vidiyal

Discussion in 'Poetry Pongal 2017' started by girija chandru, Feb 10, 2017.

  1. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    2,004
    Likes Received:
    1,162
    Trophy Points:
    133
    dear friends, already before january 31, i had posted my three poems in the title "vidiyal" to our ladyswings in the mail id... now i am posting my poems in this thread...

    hope you will like my poems....


    here comes my first poem....
     
     
  2. girija chandru

    girija chandru Pillars of LW LW WRITER

    Messages:
    2,004
    Likes Received:
    1,162
    Trophy Points:
    133
    1)கவிதை என் சொந்த படைப்பு.
    2) வேறு எந்த தளத்திலும் பதிவு செய்யவில்லை.

    நான் :-

    ரா.கிரிஜா, (girija chandru), டீ.வி.சேகரன் நினைவு மேல்நிலை பள்ளி முதல்வர், கோவை .
    பாடல், ஆடல்,கவிதை,கதை,தமிழ் அனைத்தும் என் சுவாசம். வாழ்வை மகிழ்ச்சியாய் வாழ துடிக்கும் நான், ஒரு இயற்கை நேசிப்பாளி, சமூக சேவையில் ஆர்வம் உண்டு. மனிதமே உன்னதம்.


    ini kavidhai.....

    மகளிர் சிறகுகள் -கவிதை போட்டி
    கவிதை தலைப்பு :- விடியல்

    விடியல் :-
    விடியல் யாருக்கு?
    விடியல் எப்போது?
    விடியல் எங்கு?
    விடியல் எதற்கு?

    விடியல் என்ற தலைப்பு
    வியக்க வைக்கிறது என்னை
    ;
    விடியல் என்று கூவி கூவியே
    விளங்காமல் போனோமோ
    ?

    விடியல் தானாய் உதித்திட வேண்டும்
    விடியல் இயல்பாய் பிறக்க வேண்டும்
    விடியல் வேதனையின் சாட்சியா
    ?
    விடியல் குருதியின் கூட்டா?

    விடியல் பேசி பேசி மகிழவா?
    விடியல் பாடி பாடி முகிழவா?
    விடியல் ஆடி ஆடி அசையவா?
    விடியல் தேடி தேடி ஓயவா?

    விடியல் எல்லாவற்றிலும் எங்கும் எதிலும்
    விடியல் எப்போதும் எல்லா விதத்திலும்
    விடியலை தேடி தேடியே மனிதம்
    விடியலும் விண்வெளி புதிரா
    ?

    விடியல் வேதனையை வாடிக்கையாய் கொண்டவருக்கு
    விடியல் வேடிக்கையை இயல்பாய் கொண்டவருக்கு
    விடியல் யாசித்து வாழ்வை நடத்துபவருக்கு
    விடியல் யோசித்து வாழ்வை வாழ்பவருக்கு !!!


    **** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
     
     
  3.  
Loading...

Share This Page