Kanavugalum Palangalum!!

Discussion in 'General Discussion' started by Jeyanthi Padmanabhan, Dec 18, 2012.

  1. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,246
    Likes Received:
    184
    Trophy Points:
    63
    கனவு காணுங்கள்

    கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

    நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர்.

    கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள்.
    “நானும் என் கணவரும் வேறு ஊருக்கு செல்கிறோம். அந்த நாட்டின் அரசர் என் கணவரை கள்வன் என்று கூறி கொன்று விடுகிறார்.†என்று, தான் கண்ட கனவை பற்றி தோழியிடம் கூறினாள் கண்ணகி.

    அதேபோல அம்பிகாபதியின் தந்தை கம்பர் ஒருசமயம், இரவு நேரத்தில் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தார். அந்த காட்டில் ஒரு காளி கோவில் இருந்தது. அந்த காளிதேவி சிலைக்கு பூதங்கள் பூஜை செய்து கொண்டிருந்தது. இந்த காட்சியை மறைந்திருந்து பார்த்து கொண்டு இருந்தார் அம்பிகாபதியின் தந்தை.
    அப்போது ஒரு பூதம் காளிதேவிக்கு படைப்பதற்காக பிரசாதத்தை தயார் செய்து கொண்டு வந்தது. இதை கண்ட மற்றோரு பூதம் காளிதேவிக்கு படைக்கும் முன்பே அந்த பிரசாதத்தை ருசி பார்த்தது. இதனால் கோபம் அடைந்த வேறோரு பூதம் பிரசாதத்தை ருசி பார்த்த பூதத்தின் கையை வெட்டியது.
    இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த கம்பர், “அட…என்ன ஆச்சரியம் இது. பூத கணங்களுக்கு கூட இவ்வளவு பக்தியா?†என்று தன் இல்லத்தை நோக்கி காட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்த படி நடந்தார்.
    அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு பூதம் மற்ற பூதத்தை எந்த ஆயுதத்தால் வெட்டியது? அந்த ஆயுதத்தின் பெயர்என்ன? என்று சிந்தனையிலேயே தன் வீட்டின் கதவை தட்டினார்.
    அப்போது, நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த. மகன் அம்பிகாபதி, கதவை திறந்து ‘அந்த ஆயுதம் கேள்வி குறியை போல இருக்கும். அவ்வாயுதத்தின் பெயர் கோடாரி.’ என்று தூக்க கலக்கத்திலேயே பதில் கூறினான்.
    இதை சற்றும் எதிர்பாராத அம்பிகாபதியின் தந்தை, “எங்கோ நடந்த சம்பவங்களை இங்கிருந்தபடியே கனவில் கண்டு சொல்கிறானே அம்பிகாபதி“ என்று ஆச்சரியம் அடைந்தார்.
    இப்படி சிலருக்கு முன்கூட்டியே வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் கனவில் தோன்றிவிடும்.

    பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.
     
     
  2. Umaravi09

    Umaravi09 Contributor New wings

    Messages:
    2,100
    Likes Received:
    31
    Trophy Points:
    48
    Hi Jeyanthi

    very nice sharing

    kambar and ambigavathy are really great
     
     
  3. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,246
    Likes Received:
    184
    Trophy Points:
    63
    திருவிழா – இறைவனை கனவில் கண்டால் என்ன பலன்

    ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின் வட்டாரத்தில் அன்பும் ஆதரவும் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும்.

    ஆலயத்திற்குள் நுழைய முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொண்டு அவதிப்படுவது போல கனவு கண்டால், எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கி கொண்டு அவதிப்படுவீர்கள். உங்களின் வளர்ச்சியை கெடுக்கவே சிலர் முயற்சிக்கிறார்கள் என்பதை உணருங்கள். இறைவனை மனபூர்வமாக நம்புங்கள். சிக்கல்களிருந்து விடுபடவும், பணவிரயம் ஆகாமல் இருக்கவும் சிந்தித்து செயல் படுவது நல்லது.

    இறைவனை கனவில் கண்டால், உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. பிரச்சனைகள் விலகி யோகங்கள் உங்களை தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமண தடை விலகி நல்ல வரன் அமையும். ஆபத்திலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

    இறைவனுக்கு மாலை போடுவது போல கனவு கண்டால், லாபகரமான செயலில் ஈடுபடுவீர்கள். நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பல பாக்கியங்களை பெற்று சுகமாக வாழ்வீர்கள்.

    திருவிழாவை சுற்றி பார்ப்பது போல கனவு கண்டால், வீடு-வாகனம், பொருட்கள் வாங்கும் யோகம் வரும். அதனால் கடனும்வாங்குவீர்கள். இருந்தாலும் குடும்பத்திலும், உங்கள் மனதிலும் சந்தோஷம் இருக்கும். புதிய சுமை இருந்தாலும் அதை சுகமான சுமையாகவே கருதுவீர்கள்.

    திருவிழாவில் யாரையாவது தேடுவது போல கனவு கண்டால், தொழிலில் சில சங்கடங்கள், உறவில் விரிசல் போன்ற சிறு சிறு சங்கடங்கள் வரும். காலம் கடந்து கொண்டு இருந்த விஷயங்களுக்கு புதிய வழி கிடைக்கும். அதனால் லாபமும் உண்டாகும்.

     
     
  4. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,246
    Likes Received:
    184
    Trophy Points:
    63
    அரண்மனை:

    கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
     
     
  5. Jeyanthi Padmanabhan

    Jeyanthi Padmanabhan Contributor New wings

    Messages:
    6,246
    Likes Received:
    184
    Trophy Points:
    63
    அணைக்கட்டு:

    ஓர் அணைக்கட்டு உடைந்து விட்டது போல் கனவு தோன்றினால் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். சொத்துக்கள் அழியும். இக்கனவு நாட்டிற்கும் பொருந்தும். நாட்டில் நோய்கள் பெருகி உயிர்ச்சேதம் உண்டாகும். கிளர்ச்சிகள் தோன்றிப் பொருட்சேதம் உண்டாகும்.
     
     

Share This Page