Sponsored


Dhinam... Dhinam... Sila Thavalkal...!!!

Discussion in 'General Discussion' started by Jeyanthi Padmanabhan, Dec 30, 2012.

Sponsored


  1. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48

    Sponsored


    Hi Friends,

    Let us share very very interesting informations....
     
    Last edited: Dec 30, 2012
     
  2. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48
    உலகத்தினை சற்று பார்ப்போம்


    * பூமியின் மொத்தம் பரப்பளவு = 51 கோடியே 66 ஆயிரம் கிலோ மீற்றர்.

    * நிலப்பரப்பு = 14 கோடியே 84 இலட்டத்தி 29 ஆயிரம் சதுர கிலோ மீற்றர்.

    * சுற்றளவு = 40 இசட்டத்தி 7 ஆயிரத்தி 502 கிலோ மீற்றர்.

    * குறுக்களவு = 12756 கோடி கிலோ மீற்றர்.

    * நீர்பரப்பு = 40 இலட்டத்தி 7 ஆயிரத்தி 502 கிலோ மீற்றர்.

    * நிலப்பகுதி = 29.2 வீதம்.

    * நீர்ப்பகுதி = 70.8 வீதம்.

    * கடலின் பரப்பளவு = 361 மில்லியன் சதுர கிலோ மீற்றர்

    * துருவப் பகுதியின் விட்டம் = 12714 கிலோ மீற்றர்.

    * சூரியனில் இருந்து பெறும் ஒளியின் அளவு = 1 சதுர கிலோ மீற்றருக்கு 1 கிலோ வோட்ஸ்.

    * சுழலும் வேகம் = 1 மணிக்கு 107000 கிலோ மீற்றர்

    * தன்னைத் தானே சுற்றும் வேகம் = 23 மணித்தியாலங்கள், 56 நிமிடங்கள், 04 வினாடிகள்.
     
    Mekalai Sachin likes this.
     
  3. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48
    மனித மூளை

    மனித மூளை 1.5 கிலோ எடை கொண்டது. உடலின் அனைத்து இயக்கங்களும் மூளையின் உத்தரவுப்படியே நடக்கின்றன. நாம் சிந்திப்பது, பேசுவது, ஓடுவது, உண்பது, மகிழ்ச்சி, வருத்தம் என அனைத்தும் மூளையின் உத்தரப்படி தான் நடக்கிறது.

    கரு உற்பத்தியான 2வது வாரத்தில் மூளை தோன்றிவிடுகிறது. 3 மாத கருவின் மொத்த எடையில் பாதி, மூளையின் எடையாக இருக்கும்.

    உடலின் எந்தவொரு உறுப்பும் பாதிக்கப்பட்டால், மருத்துவம் மூலம் அதை குணப்படுத்துகிறோம். மூளையின் திறன் பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்படும். மூளை செயலிழந்துவிட்டால் இறப்பைத் தான் சந்திக்க வேண்டும்.

    உடலின் மொத்த எடையில் 40-ல் ஒரு பங்குள்ள மூளைக்கு, உடலில் ஓடும் ரத்தத்தில் 5-ல் ஒரு பங்கு தேவைப்படுகிறது.


    வயது ஏறஏற மூளையின் அளவு சிறியதாகிப் போகிறது. ஒவ்வொரு பத்தாண்டிற்கும் 1.9 சதவீதம் மூளை தன்னுடைய கன அளவை இழக்கிறதாம். மூளையின் கன அளவு சிறியதாகிப் போவதால் மூளையின் வெண்ணிற பகுதியின் அளவு அதிகரிக்கிறது. இதனால் நினைவாற்றல் குறைகிறது.வயது அதிகரிப்பால் மட்டுமல்லாது, மதுகுடிப்பதாலும் கூட மூளை சிறியதாகிப் போகிறது என்கிறார்கள் அறிவியலார்கள்.
     
     
  4. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48
    கெட்டுப்போகாத உணவுப்பொருள் தேன்

    நத்தை தொடர்ந்து மூன்று வருடங்கள் தூங்கலாம்

    பட்டாம்பூச்சிகள் தங்கள் பாதங்களினால் சுவைக்கின்றன.

    கிளியும் முயலும் தங்கள் பின்னால் இருப்பதை தலை திருப்பாமல் காணமுடியும்.

    நீர் யானை மனிதனை விட மிகப்பெரியது, ஆனால் அது மனிதனை விட வேகமாக ஓடும்.

    கண் இமைகளில் மனிதனுக்கு 550 முடி இருக்கின்றது.

    அண்டார்டிகா கண்டத்தில் மட்டும் நிலங்கள் கடல் மட்டத்திற்கு கீழே எங்கும் இல்லை.எல்லா இடமும் கடல் மட்டத்திற்கு மேல் தான் உள்ளது.

    வாத்தின் குவாக் குவாக் சத்தத்தை கேட்டிருக்கின்றீர்கள் அல்லவா? அதன் ஒலி மட்டும் எதிரொலிப்பதே இல்லை. இதுவரை ஏன் என்று தெரியவில்லை.

    டைப் ரைட்டரில் முதன் முதலாக தட்டச்சப்பட்ட நாவல் டாம் சாயர்

    தங்க மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மையாக மாறிவிடுமாம்.

    பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்.

    டான்பின்கள் ஒரு கண்னை திறந்து வைத்தபடியே உறங்குகின்றன.

    மாடுகளை மாடிப்படிகள் ஏறவைக்கலாம், இறங்க வைக்க முடியாது.

    மனிதனின் மூக்கும் காதும் வளர்ந்துகொண்டே போகும், ஆனால் கண்கள் வளராது.

    வயிறு நிறைய உண்ட பிறகு, சற்று நேரம் கேட்கும திறன் குறையும்.
     
     
  5. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48
    இரத்தத்தின் உண்மை தகவல்கள்

    இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது


    ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்' என்ற வேதிப்
    பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

    ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும்.

    ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம்
    எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

    ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள்
    ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

    ரத்த வெள்ளை அணுக்களின் வேலை
    ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

    ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்' அணுக்களின் வேலை
    உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

    பிளாஸ்மா என்றால் என்ன
    ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

    ரத்தத்தில் உள்ள பொருள்கள
    ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

    ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால்
    உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
    உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

    ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

    உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது
    எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

    ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி
    நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

    மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவுமூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

    ரத்தம் உறைவதற்கு அவசியம்
    ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன் (Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

    ரத்தத்தில் குரூப்புகள்
    ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. "‘O' பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு "யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.

    ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது.ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

    தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு
    தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

    தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது
    நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு ‘Anti D‘’ என்று பெயர்.

    ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்
    வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

    யார் ரத்த தானம் செய்யக்கூடாது
    உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant - recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

    தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா
    புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

    ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமாநன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

    ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா
    ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்
     
     
  6. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48
    சூரியக் குடும்பம் ( Solar System)


    பூமி (Earth)

    விட்டம் - மத்தியில் 12,756 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 12,714 கி.மீ.
    சுழலும் காலம் 23.94 மணிகள்
    ஈர்ப்பு வேகம் 9.8 m/s/s
    வெளியேறும் வேகம் 11.20 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 23.4 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் +58 C
    குறைந்தபட்சம் -88.3 C
    நிலாக்களின் எண்ணிக்கை 1
    அடர்த்தி (நீர் = 1) 5.52

    --------------------------------------------------------------------------------


    சூரியன் (Sun)

    விட்டம் - மத்தியில் 1,392,000 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 1,392,000 கி.மீ.
    சுழலும் காலம் 30 நாட்கள்
    ஈர்ப்பு வேகம் 273 m/s/s
    வெளியேறும் வேகம் 620 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் --
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம்
    குறைந்தபட்சம் +6,100 C
    +3,870 C
    நிலாக்களின் எண்ணிக்கை --
    அடர்த்தி (நீர் = 1) 1.41

    --------------------------------------------------------------------------------

    சந்திரன் (Moon)

    விட்டம் - மத்தியில் 3,476 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 3,476 கி.மீ.
    சுழலும் காலம் 27.32 நாட்கள்
    ஈர்ப்பு வேகம் 1.6 m/s/s
    வெளியேறும் வேகம் 2.38 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 6.6 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம்
    குறைந்தபட்சம் +138 C
    -171 C
    நிலாக்களின் எண்ணிக்கை --
    அடர்த்தி (நீர் = 1) 3.34

    --------------------------------------------------------------------------------

    புதன் (Mercury)

    விட்டம் - மத்தியில் 4,878 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 4,878 கி.மீ.
    சுழலும் காலம் 58.65 நாட்கள்
    ஈர்ப்பு வேகம் 3.8 m/s/s
    வெளியேறும் வேகம் 4.30 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 0 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் +427 C
    குறைந்தபட்சம் -212 C
    நிலாக்களின் எண்ணிக்கை 0
    அடர்த்தி (நீர் = 1) 5.43

    --------------------------------------------------------------------------
    ------

    வெள்ளி (Venus)

    விட்டம் - மத்தியில் 12,104 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 12,104 கி.மீ.
    சுழலும் காலம் 243.02 நாட்கள்
    ஈர்ப்பு வேகம் 8.6 m/s/s
    வெளியேறும் வேகம் 10.62 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் -177.3 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் +482 C
    குறைந்தபட்சம் +446 C
    நிலாக்களின் எண்ணிக்கை 0
    அடர்த்தி (நீர் = 1) 5.24

    --------------------------------------------------------------------------------


    செவ்வாய் (Mars)

    விட்டம் - மத்தியில் 6,787 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 6,787 கி.மீ.
    சுழலும் காலம் 24.62 மணிகள்
    ஈர்ப்பு வேகம் 3.7 m/s/s
    வெளியேறும் வேகம் 5.01 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 23.98 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் +27 C
    குறைந்தபட்சம் -126 C
    நிலாக்களின் எண்ணிக்கை 2
    அடர்த்தி (நீர் = 1) 3.94

    --------------------------------------------------------------------------------



    வியாழன் (Jupiter)

    விட்டம் - மத்தியில் 142,754 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 133,659 கி.மீ.
    சுழலும் காலம் 9.84 மணிகள்
    ஈர்ப்பு வேகம் 22.9 m/s/s
    வெளியேறும் வேகம் 59.50 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 3.1 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் -118 C
    குறைந்தபட்சம் -129 C
    நிலாக்களின் எண்ணிக்கை 16
    அடர்த்தி (நீர் = 1) 1.31

    --------------------------------------------------------------------------------

    சனி (Saturn)

    விட்டம் - மத்தியில் 120,057 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 107,812 கி.மீ.
    சுழலும் காலம் 10.53 மணிகள்
    ஈர்ப்பு வேகம் 9.1 m/s/s
    வெளியேறும் வேகம் 35.60 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 26.7 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் -179 C
    குறைந்தபட்சம் -184 C
    நிலாக்களின் எண்ணிக்கை 18
    அடர்த்தி (நீர் = 1) 0.70

    --------------------------------------------------------------------------------


    யுரேனஸ் (Uranus)

    விட்டம் - மத்தியில் 51,177 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 49,949 கி.மீ.
    சுழலும் காலம் 17.23 மணிகள்
    ஈர்ப்பு வேகம் 8.9 m/s/s
    வெளியேறும் வேகம் 21.21 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 97.9 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் -208 C
    குறைந்தபட்சம் -212 C
    நிலாக்களின் எண்ணிக்கை 15
    அடர்த்தி (நீர் = 1) 1.30
    --------------------------------------------------------------------------------


    நெப்டியூன் (Neptune)

    விட்டம் - மத்தியில் 49,520 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 48,203 கி.மீ.
    சுழலும் காலம் 16.04 மணிகள்
    ஈர்ப்பு வேகம் 11.0 m/s/s
    வெளியேறும் வேகம் 23.59 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 29.6 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் -219 C
    குறைந்தபட்சம் -221 C
    நிலாக்களின் எண்ணிக்கை 8
    அடர்த்தி (நீர் = 1) 1.64
    --------------------------------------------------------------------------------


    ப்ளூட்டோ (Pluto)

    விட்டம் - மத்தியில் 2,345 கி.மீ.
    விட்டம் - துருவங்களில் 2,345 கி.மீ.
    சுழலும் காலம் 6.39 நாட்கள்
    ஈர்ப்பு வேகம் 0.49 m/s/s
    வெளியேறும் வேகம் 1.16 km/sec.
    அச்சின் சாய்வுக்கோணம் 94 டிகிரி
    மேற்பரப்பின் வெப்பநிலை
    அதிகபட்சம் -223 C
    குறைந்தபட்சம் -234 C
    நிலாக்களின் எண்ணிக்கை 1
    அடர்த்தி (நீர் = 1) 2.0
     
     
  7. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48
    கப்பலில் 'நங்கூரம்' என்று ஒன்றிருக்கும். தெரியுமல்லவா? அது எவ்வாறு வேலை செய்கிறது???

    [​IMG]

    கப்பலின் நங்கூரம் (anchor), நம்முடைய காரில் இருக்கும் handbrake போன்றது என்று சொல்லலாம். அது ஓடும் காரை நிறுத்த பயன்படுத்த முடியாது, ஆனால் நிற்கும் கார் உருளாமல் பார்த்துகொள்ளும் அல்லவா??? அதாவது static friction-ஐ எதிர்கொள்ள அதிக விசை தேவை, எனவே சிறிய அளவு braking இருந்தாலும் கார் நகராமல் பார்த்து கொள்ளலாம் அல்லவா??? இதியே மனதில் வைத்து கொண்டு... இப்போ நங்கூரத்தை பற்றி பார்க்கலாம்...

    மண்வெட்டியால் மண்ணை வெட்டுகிறோம், வெட்டி விட்டு என்ன செய்வோம், இளக்குவோம் அல்லவா... இப்போது இளக்காமல் உங்களை நோக்கி இழுத்து பாருங்கள்... வராது... மண்வெட்டி உடைந்த்து போகும் (நீங்கள் பலசாலியாக இருந்தால்)..... இதர்கு காரணம் மண் எளிதாக shear force-சினால் பிரிக்கபட்டு விடும்...

    ஒரு நங்கூரம் வடிவமைக்கபடும் போது அது காற்றினாலோ, அலைகளின் இழுப்பினாலோ இழுத்து செல்லாமல் இருக்க வடிவமைக்கபடுகிறது. நங்கூரம் இட்ட கப்பல் இழுக்கபடும் போது மண் இருக்கும் சமவெளி பரப்பில் இழுக்கபடும் (parallel to the plane of the land), எனவே நங்கூரத்தின் கைகள் (arm and flukes) மண்ணினுள் புதைந்து இருக்கி பிடித்து கொள்ளும். மண் அழுத்தத்தினால் பலமாகி கொள்ளும் (sand is good in compression)இதனால் கப்பல் நகராமல் பார்த்து கொள்ளும்...

    கவனிக்க: இங்கு கப்பல் நங்கூரம் கப்பலில் காற்று மற்றும் அலையின் விசைகளை மட்டுமே தடுக்கிறது...

    இப்போது கப்பல் நகர வேண்டும் என்றால், மாலுமி நங்கூரத்தை மேலே இழுக்க , அது மண்வெட்டி மண்ணை தோண்டுவது போல் மேலே வரும், இங்கு அந்த மண் shear failure ஆகி எளிதாக மேலே வரும்....

    Naval architechture படிப்பவர்கள் நங்கூரம் வடிவமைப்பதையே ஒரு பாடமாக படிப்பர்.. அதில் அத்தனை விஷயங்கள் உள்ளன.
     
    Last edited: Dec 30, 2012
     
  8. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,250
    Likes Received:
    173
    Trophy Points:
    48
    பறக்குற விமானத்துல இடி விழுந்தா என்னாகும்? பறக்குற விமானத்துல பறவை மோதினா என்னாகும்?

    இடிவிழுந்தால் கோவிந்தாதான். ஆனால் இடிவிழாது. அதற்காக கருவிகள் உள்ளன. அது இடியை அப்படியே செயலிழக்கச்செய்துவிடும். ஆனால் மின்னல் தாக்குகின்றன. பல முறை சிகாகோ அல்லது லாஸ் ஏஞ்சலிருந்து டோக்கியோ அல்லது ஒசாகா வரும்பொழுது பலமுறற இந்த பிரச்சனையில் விமானம் சிக்கியிருக்கிறது. டோக்கியோ அல்லது ஒசாகாவில் தரையிறங்கியவுடன் விமானத்தை சோதித்துப்பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று தெரிந்தபின்னரே மீண்டும் விமானத்தை எடுக்க சம்மதிப்பார்கள். ஆனால் மின்னல் தாக்காமல் இருக்கவும் கருவிகள் இருக்கின்றன. இருந்தும் அது எப்படி விமானத்தை தாக்குகிறது என்று தெரியவில்லை.

    பறக்கிற விமானத்தில் பறவை மோதினால் பறவை இறந்துவிடும். பறக்கிற விமானத்தின் அருகில் பறவை சென்றால் எஞ்ஜின் அந்த பறவை அப்படியே கபளீகரம் செய்துவிடும். ஆனால் விமானம் உடனே தரையிறங்க வேண்டியதுதான். இது சாதாரணமாக விமான நிலையம் அருகில்தான் நடக்கும், ஆகையால் பயம் எதுவும் கிடையாது. என்ன பல ஆயிரம் ரூபாய் விமான கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படும். அதனால் எல்லா விமான நிலையங்களிலும் ஒரு விதமான அல்ட்ராசானிக் சப்தத்தை எழுப்பும் கருவியை பொருத்தியிருக்கிறார்கள். அது மனிதர்களை ஒன்றும் செய்யாது, ஆனால் முயல், பறவை போன்றவற்றை செயலிழக்கச் செய்துவிடும். ஆகையால் அவைகள் எதுவும் இந்த சத்தம் வரும் பக்கமே தலை வைத்துக்கூட படுக்காது.
     
     
  9. chellam

    chellam Wings

    Messages:
    34
    Likes Received:
    0
    Trophy Points:
    0
    Hi Jeyanthi,

    As our friends tell, you are a mini encyclopedia....very nice informations Thanks
     
     
  10. rosetamil1

    rosetamil1 Contributor

    Messages:
    2,484
    Likes Received:
    15
    Trophy Points:
    0
    Ur are Correctly told U ma, Thanks Jeyanthi for all very Useful Infos.:s3969:
     
    Last edited: Dec 30, 2012
     

Share This Page

Sponsored