சினி கிசு கிசு

Discussion in 'Movies and TV' started by saranya.nila, Mar 31, 2014.

  1. saranya.nila

    saranya.nila Banned

    Messages:
    2,309
    Likes Received:
    38
    Trophy Points:
    0
    நயன்தாராவும் உதயநிதியும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படம் நண்பேன்டா. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பதினைந்து நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. அதற்கப்புறம் ஷுட்டிங்குக்கு போகாமல் நிற்கிறார்கள். காரணம்? நயன்தாராவாம். ஏன்? அவர் கால்ஷீட் கொடுத்தால்தானே படப்பிடிப்புக்கு போக முடியும்? ஆனால் அவரோ அதுபற்றிய எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறாராம். இந்த படத்தை அவர் கைப்பற்றியதே தனிக்கதை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

    முதலில் உதயநிதிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்ததல்லவா? அதை கேள்விப்பட்ட நயன்தாரா வலிய சென்று உதயநிதியை சந்தித்தார். நண்பேன்டா படத்தில் நான் ஹீரோயினா நடிக்கிறேன். உடனே ஷுட்டிங்கை ஆரம்பிங்க. கால்ஷீட் உடனே தர்றேன் என்று கூறிவிட்டார். இவர் உடனே கால்ஷீட் தந்ததில் இரண்டு மாங்காய் விழுந்தது. ஒன்று... காஜல் அகர்வாலின் ஒரு படத்தை காலி பண்ணியது. மற்றொன்று... இது கதிர்வேலன் காதல் ஓடவில்லை. ஓடாத ஒரு படத்தின் ஜோடியை மறுபடியும் ரிப்பீட் பண்ண நினைக்கும்போது நடுவில் புகுந்து குட்டையை குழப்பவென்றே ஆயிரம் பேர் முளைப்பார்கள். உடனே கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டால் அந்த முயற்சியும் பலிக்காது. இந்த இரண்டு மாங்கா திட்டத்தில் வெற்றியும் பெற்றுவிட்டார் நயன்தாரா.

    பதினைந்து நாள் முடிந்த படத்திலிருந்து இனி நயன்தாராவை யாரும் நீக்கப் போவதில்லை. இந்த பதினைந்து நாள் கால்ஷீட்டை வேறொரு படத்திலிருந்து பிய்த்துக் கொடுத்தாரல்லவா? அந்த படத்திற்காகதான் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறாராம். அப்படியே நான்கு தெலுங்கு படங்களில் நடிக்கவும் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். நண்பேன்டா என்னாகும்? அது நயன்தாராவின் கையிலும்தான் இருக்கிறது.
     
     
  2. saranya.nila

    saranya.nila Banned

    Messages:
    2,309
    Likes Received:
    38
    Trophy Points:
    0
    பாலா இயக்கி வரும் கெட்டிமேளம் படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசை என்பதை யாவரும் அறிவர். இந்த படத்திற்காக சுமார்

    12 பாடல்களை உருவாக்கிக் கொடுத்திருக்கிறாராம் இசைஞானி. அதுவும் ஆறே ஆறு நாட்களில்.

    பிரகாஷ்ராஜின் ‘உன் சமையலறையில்’ படத்திற்கும் இசைஞானி இளையராஜாதான் இசை. இது தொடர்பாக இளையராஜாவின் இசைக் கூடத்திற்கு வந்திருந்தார் பிரகாஷ்ராஜ். அங்கு பாலாவும் இருந்தார். பிரகாஷ்ராஜை பார்த்தவுடன் சிறிது நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்த பாலா, ‘என் படத்து பாடலை கேளுங்க’ என்று கூறி அவரை உள்ளே அழைத்து சென்று தன் படத்திற்காக இளையராஜா இசையமைத்த பாடல் ஒன்றை ஒலிக்க விட்டார்.

    அதை கண்மூடி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பிரகாஷ்ராஜ் நெகிழ்ந்து போனார். ‘இப்ப மட்டும் இளையராஜா வந்தார்னா அவர் கால்ல விழுந்துருவேன்’ என்று பிரகாஷ்ராஜ் சொல்லவும், கதவை திறந்து கொண்டு இசைஞானி வரவும் சரியாக இருந்தது. பொசுக்கென்று அவர் காலை கட்டிப்பிடித்துக் கொண்ட பிரகாஷ்ராஜ், உணர்ச்சிப் பெருக்கில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். ‘பிரகாஷ்... எந்திருங்க’ என்று ராஜா அவரது தோள்களை பற்றி எழுப்பியும் விடாமல் சிறிது நேரம் அப்படியே இருந்த பிரகாஷ்ராஜ் சிறிது நேரம் கழித்துதான் ஆசுவாசமானார்.

    இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பாலா, நீங்க இவ்வளவு மென்மையானவரா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கல. இந்த மனசு உள்ளவர் எப்படி வில்லனா நடிக்கிறார்னு நினைச்சா ஆச்சர்யமா இருக்கு. இனிமே நீங்க வில்லனா நடிக்காதீங்க என்று கேட்டுக் கொண்டார். அத்துடன், இது ராஜா சாரோட ஆயிரமாவது படம் என்று பாலா கூற, பிரகாஷ்ராஜ் அவரிடம் சிரித்துக் கொண்டே கூறினார். அப்படின்னா நான் ஆயிரத்தில் ஒருவன் என்று.

    வேறொன்றுமில்லை. பிரகாஷ்ராஜின் உன் சமையலறையில் படம் இளையராஜா இசையமைக்கும் ஆயிரத்து ஓராவது படம்.
     
     
  3. saranya.nila

    saranya.nila Banned

    Messages:
    2,309
    Likes Received:
    38
    Trophy Points:
    0
    சசிகுமாருக்கு ஆரம்பிச்சிருச்சு...

    பாலா இயக்குகிற தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார்தான் ஹீரோவாக நடிக்கிறார்.

    இவரது தலை முடியை ஒட்ட வெட்டி, தாடியை மழித்து, மீசையையும் சந்திரபாபு ஸ்டைலில் வைத்துவிட்டார் பாலா. ‘தம்பி... சைக்கிளை எடுத்துகிட்டு பாண்டிபஜார் வரைக்கும் போயிட்டு வா. எவனாவது கண்டுபுடிக்கிறானா பார்க்கலாம் என்றாராம். இவரும் அப்படியே கிளம்பி பாண்டிபஜார் போய் ஒரு கடையில் நிறுத்தி டீ குடித்திருக்கிறார்

    ஒருத்தருக்காவது தெரியணுமே...! ?

    அண்ணே அண்ணேன்தான்... என்று சந்தோஷப்படுகிறார் சசி. அப்படியே இவரை நாதஸ்வர கலைஞரை போலவே உருவாக்கிக் கொண்டிருக்கிறார் பாலா. முதல் கட்டமாக வாய் நிறைய வெத்தலய போட்டு கொதப்பிகிட்டே இரு என்பதுதான் முதல் அசைன்ட்மென்ட். படம் முடிஞ்ச பிறகு மொத்த பல்லையும் கழட்டி கழுவி காயப்போட்டாலொழிய, சசிகுமாரின் வெள்ளை சிரிப்புக்கு உத்தரவாதமில்லை
     
     
  4. saranya.nila

    saranya.nila Banned

    Messages:
    2,309
    Likes Received:
    38
    Trophy Points:
    0
    நஸ்ரியாவின் பதில்- நடிகைகள் நடுக்கம்

    [​IMG]

    சினிமா ஃபேமிலியிலிருந்து வராத நஸ்ரியாவுக்கு சினிமாவே ஃபேமிலியாகிவிட்டது.

    யெஸ்... பிரபல மலையாள இயக்குனர் ஃபாசிலின் மகன் பகத்ஃபாசில்தான் நஸ்ரியாவின் கணவராக போகிறார். இவரும் கூட கேரளாவின் முன்னணி சினிமா ஹீரோதான்.

    சம்பிரதாய ஒப்பந்தங்கள் முடிந்துவிட்ட நிலையில், ஒரு முக்கியமான ஹீரோவே ‘நஸ்ரியா.... சினிமாவை விட்டு விலகாதீங்க, தொடர்ந்து நடிங்க’ என்று கெஞ்சி கேட்டிருக்கிறார். ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனான துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா. இவரது நடிப்பை பார்த்து அசந்து போன துல்கர்தான், ‘கல்யாணத்துக்கு பிறகும் நீங்க தொடர்ந்து நடிக்கணும்’ என்று கூறியிருக்கிறார்.

    இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட நஸ்ரியா, மரியாதைக்கு கூட ‘மாமனார் வீட்ல கேட்குறேன்’ என்று கூறவில்லை. ‘கண்டிப்பா கல்யாணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் ’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நயன்தாரா, தமன்னா, காஜல் போன்றவர்களின் வாய்ப்பையெல்லாம் தட்டிப்பறிப்பாரோ என்று ஐயம் வரவழைத்த நஸ்ரியா, திரும்பவும் நடிப்பேன் என்று சொல்லியிருப்பது நடைபாதையில குழிவெட்டி வச்ச எபெஃக்ட்டை வரவழைத்திருக்கிறதாம் மேற்படி நடிகைகளுக்கு
     
    Last edited: Apr 1, 2014
     
  5. saranya.nila

    saranya.nila Banned

    Messages:
    2,309
    Likes Received:
    38
    Trophy Points:
    0
    அசின், சமந்தா... முருகதாஸ் வெறுப்பு ?

    [​IMG]

    அசினும் நயன்தாராவும் கஜினி படத்தில் நடித்தார்கள் அல்லவா? இது அப்போது நடந்த பிளாஷ்பேக்.

    எக்மோர் ரயில்வே நிலையத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படத்தின் ஹீரோயினான அசினிடம், இந்த படத்தில் நயன்தாராவுக்கும் ஒரு பாடல் இருக்கு என்று கேஷுவலாக கூறிவிட்டார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். அதுவரை நன்றாக பேசிக் கொண்டிருந்த அசின், சட்டென்று முகம் மாறிவிட்டார். உடனே எழுந்து சென்று கேரவேனுக்குள் புகுந்து கொண்டார்.

    நேரம் போய் கொண்டேயிருக்க, அவர் உள்ளேயிருந்து வெளியே வரவேயில்லை. கேட்டால், எனக்கு திடீர்னு வயிற்றுவலி என்று சால்ஜாப்பு சொல்ல, படுபயங்கர கோபம் முருகதாசுக்கு. வர்றாங்களா, இல்லையான்னு கேளு. இல்லேன்னா பேக்கப் என்று ஆவேசமாக மைக்கில் கத்த, அதற்கப்புறம்தான் மெல்ல கேரவேன் கதவை திறந்து கொண்டு இறங்கினார் அசின். அதற்கப்புறம் அந்த காட்சியை தனது உதவி இயக்குனரை விட்டு படமாக்க சொல்லிவிட்டு விர்ரென்று காரில் ஏறி பறந்துவிட்டார் அவர்.

    சரி, இப்போது எதற்கு அந்த பிளாஷ்பேக்?

    விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் கத்தி படப்பிடிப்பிற்கு சமந்தா தாமதமாக வந்து சேர்ந்தாராம். அதுவும் அரை நாள் தாமதமாக. இதில் கடும் கோபத்திற்கு ஆளான முருகதாஸ், கொளுத்தும் வெயிலில் அவரை நிற்க வைத்து காட்சிகளை எடுத்தாராம். தாங்கவே முடியாமல் தனது ட்விட்டரில் புலம்பி தீர்த்துவிட்டார் சமந்தா. அந்த கடவுள்தான் என்னை காப்பாத்தணும் என்று அவர் குறிப்பிட்டிருப்பது வெயிலிடமிருந்தா, முருகதாசிடமிருந்தா என்பதுதான் கேள்வி?
     
     
Loading...
Similar Threads - சினி கிசு கிசு
  1. chellama
    Replies:
    3
    Views:
    1,717

Share This Page