march month karuththuk kalam

Discussion in 'Karuththu Kalam' started by thenuraj, Mar 15, 2014.

  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,599
    Likes Received:
    3,406
    Trophy Points:
    113
    Admin Post
    ஹாய் பிரண்ட்ஸ் ,

    முதலில் இந்தத் தளம் தொடங்க தூண்டு கோலாக இருந்த தேன்ராஜ்,நிதா, பொன்ஸ் மற்றும் அவர்களது
    தோழியற்கு எனது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்..

    இந்தத் தலைப்பிற்கு இவ்வளவு வரவேற்பா என்று ஒரு நிமிடம் அசர வைத்ததும் நிஜம்..
    இதற்குக் காரணம் தோழிகளின் ஒத்துழைப்பும் கருத்துப் பகிர்வும் என்றால் அதுதான் அப்பட்டமான நிஜம்..

    சின்னசின்னக் கருத்துக்கள் என்றாலும் சிங்காரமாய்ச் சொல்லிய தோழிகளுக்கு நன்றி,,,
    முத்து முத்துக் கருத்துக்களை முத்தாய்ப்பாய்ச் சொல்லிய தோழிகளுக்கு நன்றி...
    உண்மை நிலவரத்தை உள்ளார்ந்து உணர்ந்து கூறிய தோழிகளுக்கு நன்றி...

    ஒவ்வொருக் கருத்துகளும் உங்களின் அனுபவங்கள் என்பதில் ஐயமில்லை..

    ஹரிப்ரியா,சம்யு,சங்கீதாசேகர், ஹமீஷா போன்றவர்கள் அருமையான கருத்துக்களை
    முன்வைத்தீர்கள். இவர்கள் மட்டுமின்றி, ஹமீஸ்கை, ரியா, உஷ், நிதா, சித்ரா, பொன்ஸ்,

    அமிர்தா பாபு, ஸ்ரீமதி கிருஷ், பிரனா,சரண்யாநிலா,ரமா,திவ்யா, அழகு, ஸ்ரீகுமார்சவி
    இவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறி இந்தத் தளத்தை விவாத மேடையாக்கியும் அழகு
    பார்த்துள்ளீர்கள். அதற்கு என் மனமார்ந்த நன்றி

    பயிற்சி வகுப்புகள் தேவை என்பதில் "hamidsha, prana"

    பயிற்சி வகுப்புகள் தேவை இல்லை என்பதில் "srikumarasavi, ushhh "

    இருக்கும் வாதத்தில் இவர்கள் மிகவும் அருமையாக பேசி இருக்கிறார்கள் ... அவர்களுக்கு நம் தோழிகள் சார்ப்பாக என்னுடைய பாராட்டுகளைக் கூறிக் கொள்கிறேன் ...


    மார்ச், ஏப்ரல் விடுமுறை ஆரம்பித்ததும் கோடை காலப் பயிற்சி வகுப்புகள் தரும் சென்டர்கள்
    களைகட்டத் துவங்குவதோடு, அவர்களது கல்லா கட்டும் வேலையும் ஆரம்பமாகிவிடும் என்பதுதான் உண்மை.

    களை கட்டுவது அல்லது கல்லா கட்டுவது ஒருபக்கம் இருந்தாலும் இந்தப் பயிற்சி வகுப்புக்களுக்கு
    நம் குழந்தைகளை அனுப்புவது சரியா தவறா என்பது தான் தற்போதைய விவாதம்.

    பயிற்சி வகுப்புகள் தேவைதான் ஆனால.......

    காலம் பொன் போன்றது தான்..கிடைக்கும் நேரத்தை அழகாக உபயோகிக்க வேண்டும் தான்..ஆனால் எப்போது
    என்பது தான் இங்கே முக்கியம்.

    தற்போது குழந்தைகளை எடுத்துக்கொண்டால், உடல் களைத்து விளையாடுவது
    என்பதே இல்லை..குறைந்து விட்டது.. ஒன்று வீடியோ கேம்ஸ் அல்லது கம்பியூட்டர் என்று அவர்கள்
    விளையாடுகிறார்கள்.நம் பெற்றோர்களுமே பிள்ளைகள் வெளியில் செல்லாமல், தங்களைத் தொந்தரவு
    படுத்தாமல் இருக்கிறார்கள் என்று அதற்கு சந்தோஷமாக அனுமதிக்கிறார்கள்.(இதில் விதிவிலக்கான
    பெற்றோர்களும் இருக்கலாம்.)

    அடுத்து இப்போதுள்ள சிஸ்டமாட்டிக் இயந்திர வாழ்க்கையில் கூட்டுக்குடித்தனம் விடைபெற்று, தனிக்குடித்தனம்
    சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளது.அதில் உறவுகள்...எங்கிருக்கிறார்கள்?...யார் யார் என்ன உறவு? அவர்களின் தேவை என்ன?
    என்பதெல்லாம் நம் குழந்தைகளுக்குத் தெரியுமா? என்றால் பெரும்பாலான குடும்பத்தின் விடை பூஜ்யம் தான்.

    உங்களுக்கும் பெரியவர்களுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், குழந்தையின் மனம் வெற்று பலூன் மாதிரி..
    அதில் உறவுகள் மீதான பிடிமானத்தை, போதுமான அளவில் காற்றாக அடைக்கும் பொறுப்பு நம்மைச் சார்ந்தது.
    விலக்கி வைக்காமல் உறவுகளின் அருமைகளை, அவர்களைப் பாதுகாக்கும் கடமைகளை வலியுறுத்திச் சொல்வது
    பெற்றோர்களாகிய நம் கடமை அல்லவா?

    இரு தலைமுறைகள் ஒன்றாக வாழ்வது அரிதாகிவிட்ட இக்காலத்தில், அவ்வப்போது அவர்களையும் சென்று பார்த்து,
    சேர்ந்து விளையாடினால், பெரியவர்களுக்கும் "ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ" போன்று அந்த ஆண்டு முழுதும்
    அவர்கள் நெஞ்சம் நிறைந்து வாழ்வார்களே..இதெல்லாம் பயிற்சி வகுப்புக்களுக்கு அனுப்புவதால் தடைபடாதா?

    பொதுவாக, ஆண்டு முழுதும் புத்தகம், கணினி என்று நேரத்தை செலவிடும் குருத்துக்கள், அடுத்த ஆண்டில் செழிக்கக்
    கொடுக்கும் ஓய்வு தான் ஒரு மாத அல்லது இருமாத விடுமுறை..ஆனால் அதிலும் படிப்பென்றால்?......


    குழந்தைகளை பயிற்சிக்கு அனுப்புவதா வேண்டாமா என்பதில் கவனத்தில் கொள்ளவேண்டுமென நான் நினைப்பது...

    1. முதலில் விடுமுறை நாட்களை இரண்டாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு பாதியை அவர்களின் விருப்பத்துக்கும்
    மறுபாதியை உங்களின் விருப்பத்துக்கும் வைத்துக்கொள்ளுங்கள்.

    2. நீங்கள் பயிற்சிக்கு அனுப்பும் வகுப்பில் சேர உங்கள் குழந்தைக்கு விருப்பமா என்று தெரிய வேண்டும்
    அவர்களுக்கு வேறு ஆர்வம் இருந்து, உங்கள் கட்டாயத்தினால் சேரும்படி செய்யக் கூடாது.

    3. அடுத்து உறவுகளைப் பற்றி நீங்கள் அடிக்கடி சொல்லும் பட்சத்தில் தான் அவர்களின் ஆர்வ நிலை இருக்கும்
    என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.

    4. அனுப்பப்படும் வகுப்புக்கள் காலத்திற்கும் நிலைத்து நிற்குமா என்பதைப் பார்த்து அனுப்புங்கள்.அல்லது அவ்வப்போது
    கற்பவை அரைகுறை கல்வியாகி பொருள் மட்டுமே செலவாகும் வாய்ப்பு அதிகம்.

    5. பக்கத்து வீட்டுக்குழந்தை இது படிக்கிறது, அது படிக்கிறது என்று வீம்புக்காக உங்கள் குழந்தையையும்
    அனுப்பும் தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.

    6. நம் குழந்தையின் கிரகிக்கும் சக்தி பற்றி நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.அது தெரியாமல்
    பொருத்தமில்லா வகுப்புக்களுக்கு அனுப்பாதீர்கள்.

    நான் சொல்வது ஒன்றுதான்.. குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடுங்கள்.வயது வரும்போது அதுவாகவே
    தனக்குத் தேவை எது என்று புரிந்து கொள்ளும் சக்தி தற்போதைய குழந்தைகளிடம் அதிகமாகவே இருக்கிறது.
    சற்றே மந்தமான குழந்தைகளை நாம் வழிநடத்தவும் வேண்டியது மிக அவசியம்.

    தரமான பயிற்சி வகுப்புக்களில் சரியான சமயத்தில் சேர்த்து நல்ல முறையில் குழந்தைகளை
    உருவாக்குங்கள்..குழந்தைகளின் மனநிலையையும் கருத்தில் கொள்ளுங்கள்.

    இதே போன்று தொடர்ந்து உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறு
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.அடுத்தத் தலைப்பு தயார்...இப்போதே உங்கள் கருத்துக்களை
    பதிவிட்டு ஜமாயுங்கள்..
     
     
  2. Hameeda

    Hameeda Bronze Wings New wings LW WRITER

    Messages:
    3,894
    Likes Received:
    375
    Trophy Points:
    113
    ஹாய் மஞ்சு...

    உங்களின் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அருமையான கருத்துக்களை அழகான தமிழில் மனதுக்கு இதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். உங்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நல் முத்து என்றால் அது மிகை இல்லை.வாழ்த்துக்கள்.

    Rgds.
    Shahida.
     
     
Loading...

Share This Page