Women Entrepreneurs - Success Stories

Discussion in 'Women Entrepreneurs' started by Rawalika, Nov 30, 2012.

 1. Rawalika

  Rawalika Contributor

  Messages:
  3,022
  Likes Received:
  29
  Trophy Points:
  0
  வெற்றிப்படியாக மாறிய மிதியடி !


  Thanks to Vikatan - வே.கிருஷ்ணவேணி / படங்கள்: கே.ராஜசேகரன், என்.ஜி.மணிகண்டன்

  [​IMG]

  ''வீட்டுச் செலவை சமாளிக்க முடியாம வழி தேடினப்போ, கால் மிதியடி தொழில் பற்றித் தெரிய வந்தது. தன்னம்பிக்கையோட செய்தேன். நாலு பேருக்கு வேலை கொடுக்கற அளவுக்கு முன்னேறியிருக்கேன். ப்ளஸ் டூ படிச்ச நான், இப்போ மாசம் பத்தாயிரம் சம்பாதிக்கிற தொழில் முனைவோர். பெருமையா இருக்கு!''

  - சரளமாகப் பேசுகிறார் திருச்சியைச் சேர்ந்த ஹேமமாலினி. முகத்தில் இருந்த புன்னகை, பேச்சை முடிக்கும்வரை மாறவே இல்லை!

  ''நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் திருச்சிதான். மூணு அண்ணன், மூணு அக்கா, கடைசி தம்பி, நான்னு... மொத்தம் எட்டுப் பேரு எங்க வீட்டுல. நான் ஆறாம் வகுப்புப் படிக்கறப்ப... அம்மா இறந்துட் டாங்க, ப்ளஸ் டூ படிக்கறப்ப அப்பாவ பறிகொடுத்துட்டேன். அண்ணன்களும், அக்காக்களும்தான் என்னையும் தம்பியும் எந்தக் குறையும் தெரியாம பார்த்து வளர்த்தாங்க. நான் படிப்பை நிறுத்திட்டு, வீட்டு நிர்வாகத்தைப் பார்த்துக்கிட்டேன். கூடப் பிறந்தவங்க எல்லாருமா சேர்ந்து 22 வயசுல எனக்கு திருமணத்தை முடிச்சாங்க.


  என் வீட்டுக்காரர் விஜயகுமார், பிஸினஸ் பண்றார். லலித் கல்யாண், நவீன்னு எங்க ரெண்டு பசங்களும் வளர வளர, வருமானத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம். ஏதாவது பிஸினஸ் செய்யலாம்னு மனசுல ஒரு இழை ஓட ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல என் தேடல் முழுக்க அதை நோக்கியே இருந்தது. பார்க்கறவங்ககிட்ட எல்லாம் இதைப் பண்ணலாமா, அதைப் பண்ண லாமானு கேட்டுட்டே இருப்பேன். அப்போ என் தம்பி மணிகண்டன்தான், மிதியடி தொழிலைப் பத்தி சொன்னான். 'ரிஸ்க் எடுக்காதே'னு கணவர் தயங்கினார். ஆனா, இந்தத் தொழில் பத்தின மேலும் விவரங் களைத் தெரிஞ்சுட்டு வந்து அவர் கிட்ட சொல்ல, என் தேடலும் தன்னம்பிக்கையும்... அவரை சம்மதிக்க வெச்சுது.

  ஏற்கெனவே 'பாரதியார் மகளிர் சுயஉதவிக் குழு’ உறுப்பினரா இருந்த எனக்கு, அங்க கிடைச்ச வெளி அனுபவங்கள் தொழிலைத் தொடங் குறதுக்கான தன்னம்பிக்கையைத் தர, பிஸினஸை ஆரம்பிச்சேன். தம்பிதான் திருச்சி மாவட்டத் தொழில் மையத் தோட அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்தான். அடுத்ததா, தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலமா பிஸினஸ் சம்பந்தமான தொடர்புகளை வளர்த்துக்கிட்டேன். தயாரிச்ச கால் மிதியடிகளை திருச்சி ஆர்.கே. டிரஸ்ட்ல விற்பனை செய் தேன். நல்ல வரவேற்பு. என் வெற்றியைப் பார்த்து சுயஉதவிக் குழு பெண்களும் இந்தத் தொழிலைச் செய்ய முன்வந்தாங்க. 24 பெண் களுக்கு நானே பயிற்சி கொடுத்தேன்'' எனும் ஹேமமாலினி, பல பெண் களுக்கு தன் அனுபவத்தில் தொழில் முன்னேற்றத்துக்கான வழிகாட்டியாக வும் இருக்கிறார். இதுவரை 11 பெண்களுக்கு கனரா வங்கி மூலம் கடனுதவி பெற உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அக்கறைக்கான பாராட் டாக.. திருச்சி மேயரிட மிருந்து 'வெற்றிப் பெண் மணி’ விருதைப் பெற்று இருக்கிறார் ஹேமமாலினி.


  ''ஆரம்பத்தில் 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு மெஷின் வாங்கினேன். திருப்பூர் பனியன் கம்பெனிகளின் வேஸ்டேஜ் துணிகளை 1 கிலோ 25 ரூபாய்னு, 1,000 கிலோ வாங்கி வந்தேன். குறைந்த பட்சம் ஒரு மணி நேரத் துக்கு 4 மேட் வீதம், ஒரு நாளைக்கு 30 மேட் நெய்யலாம். 16 செ.மீ அகலம், 29 செ.மீ நீளம் கொண்ட ஒரு மேட் 25 ரூபாய்னு விலை போகும். ஆரம்பத்தில் தனியாளா நெய்து, சீரா வித்துட்டே இருந்தேன். வீட்டு உப யோகப் பொருள்ங்கறதால, விற்பனை வாய்ப்பு நல்லாவே இருக்க... ஆர்டர் களையும், உற்பத்தியையும் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாக்கினேன். வரு மானமும் வளர்ந்துச்சு. இப்போ எங்கிட்ட நாலு மெஷின் இருக்கு. நாலு பேர் வேலை பார்க்கிறாங்க. செலவு போக... 10 ஆயிரம் லாபமா கிடைக்குது. இன்னும் ஆர்டர்கள அதிகப்படுத்தினா, வருமானமும் கூடும்''

  - ஹேமமாலினியின் முகத்தில் பெரு மிதம்.
  ''வெளியுலகமே தெரியாத நான், இன்னிக்கு இவ்வளவு தன்னம்பிக்கை யோட இருக்கேன்னா, அதுக்குக் காரணம் என் வீடுதான். வெளிச்சத்துக் கான வழி காட்டினான் என் தம்பி. தொழில் வேலைகளா நான் அலைஞ்சுட்டு இருக்கும்போது, 'நீ போம்மா பசங்கள நான் பார்த்துக்குறேன்...’னு என்னை அனுப்பி வைப்பார் மாமனார் கலிய ராஜன். ஆரம்பத்தில் அனுமதி கொடுத்த தோட தன் கடமை முடிஞ்சதுனு இருந்த கணவர், இப்போ தன் வேலைகளை முடிச்சுட்டு வந்து, எனக்கும் பிஸினஸ் வேலைகள் பார்த்துக் கொடுக்கிறார். இவங்க எல்லாரும் துணைக்கு இருக்கும்போது, தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோறது சிரமமா என்ன..? படிப்படியா அதுக்கான வேலைகளில் இறங்கணும்!''

  - தெளிந்த திட்டம் வைத்திருக்கிறார் ஹேமமாலினி!

  ________________________________________
  உதவி பெற்றோம்!​


  ஹேமமாலினியின் வழிகாட்டலில், திருச்சியில் கனரா வங்கியிடம் கடன் பெற்றுத் தொழில் தொடங்கியிருப்பவர்களின் வரிசை... புவனேஸ்வரி, சம்பூரணம், கீதா, கலைச்செல்வி என நீள்கிறது. அனைவரின் வார்த்தைகளிலும் நன்றியும், நம்பிக்கையும்!

  ''பாரதியார் மகளிர் சுயஉதவிக் குழுவுல இருந்தப்போ, என்னோட பணத்தேவையை ஹேமமாலினிகிட்ட புலம்பினேன். அவங்கதான் நடைமுறைகளைச் சொல்லித் தந்து, கனரா வங்கியில 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கித் தந்தாங்க!'' என்று சொல்லும் புவனேஸ்வரி, தற்போது சாம்பார் பொடி பிஸினஸ் செய்கிறார்.

  ''வாழ்க்கையில எங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில பணப்பிரச்னை. அதையெல்லாம் சமாளிக்க சுயதொழிலை கையில எடுக்க வேண்டிய கட்டாயம். அதுக்கான பயிற்சியை முடிச்சுட்டு, தொழில் தொடங்க அடுத்து என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தோம். அப்பதான், 'ஹேமமாலினிகிட்ட உதவி கேட்டுப் பாரு...’னு தோழிகள் மூலமா தகவல் கிடைச்சுது. அவங்ககிட்ட போய் நின்னதுமே... லோனுக்குத் தேவையான அறிக்கைகளை எல்லாம் ஏற்பாடு பண்ணச் சொல்லித் தந்து, எங்கள நேரடியா கூட்டிட்டுப் போய் லோன் வாங்கித் தந்தாங்க. இப்போ எங்க வாழ்க்கை நல்லாயிருக்கு!'' என்கிறார்கள் மேட் பிஸினஸில் ஈடுபட்டிருக்கும் கீதா, கலைச்செல்வி, சம்பூரணம்!
   
  Last edited by a moderator: Sep 2, 2016
   
 2. nila

  nila Contributor New wings

  Messages:
  2,843
  Likes Received:
  38
  Trophy Points:
  48
  hi Rawalika,

  thanks for sharing d article
   
   
 3. rosetamil1

  rosetamil1 Contributor

  Messages:
  2,484
  Likes Received:
  15
  Trophy Points:
  0
  Hi Rawalika,

  Thanks for sharing Womens success article.:s4389:
   
   
 4. harini

  harini Wings New wings

  Messages:
  390
  Likes Received:
  57
  Trophy Points:
  28
  hi rawalika

  thanks for sharing nice article
   
   
 5. Rawalika

  Rawalika Contributor

  Messages:
  3,022
  Likes Received:
  29
  Trophy Points:
  0
  உன்னாள் முடியும் பெண்ணே

  உன்னாள் முடியும் பெண்ணே

  Thanks to Vikatan

  பிஸினஸ் வெற்றிக் கதைகள்
  ஓர் இல்லத்தரசியின் பிஸினஸ் கிராஃப்

  [​IMG]


  [TABLE="width: 50, align: left"]
  [TR]
  [TD]
  [/TD]
  [/TR]
  [/TABLE]
  'சுயஉழைப்பில், சொந்தமாக சம்பாதிக்க விடாமல், சமையலறைக்குள் எங்களை முடக்குகிறார்கள்' என்பதுதான், ஆண்கள் மீது, பெண்கள் பலரும் குவிக்கும் கோபமும் குற்றச்சாட்டும்! திருமணமான புதிதில், இதே கோபம்தான் தேவகிக்கும். ஆனால், கணவர் பாலமுருகன் ஆணாதிக்க மனோபாவத்தில் இருந்து வெளிநின்று, ''ஏதாச்சும் சுய தொழில் செய். நான் துணைக்கு நிற்கிறேன்!'' என்று காட்டிய பச்சைக் கொடி... இன்றைக்கு தேவகியை பல படிகள் உயர்த்தி வைத்திருக்கிறது!

  தேனி மாவட்டம், பெரியகுளம் தேவகி - பாலமுருகன் தம்பதியை அவர்களுடைய வீட்டில் சந்தித்தபோது... ''பேராசிரியை வேலைதான் என் கனவு. கவர்மென்ட் வேலை பார்க்கற மாப்பிள்ளைங்கிறதால, நான் டிகிரி முடிச்சதுமே 'நல்ல வரன்’னு சொல்லி, கல்யாணம் கட்டி வெச்சுட்டாங்க. என் கனவெல்லாம்... கனவாகவே போக, கொஞ்ச நாள்லயே 'படிச்ச படிப்பை மூட்டை கட்டிட்டு, இப்படி சட்டி, பானை சுரண்டுறதுலயே என் வாழ்க்கை கழியப் போகுதா? அஞ்சுக்கும் பத்துக்கும்கூட கடைசி வரை உங்க கையதான் எதிர்பார்த்து காலத்தை ஓட்டணுமா..?’னு அந்த ஆதங்கத்தை அவர்கிட்டயும் வெளிப்படுத்தினேன்.

  அவர், எந்த கோவமும்படல. 'உன் கையிலயும் சுய வருமானம் வரணும்னு நீ நினைக்கிறது சரிதான். ஆனா, ஆயிரத்துக்கும், ரெண்டாயிரத்தும் தனியார் நிறுவனத்துல வேலைக்குப் போறதைவிட, ஏதாச்சும் சுயதொழில் தொடங்கு. நானே உதவி செய்றேன்’னாரு. பெரியகுளத்துல ஐஸ்க்ரீம் பார்லரும் வெச்சுக் கொடுத்தார். அப்புறம் கொஞ்சநாள் எல்.ஐ.சி. ஏஜென்ட், இப்போ பேப்பர் கப் தொழில்ல லாபம் பார்க்கற முத லாளினு என் பயணத்துல அவர்தான் வழித்துணை!''

  - பெருமை பொங்குகிறது தேவகி முகத்தில்.

  ''ஐஸ்க்ரீம் கடைக்கான இடத் துக்கு ஐம்பதாயிரம், கம்பெனிக்கு இருபதாயிரம்னு முன்பணம் கொடுத்து, இவர்தான் பஜார்ல கடை வெச்சுக் கொடுத்தார். கோடையில ஓரளவு ஓட்டம் இருக்கும். பிறகு, படுத்துக்கும். ஃப்ரிட்ஜ், கரன்ட் பில், வாடகைனு கொடுக்கறதுக்கு கைகாசை செலவழிக்க வேண்டிய நிலை. நானே விருப்பப்பட்டு கடையை வெச்சதால, இழுத்து மூடறதுக்கு பயந்துக்கிட்டு, நகையை அடகு வெச்சு கடையை ஓட்டினேன். ஒருகட்டத்துல நிலைமை அவருக்குத் தெரியவர... நான் பயந்த மாதிரி என்னைக் குத்திக்காட்டி பேசல. 'சரி விடு... அடுத்து ஏதாச்சும் முயற்சி பண்ணலாம்!’னு அனுசரணையா பேசினார். அடுத்த முயற்சிக்காக காத்திருந்தேன்'' எனும் தேவகிக்கு... நண்பர் மூலமாக திறந்திருக்கிறது அடுத்த கதவு.


  ''குடும்ப நண்பர் செல்லபாண்டி, 'உன் மனைவி தேவகிகிட்ட பேச்சுத் திறமை இருக்கு. எல்.ஐ.சி. முகவரா போகலாமே?’னு ஐடியா கொடுத்தார். ஆனா, ஏற்கெனவே சந்திச்ச தோல்வியால நான் தயங்க, இவரோ... பணத்தைக் கட்டி பரீட்சை எழுத வெச்சார். நானும் பாஸ் ஆயிட்டேன். ஆரம்பத்தில் தடுமாறினாலும், அஞ்சே வருஷத்தில் மாசம் நாற்ப தாயிரம் கிடைக்கற அளவுக்கு பாலிஸிதாரர்களைப் பிடிச்சு, எல்.ஐ.சி. கிளப் மெம்பர் ஆயிட்டேன். 'குண்டுச் சட்டிக்குள்ளயே குதிரை ஓட்ட நினைக்காம, சொந்தக்காரங்களை விட்டுட்டு புதிய மனுஷங்ககிட்ட பழகி பாலிஸி எடுக்க முயற்சி பண்ணு’னு என் கணவர் குட்டின குட்டுதான் இந்த வெற்றிக்குக் காரணம்'' எனும் தேவகி, அடுத்து எடுத்த அதிரடி முடிவுக்கும் ஆதரவளித்திருக்கிறார் கணவர்!


  ''ரெண்டாவது பையன் வளர்ற வரைக்கும் வீட்டிலேயே இருந்தேன். அவன் ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், 'எல்.ஐ.சி மூலம் சராசரி மாத வருமானம் வர்றது போதும். இனி யும் அதையே தொடராம, புதுசா ஏதாச்சும் தொழில் செய்ய லாமா..?’னு வீட்டுக்காரர்கிட்ட கேட்டேன். 'இந்த முறை நான் பணம் கொடுக்க மாட்டேன். ஆனா... உன்கூட இருந்து வேலை களைப் பார்த்துத் தர்றேன்’னு சொன்னார். இப்படி, சம்மதமா... சம்மதம் இல்லையானு ரெண்டுக்கும் நடுவாந்திரமா அவர் சொன்ன பதிலால... 'இந்த முறை ஏற் கெனவே இழந்ததையும் சேர்த்து சம்பாதிச்சே தீரணும்'ங்கற உறுதியோட இருந்தேன்'' என்றவர், பேப்பர் கப் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

  ''இந்தத் தொழிலைப் பத்தி முதல்ல ஆதி முதல் அந்தம் வரை தெரிஞ்சுக்கோனு பேப்பர் கப் தொழில் செய்திட்டிருந்த நண்பர்களை அறிமுகப்படுத்தினார். சிவகாசிக்குப் போய் தொழிலைப் பழகிட்டு வந்தேன். பேக்கிங் செய்ய மட்டும் துணைக்கு ஆள் இருந்தா போதும், ஒரே ஆளா பேப்பர் கப் தொழில் செய்யலாம்னு புரிஞ்சுக்கிட்டேன். எல்.ஐ.சி-யில சம்பாதிச்சு வெச்சிருந்த காசோட... வங்கி லோனும் வாங்கி, ஏழு லட்ச ரூபாய்ல சீனா தயாரிப்பு மெஷினை இறக்குமதி செய்தேன். ஒரே ஆளா தொழிலை ஆரம்பிச்சேன்.
  வேலை பிழிஞ்சு எடுக்கும். 'ஏம்மா இப்படிக் கஷ்டப்படுற..? எல்லாரும் என்னைதான் குற்றம் சொல்லப் போறாங்க’னு அவர் ரொம்ப வருத்தப் படுவார். 'சும்மா டி.வி-யை பார்த்துக்கிட்டு, வீட்டில் தூங்கி தூங்கி உடம்பை பெருக்க வெச்சு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்னு வந்து ஆஸ்பத்திரிக்கு செலவு செய்றவங்களோட புழுத்துப்போன விமர்சனத்தை காதில் வாங்கிட்டு வந்து, எங்கிட்ட சொல்லாதீங்க’னு அழுத்தமா நான் சொன்னத புரிஞ்சுக்கிட்டார்'' என்றவர்,

  ''ரெண்டு வருஷத்துக்கு முன்ன இந்தத் தொழிலைத் தொடங்கினப்போ, கேரளாகாரங்க ஆர்டர் கொடுத்த 250 மில்லி கப் ஐம்பதாயிரத்தை தயாரிச்சு டெலிவரிக்கு ரெடி பண்ணிட்டு இருக்க, முல்லை - பெரியாறு பிரச்னை பூதாகாரமா கிளம்பி, மாதக்கணக்கா அடங்கல. தொழிலைத் துவக்கின வுடனே இப்படி முடங்கிட்டோமேனு வீட்டுல யும் சரி, வெளியிலயும் சரி... நான் யார்கிட்டயும் முகம் கொடுத்துக்கூட பேசல. அப்பவும் என் வீட்டுக்காரர்தான் ஆறுதல்படுத்தினார். 'நீ தேர்ந்தெடுத்திருக்கிற தொழில் மிகச்சரியானது, காலத்துக்கு ஏற்றது. பேப்பர் கப் இன்னிக்கு விற் கலைனா, நாளைக்கு விற்கலாம். இது ஒண்ணும் அழுகிப் போயிடாது. தெம்பா இரு’னு சொன்னது அந்த நேரத்துல எனக்கு நிறைய தைரியம் தந்தது. அவர் சொன்னதுபோலவே முல்லை - பெரியாறு பிரச்னை முடிஞ்சவொடன, தயாரித்த கப்புகள் எல்லாம் டெலிவரி ஆனது. தொழிலும் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தது. இப்போ பெரிய பெரிய நிறுவனங்கள்கிட்ட நானே தொடர்பு கொண்டு என்னோட தயாரிப்புப் பற்றி சொல் லுறேன், இ-மெயிலில் ஆர்டர் வாங்குறேன்.

  ஆரம்பத்துல, 'பணம் கொடுக்க மாட்டேன்’னு வீட்டுக்காரர் சொன்னப்ப எனக்கு கோவம்தான். ஆனா, நான் அஜாக்கிரதையா இருந்துடக் கூடா துனு, என் பணத்தையே முதலீடு பண்ண வெச்சு, கூடுதல் பொறுப்போட நான் செயல்படத்தான் இப்படி சொன்னார்ங்கிறது தெரிஞ்ச போது... அவர் மேல மரியாதை கூடிடுச்சு'’ என்றவர், தனக்கு வந்த அலைபேசி அழைப்பை எடுத்து, ''இருபதாயிரம் கப் உடனே டெலிவரி வேணுமா? நாளைக்கு என் அக்கவுன்ட்ல பணத்தை போட்டு ருங்க... நாளைக்கே டெலிவரி செய்துடறேன்!'' என தேர்ந்த பிஸினஸ் உமனாகப் பேச, பெருமை யோடு பார்த்துக் கொண்டிருந்தார் பாலமுருகன்!
   
   
Loading...

Share This Page