deepavali kondattamum thindattamum _ Kohila

Discussion in 'Articles/Essay' started by Malu6, Nov 12, 2016.

 1. Malu6

  Malu6 Super Moderator Staff Member Moderator New wings

  Messages:
  5,063
  Likes Received:
  184
  Trophy Points:
  83
  தீபாவளி கொண்டாட்டமும் திண்டாட்டமும்

  ஒரே ஊரில் இருந்தாலும் பணிச்சுமையாலும், நேரமின்மையாலும் சந்திக்க இயலாதவர்களை ஒருங்கிணைப்பது பண்டிகைகள் மட்டும் தான். அதிலும் தீபாவளி, புதுத்துணி, இனிப்பு,. பட்டாசு மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும்.
  வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் டெய்லர் கடையில் என்னோட டிரஸ் தைக்கப்பட்டதா? என்று எட்டி எட்டிப் பார்த்து ஆரம்பித்ததுதான், நான் முதன் முதலாய் அறிந்த தீபாவளி.
  அது என்னவோ? என்ன மாயமோ தெரியல? பண்டிகைகள் நிறைய வந்தாலும், தீபாவளி மட்டும் சின்ன வயசுல இருந்தே ஸ்பெஷல். சிறு வயதில் அதற்கு காரணம் பட்டாசுகளாகத்தான் இருக்க முடியும். புது சட்டையில் ஒரு சின்ன ஓட்டையாவது இல்லாமல் எந்த தீபாவளியும் முடிந்ததாக என் வரலாற்றில் இல்லை. தீபாவளிக்கு முதல் நாள் இரவில், விடிய விடிய கையில் பிடித்திருக்கும் மத்தாப்போடு சேர்ந்து, என் மனமும் மகிழ்ச்சியை வெளிச்சம் போட்டு காட்டும் . தீபாவளி அன்று இரவில் வைக்கும் புஸ்வானத்தோடு சேர்ந்து, என் மகிழ்ச்சியும் புஸ்ன்னு போய்விடும். இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என்ற கவலைதான். இப்படி படிப்படியாக வளர்ந்து பட்டாசுகளை பற்றிய விழிப்புணர்வும் வந்து, சத்தமில்லா தீபாவளி கொண்டாடினாலும், இன்றும் என்றும் தீபாவளி ஸ்பெஷல் தான்.
  கண்ணைக் கட்டும் செலவு வந்தாலும், குழந்தைகள் மனம் நோகக்கூடாது என்று நமக்காக பார்த்து பார்த்து தீபாவளியை திட்டமிடும் பெற்றவர்களுக்கு, நாம் சுயமாக சம்பாதித்த பணத்தில் முதல் தீபாவளி என்றால், நிச்சயமாக அது அந்த குடும்பத்தின் மறக்க முடியாத தீபாவளியாக தான் இருக்கும். 'எதுக்கு இவ்ளோ காஸ்ட்லியா?' என்று நம்மிடம் சலித்துக் கொண்டாலும், இது என் மகன்(ள்) எடுத்து வந்த துணி என்று முகம் முழுக்க பூரிப்புடன் மற்றவர்களிடம் சொல்லும் பெற்றவர்களின் சந்தோஷத்தை காணும் போது, அந்த சந்தோஷம் நம்மிடையேயும் தொற்றி குதூகலமாக ஆரம்பிக்கும் தீபாவளி நம்ம கொண்டாட்டம்.
  இப்ப இருக்கிற எல்லோரும் தொபுக்கடீர்ன்னு விழுகிற அதே குட்டையில் நானும் விழுந்து, வேலைக்கு சென்ற முதல் தீபாவளி
  தீபாவளிக்காக ரயிலில் முன்பதிவு நான்கு மாதத்திற்கு முன்னே 8 மணிக்கு ஆரம்பிக்கிறதுன்னு எந்த ஒரு நியூஸ் சேனலும் போட்டிப்போட்டுக் கொண்டு அறிவிக்காத காலம் அது. இருந்தாலும் நாங்க யார்?.. எல்லா கணக்கையும் சரியா போட்டு இன்றுதான் தீபாவளிக்கான ரிசர்வேஷன் ஆரம்பிக்கிறது என்று கண்டுபிடித்து, வாழ்நாளில் கண்டிருக்கவே கண்டிராத அந்த பொன்காலையில், பசி வயிற்றை கிள்ளினாலும், நம்ம லேடீஸ் ஹாஸ்டலில் எப்பவும் தரும் தண்ணிக் காபிக்குக் கூட காத்திருக்க நேரமின்றி, நம்ம வெல்விஷர் அன்ட் ஃப்ரெண்டுங்கிற பேர்ல எல்லோருக்கும் ஒரு இளிச்சவாயன் கூடவே இருப்பான் பாருங்க... அவனுக்கு ஃபோனை போட்டு,
  "நான் இப்போ ஸ்டேஷனுக்கு போயிட்டு இருக்கேன். எட்டு மணிக்கு கவுண்டர் ஓப்பன் பண்ணுவாங்க... நீ ஆன்லைன் ல ட்ரை பண்ணு.. நான் போய் நேர்ல ட்ரை பண்றேன். மவனே! டிக்கெட் மட்டும் கிடைக்காமல் போகட்டும். அப்புறம் இருக்கு" ஒரு மிரட்டலை அவன் காதுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டு, வெளியே வந்து ஒரு ஷேர் ஆட்டோவை பிடித்து, பீக் அவர்ஸ்ல ப்ளாட்ஃபார்மில் நடக்க கூட முடியாமல் நெரிச்சல் தரும் அந்த ஐடி பார்க்கின் வெறிச்சோடிய நிறுத்தத்தில் இறங்கி, ஆளில்லா அந்த சாலையை கடந்து ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்தால், நமக்கு முன்னாடியே அர்த்த ராத்திரி ஐந்து மணிக்கு(என் அகராதியில்) ஒரு முப்பது பேராவது நிற்கும் போது, 'எங்களுக்கே கிடைக்குமா தெரியல'ன்னு ஒரு இளக்காரமான பார்வை வீசும் ஆட்களைப் பார்த்து, கண்ணுல வர ரத்த கண்ணீரை, மூன்று மாதத்திற்கு பின் வரப்போகிற தீபாவளி துடைச்சு விடும் பாருங்க(ஃபீல் பண்ணினாதான் புரியும்). மூன்று மணிநேரம் கால்கடுக்க காத்திருந்தால், அந்த க்யூல இரண்டாவதாக நிற்பவர்களுக்கே வெயிட் லிஸ்ட் 100 என்று காண்பிக்க, அதே நேரம் நம்ம வெல்விஷரும் ஃபோனை போட்டு, irctc மட்டும் hang ஆகிடுச்சு சொல்ல,
  அப்புறம் என்ன? புஷ்பேக்ன்னு சொல்லி, நல்லவேளை இப்ப மாதிரி ஃப்ளைட் ரேட் இல்ல.. தீபாவளி ஸ்பெஷல்(இந்த ஸ்பெஷல்க்கு அர்த்தம் அதில் பயணித்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்) பஸ்ல, ஹ்ம்ம்.. ட்ரையினை விட மூணு மடங்கு அதிகம்ன்னு புலம்பி எப்படியோ ரிசர்வ் பண்ணிடுவோம்.
  அன்றிலிருந்து வரும் எல்லா வார விடுமுறை நாட்களும் தி.நகர் நெரிசலில் உள்ளே புகுந்து ஒரு குண்டூசி கூட வாங்காமல் வெளியே வர வேலைதான். எந்த டிரஸ்ஸிலும் திருப்தி வராமல், இதுதான் கடைசி வாரம்ன்னு வேற ஏரியாவுக்கு போய்(இதை முதலிலேயே செய்திருக்கலாம்.. ஆனால் திருப்தி வராதே) நமக்கு பிடித்த டிரஸை வாங்கி, சம்பாதிக்க ஆரம்பித்த பின் வரும் முதல் தீபாவளியாயிற்றே! நம்ம வீட்டு ஆட்கள், நம் வீட்டு சோஃபா, கதவு, ஜன்னல் அப்படீன்னு எல்லாத்துக்கும் புதுத் துணி எடுத்து,
  இப்படி ஒருநாள் கூத்துக்காக எவ்வளவோ தடைகளை தாண்டி, வெள்ளிக்கிழமை ஆஃபீஸ்ல எல்லோருக்கும் ஹேப்பி தீபாவளி சொன்னால், 'செவ்வாய் கிழமை தானே தீபாவளி? மன்டே உனக்கு லீவு சாங்கஷன் பண்ணவே இல்லையே?' ன்னு வந்து நின்றார். வேற யாரு? ப்ராஜெக்ட் மேனேஜர். (அடக்கொடுமையே!!!)
  ஏகப்பட்ட ப்ளீஸ் போட்டதுல மனசு இறங்கி, அமெரிக்காவில் இருக்கும் ப்ராஜெக்ட் கோ-ஆர்டிநேட்டருக்கு ஃபோனை போட்டு கொடுத்துட்டார் அந்த மனுஷன்.
  "ஏகப்பட்ட இஸ்யூஸ் பென்டிங்க்ல இருக்கு.. சாட்டர்டே, சன்டே வொர்க் பண்ணினால் மன்டே நைட் கிளம்ப பர்மிஷன் தரேன்" என்றார் அவர்.
  'மன்டே நைட்டா? பஸ்ஸில் ஏற முடியுமா? டிக்கெட்டுக்கு எங்கே போவேன்' என்று மனதிற்குள்ளேயே புலம்பி, ஒரே ஒரு நாள் லீவு கேட்டதற்கு, அந்த ப்ராஜெக்ட் கோ- ஆர்டிநேட்டர் அமெரிக்கன் அக்சென்ட்ல காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சிட்டாரு. ஹம்மாடியோவ்(ஏதோ திட்டினாரு. ஆனா என்ன திட்டினாருன்னு புரியலங்கிறது வேற விஷயம்) அப்புறம் என்ன? யாராவது உன் வேலையை பார்ப்பதாக ஒத்துக் கொண்டால், உனக்கு திங்கள்ன்று விடுமுறை என்று இங்கே இருக்கிற நாட்டாமை(அதாங்க ப்ராஜெக்ட் மேனேஜர்) தீர்ப்பு சொல்ல, அதுக்கு டீம்ல இருக்கிற எல்லா பசங்ககிட்டேயும் (என் டீம்ல இருந்த இரண்டு பொண்ணுங்களும் எனக்கு முன்னாடியே எஸ்கேப்பாகிட்டாங்களே) கெஞ்சி, ஒருவன், ஒகேன்ன்னு சம்மதிக்க, எனக்கும் தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு கிடைத்தது.
  இப்போ இருக்கிற அரசியல்வாதிகள் எதற்காக போராட்டம் என்கிற பெயரில் மக்களை கஷ்டபடுத்துகிறார்கள். இது மட்டும் எனக்கு எப்பவும் புரியாத புதிர் தான். அவர்கள் போராட்டத்தின் பலன் கிடைக்கிறதோ இல்லையோ? மக்கள் அந்த போராட்டத்தின் விளைவுகளை அனுபவித்து படாத பாடு படுகிறார்கள். அடாது மழையிலும் விடாது போராட்டம் நடக்கும்ன்னு ஒரு கட்சி தலைவர் அறிவித்து விட(நான் எந்த ஒரு தனி கட்சியும் சப்போர்ட் பண்றவ இல்ல.. என்னை அடிக்க கட்டையெல்லாம் தேட வேண்டாம்), சென்னையில் மழை ஒரு புறம் பெய்ந்துக் கொண்டிருக்க, இவர்கள் போராட்டம் ஒருபுறம் வெற்றிக்கரமாக நடக்க, தீபாவளிக்காக சொந்த ஊருக்கு கிளம்பிக் கொண்டிருந்த மக்கள் நிலைமை கவலைக்கிடம்.(அடுத்த நாள் தலைப்பு செய்திங்க)
   
   
 2. Malu6

  Malu6 Super Moderator Staff Member Moderator New wings

  Messages:
  5,063
  Likes Received:
  184
  Trophy Points:
  83
  பேருந்து நிலையத்தில் தீபாவளிக் கனவோடு காத்திருந்த மக்கள் ஆட்டோவை நோக்கி படையெடுக்க, எனக்கு ஒரு ஆட்டோக் கூட கிடைக்கவில்லை. அருகில் சென்றாலும், மெயின் ரோட்டில் ***** போராட்டம். ஆட்டோ வராது. 'உங்களுக்கு போராட்டம் நடத்த வேற நாளே கிடைக்கலையா?' என்று மனதினுள் திட்டிக் கொண்டே, நான் ஆறரை வரை என் அலுவலக வாசலில் உள்ள நிறுத்தத்தில் நின்றிருந்தேன். எட்டு மணிக்கு புறப்படும் பேருந்திற்காக கோயம்பேடு சென்றே ஆக வேண்டும்.
  "ஹே கோக்ஸ்! 5 மணிக்கே பி.எம் கிட்ட சண்டை போட்டு வந்து, இன்னுமா ஒரு பஸ் கூட வரல?" என்று என் அலுவலக நண்பன் ஒருவன். நமக்கு தெரிந்தவர்கள் முன்னால் அவமானப்பட வேண்டியதாக போயிற்றே என்ற எண்ணத்தில், அசடு வழியும் முகத்துடன் ஒப்புதலாக ஒரு தலையசைப்பு.
  "ஹோ.. " என்று ஆரம்பித்தவன், ரமணா விஜயகாந்த பாணியில், இந்த ஐடி பார்க்கில் இத்தனை கம்பெனி இருக்கு... இத்தனை பேர் வேலைபார்க்கிறாங்க.. அதில் சொந்த வாகனங்களை யூஸ் பண்றது இத்தனை பேர் என்று நீட்டி முழக்க,
  "டேய் நிறுத்து! இங்கே என்ன புள்ளி விவரமா கேட்டாங்க.. " என்று ஆரம்பித்து நான் என் நிலைமையை சொல்ல,
  "அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். இந்த இடத்துல உனக்கு எந்த வண்டியும் கிடைக்காது. என்னோட வா. அடுத்த ஸ்டாப்ல இறக்கி விடுறேன்"
  'நல்ல பையன்தான். ஆனா முன்ன பின்ன மத்தவங்க பைக்ல ஏறினது இல்லையே?' மனதில் ஒருபுறம் ஓட, அங்கு வந்த நின்ற ஆட்டோ என் கண்ணில் படுவதற்குள், அங்கிருந்த மக்களால் சுற்றி வளைக்கப்பட, அதை பார்த்துக் கொண்டே வேறு வழியின்றி ஏறினேன். இதில் மழை வேறு கொட்டி தீர்த்தது.
  "நான் கோயம்பேடு வழியாகத்தான் வீட்டிற்கு போகணும். ஆனா மழை பெய்யுதே. நீ ஆட்டோவிலேயே போயிடு" என்றான். ஒரு உதவி செய்தால் நம்மிடம் வேறு ஏதாவது எதிர்பார்ப்பார்கள் என்று ஆண்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தில் இருந்த நானும் அப்படியே நினைத்திருந்ததால், சரி சொல்லி, மழை நீர் கண்ணை மறைக்க ஆட்டோ தேடுதலை தொடர்ந்தேன்.
  போரூரில் நாலு ஆட்டோ, வளசரவாக்கத்தில் நாலு ஆட்டோ மறுத்ததில், தீபாவளிக்கு போகணுமே என்ற ஆர்வத்தில் அவனுடனே கொட்டும் மழையில், பின்னால் அமர்ந்தே வடபழனி வரை வந்துவிட்டேன். அதான் இவ்ளா தூரம் வந்தாச்சு... இனி என்ன? என்று எங்கள் பைக் பயணம் தொடர்ந்தது கோயம்பேடு வரை. மிகவும் பொறுமையாக நான் ஒவ்வொரு ஆட்டோவையும் விசாரிக்கும் வரை நின்று என்னை அழைத்து வந்தவன். இறக்கி விட்டதுடன் போக வேண்டியது தானே!!
  "சான்ஸே இல்ல ப்பா. எப்படி இவ்வளவு மழையில் பைக்கில் வந்த?" என்று கேள்வியும் கேட்டான்.
  'நான் எங்கே வந்தேன். தீபாவளி என்கிற வார்த்தை செய்த மேஜிக்கில் கொட்டும் மழையில் வந்துட்டேன்' என்றெண்ணி அவனுக்கு நன்றி சொல்ல கூட நேரமின்றி, மூச்சிரைக்க பேருந்துகள் நிற்குமிடத்தை நோக்கி ஓட ஆரம்பித்தேன். எட்டு மணி ஆக ஐந்து நிமிடங்கள் தான் இருந்தது.
  ஒரு வழியாக பஸ்ஸை தேடி கண்டுபிடித்து மூச்சிரைக்க ஓடி வந்தால், சீட் நம்பர் என்றுக் கேட்ட போதுதான்,எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அதாவது என் டிக்கெட்டை என்னுடன் சேர்ந்து பயணிக்க இருக்கும் என் தோழியிடம் கொடுத்தது. அவள் வேலைப் பார்ப்பது கிண்டியில்.
  போச்சுடா!!! அவளும் அன்று அதே நிலைமையில். அந்த மேடம் ஏகப்பட்ட ரூல்ஸ் வச்சிருப்பாங்க... ஆட்டோவில் ஏறமாட்டேன்... நண்பர்கள் பைக்கில் ஏறமாட்டேன் என்று.
  அவளுடைய கைபேசிக்கு அழைத்தாலோ.... டிங் டிங் டிங் என்ற சத்தம். என்னவென்று பார்த்தால் என் செல்ஃபோன் பேட்டரி லோ.(நேரக் கொடுமைடா சாமி!)
  அது முழுவதும் அணைந்து போவதற்குள்.. அவள் நம்பரை மெம்மரி செய்து விட்டு, கன்டக்டரிடம் கெஞ்ச ஆரம்பித்தேன். நல்ல வேளையாக கிண்டி வழியாகத்தான் செல்லும் என்று சொன்னவர், கிண்டியில் அந்த பொண்ணு டிக்கெட்டோட ஏறலன்னா... நீயும் சேர்ந்து இறங்க வேண்டியதுதான் என்று கண்டிப்பாக சொன்னார். பேருந்து எடுக்க அரைமணிநேரம் தாமதமாகும் என்று சொல்லி ஆட்களை ஏற்றிக் கொண்டிருக்க, நான் மட்டும் விழித்தபடி நின்று கொண்டிருந்தேன். முன்னால் அமர்ந்திருந்த ஒருவரிடம் செல்ஃபோன் ப்ளீஸ் என்று கேட்டு, அவளுக்கு அழைத்து,
  "திரும்பவும் ஹாஸ்டலுக்கே போறேன்.." என்று சிணுங்கியவளை, அச்சச்சோ என் டிக்கிட்டும் அந்த புள்ளைக்கிட்டதானே இருக்கு... கெஞ்சி கூத்தாடி எப்படியோ மேடமை சம்மதிக்க வச்சு... ஹப்பப்பா!!! படாதப்பாடு பட்டு, அவள் பஸ்ஸில் ஏறிய பின்தான் எனக்கும் உயிரே வந்தது. இப்படி அடாது மழையில் ஈரமான உடைகளுடன், ஏசி பஸ்ஸில் உறக்கமின்றி சென்று, 'ஹச்ச்' என்ற தும்மலுடன் வீட்டில் நுழைந்தால்... விடிய விடிய தீபாவளி பலகாரம் செய்து கொண்டிருந்த அம்மாவைப் பார்த்ததும் சோர்வெல்லாம் எங்கோ பறந்து போக, நானும் என் கோணல் மானல் கைவண்ணத்தில் அம்மாவுக்கு உதவ ஆரம்பித்தேன். இப்படி தாங்க நான் என்னுடைய முதல் சம்பள தீபாவளியை கொண்டாட, திண்டாடி போனேன். என்னதான் திண்டாடினாலும், அந்த தீபாவளி, எனக்கு எப்பவுமே மறக்க முடியாத தீபாவளி.
   
  HemaJay and Jan like this.
   
 3. swathikummara

  swathikummara Wings New wings

  Messages:
  25
  Likes Received:
  8
  Trophy Points:
  23
  Pustaka is the best website for Ebooks. Here you can download all Tamil Short stories, Here you can download all Ebooks for free, Rent, Subscription
  http://www.pustaka.co.in/ebook/library
   
   
Loading...

Share This Page