Hi .......Hi.......Hi..... I'm back

Discussion in 'Jokes' started by Srjee, Apr 14, 2017.

 1. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  நீங்க சிரிப்பீங்கனு நினைக்கல்லே........
  ஐய்யோ இவள.......னு உங்க அழகான (??)பல்லை கடிப்பிங்க னு நினைக்கல்லே.......
  முட்டுசந்தை தேடி போய் முட்டிகொள்வீர்கள்னு நினைக்கல்லே...........
  ஆண்டவா ..... இந்த புது வருடத்துல சரி இவளுக்கு நல்ல புத்தி கொடுக்க கூடாதா....... னு புலம்புவீங்கன்னு நினைக்கல்லே........
  எல்லாத்துக்கும் மேல ப்ரஷான முட்டை ,தக்காளி வெச்சு எனக்கு பேஷியல் ( எத்தனை நாளைக்கு தான் அழுகின தக்காளி முட்டைலயே அடிக்கிற)) செய்து கழுவி கழுவி ஊத்துவீங்கன்னு நினைக்கல்லே..........
  இது எல்லாம் நடந்துடுமோ.............னு பயம்ம்மா இருக்கு.......


  (பி.கு அலைபாயுதே ரசிகர்கள் யாரும் தனிப்பட்ட முறையில் போர்க்கொடி தூக்கக்கூடாது ........))))))39:simile:

  Start music.......

  மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.

  மனைவி – ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?.

  கணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்………….!!!
   
  shaja and Bhavadhi like this.
   
 2. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
  இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
  செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப்
  பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
  அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
  பின் ஒருவராக செல்லக் கண்டார்.
  இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
  நாய் வைத்திருந்தவரை அணுகி, “இது போன்ற பிண
  ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன்.
  ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும்
  சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
  “முதலில் செல்வது எனது மனைவி.”
  “என்ன ஆயிற்று அவருக்கு?”
  “எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
  “இரண்டாவது பிணம்?”
  “அது என் மாமியாருடையது. என் மனைவியைக்
  காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
  உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார்,
  “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”
  அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய்
  நில்லுங்கள்”!!...  தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
  செய்யலாமா..?
  ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
  பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
  ————————————————————————————
  கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?
  மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…
  நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
  கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…
   
  sanjana rishi and Bhavadhi like this.
   
 3. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  ஒரு டாஸ்மாக் பாரில்

  “தம்பி!! ஒரு பீர்!”
  “என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”
  “அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
  “பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
  “அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
  “போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
  “அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!


  ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் ஒருவன் வேலைக்கு சேர்ந்தான்.சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்”
  “என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?”
  “சரி சரியான நம்பர் எது?”
  “ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”
  “யாரு கிட்ட?”
  “நான் தான் இந்த கம்பெனியோட CEO”
  “நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”
  “தெரியாது,யார் கிட்ட?”
  “தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது”
  டொக்…
   
  sanjana rishi and Bhavadhi like this.
   
 4. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  ===============
  மாப்பிள்ளை பையன் ஊமை பரவாயில்லையா ?
  பரவாயில்லை .. .. பரவாயில்லை .. ..எப்படியும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வாயைத் திறக்கப் போறதில்லையே….
  =================

  ஏண்டீ என் கல்யாண பட்டு வேட்டி பத்திரமா இருக்கா ..
  .சின்னதா ஒரே…ஒரு மாற்றம் …பாத்திரமா இருக்கு .
  ==============
  “நீங்க இப்ப மிகப்பெரிய கண்டத்துல இருக்கீங்க…”
  “ஆமா… நானும் படிச்சிருக்கேன்! ஆசியாதான் உலகத்துலயே பெரிய கண்டம்னு!”

  ===================
  “ஒர்க் ஷாப் வைக்க பேங்க்ல லோன் கேக்கறீங்களே… முன் அனுபவம் இருக்கா?”
  “இருக்கு சார்…. இதுவரை பல பேங்க்ல லோன் கேட்டிருக்கேன்!”
  ==============
  “இந்த மருந்தை வெறும் வயித்துலதான் சாப்பிடணும்…”
  “பனியன்கூட போட்டிருக்கக்கூ டாதா டாக்டர்…?”
  =============
  “என்னங்க…. கல்யாணத்துக்கு வந்துட்டு, மொய் எழுதாமப் போறீங்க?”
  “எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்க!”
  =============
  “ரொம்ப நேரமா உலக வரைபடத்துல என்ன தேடுறீங்க?”
  “எல்லா நாடும் இருக்கு. ‘கொடநாடு’ காணோமேய்யா!”
  ==========
  என்னங்க வீட்டோட வேலைக்காரி கிடைப்பாளா?
  உங்களுக்குத்தான் வீடே கிடையாதே?
  அதனால்தான் வீட்டோட கேட்கிறேன்!
  ==============

  இன்னைக்கு போதும் ..........15:simile:
  சுட்டது ........சுட்டது... சுட்டது

  தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
   
  Last edited: Apr 14, 2017
  sanjana rishi, shaja and Bhavadhi like this.
   
 5. Bhavadhi

  Bhavadhi Pillars of LW LW WRITER

  Messages:
  1,408
  Likes Received:
  5,490
  Trophy Points:
  133
  வாடி மாப்பு வா.....
  உன்னை தான் காணோம்னு தேடிகிட்டு இருந்தேன் வந்துட்டியா......


  என்ன ஒரு அழகான்னன்னன்னன மொக்கை.......

  நிஜமாவே சொவத்தில முட்டிக்கணும் போல இருக்கு.....
   
   
Loading...

Share This Page