சம்பந்தி சண்டை

Discussion in 'Articles/Essay' started by RAJALAKSHMI GOWRISHANKAR, Apr 20, 2017.

 1. RAJALAKSHMI GOWRISHANKAR

  RAJALAKSHMI GOWRISHANKAR Pillars of LW LW WRITER

  Messages:
  3
  Likes Received:
  25
  Trophy Points:
  33
  வருடங்களுக்கு முன் என் உறவினர் ஒருவர் திருமணத்தில் நடந்த சம்பந்தி சண்டை இது .மணப்பெண் முது நிலை பட்டதாரி .கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலை பார்த்து வந்தாள்.அதனால் சற்றே கர்வம் கொண்டவளாக இருந்தாள். நிச்சயதார்த்தத்தின் போது ஒரு காலை மடக்கி உட்காராமல் சப்பணம் கொட்டி உட்கார்ந்தாள் .இது பையனின் வயதான பாட்டியை உறுத்தியது உடனே அவள் மணப்பெண் அருகே சென்று சொன்னாள்,அதற்கு அவள் இதுதான் தனக்கு சௌகர்யமாக இருப்பதாக தீர்மானமாக கூறி விட்டாள். பெண் வீட்டினரும் இதை கண்டுகொள்ள வில்லை.பாட்டியும் பேசாதிருந்து விட்டாள்.
  மறு நாள் மணமேடையிலும் இதே கதைதான். பிள்ளை வீட்டில் மூணு முணுத்தனர்களே தவிர வாளாதிருந்துவிட்டனர்.. திருமணமும் நல்லபடியாக சச்சர வின்றி நிறைவேறியது. அன்றிரவு முதல் இரவு, வழக்கம் போல பிள்ளை வீட்டார் தங்கிஇருந்த வீட்டில் வைத்திருந்தனர். எந்தசண்டையும் இல்லாமல் திருமணம் நடந்த நிறைவில் அனைவரும் தூங்க போயினர்.
  மறுநாள் காலையில் சீக்கிரமே அனைவரும் எழுந்து விட்டோம் .ஆனால் பெண்ணை கூட்டிக்கொண்டு போகவோ ,எங்களுக்கு காபி தரவோ யாரும்வரவில்லை. ஆகவே பையனின் சகோதரி பெண் வீட்டிற்கு போனாள்.அங்கு யாருமே அவளை சட்டை செய்ய வில்லை சூடான காபியை ஆற்றி குடித்து கொண்டிருந்தவர்கள் என்ன வேண்டும் என்று கூட கேட்கவில்லை. தன் கோபத்தை அடக்கி கொண்ட சகோதரி "காபி இன்னும் வரவில்லையே "என்று தன்மையுடன் கேட்டாள், அதற்கு பால் காய்ந்து கொண்டு இருக்கிறது "என்று அசட்டையாக பதில் கூறினார்கள் . இந்த புறக்கணித்தலை தாங்க முடியாமல் திரும்பியவள் கத்த ஆரம்பித்தாள். ஏற்கனவே மணப்பெண் வீட்டாரின் அலட்சியத்தால் நொந்து போயிருந்தவர்கள் ஆளுக்கு ஆள் கத்த ஆரம்பித்தனர் .சத்தத்தை கேட்டு வந்த பெண் வீட்டார் தாங்களும் கத்த ஒரே சம்பந்தி சண்டை.
  ஒரு மணி நேரம் இந்த சண்டை நீடித்தது. பாவம், பெண், மாப்பிளை இருவரும் முதலறையில் ஏறக்குறைய சிறையிலிருந்தனர்.
   
  GREENY31, venila, Srjee and 2 others like this.
   
 2. Eegai Chandrasekar

  Eegai Chandrasekar Wings

  Messages:
  2
  Likes Received:
  0
  Trophy Points:
  21
   
   

Share This Page