Sponsored


POSSESIVNESS-PART I

Discussion in 'Articles/Essay' started by Mekalai Sachin, Nov 14, 2016.

Sponsored


  1. Mekalai Sachin

    Mekalai Sachin Wings New wings

    Messages:
    46
    Likes Received:
    57
    Trophy Points:
    38

    Sponsored


    பொஸசிவ்னெஸ்

    ஸ்மார்ட் போனை மெத்தையின் மீது விசிறியடித்த நொடி 'படக்' என்ற ஒலியுடன் கதவு திறந்தது.ஆராதனா தொப்பென்று கட்டிலில் குப்புற விழுந்தாள்.வீட்டு உதவியாளர் பால் தம்ளருடன் உள்ளே நுழைந்தவர் ஆராதனா கோபமாக இருப்பதை உணர்ந்து மெதுவாக,

    " கண்ணு..பால்..." என்று சொல்லிவிட்டு டேபிளின் மீது வைத்துவிட்டு நிற்க,

    " எனக்கு வேண்டாம்.எடுத்துட்டுப் போங்க..." குரல் சற்றே கடுமையாக வெளிப்பட்டது.

    நல்ல மனநிலை இல்லை போல,இருந்தால் உதவியாள் சாப்பிட்டு விட்டார்களா என்று விசாரிக்கும் குணம் உடையவள் தான் ஆராதனா.

    காலை ஐந்து மணிக்கே ஆராதனாவின் செல்போன் அடிக்க ஆரம்பித்தது. தூக்கம் தெளிந்தும் எடுத்துப் பார்க்காமலே இருந்தாள்.சார்ஜிலும் போடாமல் விட்டதால் ஒரு கட்டத்தில் உயிரிழந்தது அது.

    அலுவலகத்திற்குத் தயாராகி கீழே வந்தபோது அம்மா கேட்டாள்..
    " விஜி என் நம்பருக்கு கூப்பிட்டா.. நீ போன் எடுக்கலேன்னு..நைட் சைலண்ட்ல போட்டிருப்பான்னு சொன்னேன் பேசிடு.."

    " ம்..சரிம்மா.நா கெளம்புறேன்.."

    " சாப்பிடல? "

    " ஏனோ வயிறு சரியில்ல.ஜூஸ் மட்டும் போதும்.."

    ஜூசை எடுத்து மடக் மடக் என்று ஒரே மூச்சில் குடித்துவிட்டு கிளம்பினாள்.
    அலுவலகத்தில் வேலையே ஓடவில்லை.விஜியிடமிருந்து மெசேஜ்களாக வந்துகொண்டே இருக்க,அதை அலட்சியப் படுத்திவிட்டு வேலையில் கவனம் வைக்கப் பார்த்தாள் ஆராதனா.

    மதிய உணவின்போது விஜி திடீரென வந்து எதிரே நிற்க,ஒரு நிமிடம் மின்னலடித்தது போல மகிழ்ச்சி ஓடினாலும் கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டாள்.

    " உன் மனசுல என்னடி நெனப்பு? பேசாட்டித் தொலையுது.ஒரு மெசேஜ் அனுப்பலாம்ல?"
    சுடிதாரைப் பிடித்து உலுக்காத குறையாக குமுறினாள்.

    " தோனல.."

    " என்னப் பாத்து சொல்லு..ஆன் லைன்லயும் வரல..எப்பவும் இன்பாக்ஸ்ல மெசேஜ் போட்டுத் தானே தூங்குவ?"

    " அதான் தோனல..."

    " எனக்கு வர்ற கோவத்துக்கு...என்ன ஆச்சோன்னு பதறிப் போய்ட்டேன்.உனக்கு என்ன பாத்தா எப்படித் தோனுது?"

    " ஒன்னும் தோனலன்னு தானே இத்தன நேரமா சொல்லிட்டு இருக்கேன்.."

    " இங்க வேணாம்..வீட்டுக்கு வந்து இருக்குடி உனக்கு..."

    " அங்க வந்தாலும் அதான்.."

    " அடியேய்ய்ய்...கொல பண்ணிடுவேன்..." விரலை நீட்டி எச்சரிக்கை பண்ணும் பாணியில் சொல்லிவிட்டு வெளியேறினாள் விஜி.நல்லவேளை அது தனி கேபின்.

    தொடரும்....1
     
     
  2. swathikummara

    swathikummara Wings New wings

    Messages:
    25
    Likes Received:
    8
    Trophy Points:
    23
    Pustaka is the best website for Ebooks. Here you can download all Tamil Short stories, Here you can download all Ebooks for free, Rent, Subscription
    http://www.pustaka.co.in/ebook/library
     
     
Loading...

Share This Page

Sponsored