Sponsored

SPORTS NEWS

Discussion in 'Sports' started by Nathasaa Shiyan, Feb 4, 2014.


Sponsored
  1. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    சச்சினுக்கு பாரத ரத்னா விருதை வழங்கிய ஜனாதிபதி

    [​IMG]

    சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவித்துள்ளார்.
    கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். தனது 200வது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றார்.

    24 ஆண்டுகள் நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16ம் திகதி சொந்த மண்ணில் அவர் பிரியாவிடை பெற்றார்.

    டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய அணிக்கு அவரது சேவைகளை கவுரவிக்கும் விதமாக நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. அவர் ஓய்வு பெற்ற தினத்தில் மத்திய அரசு இதை அறிவித்தது.

    இதேபோல அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இருவருக்கும், பாரத ரத்னா விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் இன்று மதியம் 12.05 மணி அளவில் நடந்தது.

    முதலில் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். இந்த விருதை பெறும் 3வது அறிவியல் விஞ்ஞானி ஆவார்.

    இதைத்தொடர்நது டெண்டுல்கருக்கு, ஜனாதிபதி பாரத ரத்னா விருதை வழங்கினார். பெருமைக்குரிய இந்த விருதை அவர் பெறும்போது மனைவி அஞ்சலியும், மகள் சாராவும் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

    பாரத ரத்னா விருதை பெற்ற முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையை* டெண்டுல்கர் பெற்றார். மேலும் குறைந்த வயதில் இந்த விருதை பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.
     
     
  2. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    பங்களாதேஷ் ஒருநாள் தொடரில் இருந்து மஹேல, ஹேரத் நீக்கம்


    [​IMG]


    பங்களாதேஷ் அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மஹேல ஜயவர்தன மற்றும் ரங்ஹன ஹேரத் ஆகியோருக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளது.
    எனினும் சர்வதேச இருபதுக்கு- 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை குழாமில் இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

    ஒருநாள் போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக அஞ்ஜலோ மெத்தியூஸ்சும், உப அணித் தலைவராக டினேஷ் சந்திமாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    திலகரத்ன டில்ஷான், குசல் ஜெனித் பெரரா, குமார் சங்கக்கார, அசான் பிரியன்ஜன், கித்றுவான் விதானகே, அஞ்ஜலோ பெரரா, லசித் மாலிங்க, திஸ்ஸர பெரரா, நுவன் குலசேகர, சுரங்க லக்மால், சசித்தர சேனாநாயக்க, அஜந்த மெண்டிஸ், மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் ஏனைய வீரர்களாக அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, சர்வதேச இருபதுக்கு- 20 போட்டிகளுக்கான இலங்கை குழாமில் அஞ்ஜன் பிரியன்ஜன் மற்றும் கித்றுவான் விதானகே ஆகியோருக்குப் பதிலாக மஹேல ஜயவர்தன மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது
     
     
  3. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    கலை வடிவம் பெறும் சச்சினின் சாதனைகள்


    [​IMG]

    இந்தியக் கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச போட்டிகளிலிருந்து*ஓய்வு பெற்றார்.
    தனது சொந்த ஊரான மும்பையில் 200-வது டெஸ்ட் போட்டியுடன் அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இந்திய அரசு அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு அளிக்கப்படும் என்று அறிவித்தது.

    இந்த விருதினை இந்திய அரசு சச்சினுக்கு இன்று அளிக்கவுள்ளது. இந்த நேரத்தில் நாசிக்கைச் சேர்ந்த ஓவியரான பிரபுல் சாவந்த் சச்சினின் வாழ்க்கை வரலாற்று ஓவியம் ஒன்றினை வரைந்துள்ளார்.

    சச்சினின் சாதனைகளால் கவரப்பட்ட பல இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டில் தற்போது ஈடுபாடு கொண்டுள்ளனர்.* மூன்றடிக்கு ஐந்தடி கொண்ட இந்த ஓவியமானது அவரது வாழ்க்கையின் பல நிகழ்வுகளைப் பற்றி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    சச்சினின் பிறந்த ஊர் மும்பை என்பதால் ஓவியத்தின் பின்னணியாக அந்நகரின் உலக பாரம்பரிய வரலாற்றுத்தளமாக அறிவிக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் இடம் பெற்றுள்ளது.

    சச்சினின் குழந்தைப் பருவத்தில் தொடங்கி அவரது தந்தை ரமேஷ் டெண்டுல்கர், பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேகர், ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேனுடனான சச்சினின் சந்திப்பு, சச்சினின் 200-வது போட்டியில் இந்திய அரசு வெளியிட்ட அவரது தபால்தலை போன்றவை இந்த ஓவியத்தில் வரையப்பட்டுள்ளன.

    இதுமட்டுமின்றி சச்சினின் தாயார், அவரது மனைவி அஞ்சலி, சச்சினை எட்டாவது உலக அதிசயமாகக் குறிப்பிடும் விதத்தில் தாஜ்மஹாலின் வெளித்தோற்றம் போன்றவையும் இந்த ஓவியத்தில் இடம் பெற்றுள்ளன.

    கடந்த மூன்று மாதங்களாக இந்த ஓவியத்தை உருவாக்கிவரும் சாவந்த் விரைவில் இதனை சச்சினுக்குப் பரிசளிக்க உள்ளதாகப் பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.
     
     
  4. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    கடும் கோபத்தில் மாரடோனா

    [​IMG]


    கால்பந்தாட்ட அரங்கின் ஜாம்பவான்களில் ஒருவரான மாரடோனா கடும் கோபத்தில் இருக்கிறார்.
    கால்பந்து அரங்கில் பிரேசிலின் பீலே(வயது 73), அர்ஜென்டினாவின் மாரடோனா(வயது 53) போன்ற ஜாம்பவான்களை தெரியாதவர்களே இருக்க முடியாது.

    இதில் பீலேயை பொறுத்தவரையில், பிரேசில் அணிக்காக (1958, 62,70) மூன்று முறை உலக கிண்ணத்தை வென்று தந்தார், ஓய்வு பெற்ற பின்பும், கால்பந்தின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்.

    சமீபத்தில் இதை பாராட்டி, பிபா(உலக கால்பந்து கூட்டமைப்பு) விருது வழங்கி கவுரவித்தது.

    இதனால் இவரின் ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியில் இருந்தாலும், மாரடோனா மட்டும் கோபத்தில் இருக்கிறார்.

    இதுகுறித்து மாரடோனா கூறுகையில், என்னுடன் பீலேவை ஒப்பிட்டு பார்த்தால், நான் தான் சிறந்த வீரர்.

    பிரேசில் நாட்டை பொறுத்தவரை, மறைந்த பார்முலா–1 வீரரான அயர்டன் சென்னாதான் சிறந்த விளையாட்டு வீரர், இவருக்குப்பின் தான் பீலே வருவார்.

    இவர் உலக கிண்ணத்தை வென்று கொடுத்த போது, விருது வழங்கவில்லை, அப்போது ஐரோப்பிய வீரர்களின் ஆதிக்கம்தான் நிலவியது.

    இப்போது புதியதாக விருது கொடுத்துள்ளனர் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
     
     
  5. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    ஐசிசி-யின் தரவரிசைப் பட்டியல் வெளியானது

    ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார், இந்தியாவின் வீராட் கோஹ்லி 870 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

    அவுஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி, 3வது இடத்துக்கு முன்னேறினார்.

    இந்திய அணியின் அணித்தலைவர் டோனி 6வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், 6 இடங்கள் முன்னேறி 10வது இடம் பிடித்தார், ஐந்து போட்டியிலும் அரைசதம் அடித்து, அதிக ஓட்டங்கள்(361) எடுத்த மற்றொரு நியூசிலாந்து வீரர் வில்லியம்சன், 20 இடங்கள் முன்னேறி 11வது இடத்தை இந்தியாவின் ஷிகர் தவானுடன் பகிர்ந்து கொண்டார்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன் உள்ளனர்.

    இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா 6வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், 9வது இடத்தை அவுஸ்திரேலியாவின் மெக்கேவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்
     
     
  6. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    October Month Sports Review

    [video=youtube;WwBitueswrg]https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=WwBitueswrg[/video]
     
     
Loading...

Share This Page