தது தவியாய் தவித்தது , .

    வீட்டிற்கு வந்த பெண்ணிடம் அவர்கள் பேசிக்கொண்டது போல எதையும் காட்டிக்காமல் சாதாரணமாக நடக்க மிகவும் சிரமமாக இருந்தது .

    மறுநாள் பெண் சொன்ன படி நல்ல புடவை உடுத்தி , எல்லாம் ரெடி ஆகி அவளோடு கிளம்பினார்கள் .

    அவள் அழைத்து சென்ற இடத்தில் தோரணங்கள் கட்டி , திருமண ஏற்பாடுகள் எல்லாம் தயாராக இருந்தன . அங்கே சென்றதும் , பெண்ணும் , மாப்பிள்ளையும் வந்தாச்சு என்று சொன்னதும் , அதிர்ச்சியில் சுற்றுமுற்றும் பார்த்தனர் , அப்போது மது அருகில் வந்து " என்னை மன்னிச்சிடுங்க மா , உங்கள் இருவருக்கும் தெரியாமல் நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணினேன் " என்று கூறியதும் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை , பின்னர் மது , கவி , அவள் அப்பா ,அம்மா எல்லோரும் அருகில் வந்து " என்ன பார்க்குறீங்க ?, நீங்க தான் மாப்பிள்ளை , பொண்ணு ,உங்களோட 30 ஆவது திருமண நாளை சிறப்பாக கொண்டாட உங்கள் மகள் பண்ணியது தான் இந்த ஏற்பாடுகள் " என்று சொன்னதும் . வசு ,வாசு இருவரும் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தபடி மதுவை பார்த்தார்கள் . தாங்கள் தவறாக எண்ணியதை அவளிடம் கூறி வருந்தினர். அவளும் தவறாக நினைக்காமல் , தன் அப்பா, அம்மாவின் திருமணநாள் விழாவை எல்லோரும் மகிழ்வோடு கொண்டாடினார்கள் .




    இக்கதை லேடீஸ் விங்ஸ் தவிர வேறு எங்கும் வெளியிடப்படாதது .
     
     
  3. Mekalai Sachin

    Mekalai Sachin Wings New wings

    Messages:
    46
    Likes Received:
    57
    Trophy Points:
    38
    நல்ல திருப்பத்தோடு சுப முடிவு
     
    moon likes this.
     
  4. spmeyyammaisp

    spmeyyammaisp Contributor New wings

    Messages:
    1,682
    Likes Received:
    107
    Trophy Points:
    63
     
  5. moon

    moon Contributor New wings

    Messages:
    3,370
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Thanx ma.
     
     
  6. moon

    moon Contributor New wings

    Messages:
    3,370
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Thanx ma.
     
     
  7. kvsuresh

    kvsuresh Contributor New wings

    Messages:
    2,188
    Likes Received:
    211
    Trophy Points:
    63
    nice story moon, edhirparadha mudivu.
     
    moon likes this.
     
  8. moon

    moon Contributor New wings

    Messages:
    3,370
    Likes Received:
    491
    Trophy Points:
    83
    Thanx ma. Chummaa oru try...
     
    kvsuresh likes this.
     
  9. GREENY31

    GREENY31 Bronze Wings New wings

    Messages:
    1,801
    Likes Received:
    2,213
    Trophy Points:
    133
    Super story mam.........
     
    moon likes this.
     
  10. venila

    venila Bronze Wings New wings

    Messages:
    1,187
    Likes Received:
    2,035
    Trophy Points:
    133
    Nice story with cute ending...
     
    moon likes this.
     
Loading...

Share This Page

Sponsored