penniyam pesuvom!!!

Discussion in 'Women Entrepreneurs' started by Madhuvathani, Sep 26, 2016.

  1. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,383
    Likes Received:
    4,884
    Trophy Points:
    113
    பெண்ணியம் பேசுவோம்....!

    ஹாய் ப்ரிண்ட்ஸ்.....

    நான் படித்த, என்னை பாதித்த, எனக்குள் சில மாற்றங்களை உருவாக்கிய, இந்த சமூகத்தை வேறு கோணத்தில் பார்க்க வைத்த சில பதிவுகளை இங்கே பதிவிடுகிறேன்..... நீங்களும் உங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களையும், உணர்வுகளையும் இங்கே பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்....



    நன்றிகளுடன்...
    வதனி
     
     
  2. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,383
    Likes Received:
    4,884
    Trophy Points:
    113
    பெண் தடம்: குருவை வென்ற முதல் பெண் - ஆதி


    [​IMG]

    இந்தியாவில் துணிச்சலான பெண்களில் முதன்மையானவர்களாக மூன்று பேரைக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஊர்வசி புட்டாலியா. அவர் குறிப்பிடும் முதல் பெண் கார்கி வாசக்னவி. நாம் அதிகம் கேள்விப்படாத இவர், இந்தியாவின் முதல் பெண் தத்துவ அறிஞர்.

    அவர் வாழ்ந்த கி.மு. 7-ம் நூற்றாண்டில் பெண்கள் தத்துவவாதியாகத் திகழ்வது அபூர்வத்திலும் அபூர்வம். அப்படியே மாறினாலும்கூட, பண்டைக் காலத்தில் தத்துவத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆண் சிந்தனையாளர்களுக்குச் சவால்விடுத்திருக்க முடியுமா? ஆனால் கார்கி வாசக்னவி அதைச் சாதித்திருக்கிறார்.

    கார்கியின் தந்தை வாசக்னு, ஒரு முனிவர். கார்கா வம்சத்தில் பிறந்ததால், கார்கி வாசக்னவி என்று பெயரிடப்பட்டார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. பிரகதாரண்யக உபநிடத்தில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    மிதிலையின் மன்னன் ஜனகர், தத்துவவாதிகளுக்கு இடையிலான பிரம்மயக்ஞம் என்ற தத்துவ மாநாட்டை ஒருங்கிணைத்தார். அக்கால வழக்கப்படி முனிவர்கள் அந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டனர். கார்கியும் அந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதிலிருந்து அந்தக் காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட மதிப்பை உணரலாம். ஜனகரின் அரசவை நவரத்தினங்களில் ஒருவராகவும் அவர் மதிக்கப்பட்டார்.

    அதற்கு முன்னர்வரை தத்துவ விவாதங்களில் பலரையும் வாயடைக்கச் செய்தவர் ஜனகரின் குருவாகக் கருதப்பட்ட யாக்ஞவல்கியர். அந்த மாநாட்டில் யக்ஞவல்கியரைத் தன் கேள்விக் கணைகளால் கார்கி துளைத்தெடுத்தார். ஆன்மாவுக்கான அடிப்படை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கார்கி கேட்டார். ஒரு நிலையில், அனைத்துக்கும் தொடக்கமான பிரம்மம் குறித்து கார்கி கேள்வி எழுப்பியபோது, கோபமடைந்த யாக்ஞவல்கியர், “இதற்கு மேல் கேள்வி கேட்காதே, உன் தலையே விழுந்துவிடும்” என்று கார்கியின் வாயை அடைத்துவிட்டார்.

    யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயியும் வேத காலத்தில் மதிக்கப்பட்ட பெண்தான் என்றாலும், யக்ஞவல்கியருக்குச் சவால் விடுத்தவர் கார்கிதான்.

    வேதங்களில் சிறந்த இயற்கை தத்துவ ஞானியாக அவர் போற்றப் பட்டிருக்கிறார். பிறப்பின் தொடக்கம் பற்றி ‘கார்கி சம்ஹிதை’ என்ற நூலை அவர் எழுதியதாகவும், அவருக்கும் யாக்ஞவல்கியருக்கும் இடையே நடந்த யோகத்தைப் பற்றிய விவாதம் ‘யோகயஜ்னவல்கிய சம்ஹிதை’ என்ற பெயரிலும் பதிவாகியுள்ளது.

    கார்கி வேதம் சார்ந்த மரபில் வந்தவர் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் வேதத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, மறுக்கிறோமா என்பதைத் தாண்டி, தத்துவ ரீதியில் அன்றைக்குப் பெரிதாக மதிக்கப்பட்ட குருவை தன்னுடைய அறிவுத் திறத்தை நம்பி கேள்வி கேட்ட கார்கி என்ற பெண்ணின் துணிச்சலுக்கு நாம் முக்கியத்துவம் தந்தே ஆக வேண்டும்.

    பெண்களின் அறிவுத்திறத்தையும், அந்த அறிவுத்திறனை மக்கள் அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் கார்கி தொடங்கி பல பெண்கள் உலகுக்கு அறிவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.
     
    Srjee, girija chandru, seelan and 7 others like this.
     
  3. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,383
    Likes Received:
    4,884
    Trophy Points:
    113
    என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி


    [​IMG]

    “Always remember that when a man goes out of the room, he leaves everything in it behind… When a woman goes out she carries everything that happened in the room along with her.”

    ― Alice Munro, Too Much Happiness

    பெண்களின் எழுத்து பற்றி பேசும் இந்த அரங்கில் பெண் என்ற ரீதியில் பொதுவாகவும் குறிப்பாக முஸ்லிம் பெண் என்ற வகையிலும் என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்க்காக என்னை இங்கு அழைத்த இந்த ஏற்பாட்டுக்குழுவுக்கு எனதுநன்றிகள்.

    வாழ்க்கை சார்ந்த என் அனுபவங்கள் வித்தியாசமானவை.

    வாசிப்பினூடாக வாழ்க்கையை வாசிக்கத் தொடங்கும் அல்லது பார்க்கத்தொடங்கும் எல்லோருடைய அனுபவங்களும் வித்தியாசமானவை. தனித்துவமானவை தான். அதில் சந்தேகம் கிடையாது.

    சிமமன்டா அடீச்சியினுடைய கமலாதாஸ் சுரையாவுடைய ஜும்பா லாஹீரியுடைய அல்லது அலிஸ் மன்ரோவுடைய வாழ்க்கை முறைமைகளும் சூழல் அமைப்பு,இருத்தலியல் போராட்டங்களும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை; ஆனால் அவர்கள் எல்லோரையும் ஒரே புள்ளியில் இணைப்பது, தான் சார்ந்த சமூகத்தின் அழுத்தங்களை சுட்டுவிரல் நீட்டி விசாரிக்கும் எழுத்துக்கள்; அவர்தம் சுய விசாரங்கள்.

    என் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.

    என்னுடைய வாப்பா ஊடாகத் தான் தமிழ் இலக்கியங்களும் உலக இலக்கியங்களும் நிரம்ப சிறுவயதிலேயே எனக்கு பரீட்சயமாகின.

    அவர் தமிழும் பிறகு சிங்களப் பாடசாலைகளில் சிங்கள இலக்கியமும் கற்றுக் கொடுத்தவர்.

    மார்டின் விக்ரமசிங்க,குமாரதுங்க முனிதாச, ஜெயகாந்தன்,கல்கி, மு,வரதராசன் Anton chekhov,Tolstoy,victor hugo,ernest hemingway போன்றவர்களையெல்லாம் வாப்பா அறிமுகப்படுத்தினார்.

    அப்போது எனக்கு ஜெயகாந்தனின் ‘நினைத்துப் பார்க்கிறேன்’ தொகுதி மிகப் பிடித்தமாயிருந்தது.13603301_10154471106812323_5788229307986596911_o (1)

    வாப்பா அவரது இளமையில் மார்க்ஸிச்ட் சிந்தனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தார்.

    வாழ்க்கையைப்பற்றிய ஒரு தெளிவான நோக்கு அவரிடமிருந்தது.

    தீவிரமான வாசிப்பும் தேடலும் அவரிடமிருந்து எனக்குத் தொற்றிக் கொண்ட பழக்கங்கள்.

    அதற்கு அப்பால் எனது வாசிப்பும் தேடலும் நீட்சி பெறுவதில் பல்வேறு தடங்கல்கள் இருந்தன.

    நான் பிறந்தது மாவனல்லையில். சூழ வர இருந்தவை சிங்களக் கிராமங்கள்.

    எனது ஊரைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் அரசதுறையில் பணியாற்றுபவர்களும் மீதிப் பேர் வியாபாரத்திலும் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்ட சமூகம்.

    இலக்கியம்,ரசனை இவற்றில் அதிக ஈடுபாடற்ற அல்லது அதற்கான நேரத்தை கொண்டிராத சமூகம்.

    Academics அறிவுத்துறையில் அதிகம் ஈடுபடக் கூடியவர்கள் இருந்த போதிலும் எழுத்து,இலக்கியம் ஆக்கத் துறை சார்ந்த நுண்ணுணர்வுகள் முன்னுரிமை பெறாத சமூக ஒழுங்கு.

    தமிழ் நூற்கள் வாங்குவதென்றால் கண்டிக்குச் செல்ல வேண்டும்.மாவனல்லை நூலகத்தில் சிங்கள நூற்களே அதிகமாயிருந்தன,மருந்துக்குப் போல சில தமிழ் நூற்கள்.

    அப்போதென் மனசில் பீடம் போட்டு உட்கார்ந்திருந்தவர்கள் வைரமுத்து,மேத்தா மற்றும் அப்துல் ரஹ்மான். கிட்டத்தட்ட அவர்களது கவிதைகளின் ஒவ்வொரு வரியும் அப்போது மனப்பாடம்.

    கலீல் ஜிப்ரானின் சில நூற்களில் தமிழாக்கங்களும் கிடைத்தன.முறிந்த சிறகுகளும் ஞானிகளின் தோட்டமும் மிகப் பிடித்தமாகின.

    அதற்குப் பின்வந்த காலம் வாசிப்பைப் பொருத்தவரை ஒரு தேக்க நிலை stagnant period.

    ஒரு மூடிய semi conservative ஆன சமூகத்தில் நடக்கக் கூடிய விடயங்கள் என்னையும் சுற்றியிருந்தன.

    வெளி சமூகத்தோடு அதிகம் புழக்கம் இல்லாத, வாசிப்பினையோ எழுத்தினையோ அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல முடியாத ஒரு நிலமை.

    எழுத்தில் துணிச்சலாக சில விடயங்களை வெளிக் கொணரும் போது ஏற்படும் சமூக அழுத்தங்கள், அதை எதிர் கொள்ளும் பக்குவம் இருந்தாலும் மறைமுகமாக குடும்ப அமைப்புகளுக்குள் ஏற்படும் பாதிப்புக்கள். நெருக்கடிகள் எழுத்தின் வீரியத்தினை வெகுவாகக் குறைத்து விட்டன.



    என்னுடைய தாகம் மிகைத்திருந்தாலும் அதற்கான வாய்ப்புக்களை இனங்கண்டு கொள்வதில் அதிக தாமதம் ஏற்பட்டது.

    இந்த சமயத்தில் தான் என் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    திருமணத்துக்குப் பிறகு தான் நான் இன்னும் தீவிரமாக வாசிக்கத் துவங்கினேன்.

    அம்பையின் காட்டில் ஒரு மான் எனக்குள் கனன்று கொண்டிருந்த கேள்விகளை இன்னும் விசிறி விட்டது.

    வைக்கம் முஹம்மது பஷீரின் கதைகள் இன்னொரு பரிமாணத்தைப் பார்க்க வைத்தன.

    பேராதனைப் பல்கலைக் கழகத்தில் என் தேடலுக்கான தீனி கிடைக்கத் துவங்கியது. பல்கலைக் கழக நூற்களஞ்சியத்தில் சுந்தர ராமசாமி,நகுலன்,அசோக மித்திரன் போன்றவர்களின் எழுத்துக்களைக் காணக் கிடைத்தது.

    சம காலத்திலேயே ஆங்கில இலக்கிய வாசிப்பும் தீவிரமடையத் தொடங்கியது. மனுஷ்யபுத்திரன்,சல்மா மற்றும் சுந்தரராமசாமி போன்றவர்களின் எழுத்தை இணையத்தளங்களூடாக வாசிக்கத் தொடங்கினேன்.

    சல்மாவின் இரண்டாம் ஜாமம் எனக்கு மிக மிகப் பிடித்தமாயிருந்தது.

    முஸ்லிம் சமூகத்தின் வாழ்வியலை பிரதிபளிக்கும் அந்த நாவலில் உள்ளீடுகள் நான் பிறந்து வளர்ந்த காலத்துக்கு சற்று முந்தையதோர் காலகட்டத்திலிருந்த என் சமூகத்தை அப்படியே வெளிக்கொணர்ந்திருந்தது அந்த விருப்பத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.

    Sociology படிக்கும் போது வெர்ஜீனியா வூல்ப்,பெட்டி பீரிடன் போன்றவர்களும் பெண்ணிய இயக்கங்களும் அறிமுகமாகின.

    பெட்டி ப்ரீடனின் பெமினின் மிஸ்டீக் நூலில் பெண்ணின் அடையாளச் சிக்கல் identity crisis சம்பந்தமாகப் பேசும் the problem which has no name பெயர் அற்ற ஒரு பிரச்சினை என்னை அதிகம் சிந்திக்க வைத்தது.

    ஒரு பெண் தாய் அல்லது மனைவி என்ற பாத்திரங்களோடு மாத்திரம் தன்னை நிறுத்திக்கொள்வது அல்லது சுறுக்கிக் கொள்வது மிகப்பெரியதோர் அநியாயம் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன்.

    பெண்ணின் சுயம் பற்றியும் அடையாளம் பற்றியும் இன்னும் என் வாசிப்பினை விசாலப்படுத்தினேன்.As Betty Friedan says, the problem lay buried, unspoken, for many years in the minds of women.

    பெண்ணுடைய பிரச்சினைகளை ஆண்கள் அடையாளப்படுத்தும் அவளுக்கான தீர்மானங்களை அவர்களே எடுக்கும் கலாச்சாரத்தை கண்டு மனம் வெதும்பினேன்.

    In order to be universal, you have to be rooted in your own culture. Abbas Kiarostami

    உலகளாவிய மனிதனாக நீ ஆக வேண்டுமானால் முதலில் உன் சொந்தக் கலாச்சாரத்தில் உன் வேர்கள் ஆழமாக இருக்க வேண்டும்

    நான் வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தையும் கலாச்சாரத்தையும் ஒட்டுமொத்தமாக மறுதலித்து உடைத்தெறிவதில் எனக்கு உடன்பாடில்லை. அதற்குள்ளிருந்தே மாற்றத்திற்கான முன்னுரையை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

    நான் எனக்கான அடையாளத்தை என் எழுத்துக்களுக்குள்ளிருந்து கண்டெடுத்தேன்.


    இனி ….

    அந்த எழுத்துக்கள் பேசட்டும்
     
    Srjee, girija chandru, seelan and 7 others like this.
     
  4. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,383
    Likes Received:
    4,884
    Trophy Points:
    113
    ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது: பா. ஜீவசுந்தரி


    [​IMG]

    ஒரு நடிகையைப் பற்றி ஆண் எழுதுவதற்கும் பெண் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் நுட்பமானது. என் நண்பர்களில் பலர் எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். குறிப்பிட்ட அந்த நடிகையின் அழகில் மயங்கி, கிறங்கிப் போய் மிகுந்த அழகியலோடும் ரசிப்புத் தன்மையுடன்தான் எழுதியிருக்கிறார்கள். தவறில்லை. ஒரு நடிகையைப் பிடிக்கா விட்டால், மட்டையடியாக அடித்து விமர்சிக்கவும் அவர்கள் தயங்கியதில்லை. பெண் தோழமைகள் பலருடன் பேசிப் பார்த்ததில் அவர்களும் கூட நடிப்பை விட நடிகைகளின் அழகையே முதலில் ஆராதிப்பவர்களாக இருக்கிறார்கள். பின்னரே படத்தின் உள்ளடக்கம், நடிப்பு பற்றி பேச்சு திரும்பும். பெண்களே மயங்கிக் கிறங்கிய நடிகையர் பலருண்டு.

    கலர் படங்களை விட கருப்பு வெள்ளைப் படங்களே கிறங்க வைப்பவையாகவும் இருந்திருக்கின்றன. என் தோழி அமரந்த்தாவும் நானும் பேசிக்கொள்ளும்போதோ, சேர்ந்து படங்கள் பார்க்கும்போதோ ‘நர்கீஸ், நூதன், மதுபாலா, வைஜயந்திமாலா, பத்மினி, சாவித்திரி இப்படி பழைய நடிகைகள் திரையில் தோன்றினாலே திரைக்கே சற்றுப் பளபளப்புக் கூடி விட்டதாகப் பேசிக் கொள்வோம். அப்படி பல்லாயிரம் முறை எங்கள் வீட்டுச் சின்னத்திரையும் பளபளப்புடன் ஜொலித்திருக்கிறது.

    ’சினிமா ராணி’ டி. பி. ராஜலட்சுமி. அவர் நாடக மேடைகளில் கொடி கட்டிப் பறந்து சினிமாவுக்கு வந்தவர். முதல் பேசும் படத்தின் நாயகி. தொடர்ந்து பல வெற்றிப் படங்கள் கொடுத்தவர். இதோடு மட்டும் அவர் பங்களிப்பு முடிந்து விடவில்லை. திரைக்கதை அமைத்தார், வசனம் எழுதினார். திரைப்படங்களை இயக்கினார். தயாரித்தார். சமூக சீர்திருத்த நாவல்கள் எழுதினார். காங்கிரஸ் கொள்கையில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். அது மட்டுமல்ல, சினிமா பற்றி பொது வெளிகளில் கருத்து சொல்பவராகவும் இருந்துள்ளார். ஆனால், அவருக்கு உரிய மதிப்பை ஊடகங்கள் வழங்கவில்லை. ‘அப்போதே புகழ் பெற்ற நாடக நடிகையாக இருந்தபோதும், அந்தப் படமே அவர் பெயரை மட்டும் பயன்படுத்தியே விளம்பரம் செய்யப்பட்டது என்றபோதும் அவரை ‘அவள்’ என்று விளித்துதான் ’சுதேசமித்திரன்’ நாளேடு எழுதியது. திரைப்பட, நாடகக் கலைஞர்கள் ‘கூத்தாடிகள்’ என்ற நிலையிலேயே வைத்துப் பார்க்கப்பட்டார்கள். ஆண் கலைஞர்களுக்கே பெரிய மதிப்பில்லாதபோது, பெண் கலைஞர்களுக்கு மட்டும் மதிப்பு எங்கிருந்து வரும்? !

    கொடுமுடி கோகிலம் கே.பி. சுந்தராம்பாள், எம்.எஸ். சுப்புலட்சுமி, எஸ்.டி சுப்புலட்சுமி இப்படி இவர்களில் ஆரம்பித்து அங்கமுத்து, சி.டி.ராஜகாந்தம் எனத் தொடர்ந்து, என்.சி.வசந்த கோகிலம், மனோரமா வரையான சினிமாப் பெண்களுடன் பயணிப்பதும் அவர்கள் வாழ்க்கையை உள்ளூர நாமும் வாழ்ந்து பார்ப்பதும் ஒரு ரசிகைக்கு மிகவும் சுகமான, அதே நேரம் கனமான விஷயமும் அனுபவமும் கூட. இந்தப் பெண்கள் வெறும் பொழுதுபோக்குப் பிம்பங்கள் மட்டுமல்ல.. ஒரு சமுதாயத்தின் ஒரு நூறு வருடக் கலாசார மதிப்பீடுகளைத் தூக்கி நிறுத்த அல்லது அடித்து நொறுக்க, மறு கட்டமைப்புச் செய்யப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள். வரலாற்றில் இவர்களின் பங்கு உரிய அளவில் பதிவு செய்யப்படவில்லை அல்லது அவர்களின் உலகம் ’கிசுகிசு’க்கள் போன்ற அவலங்களால் நிரப்பப்பட்டு வந்தது. அவர்கள் அழகுப் பதுமைகள். அந்தப் பதுமைகளை மேலும் அழகாகக் காண்பிக்க வேண்டும். ரசிகன் (ரசிகை?) அதைத்தான் எதிர்பார்க்கிறான் என்பது கலை தோன்றும் முன்பாகவே எழுதப்பட்டு விட்ட சட்டம் போல. அல்லது எழுதப்படாத சமூகவியல் விதிகளைத் தூக்கி நிறுத்தும் சக்தியாய், தாயாய், தியாகியாய் எதிரொலிக்க வேண்டும். மற்றபடி சமூக உற்பத்தியில் சமூக விழுமியங்கள் உருவாக்கத்தில் ஒரு பாதியான இந்தச் சமுதாயத்துக்கு வேறு எந்தப் பங்கும் கிடையாது. இதற்கு எதிராக எதையுமே செய்ய முடியாமல் உறைநிலையில் வைக்கப்பட்ட செல்லுலாய்டு ஓவியங்கள் இவர்கள்.
    [​IMG]
    இப்போதும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. சினிமாவில் சேர்ந்து புகழ் பெற்று சம்பாதித்து விட வேண்டும் என ஒரு ஆண், பெட்டி படுக்கையுடன் சென்னை வந்து வெற்றி பெற்றால் அவன் பெற்ற வெற்றி மதிக்கப்படுகிறது. ஆனால், அதே நோக்கத்துடன் பெண் ஒருத்தி சென்னை வந்து வெற்றி பெற்றால் அந்த வெற்றிச் சரித்திரம் வேறு மாதிரிதான் பேசப்படுகிறது. கடந்த நூறு ஆண்டுகளில் இப் பொதுப்புத்தியில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை.
    பத்திரிகையாளர் பா.ஜீவசுந்தரி எழுதிய ‘ரசிகை பார்வை’ நூல் முன்னுரையிலிருந்து…

    ரசிகை பார்வை இன்று முதல் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். கயல்கவின் வெளியீடு.
     
    Srjee, girija chandru, seelan and 8 others like this.
     
  5. Subhasreee

    Subhasreee Wings New wings LW WRITER

    Messages:
    128
    Likes Received:
    247
    Trophy Points:
    63
    மிகவும் நல்ல பகிர்வுகள் ...
     
    Madhuvathani likes this.
     
Loading...

Share This Page