Sponsored

Nanmanikkadigai

Discussion in 'Good Morning Everybody......!!!' started by Pattu, Jul 3, 2016.


Sponsored
  1. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    நான்மணிக்கடிகை

    நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. இது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்மணிக்கடிகை எனப்பெயர் பெற்றது
     
     
  2. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது. இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது.இதில் மொத்தம் நூற்றி நான்கு பாடல்கள் உள்ளன.இவற்றில் இரண்டு பாடல்களை ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.இந்நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும்.
     
    Last edited: Jul 3, 2016
     
  3. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    நான்மணிக்கடிகையின் உருவம்:

    • ஆசிரியர் = விளம்பி நாகனார்
    • ஊர் =விளம்பி
    • பாடல்கள் = 2 + 104
    • பாவகை = வெண்பா

    பெயர்க்காரணம்:

    • நான்கு + மணி + கடிகை = நான்மணிக்கடிகை
    • கடிகை = துண்டு, ஆபரணம், தோள்வளை. நான்கு மணிகள் பதிக்கப் பெற்ற தோள்வளை போல் நான்கு நீதி மணிகளால் நிலைநாடாப்பட்ட பாடல்களைக் கொண்ட நூல்.
     
     
  4. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    கடவுள் வாழ்த்து:

    • முதல் இரண்டு கடவுள் வாழ்த்து பாடலிலும் நான்கு கருத்துக்கள் உள்ளன.

    • கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றியது.

    பொதுவான குறிப்புகள்:

    • ஒவ்வொரு பாடலிலும் நாலு கருத்துக்கள் உள்ளன.

    • நூலில் வடமொழி கலப்பு அதிகம்.

    • இந்நூல் தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது.

    • ஜி.யு.போப் இந்நூலின் 7,100 ஆகிய இரு பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.

    • இந்நூலின் மிகப் பிரபலமான அடி = “யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”
     
    Last edited: Jul 3, 2016
     
  5. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    முக்கிய அடிகள்:
    • யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி
    • இந்நிலத்தே மன்னுதல் வேண்டின் இசைநடுக
    • தன்னொடு செல்வது வேண்டின் அறம் செய்க
    வெல்வது வேண்டின் வெகுளிவிடல்
    • இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
    • வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
    • ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்
    • கொண்டானிற் சிறந்த கேளிர் பிறர்இல்
    • மனைக்கு விளக்கம் மடவாள்
    • மடவாளுக்கு விளக்கம் புதல்வர்
    • புதல்வர்க்கு விளக்கம் கல்வி
    • கல்விக்கு இலக்கம் புகழ்சால் உணர்வு
     
     
  6. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    கடவுள் வாழ்த்து

    மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
    கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
    முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
    எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
    புது மலர் ஒக்கும், நிறம்.



    நிலவானது நிலைத்த பேறுடைய திருமாலின் முகத்தை ஒத்திருக்கும். ஒளிரும் ஞாயிறு அவனது சக்கரத்தை ஒத்திருக்கும். வயலில் காணப்படும் தாமரை அவனது கண்களை ஒத்திருக்கும். காயாம்பூவானது அவனது திருமேனி நிறத்தை ஒத்திருக்கும்.

    பழனம் - வயல்
    பூவைப்பூ – காயாம்பூ

     
     
  7. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    படியை மடியகத்து இட்டான்; அடியினான்
    முக் கால் கடந்தான் முழுநிலம்; அக் காலத்து
    ஆன் நிரை தாங்கிய, குன்று எடுத்தான்; - சோவின்
    அருமை அழித்த மகன்.



    உலகத்தைத் தன் வயிற்றுக்குள் அடக்கியவனான திருமால் தன் திருவடிகளால் மூவுலகத்தையும் அளந்தான். பசுக்களின் குளிரைப் போக்குவதற்காகக் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தான். பாணாசுரனது நெருப்பு மதிலை அழித்து அநிருத்தனை மீட்டான்.

    படி - உலகம்
    மடி - வயிறு
     
     
  8. vaisri02

    vaisri02 Contributor New wings

    Messages:
    2,091
    Likes Received:
    300
    Trophy Points:
    83
     
  9. prana

    prana Bronze Wings Moderator New wings

    Messages:
    2,132
    Likes Received:
    727
    Trophy Points:
    113
    அருமையான வரிகள். இந்தப் பாடல்கள் எனக்குப் புதியவை.
    கடவுள் வாழ்த்தைத் தொடர்ந்துதான் நான்மணிக் கடிகை தொடங்கும் என நினைக்கிறேன்.
    நன்றி.
    நான்மணிக்கடிகையை எங்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கு நன்றி.
     
     
  10. Pattu

    Pattu Bronze Wings Moderator New wings

    Messages:
    11,338
    Likes Received:
    4,315
    Trophy Points:
    113
    பாடல்- 1

    எள்ளற்க, என்றும் எளியர் என்று! என் பெறினும்
    கொள்ளற்க, கொள்ளார் கை மேற்பட! உள் சுடினும்
    சீறற்க, சிற்றில் பிறந்தாரை! கூறற்க,
    கூறல்லவற்றை விரைந்து!


    எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச் சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.
    எள்ளற்க - இகழாதே
     
     

Share This Page