Vidiyal

Discussion in 'Poetry Pongal 2017' started by Lady's Wings, Dec 24, 2016.

  1. Lady's Wings

    Lady's Wings Roots of LW Staff Member Administrator

    Messages:
    1,516
    Likes Received:
    3,371
    Trophy Points:
    113
    Admin Post
    விடியல்
    மழையும் மண் வாசமும் போல...
    மழலையும் பால் நேசமும் போல....
    மரமும் பச்சயமும் போல...
    மலர்களும் மஞ்சரியும் போல...


    மஞ்சுவுடன் மனதோடு இணைந்து பயணிக்கும்....
    மனதிற்க்கினிய நட்புக்களுக்கு..... இருகரம் கூப்பிய முகமன்கள் பல.


    போட்டிகள் பற்றிய அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள் என்று தெரியும்.

    சில நேரத்தில் காத்திருப்பும் சுகம் அல்லவா...?

    இதோ நீங்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த போட்டி குறித்த அறிவிப்புகளோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.

    முதலில்.....

    எதுகை மோனை என்ற ஏணி பிடித்து...
    உவமை உவமேயம் என்ற உடைகள் தரித்து...
    பொய்யால் கவி அழகா..? கவியால் அப்பொய் அழகா..?
    என சான்றோரையும் வியக்க வைக்கும்...


    நம் தமிழ்த் தாயின்
    கடைக் குட்டி கவிதை.


    கவிதை.....
    கனவுகள் விதைக்கும்...
    கண்ணீர் கொடுக்கும்...
    உவகையில் பூரிக்கும்
    ஊழிக்காற்றாய் உள்ளம் கிழிக்கும்...


    நீராகவும் அணைக்கும்...
    நெருப்பாகவும் சுடும்.


    கைக்கொள்ளும் கவியாளின்
    திறமையில்.... புதுப் புது அரிதாரம் பூசும் அழகிய தமிழ்க் குழந்தை.


    புத்தாண்டை கவிதையோடு தானே நாம் வரவேற்க வேண்டும்....

    உங்கள் கையில் நாங்கள் கொடுக்கப் போகும் ...

    வெற்றுக் களிமண்ணாய் தலைப்பு...

    ‘விடியல்...’
    நீங்கள் விரும்பும் வண்ணம் வார்த்து.... கவிதை விருந்து படையுங்கள் சுவைக்க காத்திருக்கிறோம்.


    போட்டியின் விதிமுறைகள் :

    1. கவிதை உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். வேறு எந்த தளங்களிலும் வெளி வந்த படைப்பாய் இருந்தல் கூடாது. ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானலும் அனுப்பி வைக்கலாம்.
    2. உங்கள் கவிதைகளை லேடிஸ் விங்க்ஸ் தளம் பிற்காலத்தில் புத்தகப் படைப்பாகவோ, அல்லது மின் நூல் வடிவிலோ வெளியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு.
    3. போட்டியில் நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
    4. போட்டிகளில் கலந்துக் கொள்பவர்கள் தங்களைப் பற்றிய சிறு குறிப்போடு, கவிதையையும் com என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அல்லது லிங்க்....... என்ற தளத்தில் நேரடியாவோ பதியலாம்.
    5. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 31.01.2017 .
    உங்களுக்கு கால அவகாசம் தர வேண்டியே சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. உங்கள் கவிதை, கதை தோரணங்களால் களை கட்டட்டும் நம் தளம்.

    வந்தாரை வாழ வைக்கும் நம் தமிழகம்.......... வாழ்வாங்கு நம்மை வாழவைக்கும் நம் தமிழ்மொழி.

    வளர்ந்து வளர்ப்போம் வாருங்கள்.


    இப்படிக்கு...
    உங்கள் அருமைத் தோழி....
    மஞ்சுளா செந்தில்குமார்.
     
     
  2. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    2,004
    Likes Received:
    1,162
    Trophy Points:
    133
    naan 3 kavidhai indru kalaiyil ladyswings mail il pottu irukkern. correct aa panni irukkenaa?
    illai, indha area le podanuma? please advise....@ladys's wings, please, manju mam

     
    Lady's Wings likes this.
     
Loading...

Share This Page