பட்டின் வரலாறு

Discussion in 'Sewing / Tailoring / Stitching' started by anuarun, Dec 15, 2012.

  1. anuarun

    anuarun Contributor New wings

    Messages:
    3,857
    Likes Received:
    15
    Trophy Points:
    38
    பட்டின் வரலாறு:

    பட்டு (Silk) என்பது ஒரு நூல், இது பட்டு ஆடைகளை தயாரிக்க பயன்படுகின்றது.

    வரலாறு:

    சீனாவில் பண்டைய காலத்தில் ஒரு பேரரசின் இராணி (Si Ling-Chi) ஒருவர், அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருக்கையில், அங்கிருந்த முசுக்கொட்டைச் செடியில் இருந்து ஒரு புழு, நல்ல இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கூடு ஒன்றைக் கட்டியதைப் பார்த்து இருக்கிறார். அத*னைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அரசி, கூட்டின் இழையப் பற்றி இழுக்க, அது நெடிய தூரம் நீண்டதாம். அதிலிருந்து, ஒரு கூடு ஒன்று ஒரே இழையில் ஆனதையும் தெரிந்து கொண்டு, நிறைய கூடுகளைச் சேர்த்து, பின் அதன் இழைகளைக் கொண்டு ஒரு சிறு ஆடை தயாரித்துப் பார்த்து, அதன் அழகில் மயங்கி, இப்படியாகத் துவங்கியதுதான் பட்டு நூலாடைகள். மேலும் இந்த வகை ஆடைகள் இராச குடும்பத்தில், அதுவும் சீனாவில் மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டதாம்.
    இப்படியாக சுமார் 2500 ஆண்டுகள் கழிந்துவிட, |ரோமானிய மன்னன் எதேச்சையாக சீன இளவரசியைத் திருமணம் செய்ய, முதல் முறையாக பட்டுக் கூடும், புழுவும் எல்லை தாண்டியது. எனினும் அவர்கள் அதனை வளர்க்கத் தெரிந்து இருக்கவில்லை. மீண்டும் பாதிரியார் ஒருவரைச் சீனாவுக்கு அனுப்பி, அவர் மூலமாகத் தெரிந்து கொள்ள முறபட்டும், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இப்படியாக, சீனாவின் பட்டு நூலாட்சி கொடி கட்டிப் பறந்தது.
    இந்த*ச் சூழ*லில், ச*ப்பானிய*ர்க*ள் வெகு சாம*ர்த்திய*மாக* ப*ட்டு நூல் வ*ள*ர்க்க*த் தெரிந்த* நான்கு சீன*ப் பெண்ம*ணிக*ளைக் க*ட*த்திச் சென்று அல்லது பணிப் பெண் வேலைக்கென அழைத்துச் சென்று, பின் திரும*ண*ம் செய்து கொண்டார்க*ள். அத*ன் பின் ஜ*ப்பானிய*ர்க*ள் அவ*ர்க*ள் மூல*மாக* ப*ட்டு நூல் வ*ள*ர்ப்பைத் துவ*க்கி, அத*ன் உற்ப*த்தியில் மேம்பாடு க*ண்டு சீனாவின் உற்ப*த்தியை விடப்* ப*ன்ம*ட*ங்கு உற்ப*த்தி செய்ய* ஆர*ம்பித்து விட்டார்க*ளாம். ஆனால், சீன*ர்க*ளுக்கு அபிவிருத்தி செய்ய*த் தெரிந்து இருக்க*வில்லையாம்.
    அதன் பின்னர் ஜப்பான் பட்டு நெசவு, வளர்ப்புக்கான காப்புரிமையை மேலை நாடுகளுக்கு தர முன் வந்ததும், இந்தியாவும் சீனாவின் இரகசியத்தைத் தெரிந்து கொண்டதும் உலகளாவிய பட்டு நெசவுக்கு வழி வகுத்தது.

    பட்டு உற்பத்தி:
    பட்டுப்புழு வளர்ப்பை "பட்டுப்புழு வேளாண்மை" என்று கூறுவர். முப்பதுக்கும் மேற்ப்பட்ட நாடுகள் பட்டுப்புழு வளர்ப்பை செய்கின்றனர். இதில் அதிக உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தியாவும் (14%) , சீனாவும்மாகும் (54%).
     
    Last edited: Dec 15, 2012
     
  2. anuarun

    anuarun Contributor New wings

    Messages:
    3,857
    Likes Received:
    15
    Trophy Points:
    38
    பட்டுச் சேலை மீது நமது பெண்களுக்கு உள்ள மோகத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது.

    பெண்கள் மட்டுமின்றி, நாம் வணங்கும் தெய்வத்துக்கும் கூட பட்டாடை அணிவித்தே மகிழ்கிறோம்.

    பட்டுச் சேலைகளின் விலை பல ஆயிரங்களில் ஏறுகிறது. அதிலும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு உலகெங்கிலும் பெரும் மதிப்பு உள்ளது அனைவரும் அறிந்ததே.

    இந்தியாவின் பட்டு பற்றிய குறிப்புகள் வேத காலத்துக்கு முந்தியவை. கி. மு. 140 இல் சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பட்டு அறிமுகமானது என்று கூறப்படுகிறது. கெளடில்யர் தான் எழுதிய ‘அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே பட்டு பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

    கனிஷ்கர் காலத்திலேயே, அதாவது கி. மு. 58 இல் பட்டு இந்தியாவில் இருந்து பிரசித்தி பெற்ற ரோமாபுரிக்கு ஏற்றுமதியாகி வந்தது.

    மத்திய ஆசிய நாடுகளுக்கும், தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பட்டு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்தது. கி. பி. 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பட்டு வளர்ப்பதை மொகலாய அரசர்கள் ஊக்கப்படுத்தி வந்தனர்.

    மைசூரில் பட்டு வளர்ச்சிக்கு முதலில் வித்திட்டவர் திப்பு சுல்தான். கர்நாடகம் இன்றைக்கு நாட்டின் 70 சதவிகித கச்சாப் பட்டை அளிக்கிறது. உலகளவில் இன்று பட்டு உற்பத்தி செய்வதில் சீனா முதலிடம் வகிக்கிறது.

    சீனாவுக்கு அடுத்தபடியாக அதிகமாகப் பட்டு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா தான்.

    இந்தியாவில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஜப்பான் நாடும் பட்டு உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இன்றைக்கும் ஜப்பான் அரச குடும்பத்தினர் பட்டுப் புழு வளர்ப்பில் தனிப்பட்ட ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

    பட்டு நூலைக் கண்டுபிடித்த கதை மிகவும் சுவாரசியமானது. கி. மு. 2700 ம் ஆண்டில் சீனாவில் ஒருமுறை மகாராஜா தனது அரண்மனை தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தார். அப்போது அங்குள்ள ஒரு தாவரத்தில் இலைகள் சிதைந்திருப்பதைக் கண்டார். அந்தத் தா¡வரம், மல்பெர்ரி எனப்படும் முசுக்கொட்டைத் தாவரம்.

    உடனே அவர் தனது மகாராணியிடம், மல்பெர்ரி இலைகள் சிதைவதற்கான காரணத்தை அறியும்படி கூறினார். அந்த மகாராஜாவின் பெயர், ஹுவாங் டி. மகாராணி உற்றுக் கவனித்தபோது மல்பெர்ரி இலைகளை ஒருவித வெள்ளைப் புழுக்கள் கடித்துக் கொண்டிருப்பதையும், இலைகளில் சில இடங்களில் மட்டும் மின்னும் கூடுகள் இருப்பதையும் கண்டார். அந்த மின்னும் கூடுகளை வினோதப் பொருட்களாகச் சேகரித்து வைத்தார்.

    ஒரு நாள் மகாராணி தேநீர் அருந்தும் வேளையில் புழுக் கூடுகளை மேலே தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கூடு தவறி தேநீர்க் கோப்பையில் விழுந்துவிட்டது.

    உடனே ராணி அந்தக் கூட்டை வெளியே எடுத்தார். அப்போது அவரது கை விரல்கள் மின்னும் இழையைப் பற்றின. அவர் கையைத் தூக்கியபோது மெல்லிய இழையும் மேலே வந்தது. இப்படித் தற்செயலாகப் பட்டு நூலைக் கண்டுபிடித்தார். அந்தச் சீனத்து ராணி. ஆக, பெண்களின் நன்றியெல்லாம் அவருக்கே உரித்தாக வேண்டும்.
     
     
  3. anuarun

    anuarun Contributor New wings

    Messages:
    3,857
    Likes Received:
    15
    Trophy Points:
    38
    உலக அளவில் பட்டுநூல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உற்பத்தியில் 90 சதவீதம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டுநூல் மட்டும் 22 ஆயிரம் டன். இவ்வளவு உற்பத்தி செய்தும் நம் நாட்டில் பட்டு நூல் தேவை இருப்பதால், தற்போது சீனாவிடம் இருந்து 8ஆயிரம் டன் பட்டு நூல் இறக்குமதி செய்தகொண்டிருக்கிறோம். சீனா மட்டுமல்லாமல், உஸ்பெகிஸ்தான், பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் தற்போது பட்டுநூல் இறகக்குமதி செய்துகொண்டிருக்கிறோம். பட்டுவர்த்தகம் மூலம் மட்டும் இந்தியா கடந்த ஆண்டில் சம்பாதித்த வருமானம் ரூ.2,600 கோடி என்கிறார் முகா பட்டு நூல் உற்பத்தியாளர் மேனன்.
    சாதாரண மஞ்சள் நிற பட்டுத் துணி, இந்தியாவை சர்வதேச சந்தையில் கவுரவப்படுத்துகிறது என்றால், முகாவை நினைத்து பெருமைப்பட்டுத்தானே ஆகவேண்டும்!
     
     
  4. anuarun

    anuarun Contributor New wings

    Messages:
    3,857
    Likes Received:
    15
    Trophy Points:
    38
    பட்டுப்புழு வளர்ப்பு:

    பட்டுப்புழு வளர்ப்பு (Sericulture, அல்லது silk farming) பட்டு நூல் தயாரிப்பதற்கு வேண்டிய பட்டுப்புழுவை வளர்க்கும் முறையைக் குறிக்கும்.

    பட்டுப்புழுவை அதன் வாழ்நாள் காலம் (30 நாட்கள்) முழுவதிலும் மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தரமான மல்பரி இலை வெற்றிகரமான புழு வளர்ப்பிற்கு வழிவகுக்கிறது. நல்ல சுத்தமான சுற்றுச்சூழலும், பூச்சிகள் மற்றும் நோய்களிடம் இருந்து பாதுகாப்பும் மிகவும் அவசியம். சீரான சுற்றுச்சூழலை ஏற்படுத்திக்கொடுக்க, ஒரு தனி புழு வளர்ப்பு மனையும் அதற்கு தேவையான வளர்ப்பு சாதனங்களும் அவசியமாகும். ஒரு வருடத்தில் சுகாதாரமான புழு வளர்ப்பு மனையில் 10-12 முறை புழு வளர்ப்பும், இயற்கை வளமான தோட்டத்தில் 5-6 முறை மல்பரி இலை அறுவடையும் செய்யலாம். இதன் இடைவெளி 60-70 நாட்கள் ஆகும்.

    பட்டுப்புழு:

    பட்டுப்புழு என்பது வேளாண்மை பயன்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பட்டுப்பூச்சி இனமான Bombyx mori யின் குடம்பிப்புழு நிலையாகும். பட்டு நூலை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்றிருப்பதனால், இது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பூச்சியினமாக உள்ளது. துத்தி (அல்லது வெண் முசுக்கட்டை மரம்) என்றழைக்கப்படும் ஒரு தாவரத்தின் இலைகளே இதன் மிக முக்கியமான உணவாக இருக்கிறது.
    குறிப்பிட்ட இந்த இனமானது வட இந்தியா, வட சீனா, கிழக்கு உருசியா, யப்பான் போன்ற நாடுகளில் வன இனமாகக் காணப்பட்ட Bombyx mandarina என்ற பட்டுப் பூச்சி இனத்தை வேளாண்மை வளர்ப்புக்கு தொடர்ந்து உட்படுத்தி வந்தபோது உருவாகிய இனமாகும். அனேகமாக இது சீன வகைப் பட்டுப்பூச்சியிருந்து உருவான வேளாண்மைக்குட்பட்ட இனமாகும். இது பல்லாண்டு காலமாக பட்டுப்புழு வளர்ப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பட்டுப்புழு வளர்ப்பு நடை முறையிலுள்ளது. இந்த இனமானது தனது இனப்பெருக்கத்திற்கு, மனித வளர்ப்பிலேயே முற்று முழுதாய் தங்கியிருப்பதுடன், தாமாக காட்டு இனமாக இருக்க முடியாத நிலையிலுள்ளது.
     
    Last edited: Dec 15, 2012
     
  5. anuarun

    anuarun Contributor New wings

    Messages:
    3,857
    Likes Received:
    15
    Trophy Points:
    38
    வளர்நிலைகள்:

    முட்டைகள் பொரிப்பதற்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கும். பொரித்து வந்த பட்டுப்புழுக்கள் தொடர்ந்து உணவை உண்ணும். அவை விரும்பி உண்பது துத்தி (அல்லது வெண் முசுக்கட்டை மர இலைகளை. ஆனாலும், இவை மொரேசியே (Moraceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களில் வேறு சில இனங்களையும் உண்ணக்கூடியவை. பட்டுப்பூச்சிகள் இடும் முட்டை பொரித்து உருவாகும் இரண்டாம் நிலையான புழுக்கள் கேகோ ('kego') என்றும், இந்தியாவில் சாவ்க்கி ('chawki') என்றும் அழைக்கப்படும். இவற்றின் உடலில் கறுப்பு நிற மிகக்குறுகிய மயிர்கள் காணப்படும். இந்த முதலாம் நிலை பட்டுப்புழுவின் தலையானது கூடிய கருமை நிறமாக வரத் தொடங்கும் பொழுது, புழுவானது தனது வெளித் தோலை இழந்து, தனது இரண்டாம் வளர்நிலைக்கு போவதற்கு ஆயத்தமாகும். அடுத்த வளர்நிலைகள் வெள்ளை நிறமானவையாகவும், மயிர்களற்ற உடலைக் கொண்டும், முதுகுப் பகுதியில் ஒரு கொம்பு போன்ற அமைப்பைக் கொண்டும் காணப்படும்.
    நான்காவது தோல்கழற்றல் நடைபெற்று குடம்பியானது ஐந்தாவது வளர்நிலைக்கு வரும்போது, அதன் நிறம் மென்மஞ்சள் நிறமாகி, தோலிலும் இறுக்கம் ஏற்படும். குடம்பியின் உமிழ்நீர்ச் சுரப்பியிலிருந்து சுரக்கும் பட்டின் மூலப் பொருளைக் கொண்டு குடம்பியானது தனக்கான ஒரு கூட்டை உருவாக்கும். இந்தக் கூடே அசையாத நிலையில் இருக்கப்போகும் கூட்டுப்புழுவுக்கு பாதுகாப்பை வழங்கும். செதிளிறகி (Lepidopter) வரிசையிலுள்ள பல பூச்சிகள் இவ்வகையான கூட்டை உருவாக்குபனவாக இருந்தாலும், பட்டுப்பூச்சி போன்ற ஒரு சில மட்டுமே, ஆடை உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
    கூட்டுப்புழுவிற்கான கூடானது கிட்டத்தட்ட 300 - 900 மீற்றர் நீளமான பட்டு நூலினால் ஆக்கப்பட்டிருக்கும். இந்த நூல்போன்ற நாரானது மிகவும் மெல்லியதாகவும், விட்டம் அண்ணளவாக 10 மைக்ரோமீற்றராகவும் இருப்பதுடன், மிகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஒரு இறாத்தல் நிறையுள்ள பட்டு தயாரிக்க 2000 - 3000 புழுக்கூடுகள் தேவைப்படும்.
    வழமையாக கூட்டுப்புழுக்கள் தாம் உருவாக்கிய கூட்டில் சில புரதச்சிதைப்பை ஏற்படுத்தும் நொதியத்தைச் சுரந்து, அவை அந்துப்பூச்சியாகும் நிலையில் கூட்டிலிருந்து வெளியேறுவதற்காக கூட்டில் துளைகளை ஏற்படுத்தி வைக்கும். அவ்வாறு நிகழுமாயின் நூலானது வெட்டப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் பட்டின் தரம் குறையும். ஆதலால், இந்த நொதியங்கள் வெளியேறி, கூட்டை சிதைப்பதைத் தவிர்க்கும் நோக்குடன், கூடானது கூட்டுப்புழுவுடன் சேர்த்து கொதிக்க வைக்கப்படும். இதனால் நூல் இலகுவாக பிரிந்து வருவதற்காக கூடானது கொதிக்க வைக்கப்படும்போது, கூட்டுப்புழுக்களும் இறந்து விடுகின்றன.
    பட்டுப்பூச்சியின் இறுதி முதிர் பருவம், அந்துப் பூச்சியாகும். இவற்றின் செட்டை விரித்த நிலையில் அகலம் 3-5cm ஆகவும், வெள்ளை மயிர்கொண்ட உடலாகவும் இருக்கும். இவற்றால் பறக்க முடியாது. இவற்றில் பெண் பூச்சிகள் முட்டைகளை சுமப்பதனால், ஆண் பூச்சிகளை விட 2-3 மடங்கு பாரமானதாக இருக்கும். இவற்றின் வாயுறுப்பு மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பதுடன் இவை அதிகம் உணவை உண்பதில்லை.

    இனங்கள்:


    பட்டுப்புழுவின் 443 இனங்கள் (மூலவுயிர்முதலுரு) தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள மத்திய பட்டு வளர்ச்சி மற்றும் ஆரய்ச்சி கழகம் கண்காட்சி வளாகத்தில் உள்ளது.
     
     

Share This Page