தாயுமானவன்..........!!!

Discussion in 'Kaleidoscope (Life Snippets)' started by bharathit, Dec 14, 2012.

 1. bharathit

  bharathit Wings New wings

  Messages:
  264
  Likes Received:
  36
  Trophy Points:
  48
  Hi Friends,

  Note: இது ஒரு மீள் பதிவு... ஏற்கனவே, நமது பழைய தளத்தில் பகிர்ந்துக் கொண்டது தான்.... புதியவர்களின் பார்வைக்காக மீண்டும் இங்கே ஒருமுறை... இதை இங்கே பதிவது பொருத்தமாகப்பட்டது... அதனால் தான்...!

  ஏதேனும் பிழையிருப்பின்... "நல்லா நாலு சாத்து சாத்துங்க, சந்தோசமா வாங்கிக்கிறேன்...."
  :203:


  ஒரு திருநங்கையுடனான என் அனுபவத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் பா... நெஞ்சில் நீங்காது பதிந்த சுவடு...
  :171:
  கலைஞர் சொன்னதுல, எனக்கு ரொம்ப பிடிச்ச வார்த்தை... "திருநங்கை" ...! அது, "இவ"ங்களை பார்த்த பிறகு அந்த வார்த்தைக்கே ஒரு தனி அர்த்தம் வந்துடுச்சுன்னு இப்பவும் தோணும்...

  நான், UG project செய்யும் போது, train-ல தான் தினமும் போயிட்டு வருவேன்... அது fast passenger ட்ரெயின்... ஆனால், பார்க்க எக்ஸ்பிரஸ் ரயில் போல சீட்டு இருக்கும்... எப்பவும் rush தான்... நம்ம மூதாதையர்கள் (குரங்கு?!) மாதிரி நான் எப்பவும் (லேடீஸ் compartment) upper berth ல தான் உட்காருவேன்...

  அன்னைக்கு நல்ல rush... ஒரு பெண் தன் கைக்குழந்தையோட நின்னுட்டு இருந்தாங்க... ரொம்ப குட்டி பாப்பா... கொஞ்ச நேரம் யாரோ வச்சுட்டு இருந்தாங்க குட்டி பாப்பாவ... கொஞ்ச நேரத்துல ரொம்ப அழுதது (பசி?) ... எல்லாருமே லேடீஸ் தான், அந்த compartment la... பட் யாரும் எழுந்து இடம் கொடுக்கல...

  "எனக்கு ரொம்ப வயசாகிடுச்சு, நிக்க முடியாதும்மா" ; "நான் கடைசி stopping அவ்ளோ நேரம் நிக்க முடியாது...." etc etc dialogues... ஆனால், ஒருத்தர் கூட எழுந்துக்கல... நம்ம குரங்கு புத்தியை நினச்சு அன்னைக்கு தான் ரொம்ப பீல் பண்ணினேன்...

  "ஒரு தாய்க்கு இடமில்லையேல், train-ஐ அழித்திடுவோம்" னு நிஜ பாரதியார் back-trope ல கதறுறாரு... அப்போ தான், நம்ம ஹீரோ(யின்) entry ஆனாங்க...

  சொல்ல மறந்துட்டனே, ஆரம்ப stage ல, "அவங்க" பக்கத்துல உட்கார over hesitation காட்டின ஒரு lady, அப்புறம் இடம் பத்தாம போனதும்... கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நகர்ந்து உட்கார்ந்தாங்க... இதுல, "நீங்க வேணும்னா இந்த பக்கம் வந்து உட்காருங்க... இதுக்கு மேல அட்ஜஸ்ட் பண்ண முடியாது"னு இன்னொரு lady-அ திட்டிட்டு, ஒரு மாதிரி நம்ம ஆளைப் பார்த்து ஏதோ முனுமுனுத்தாங்க...

  "அவங்க" பேரெல்லாம் தெரியாது... எழுந்து இடம் கொடுத்தாங்க... அந்த "அம்மா"க்கு... இது ஒரு சாதாரண incident ஆக போய் இருக்கும்... அவங்க இந்த வார்த்தைகளை சொல்லாம இருந்திருந்தா....

  "எனக்கு தான் ஒரு குழந்தைக்கு தாயாகவோ தந்தையாகவோ முடியாது... கடவுள் எங்களுக்கு பண்ணின கொடுமையை விட, இந்த உலகத்துல நாங்க அனுபவிக்கிற தண்டனை ரொம்ப கம்மி, at-least ஒரு அம்மாக்கு இடம் கொடுக்குற புண்ணியமாச்சும் கிடைக்கட்டும்" சொன்னாங்க...

  she admired me by her words... இவங்க கிட்ட, பெரும்பாலும் ஒரு postivie attitude இருக்கும்...

  அதே train ல, நான் இன்னும் சிலரை பார்த்திருக்கேன்... over make-up வோட, கை தட்டி காசு வாங்குவாங்க சிலர்... ஒருத்தங்க இன்னும் பூ வித்துட்டு இருக்காங்க... sometimes, கீரை, பழம்... ஏதோ ஒன்னு...

  இது நடந்து "*" yrs இருக்கும்... (எவ்ளோ yrs னு சொன்னா, என் வயச கண்டுபிடிச்சுடுவீங்க.... சோ, சொல்ல மாட்டேன்)... இப்போ நினைச்சாலும், ஒரே grass itching தான் பா...

  "நீயா நானா" program ல, ஒரு பெண்ணை "அவங்களுக்கு" கை கொடுக்க சொன்ன போது... அந்த பெண்... அவங்கள கட்டிப்பிடிச்சாங்க... other than டி.ஆர்.பி ரேட்டிங், மெய் சிலிர்த்த இன்னொரு காட்சி...

  இதையும் சொல்லியே ஆகணும்.... நம்ம மக்கள் கிட்ட, அவங்களைப் பற்றிய இப்போதைய கண்ணோட்டம் நிறையவே மாறி வருவது ரொம்பவே சந்தோசமான விஷயம். இதுல, இப்படிக்கு "ரோஸ்"க்கும், ரோஸ் மாதிரி பெயர் தெரியாம அவங்களுக்காக போராடுறவங்களுக்கும் நிறையவே பங்கு இருக்கு...

  இவங்களை "ஒதுக்குறது" இப்போ ரொம்பவே குறைஞ்சிட்டாலும், அவங்க முன்னேற்றத்திற்கு நாமும் ஒரு கை கொடுத்தா இன்னும் நல்லா இருக்கும்...

  நல்ல நல்ல முன்னேற்றங்கள் நாடு முழுக்க வருது... இவங்களுக்கும் நாளை நல்லதா விடியும்னு நம்புறேன்... நம்புவோம்...
  :s11832:
   
   
 2. Rawalika

  Rawalika Contributor

  Messages:
  3,022
  Likes Received:
  30
  Trophy Points:
  0
  ஹாய் பாரதி

  உங்கள் நம்பிக்கை வீண்போகவில்லை.

  சில அமைப்புகள் இவர்களை நல்லவிதமாக பயன்படுத்தி அவர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் அடைய துணையாக இருப்பதால் அவர்களின் வாழ்க்கையில் சிறு முன்னேற்றம்.

  அவர்களையும் மனிதர்களாக மதித்து, பொருளாதார நிறைவு தந்தால் போதும்...
   
  aksheya likes this.
   
 3. anuarun

  anuarun Contributor New wings

  Messages:
  3,857
  Likes Received:
  15
  Trophy Points:
  38
  Hi Barathi,

  Eppa neraya organisations avangalukkaga udhavudhu. Adha avangalum sariya utilise pannikanum. Nammai pondravargalum avargalai odhukaamal madhithale oralavuku matram konduvaralam. Nice and touching article. Thnxs for sharing.
   
   
 4. flower

  flower Wings New wings

  Messages:
  747
  Likes Received:
  97
  Trophy Points:
  28
  hi bharathit,

  இது நடந்து "*" yrs இருக்கும்... (எவ்ளோ yrs னு சொன்னா, என் வயச கண்டுபிடிச்சுடுவீங்க.... சோ, சொல்ல மாட்டேன்)... இப்போ நினைச்சாலும், ஒரே grass itching தான் பா...

  konnudinga ,

  samuga avalangaluggu nammaal mudintha varai kural koduppom
   
   
 5. girija chandru

  girija chandru Pillars of LW LW WRITER

  Messages:
  2,004
  Likes Received:
  1,162
  Trophy Points:
  133
   

Share This Page