Mazhai Ninaivugal(மழை நினைவுகள்)

Discussion in 'Articles/Essay' started by கவி, Sep 13, 2017.

 1. கவி

  கவி Roots of LW Staff Member Administrator New wings

  Messages:
  10
  Likes Received:
  29
  Trophy Points:
  23
  மழை என்றாலே மண் வாசனையோடு பல நினைவுகளை கிளறியெடுக்கும்.அந்த நினைவுகளை உங்கள் அழகான எழுத்தின் மூலம் பகிர்ந்துக்கொள்ளுங்கள். தமிழிலோ,ஆங்கிலத்திலோ எதில் வேண்டுமானாலும் பகிரலாம்.

  ப்ரியமுடன்,
  கவி.
   
  yogapriya, Uma dev and kavipritha like this.
   
 2. kavipritha

  kavipritha Wings

  Messages:
  3
  Likes Received:
  7
  Trophy Points:
  23
  வணக்கம் தோழிகளே......
  மழை காலம்........ என்னுடைய சிறிய வயது நினைவு இது

  எங்களுடையது பழைய தொட்டி கட்டு வீடு... கடற்கரை ஓரத்து ஊர் எங்களுடையது.... மழை காலம் தொடங்கியதும் .... புயல் வெள்ளம் தான்... மழை வந்தால் ஒட்டு வீடு அதனால் ஒலுகும்...
  அதன் அடியல் பாத்திரம் வைக்க வேண்டும்.... என் அப்பா உடன் முற்றத்தில் நான் எனது தங்கைகள் சேர்ந்து சுற்றி ஓடுவோம் .... என் அப்பா எங்களை பிடித்து முற்றத்தில் தூக்கி போடுவார்.... என் தங்கைகள் எல்லாம் சிறியவர்கள் ... நன் தான் 3 ம் வகுப்பு படிபேனு நினைக்கிறேன் நியாபகம் சரியாய் இல்லை.... நான் தான் சுற்றி ஓடிடே இருப்பேன் open shaver மாறி சூப்பர்ra இருக்கும்.... இடி இடிக்கும் போது ... அர்ஜுனா அர்ஜுனா னு சொல்ல சொல்லுவார் அப்பா....... கப்பல் செய்து முற்றத்தில் விட்ட நினைவு கூட ஊண்டு... அப்போல்லாம் கரண்டு போய்விடும் ....... ஒரு சிமிலி விளக்கின் ஒலியில் என் அம்மா சாதம் பிசைந்து கையில் போட்ட நினைவும் ஊண்டு ....... இப்பொழுது தோன்றுகிறது " நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை ....... என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை........" i miss my அப்பா...... மேலும் அந்த நாட்களின் மழை........
   
   
 3. Uma dev

  Uma dev Bronze Wings New wings

  Messages:
  479
  Likes Received:
  614
  Trophy Points:
  113
  அழகான பதிவு சகோ....
   
  yogapriya, ammuyoga and kavipritha like this.
   
 4. Uma dev

  Uma dev Bronze Wings New wings

  Messages:
  479
  Likes Received:
  614
  Trophy Points:
  113
  வணக்கம் சகோ
  மழை என்றவுடன் நினைவுக்கு வருவது பள்ளி நாட்களில் சைக்கிள் பயனம் சகோ..ரொம்ப அழகான தருணம் பா....மாலை பொழுதில் அப்படியே மிதமான இடி மின்னலோடு பெய்யும் மழை சைக்கிளில் பைக்கு plastic cover போட்டு நம்ம அப்படியே மழையில் ஜாலியா நனைந்து கொண்டு வருவது....அருமையான தருணம் ..நா வர வழியில் பெரிச வீடுகள் எல்லாம் இருக்காது பா வயல்களும் அப்புறம் ரோட்டில் இரண்டு புறமும் புளிய மரம் தா இருக்கும்..அப்போ மழை நேரத்தில் வண்டிகள் அதிக வராது நான் சைக்கிள மெதுவாகத்தான் வருவேன்...
  வாயில் ஒரு கடலை மிட்டாய்........ நனைந்து கொண்டு வந்த எங்க அம்மா நல்ல தீட்டுவாங்க ....ஆனா அதுக்காக எல்லாம் பயந்து மழையில் நனைய முடியுமா......


  என்னோட தம்பியும் நானும் சேர்ந்து கப்பல் விடுவோம் .....

  அப்புறம் அம்மா செய்யிர சூடான பஜ்ஜி, கரபோறி இம்.......

  மழை வந்த ஒழுகும் வீடு அதுக்கு பாத்திரம் கைக்க நானும் என்னோட உடன்பிறப்பு போடற சண்டை.....

  இன்னும் பல .......


  (ஞாபகம் வருதே....பொக்கிஷமாக நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம் நியபகம் வருதே...)
   
   
 5. ammuyoga

  ammuyoga Pillars of LW LW WRITER

  Messages:
  2,523
  Likes Received:
  9,984
  Trophy Points:
  133
  வணக்கம் தோழமைகளே...

  மனம் திறக்க புதிதாய் ஓர் வாய்ப்பு... நன்றிகள் பல...

  அம்மு பேசுகிறேன்...

  மழை... பள்ளிப் பிராயத்தில் கொண்டாட்டமான நினைவுகள் தான். வளர்ந்ததெல்லாம் அப்பத்தாவிடம் தான். (அப்பாவின் அம்மா) முற்றம் வைத்த சுற்றுக்கட்டு வீடு எங்களுடையது.

  மழை வந்தால் போதும் முற்றத்தின் நான்கு பக்கமும் தாழ்வாரத்தில் கொட்டும் மழை நீரைப் பிடிக்க காசானி அண்டாக்கள் வெள்ளை துணி மூடி என்னோடு போட்டிபோடும்... அண்டாக்கள் நிறைந்ததும் குற்றால அருவிக் குளியல் போல குதூகலத்துடன் சில நிமிட குளியல் தாழ்வாரத்தின் கீழ்... மழை நின்று போயிருக்கும்...

  முதல்ல நான் குளிச்ச பிறகு தான் தண்ணி பிடிக்கணும். ஒவ்வொரு முறையும் அப்பத்தாவிடம் சண்டை... ஓட்டில் இருக்கும் குப்பை எல்லாம் உன் தலையில் தான்... அதுவும் சரிதான்! பேசாமல் ஒத்துக் கொண்ட நாட்கள்...

  வெய்யிலும் மழையும் ஒன்றாக வந்தால் காக்கைக்கும் நரிக்கும் கல்யாணம் உங்களில் எத்தனை பேர் சொல்லியிருக்கிறீகள்? அது ஒரு அனுபவம்.

  கொஞ்சம் வளர்ந்ததும் மழை என்றால் மிரட்சி... கொஞ்சம் கோபமும் கூட அப்பொழுது நிறைய ஆடுகள் வளர்த்தோம். மழை வந்துவிட்டால் எங்காவது ஒதுங்கி நின்றுவிடும். பாவம் வீட்டிற்கு வரமுடியாமல் மாட்டிக்கொள்ளுமே தவிப்பு தான் அதிகம் இருந்தது.

  இரவு நேரத்து மழை அன்றும், இன்றும், என்றுமே சுகம் தான்.
  இப்பொழுது கூட இங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. மழையும், கணினியும், நானும் தான்...


  அப்பத்தா... ஆடு... அண்டா... தாழ்வாரத்து நீர் எல்லாம் நினைவுகளில் மட்டும்.
   
   
Loading...

Share This Page