Sponsored

Birthday benefits

Discussion in 'General Discussion' started by arunthathi, Jan 9, 2018.


Sponsored
  1. arunthathi

    arunthathi Roots of LW Staff Member Administrator New wings

    Messages:
    220
    Likes Received:
    86
    Trophy Points:
    48
    Admin Post
    வாசகர்களே! பிறந்த தேதி தெரியாதவர்கள் தங்கள் பெயரிலுள்ள ஆங்கில முதல் எழுத்தின் அடிப்படையில் பலன்களை பார்க்கலாம்.

    1, 10, 19, 28 A, I, J, Q, Y
    ● திட்டமிட்டு செயல்பட்டு வளர்ச்சி காண்பீர்கள்.
    ● வருமானம் திருப்தி அளிக்கும். தேவை பூர்த்தியாகும்.
    ● சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.
    ● உடல்நிலை சீராகும். தன்னம்பிக்கை மேலோங்கும்.
    ● தொழிலதிபர்கள் அரசாங்க வகையில் ஆதாயம் பெறுவர்.
    ● வியாபாரிகள் புதிய கிளையை உருவாக்க முயற்சிப்பர்.
    ● பணியாளர்கள் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருப்பர்.
    ● அரசியல்வாதிகள் தொண்டர் வகையில் செலவு செய்வர்.
    ● விவசாயிகளுக்கு எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கும்.
    ● பெண்கள் உறவினர் மத்தியில் செல்வாக்கு காண்பர்.
    ● மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.

    2, 11, 20, 29 B, K, R
    ● துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
    ● வருமானம் உயர்ந்தாலும், செலவும் அதிகரிக்கும்.
    ● விரும்பியபடி சுபவிஷயத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
    ● பெற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவை.
    ● தொழிலதிபர்கள் அரசாங்க வகையில் ஆதாய பலன் பெறுவர்.
    ● வியாபாரிகள் விரிவாக்க முயற்சியில் கவனம் செலுத்துவர்.
    ● பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபட்டு மகிழ்வர்.
    ● அரசியல்வாதிகள் புதிய பதவியைப் பெற முயற்சிப்பர்.
    ● விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் வருமானம் காண்பர்.
    ● பெண்கள் தாய் வீட்டுப் பெருமையை நிலைநாட்டுவர்.
    ● மாணவர்கள் கண்ணும் கருத்துமாகப் படிப்பர்.

    3, 12, 21, 30 C, G, L, S
    ● புதிய முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள்.
    ● கையில் பெரும் பணம் புழங்கும். சேமிப்பு கூடும்.
    ● சுபவிஷயத்தில் தடை அனைத்தும் நீங்கும்.
    ● உடல்நிலை சிறப்பாக இருக்கும். மனதிலும் உற்சாகமே.
    ● தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் உயர்வு காண்பர்.
    ● வியாபாரிகள் புதிய உத்தியால் வியாபாரத்தை பெருக்குவர்.
    ● பணியாளர்கள் சக பணியாளர்களின் அன்பை பெறுவர்.
    ● அரசியல்வாதிகளுக்கு கடந்த கால உழைப்பின் பலன் கிடைக்கும்.
    ● விவசாயிகளுக்கு அதிர்ஷ்டமான காலகட்டமாக அமையும்.
    ● பெண்கள் உறவினர் மத்தியில் நற்பெயர் பெறுவர்.
    ● மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தி சாதிப்பர்.

    4, 13, 22, 31 D, M, T
    ● சமுகத்தில் வெற்றியாளராக திகழ்வீர்கள்.
    ● புதிய வழியில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
    ● குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.
    ● உடல் நலம் சிறப்புடன் அமைந்திருக்கும்.
    ● தொழிலதிபர்கள் தொழிலாளர் ஒத்துழைப்பால் முன்னேறுவர்.
    ● வியாபாரிகள் வாடிக்கையாளர் ஆதரவுடன் லாபம் குவிப்பர்.
    ● பணியாளர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப்பெறுவர்.
    ● அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவை பெற்று மகிழ்வர்.
    ● பெண்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
    ● மாணவர்கள் வளர்ச்சிக்கான சூழல் அமைய பெறுவர்.

    5, 14, 23, E, H, N, X
    ● உழைப்பின் மூலம் சாதிக்க முயல்வீர்கள்.
    ● எளிய முயற்சியிலும் நிறைய வருமானம் கிடைக்கும்.
    ● சுபவிஷயத்தில் இருந்த தடையனைத்தும் விலகும்.
    ● ஆரோக்கியம் சீர்படும். கடமையில் ஆர்வம் உண்டாகும்.
    ● தொழிலதிபர்கள் தொழில் ரீதியான பயணம் மேற்கொள்வர்.
    ● வியாபாரிகள் விரிவாக்கப்பணியில் அக்கறை கொள்வர்.
    ● பணியாளர்கள் விரும்பிய இடமாறுதல் கிடைக்கப் பெறுவர்.
    ● அரசியல்வாதிகள் தலைமையின் இணக்கத்திற்கு உரியவராவர்.
    ● விவசாயிகள் விவசாயத்தில் நவீன மாற்றங்களை செய்வர்.
    ● பெண்கள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வர்.
    ● மாணவர்கள் பெற்றோருக்கு பெருமை சேர்ப்பர்.

    6, 15, 24, U, V, W
    ● தொட்ட விஷயம் அனைத்தும் வெற்றியாக முடியும்.
    ● வருமானம் சேமிக்கும் விதத்தில் அதிகரிக்கும்.
    ● சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு உண்டாகும்.
    ● உடல்நிலை மேம்படும். மனோதிடம் அதிகரிக்கும்.
    ● தொழிலதிபர்கள் சக தொழிலதிபர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.
    ● வியாபாரிகள் வாடிக்கையாளர் நலன் குறித்து ஆலோசிப்பர்.
    ● பணியாளர்கள் சக ஊழியர்களின் உதவி கிடைக்க பெறுவர்.
    ● அரசியல்வாதிகள் தொண்டர் நலனில் அக்கறை கொள்வர்.
    ● விவசாயிகள் நிலப் பிரச்னையில் இருந்து விடுபடுவர்.
    ● பெண்கள் குடும்ப நலனை உயிர்மூச்சாக கொள்வர்.
    ● மாணவர்கள் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவர்.

    7, 16, 25, O, Z
    ● எதையும் பொறுமையுடன் கையாள்வது நல்லது.
    ● வருமானம் திருப்தி அளிக்கும். சேமிக்க முயல்வீர்கள்.
    ● சுபவிஷயத்தில் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
    ● உடல்நலன் குறித்த அக்கறை மேலோங்கும்.
    ● தொழிலதிபர்கள் ஏற்றுமதி மூலம் பன்மடங்கு லாபம் காண்பர்.
    ● வியாபாரிகள் நிர்வாக சீர்திருத்தத்தில் அக்கறை செலுத்துவர்.
    ● பணியாளர்கள் அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது நல்லது.
    ● அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேற பொறுமை தேவை.
    ● விவசாயிகள் விளைபொருளை அதிக விலைக்கு விற்க முயல்வர்.
    ● பெண்கள் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுப்பது நல்லது.
    ● மாணவர்கள் பெற்றோர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவர்.

    8, 17, 26, F, P
    ● பேச்சு சாதுர்யத்தால் எதையும் சாதிப்பீர்கள்.
    ● வருமானத்தை பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
    ● சுபவிஷயத்தில் மனம் போல நல்ல முடிவை எட்டுவீர்கள்.
    ● உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
    ● தொழிலதிபர்கள் பங்குதாரர் ஆலோசனையை ஏற்று நடப்பர்.
    ● வியாபாரிகள் புதிய வாடிக்கையாளரை கவர முயற்சிப்பர்.
    ● பணியாளர்கள் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்க பெறுவர்.
    ● அரசியல்வாதிகள் தொண்டர் நலன் குறித்து ஆலோசிப்பர்.
    ● விவசாயிகள் புதிதாக நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர்.
    ● பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பர்.
    ● மாணவர்கள் அக்கறையுடன் படித்து சிறப்பர்.

    9, 18, 27
    ● சமுகத்தில் அந்தஸ்து மிக்கவராக திகழ்வீர்கள்.
    ● உறவினர் வருகையால் செலவு அதிகரிக்கும்.
    ● சுபவிஷயத்தில் தடை ஏற்பட்டாலும் முடிவு நன்மையே.
    ● உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
    ● தொழிலதிபர்கள் ஆதாய நோக்கில் பயணம் மேற்கொள்வர்.
    ● வியாபாரிகள் சலுகைகளை அறிவித்து லாபத்தை உயர்த்துவர்.
    ● பணியாளர்கள் சக பணியாளர் மத்தியில் செல்வாக்கு பெறுவர்.
    ● அரசியல்வாதிகள் தலைமையின் கருத்துக்கு மதிப்பளிப்பர்.
    ● விவசாயிகள் நவீன கருவிகள் வாங்குவர்.
    ● பெண்கள் கணவரின் அன்புக்குரியவராவர்.
    ● மாணவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து படித்து முன்னேறுவர்.
     
     
Loading...

Share This Page