Vidiyal - (Poetry )Ushanthi

Discussion in 'Poetry Pongal 2017' started by Ushanthi, Jan 15, 2017.

  1. Ushanthi

    Ushanthi Wings New wings

    Messages:
    34
    Likes Received:
    58
    Trophy Points:
    38
    விடியல்
    ******************
    தை மகளே வா
    விவசாய மகனுக்கு
    விடியலை வாங்கி வா

    பிரபஞ்ச உருண்டையை.
    பிரட்டிப் போட்டு
    வற்றாத நதிகள்
    எங்காவது
    வைத்திருந்தால் கொண்டு வா

    'அவசரப் பிரிவுகளில்'
    ஆற்றுப்படுகைகள் படுத்ததால்
    வெடித்த வடுக்களால்
    விவசாய மண்நிலைகள்

    பச்சைக் காடுகளின்
    எச்சங்கள் மட்டுமே
    எங்களிடம் மிச்சம்

    விளைநிலங்களெல்லாம்
    வீழ்ந்து போனததால்
    வீட்டுமனைகள் தம்மை
    எழுப்பிக் கொண்டன

    விதைநெற்கள் கூட
    அடகுபோன அவலத்தால்
    இறுக்க இடையில்லாது
    வேட்டி தொலைத்துத் திரிகிறான்
    ஏர்பிடித்த எம்தமிழன்

    பள்ள வயிறுகளும்
    பட்டிச் சாவுகளும்
    இவன்
    பரம்பரைச் சொத்தென
    பறைசாற்றிக் கொள்கின்றன

    உலர்ந்த வயிறெல்லாம்
    ஏழ்மைத்தீ வசிக்கும்
    உலைகளம் ஆனதால்
    பணி இழந்த
    நொதிகளெல்லாம்
    நொடித்துக் கொண்டன

    பஞ்சமும் சாவும்
    பரிகசித்தது போக
    மிச்சம் சொச்சமாய்
    மீந்திருக்கிறான் ஆங்காங்கே

    தன் மலம் தின்று
    இன்னுயிர் காக்கும்
    இழிநிலை வரும் முன்

    தை மகளே வா
    வற்றாத நதிகள்
    வைத்திருந்தால் கொண்டு வா

    ஆற்றுச்சுரபிகள்
    அள்ளி வா

    தமிழ் நிலம் செழிக்க
    உழவனும் சிரிக்க

    தை மகளே வா
    விவசாய மகனுக்கு
    விடியலை வாங்கி வா

    ****************************

    சாந்தி உடையப்பன்.
     
    anu2, sabeenaibu and napinnai1954 like this.
     
  2. sabeenaibu

    sabeenaibu Bronze Wings New wings

    Messages:
    646
    Likes Received:
    700
    Trophy Points:
    113
    தை மகளே வா
    விவசாய மகனுக்கு
    விடியலை வாங்கி வா
     
    Ushanthi likes this.
     
Loading...

Share This Page