2014 IPL CRICKET

Discussion in 'Sports' started by Nathasaa Shiyan, May 7, 2014.

  1. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    இதயத்துடிப்பே நின்றுவிட்டது: ரோகித் ஷர்மா

    [​IMG]

    ராஜஸ்தான் அணிக்கெதிரான மும்பை அணியின் வெற்றி நம்ப முடியாத ஒன்று என அந்த அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.

    ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே- ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.

    முதலில் விளையாடிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் குவித்தது. சாம்சன் 47 பந்தில் 74 ஓட்டங்களும் (7பவுண்டரி, 3 சிக்சர்) கரண் நாயர் 27 பந்தில் 50 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹோட்ஜே 16 பந்தில் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

    190 ஓட்டங்கள் இலக்கை 14.3 ஓவரில் எடுத்து வெற்றி பெற்றால் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை மும்பை அணிக்கு இருந்தது.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியை காட்டத் தொடங்கியது. மும்பை அணியில் விளையாடும் நியூசிலாந்து வீரர் ஆண்டர்சன் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    மும்பை 14.3 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்தால் ’பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை மும்பைக்கு இருந்தது.

    கடைசி நேரத்தில் பால்க்னர் வீசிய பந்தை ஆதித்யா தாரே சிக்சர் அடித்து மும்பையை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற வைத்தார்.

    இந்த பரபரப்பான ஆட்டம் பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறுகையில், இந்த வெற்றியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

    எனது இதயத்துடிப்பே நின்று விடும் வகையில் போட்டி இருந்தது. இது போன்ற அதிரடியான ஆட்டம் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து விடாது. இது மும்பை மக்களின் வெற்றியாகும். இந்த வெற்றியை மும்பை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
     
     
  2. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    ’பிளே-ஆப்’ சுற்றை தவறவிட்ட ராஜஸ்தான்: கோபத்தில் டிராவிட்


    [​IMG]

    மும்பைக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததால் அந்த அணியின் ஆலோசகராக உள்ள ராகுல் டிராவிட் ஏமாற்றத்தில் உள்ளார்.

    ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தி ’பிளே-ஆப்’ சுற்றில் நுழைந்தது.

    அணியின் தோல்வியினால் சற்றே கோபமடைந்த டிராவிட் தனது தொப்பியைக் கழற்றி தரையில் ஓங்கி அடித்தார். பிறகு உடனே தொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டார்.

    இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக உள்ள ராகுல் டிராவிட் கூறுகையில், ’பிளே –ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாதது உண்மையில் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

    ஒரு நிலையில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினோம். ஆனால் இன்னொரு பந்து வீச வேண்டியிருந்தது. அது பவுண்டரி ஆனது. அந்த ஒரு பந்திற்கு முன்னால் எங்கள் குழுவில் முழுதும் மகிழ்ச்சி காணப்பட்டது. அந்த ஒரு பந்திற்கு பிறகு ஒட்டுமொத்த சூழ்நிலையும் தலைகீழானது.

    கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களில் இந்த ஆட்டமும் ஒன்று. ஆனால் ஆட்ட முடிவின் எதிர்முனையில் நான் இருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று கூறியுள்ளார்.


    [​IMG]
     
     
  3. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    தொடரும் எதிர்பார்ப்பு: மழையால் இன்றைய ஆட்டம் ரத்து

    கொல்கத்தாவில் பெய்து வரும் மழையால் 27 மே 2014 அங்கு நடக்கவிருந்த போட்டி இன்று நடைபெறும் என்று ஐ.பி.எல் அமைப்பு அறிவித்துள்ளது

    முதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஆனால் அங்கு மழை பெய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    அதிகாரிகள் ஆய்வு செய்கையில் மைதானம் மழையால் விளையாட தகுதியற்றதாக இருந்ததால் போட்டி இன்று 4 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
     
     
  4. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    உண்மை தான் பொன்ஸ் :)
    ஆனால் அதில் நீங்களும் அடக்கமானு எனக்கு தெரிஞ்சாகனுமே பா

     
     
  5. Nathasaa Shiyan

    Nathasaa Shiyan Contributor

    Messages:
    1,288
    Likes Received:
    16
    Trophy Points:
    0
    Hi Prana :)
    Ur most welcome and thnx for ur support :)

     
     
Loading...

Share This Page