பளபள கிச்சன்.. பளிச் டிப்ஸ்!

Discussion in 'Attractive Kitchen' started by anitha.aravind, Nov 13, 2012.

 1. anitha.aravind

  anitha.aravind Wings

  Messages:
  468
  Likes Received:
  5
  Trophy Points:
  0
  விழாக் காலங்களில் வீட்டைப் பளிச்சென்று வைத்துக் கொள்ள யாருக்குத்தான் ஆசை இருக்காது? இதோ.. உங்கள் சமையலறையை சூப்பர் சுத்தமாகப் பராமரிக்க டிப்ஸ்.

  காய்கறி, பழங்களை நறுக்கியவுடன் குப்பைகளை உடனே குப்பைத் தொட்டியில் கொட்டி விடுங்கள். மேடையிலேயே சேர்த்து வைத்தால், அதன் மேல் ஈ மற்றும் பூச்சிகள் மொய்த்து நம்மை அறியாமலேயே வியாதிகளை பரப்பி விடும்.

  இஞ்சி, தேங்காய் மூடி, காய்கள், இட்லி மாவு போன்றவற்றை அதன் உபயோகம் முடிந்த உடனேயே எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அவை கெட்டுப் போகாது என்பதுடன், மேடையும் சுத்தமாகவே இருக்கும்.

  பால் (அ) சாம்பாரை கொதிக்கவிடும்போது வழிந்து பர்னரில் அடைத்துக் கொள்ளும். இதை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும்.

  அடுப்பின் 'நாப்'-ஐ அணைத்து, பர்னரை தடிமனான துணியால் கழற்றுங்கள். இதைத் தண்ணீர்க் குழாயின் கீழே காட்டினால், அடைப்புகள் நீங்கி விடும். பர்னரிலிருந்து சொட்டும் தண்ணீர் வடிந்த பிறகு, இதை எரிந்து கொண்டிருக்கிற மற்றொரு பர்னரின் மேல் தலைகீழாக வைத்தால், நிமிடத்தில் உலர்ந்து விடும்.

  வாரம் ஒருமுறை, சுவரில் உள்ள ஒட்டடையை அகற்றி, ஜன்னல் கம்பிகளைத் துடையுங்கள். சமையல் பொருட்கள் வைத்திருக்கும் டப்பாக்கள், பாட்டில்கள் போன்றவற்றை ஒரு உலர்ந்த துணியால் துடைத்து பிசுக்கை அகற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டால், உங்கள் கிச்சன் எப்போதும் கிளாசிக்தான்.

  சமையல் முடித்தவுடன் கொதிக்கும் வெந்நீரை மேடையின் மேல் விட்டு, ஒரு துணியால் நன்றாக அழுந்தத் துடையுங்கள். மேடை பளபளக்கும்.

  மாதம் ஒருமுறை கிச்சனில் இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன், பல்புகள், கடிகாரம், மின்சார சிம்னி முதலியவற்றில் உள்ள தூசுகளை உலர்ந்த துணியால் துடைத்துவிடுங்கள். பிறகு ஈரத்துணியால் அவற்றை சுத்தம் செய்தால், பளிச்சென்று இருக்கும்.


  கிச்சன் மேடையிலேயே மாவு சலிப்பது, சப்பாத்தி இடுவது, காய், கீரைகளை நறுக்குவது என்று சகலமும் செய்பவரா நீங்கள்? ஒரு பிளாஸ்டிக் ஷீட்டை விரித்து அதன் மேல் வைத்துக் கொண்டு வேலைகளை செய்தால், மேடை சுத்தமாக இருக்கும்.

  மீந்த குழம்பு, ரசம் போன்றவற்றை அப்படியே 'சிங்க்'கில் கொட்டினால், அடைத்துக் கொள்ளும். இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கலக்கி ஒரு பெரிய துளையுள்ள வடிகட்டியால் வடிகட்டினால், சக்கையைத் தனியே குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். சிங்க்கில் எதுவும் அடைக்காது.

  சமையலறையில் கண்களைக் கவரும் வண்ணப் படங்கள், இயற்கைக் காட்சிகள் கொண்ட காலண்டர்கள், காய்கறிகள், பழங்களின் படங்களை ஒட்டி வையுங்கள். முடிந்தால், நல்ல படங்கள் பதித்த டைல்ஸ்களையே சமையலறைக்கு உபயோகியுங்கள். சுத்தத்துக்கு சுத்தம். மனசுக்கும் சந்தோஷம்!

   
  subaaravi likes this.
   
 2. Malu6

  Malu6 Super Moderator Staff Member Moderator New wings

  Messages:
  5,063
  Likes Received:
  184
  Trophy Points:
  83
  Hi Anitha,

  Thanks for the kitchen tips.
   
   
 3. anitha.aravind

  anitha.aravind Wings

  Messages:
  468
  Likes Received:
  5
  Trophy Points:
  0
  most welcome malu
   
   
 4. nila

  nila Contributor New wings

  Messages:
  2,843
  Likes Received:
  38
  Trophy Points:
  48
  hi Anitha,

  nice tips
   
   
 5. anuarun

  anuarun Contributor New wings

  Messages:
  3,857
  Likes Received:
  15
  Trophy Points:
  38
  Hi Anitha,

  Nice tips ma.
  This is tip for getting rid of cockroaches from ur kitchen and from the cupboards of all ur rooms.
  Take a cup of maida and 1pkt of boric powder(u will get in medical shop)mix well add 1/4 tsp of sugar and 2tbspof milk to the mixture now add water and make a dough of chappathi dough consistency. Make small balls and put in ur cupboards and stick in the corner of the walls. See that small kids dosen't touch this. From third day u can see big to small cockroaches will start dying. This one is safer than any other spray which contains unhealthy chemicals. Atleast for 5 to 6 months u will not get cocroaches . After 4 months remove the old balls and put the new one.
   
  Arthy2106 likes this.
   

Share This Page