Sponsored


2014 IPL CRICKET

Discussion in 'Sports' started by Nathasaa Shiyan, May 7, 2014.

Sponsored


  1. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0

    Sponsored


    சென்னை சூப்பர் கிங்ஸின் மீது டோனி குற்றச்சாட்டு



    [​IMG]


    சென்னை அணி துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கினாலும், பந்து வீச்சில் முன்னேற்றம் தேவைப்படுவதாக அணித்தலைவர் டோனி குற்றம் சாட்டியுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லியை வீழ்த்தி தொடர்ந்து 6வது வெற்றியை பெற்றது.

    முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்துகள் மீதமுள்ள நிலையில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வெற்றி குறித்து சென்னை அணியின் அணித்தலைவர் டோனி கூறுகையில், நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறோம். ஆட்டத்தின் கடைசி 2 அல்லது 3 ஓவர்களில் ஓட்டங்களை அதிகமாக கொடுத்து விட்டோம்.

    எங்களது பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. கடைசி ஓவர்களில் வீசக்கூடிய சிறந்த வேகப்பந்து வீரர்கள் அணிக்கு தேவைப்படுகிறது. சுமித்தும், மேக்குல்லமும் சிறந்த தொடக்கத்தை கொடுத்தனர்.

    சுமித்தின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. ரெய்னா இதை சரியாக பயன்படுத்தி கடைசி வரை சிறப்பாக விளையாடினார் என்று கூறியுள்ளார்.
     
     
  2. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    2 பந்தில் 3 விக்கெட்: மிரட்டிய தாம்பே


    [​IMG]


    கொல்கத்தா அணிக்குகெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் றொயல்ஸ் அணி வீரர் பிரவீன் தாம்பே ’ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

    ராஜஸ்தான் றொயலஸ் அணியின் அபாரமான பந்து வீச்சாளராக கலக்கி வரும் தாம்பே, நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குக்கெதிரான போட்டியின் போது அடுத்தடுத்து 2 பந்துகளில் 3 பேரின் விக்கெட்களைச் சாய்த்து சாதனைச் சரித்திரத்தில் இடம் பெற்றார்.

    இது போன்ற ஒரு சாதனை ஒரு முறை தான் நிகழ்ந்துள்ளது.அதன் பிறகு தாம்பே இந்த சாகசத்தை 2வது முறையாக நிகழ்த்தியுள்ளார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் இதோடு 12 ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தாம்பே ஹாட்ரிக் சாதனை புரிந்த 9வது வீரர் ஆவார்.

    அமித்மிஸ்ரா அதிக பட்சமாக 2008, 2011, 2013 ஆகிய போட்டிகளில் 3 முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.

    யுவராஜ்சிங் அறிமுக ஐ.பி.எல். போட்டியில் 2 முறை ‘ஹாட்ரிக்‘ முறையும், எல்.பாலாஜி, நிதினி (2008), ரோசித்சர்மா (2009), பிரவீன்குமார் (2010), அஜித் சண்டிலா (2012), சுனில்நரீன் (2013), தாம்பே (2014) ஆகியோர் தலா ஒரு முறை ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளனர்.


    [​IMG]


    [​IMG]
     
     
  3. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    கோஹ்லியின் பாராட்டு மழையில் நனைந்த டிவில்லியர்ஸ்

    [​IMG]

    ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தில் அதிரடி காட்டிய டிவில்லியர்ஸ், உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர் என பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி புகழாரம் சூட்டியுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் டிவில்லியர்ச்ஸின் அதிரடியால் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பெற்றது.

    முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி 14வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 95 ஓட்டம் என்ற மோசமான நிலையில் இருந்தது.

    பின் இறங்கிய டிவில்லியர்ஸ் தனது அதிரடியின் மூலம் பெங்களூர் அணியை 19.5 ஓவர்களில் வெற்றி பெற வைத்தார்.

    இது பற்றி பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த துடுப்பாட்டக்காரர் என்பதை இப்போதும் நிரூபித்து இருக்கிறார்.

    இன்றைய ஆட்டத்தில் யாராவது ஒருவர் அடித்து ஆடவேண்டியது எங்களுக்கு அவசியமானதாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் நான் பார்த்ததில் இது தான் சிறந்த இன்னிங்ஸ் ஆகும். கெய்ல் நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

    டிவில்லியர்ஸ் அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் ஆட்டத்தை எதிரணியின் கட்டுப்பாட்டில் இருந்து பறித்து அணியை வெற்றி பெறச் செய்தார் என்று கூறியுள்ளார்.
     
     
  4. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    இனி ஐ.பி.எல் விளையாட மாட்டேன்: முத்தையா முரளிதரன்


    [​IMG]

    பெங்களூர் அணிக்காக விளையாடும் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், இந்த ஐ.பி.எல் தொடர், தான் விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

    இலங்கை அணியின் சுழல் வித்தைக்காரர் என அழைக்கப்படும் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கடந்த 50 ஓவர் உலகக்கிண்ணத்தில் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் முத்தையா, 7வது ஐ.பி.எல் தொடரின் ஒரு போட்டியில் விளையாடியுள்ளார்.

    ஐ.பி.எல் தொடரின் மூத்த வீரர்களில் ஒருவரான முத்தையா இந்த ஐ.பி.எல் 7வது தொடர் எனக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ஓய்வு பெற்ற பிறகு சாதிக்க ஒன்றும் இல்லை.

    இந்திய அணியில் திறமை மிக்க சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஹர்பஜன் சிங் மீண்டும் அணியில் விளையாடுவதன் மூலம் அவரது வழக்கமான விளையாட்டு தொடர வேண்டும்.

    மேலும் 11 பேர் கொண்ட அணியில் ஒரே நேரத்தில் இரு சுழல் பந்து வீச்சாளர்கள் இருப்பது சாத்தியமில்லை. ஆனால் அஸ்வின், ஜடேஜா என இருவரும் கடந்த இரண்டு வருடமாக அசத்தலாக விளையாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
     
     
  5. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    பெங்களூரை சொந்த மண்ணில் பழி தீர்த்த மும்பை: இரண்டாவது வெற்றி



    [​IMG]

    பெங்களூர் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் 7வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய 27வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ்- பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

    [​IMG]


    இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்தது.

    சிதம்பரம் கவுதம் 30 ஓட்டங்களும், பொல்லார்டு 43 ஓட்டங்களும், அணித்தலைவர் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் அரைசதம் கடந்து 59 ஓட்டங்களும் எடுத்தனர்.


    [​IMG]


    மும்பை - பெங்களூர் மோதல்

    இதனையடுத்து 188 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    [​IMG]



    கெய்ல் 38 ஓட்டங்களும், பார்த்தீவ் பட்டேல் 26 ஓட்டங்களும், அணித்தலைவர் விராட் கோஹ்லி 35 ஓட்டங்களும் எடுத்தனர்.

    பந்துவீ்ச்சில் மும்பை சார்பில் ஜஸ்பிரிட் பும்ராக், ஹர்பஜன் சிங், மலிங்கா ஆகிய மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் துபாயில் நடைபெற்ற 5வது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு மும்பை அணி பதிலடி கொடுத்துள்ளது.
     
     
  6. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
     
  7. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    [​IMG]


    [​IMG]


    [​IMG]


    [​IMG]
     
    Last edited: May 7, 2014
     
  8. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
     
  9. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
     
  10. thenuraj

    thenuraj Contributor

    Messages:
    1,542
    Likes Received:
    7
    Trophy Points:
    0
    என்ன ஆச்சு...
    Amazing Picturesல இருந்து கிரிக்கெட்க்கு வந்தாச்சு.....
    கிரிக்கெட் ஜுரம் வந்துடுச்சோ....
     
     
Loading...

Share This Page

Sponsored