VIDIYAL!!!

Discussion in 'Poetry Pongal 2017' started by subash chandra bose, Jan 9, 2017.

  1. subash chandra bose

    subash chandra bose Wings New wings

    Messages:
    264
    Likes Received:
    441
    Trophy Points:
    83
    விடியல்!!!

    கருவின் பாலினத்தை
    விளக்கடித்து பார்க்கும்
    விழிகள் குருடானால்
    விழிக்கும் விடியல்

    புத்திர கல்விக்கு
    நித்தரையில் நிற்கும்
    நிலைமைகள் மாறினால்
    நிச்சயம் விடியல்

    கடற்கரை இருட்டிற்கு
    காதலை காவுகொடுக்கும்
    காமத்தைக் கொன்றால்
    கட்டாயம் விடியல்

    ஆயிரம் ஐநூறுக்கு
    ஆட்சியை தாரைவார்க்கும்
    அறியாமை அகன்றால்
    அரும்பும் விடியல்

    சாதிகள் மதங்கள்
    சாத்திர பேதங்கள்
    மடமைகள் மறைந்தால்
    மலரும் விடியல்

    பேரின பெண்ணினத்தை
    பெரியார் சமத்துவத்தை
    உரியோர் உணர்ந்தால்
    உதிக்கும் விடியல்!

    பிற்போக்கு எண்ணத்தை
    போகியில் கொளுத்தி
    பொங்கல் வைத்தால்
    பொங்கும் விடியல்

    புத்தாண்டு போல
    பொங்கலும் இனிக்க
    விவசாயி சிரித்தால்
    விடியும் விடியல்

    கனவுகள் கண்டு
    எழுவதில்லை விடியல்
    கனவுகள் வென்று
    எழுவதே விடியல்!!!!
     
    Last edited: Jan 9, 2017
     
  2. napinnai1954

    napinnai1954 Wings New wings LW WRITER

    Messages:
    140
    Likes Received:
    137
    Trophy Points:
    63
    மிக அருமை .
     
    subash chandra bose likes this.
     
  3. shanthinichandra

    shanthinichandra Pillars of LW LW WRITER

    Messages:
    2,177
    Likes Received:
    5,500
    Trophy Points:
    133
    super vidiyal mam...
     
    subash chandra bose likes this.
     
  4. sreedeviannamalai

    sreedeviannamalai Wings New wings

    Messages:
    13
    Likes Received:
    18
    Trophy Points:
    23
     
  5. mithravaruna

    mithravaruna Bronze Wings New wings

    Messages:
    1,601
    Likes Received:
    2,748
    Trophy Points:
    133
     
Loading...

Share This Page