Shanu _ En Iravin .. Kanavu Nee..!!

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Lady's Wings, Jan 19, 2018.

 1. Lady's Wings

  Lady's Wings Roots of LW Staff Member Administrator

  Messages:
  1,604
  Likes Received:
  3,408
  Trophy Points:
  113
  Admin Post
  வணக்கம் அன்புத் தோழமைகளே..!

  அனைவரும் நலமா...?

  தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முது மொழி. அது நம் தளத்தை பொறுத்தவரை புது மொழியாய் உருவெடுத்து இருக்கிறது.

  நெற்கதிர்கள் செழித்து இருக்கும் வயலும், பௌர்ணமி ஒளி வீசும் வானமும், பால் போல நுரைத்து பொங்கும் நதியும் அழகென்றால், புதிய புதிய எழுத்தாளர்கள் அலங்கரிப்பதால் நம் தளமும் தமிழால் பேரழகாய் ஜொலிக்கிறது.

  ஆம் தோழமைகளே என் இனிய தோழியும், நம் தளத்தின் வாசகியுமான, ஷானு, ‘என் இரவின் கனவு நீ’ என்ற அழகிய காதல் கதையோடு நம்மை சந்திக்க வந்துள்ளார்.

  இரவின் கனவுகள் அழகானவை என்பதோடு, அடர்த்தியானவை. அவை நம் உள்மனதின் ஏக்கங்கள். இங்கே யாரின் கனவில், கருத்தில் யாரோ..? அறிய ஷானுவின் கதையை வாசிப்போம் தோழமைகளே..!

  வழக்கமான உங்கள் உற்சாக வரவேற்ப்பில் பொங்கல் பானையை போல பொங்கி வழியட்டும் கருத்துக்கள் திரி..!

  அடுத்த அழகான அறிவிப்பில் சந்திக்கும் வரை..

  உங்களிடமிருந்து விடை பெறுவது..
  மஞ்சுளா செந்தில்குமார்.


  Shanu _ En Iravin .. Kanavu Nee..!! Comments
   
   
 2. Shanu Shanthini

  Shanu Shanthini Pillars of LW LW WRITER

  Messages:
  394
  Likes Received:
  6,679
  Trophy Points:
  113
  ஹாய் மக்கா...
  எல்லோருக்கும் என் அன்பு வணக்கங்கள். என் பெயர் ஷானு. நானும் உங்களை மாதிரி ஒரு வாசகியாக இருந்து இப்போ முதன் முதலாக எழுத்துலகில் தடம் பதிக்கிறேன். என்னையும் ஒரு எழுத்தாளராக மாற்றிய மஞ்சு அக்கா க்கு ரொம்ப நன்றி. நன்றி என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே அவங்களுக்கு ஈடாகாது. இருந்தாலும் நன்றி அக்கா.
  கதைக்கான திரி துவங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிடுச்சு. சில பல காரணங்களால் என்னால் உடனே கதையை upload பண்ண முடியலை. அதற்காக முதலில் உங்க எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக்குறேன். மனிச்சிடுங்க மக்கா... இனிமேல் கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் சீக்கிரமா உங்களை தேடி வரும் அதற்கு நான் பொறுப்பு.
  சரி நம்ம கதைக்கு வருவோம்.
  "என் இரவின் கனவு நீ" இதுதான் என் முதல் கதை. தலைப்பை சில பேர் பாராட்டி என்னை ஊக்குவித்தீர்கள். அந்த பாராட்டுக்கு சொந்தகாரர் மஞ்சு அக்கா தான். ஏன்னா இது அவங்க select பண்ண தலைப்பு.
  கதையின் நாயகன் "அகில்"
  நாயகி "மித்ரா". ரெண்டு பேருமே டாம் அண்ட் செர்ரி. இவ்வளவு தான் இப்போதைக்கு கதையை பத்தி என்னால் சொல்ல முடியும்.
  இது என்னோட முதல் கதை பிழைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்; திருத்தி கொள்கிறேன். நன்றி...
   
   
 3. Shanu Shanthini

  Shanu Shanthini Pillars of LW LW WRITER

  Messages:
  394
  Likes Received:
  6,679
  Trophy Points:
  113
  அத்தியாயம் 1


  காண கிடைக்காதவை
  கனவுகளில்!...
  மனதின் ஏக்கங்கள்
  கனவுகளில்!...
  இதயத்தின் போர்வைக்குள்
  ஓளிந்திருப்பவற்றின்
  வெளிப்பாடு கனவு
  இரவில்...
  அவன்மேல் இருக்கும்
  கானல்களும்
  காதலாய் மாறும்

  கனவுகளில்... என் இரவின்... கனவு நீ!...​  “ஏய், மரியாதையா இதை சாப்பிடு இப்போ இதை சாப்பிட்டா உன்னை வாக்கிங் விடுறேன்”.

  “.....”

  “என்ன பாக்குற. நீ எவ்ளோ பாவமா லுக் விட்டாலும் உன்ன இன்னைக்கு விடுறதா இல்லை”.

  “......”
  “இன்னைக்கு காய்கறி தான் உன் சாப்பாடு ம்ம்ம்...” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும்போதே அங்கு வந்தார் அந்த வீட்டின் ஊட்டசத்து நிபுணர் அதாங்க சமையல்காரி வாணி. அவள் கையில் இருந்த தட்டில் எதையோ மூடி வைத்திருக்க அதை பார்த்துக்கொண்டே “இது என்ன” என்று புருவம் சுளித்து கேட்டாள்.

  “இவனுக்கு சாப்பாடும்மா” என்றாள் வாணி.

  “அதான் நான் இவனுக்கு சாப்பாடு வச்சிருக்கனே . இன்னைக்கு இவனுக்கு வெஜிட்டபிள் தான் சாப்பாடு அதை கொடுத்து தான் இன்னைக்கு இவனை நான் டார்ச்சர் பண்ண போறேன்” என்றாள்.

  அதைக்கேட்ட வாணியோ “அது வாயில்லா ஜீவன், காய்கறி எல்லாம் எப்படி சாப்பிடுவான்? அதுவும் பச்சையா.. பாவம்” என்று கூறிய வாணியின் கண்களோ தரையில் தட்டில் இருந்த பச்சை வெண்டைக்காய் மேல் நிலைத்திருந்தது

  “யாரு இவனா வாயில்லா ஜீவன் பாருங்க உங்க கைல இருக்கிற சாப்பாடு தட்ட எப்படி பாக்கிறான்னு விட்டா நாலே வாயில எல்லாத்தையும் முழுங்கிடுவான்” என்று அவள் அவனை பற்றி சொல்லும்போதே எங்கிருந்தோ அவளை கூப்பிட்டது அந்த குரல்.

  “மித்ரா...”

  “இதோ வரேன் அம்மா” என்று கூப்பிட்ட குரலுக்கு பதிலளித்துக் கொண்டே சென்றவள் ஒரு நொடி நின்று திரும்பி அந்த கோரைபல் காரனை பார்த்து மெலிதாக சிரித்து வாணியிடம் “அக்கா விட்டா ஐயோ கொடுமைன்னு சத்தம் போட்டு ஊரை கூட்டிடுவான், பாவம்; சீக்கிரம் அந்த பெடிக்கரிய கொடுங்க” என்று கூறி வீட்டினுள் நுழைந்தாள். அந்த கருப்பும் பழுப்பும் கலந்த ஜெர்மன் டாபர்மேன்; மோட்டி ‘ காய்கறி சாப்பிட நான் என்ன ஆடு மாடா , நல்ல வேளை இதோட இன்னைக்கு நம்ம இவகிட்ட இருந்து தப்பிச்சோம்’ என எண்ணி அதன் உணவை கொரிக்க துவங்கியது.

  மித்ரா அந்த வீட்டின் வலது பக்க அறையில் செல்வதற்கு முன் அவளை பற்றி சில..... பால், வெண்ணெய் இரண்டையும் கலந்த பளீர் நிறம், உடுக்கை இடுப்பு அடர்த்தியான கரு கருவென்ற கூந்தல் அப்படி எல்லாம் சத்தியமா இல்லைங்க . மித்ரா நம்மில் ஒருத்தி நம்மைப்போல் ஒருத்தி தென்னாட்டு தமிழச்சி. மாநிறம், வட்ட முகம் . தமன்னா மாதிரி ஸ்ட்ரக்ச்சர் இல்லேன்னா கூட நம்ம ஜோதிகா ஜோதிகா மாதிரி திம்சுகட்ட . அரையடி கூந்தல். அவள் பேசும்போது கூடவே பேசும் அவளது கண்கள் சன்சைன் சிரிப்பும் அவளோட பெரிய ப்ளஸ். எப்பவுமே ரிலாக்ஸ் ப்ளீஸ் மாதிரி எந்த ஒரு சூழ்நிலையையும் டென்ஷன் இல்லாம கையாளறது அவளோட பலம் பலவீனம். எப்போதும் ஜாலியா இருக்கணும்,. ஆக அவ இருக்குற இடத்துல டென்ஷன் பிபி க்கு இடமே இல்லை (ஒருத்தனை தவிர). ஷப்பா... போதும் நாமும் அவக்கூடவே அந்த அறைக்குள் சென்று என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

  அமிர்தம் அம்மாள் சந்தன நிறப் புடவையில் நெற்றியில் சந்தனகீற்றுடன் தன் முடியை கொண்டை போட்டு எங்கோ வெளியில் செல்ல ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார். அவரது தோற்றமே அவர் குடும்ப அந்தஸ்தை பறைசாற்றியது.

  உள்ளே நுழைந்த மித்ரா அவரை பார்த்து “எங்கே போறீங்க” என்ற கேள்வியுடனே எதிர்நோக்கினாள்

  அமிர்தம் அம்மாள், “இன்னைக்கு நம்ம எஸ்டேட்ல வேலை பாக்குற தங்கப்பன் பொண்ணுக்கு கல்யாணம் அதான் கிளம்புறேன் நீ போய் மேலே இருக்குற லாக்கரில் இருந்து ஒரு ஐம்பதாயிரம் பணம் எடுத்திட்டு வா” என்று அவளை அனுப்பினார்.

  சாவியை எடுத்துக்கொண்டு மேல்தள அறைக்கு சென்ற மித்ரா லாக்கரை திறந்து பணமும் ஒரு முத்து மாலை மற்றும் இரண்டு வெள்ளை கல் பதித்த கை காப்பும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கும்போது அங்கு எதிர்புறம் இருந்த மூடப்பட்ட அறையை முறைத்துக்கொண்டே இறங்கினாள்.

  அமிர்தம் அம்மாள் அறைக்குள் நுழைந்தவள் அவள் கையில் இருந்ததை அவள் முன் நீட்ட “என்ன இது நான் உன்கிட்ட பணம் மட்டும் தானே எடுத்து வர சொன்னேன் எனக்கு இது எல்லாம் போடுற வயசா” என்று அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டே கூறினார்.


  “அம்மா வயசுக்கு வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை. நம்மகிட்ட இருக்குற வசதியை மத்தவங்களுக்கு காட்ட வேண்டாம். எம்.கே என்கிற பெயருக்காக அதோட கௌரவதுக்காக கண்டிப்பா போடணும். அவ்ளோ பெரிய ரப்பர் எஸ்டேட் இரண்டு நகை கடையோட முதலாளி இப்படி சிம்பிளா எல்லாம் போக கூடாது” என்று கூறிக்கொண்டே அந்த நகையை அணிவித்து அவரை மேலும் மெருகேற்றினாள் மித்ரா.

  “ஆமா!... வெளியில மோட்டி கூட சத்தம் போட்டுட்டு இருந்தியே ஏன்” என்று வினவினார் அமிர்தம்.

  “அது ஒன்னும் இல்லை நான் அவனுக்கு சாப்பிட பாசமா வெஜிட்டபிள் சாலட் கொடுத்தா என்னை கொலைவெறியா பாக்குது அதான் சும்மா”.... என்று இழுத்தாள்.

  “யாரு நீ... அவனுக்கு பாசமா கொடுத்த ;உனக்கு சாப்பிட பிடிக்கலனா அவனுக்கு கொடுப்பியா? கொஞ்ச நாளா அவனை நீ ரொம்ப படுத்தர...” என்று சிறு செல்ல கண்டிப்புடனே கேட்டார்.

  “ஹி... ஹீ... கிடைக்கிற வாய்ப்பை நல்லா பயன்படுத்தனும் அம்மா அத படுத்தி எடுக்க ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு விடுவானா” என்று கெத்து காட்டினாள்.

  “என்னவோ போ நீ இந்த மூணு நாளா அவனை படுத்துர கொடுமைக்கு அளவு இல்லை. நாளைக்கு உன் கதி என்னவோ” என்று கேள்வியுடனே முடித்தார் அமிர்தம் அம்மா.

  ‘ஐயோ!!!! நாளைக்கு அவன் வந்திடுவானே... இதை மறந்திட்டேனே’ என்று யோசித்தவளை கலைத்தார் அமிர்தம் அம்மாள்.

  “என்ன நாளைய சமாளிக்குற யோசனையா?” என்று கேட்டவரை பார்த்து சமாளிப்பதுபோல்,
  “இல்லை அவன் வந்தா எனக்கு என்ன. இவ்ளோ நாள் எப்படி இருந்தனோ அப்படி தான் இருக்க போறேன். பாவம் நாளைல இருந்து அவன் கதி என்ன ஆகப்போகுதோ அப்படின்னு யோசிச்சேன்” என்று தனக்கு இல்லாத மீசையிலும் மண் ஒட்டாமல் பேசினாள்.
  “சரி சரி நாளைக்கு எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ” என்று அவளை போலியாக எச்சரித்தார் அமிர்தம் அம்மா.

  “ஆமா அவன் பெரிய கவுண்டமணி நான் செந்தில் அவனை பார்த்து பயப்பட” என்க,
  “என்னவோ போ உங்க ரெண்டு பேரால மத்தவங்க தலை தான் உருளுது சின்ன சின்ன விஷயத்துக்கும் எலியும் பூனையுமா சண்டை போடுறீங்க” என்று கூறிக்கொண்டே வெளியேறினார் அமிர்தம் அம்மா.

  அவர் பின்னே வந்த மித்ரா அவரை அழைக்க அவளை திரும்பி பார்த்து “வரும்போது கண்டிப்பா உனக்கு கருப்பட்டி எள் வாங்கிட்டு வரேன்” என்று அவள் கேட்க்கும் முன்னே பதில் கூறினார்.

  “ ம்ம்ம்... அவ்ளோதான கூடவே சிப்ஸ், பொறி உருண்டை, பிளாக் பாரஸ்ட் கேக்..... எல்லாம் ஸ்டார் பேக்கரில இருந்து மட்டும் வாங்கிட்டு வாங்க” என்று அவர் லிஸ்டை பெரிதாக்கினாள்.

  “இது எல்லாம் சாப்பிடுற மாதிரி வீட்டுல சமைக்குற சாப்பாட்டையும் கொஞ்சம் சாப்பிடலாமே” என்று செல்லமாக அவளை கடிந்துகொண்டார்.

  “நான் எங்கம்மா வேண்டாம்னு சொன்னேன் இந்த வாணியக்கா சமையலை ரசிச்சு சாப்பிட முடியல உப்பு இருந்தா காரம் இல்லை, காரம் இருந்தா சுகர், இல்லை மொத்ததுல சப்பு கொட்டி சாப்பிட முடியலை” என்று அலுப்பாக புகார் வாசித்தாள்.

  அதுவரை அவளையே பார்த்திருந்த அமிர்தத்தின் பார்வை அவளின் பின் சென்றது. அவரை தொடர்ந்து அவளும் பின்னே திரும்பி பார்க்க அங்கே அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்தபடி சிலையென நின்றாள் வாணி அவளது மனதில் ‘பயபுள்ள நேற்றுதான் நான் செஞ்சு கொடுத்த சிறு பயறு உருண்டையை மொக்கு மொக்குன்னு சாப்பிட்ட பத்தாதத்துக்கு என்னோடதும் சேர்த்து சாப்பிட்டா இப்போ பேசுரத பாரு,’ என்று அவளை பார்த்தபடி நின்றாள்.

  ‘ஐயோ! இப்போ வாணியக்காவை சமாளிக்கணுமே’ என்று மித்ரா முழித்துக்கொண்டு நிற்க
  அவளை பார்த்து மெலிதாக சிரித்துக்கொண்டே அமிர்தம் அம்மா வாணியிடம் , “வாணி நாளைக்கு நீ பூரி சிக்கன் செய் மித்ராக்கு மட்டும் கொடுக்க வேண்டாம் அவளுக்கு அவளே சமைக்கட்டும்” என்று போலியாக கட்டளையிட்டார்.

  தனக்கு பிடித்த பூரி சிக்கன் தராமல் தன்னை சமைக்க வேறு சொல்கிறார்களே என்று வெகுண்டு எழுந்த மித்ரா,
  “இங்க பாருங்க வாணியக்கா இவங்க பேச்சை கேட்டு எனக்கு சாப்பாடு தரலன்ன நான் ஒன்னும் சமைச்சு சாப்பிட மாட்டேன்; நீங்க சமைக்குறத திருடி சாப்பிடுவேன் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை” என்று அசால்ட்டாக கூறவும்
  “அம்மாடி! அப்புறம் எங்க சாப்பாடும் சேர்ந்து காலி ஆனாலும் ஆகிடும். கண்டிப்பா உனக்கு நாளைக்கு நான் பூரி தரேன்” என்று வாக்குறுதி அளித்தாள் வாணி.

  “அது அந்த பயம் இருக்கட்டும் என் சாப்பாடு என் உரிமை” என்று உரிமை குரல் எழுப்பியவளை கண்டு சிரித்தபடியே விடைபெற்று கிளம்பினார் அமிர்தம் அம்மாள்.
  ........
   
   
 4. Shanu Shanthini

  Shanu Shanthini Pillars of LW LW WRITER

  Messages:
  394
  Likes Received:
  6,679
  Trophy Points:
  113
  வீட்டின் பின்புறம் சென்ற மித்ரா அங்கு இருந்த வாணியின் பிள்ளைகள் ரித்திஷா மற்றும் தருண் உடன் விளையாட்டு என்ற பெயரில் அரட்டை அடிக்க துவங்கினாள்.

  வாணி, ஒரு வருடத்திற்கு முன் கணவனை இழந்த பெண். அவள் கணவன் முத்து எம்.கே எஸ்டேட்டில் ரப்பர் மரத்தில் பால் அறுக்கும் கூலி தொழிலாளி. சிறு வயதிலேயே குடிக்கு அடிமையானவன். அதன் காரணமாகவே கடைசியில் உள் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து இறுதியில் தன் குடும்பத்தை நிர்கதியாக்கி சென்றான். அனாதரவாய் நின்ற வாணியையும் அவள் குழந்தைகளையும் அமிர்தம் அம்மாள் அரவணைத்தார்.

  அவர்கள் தங்குவதற்கு தன் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் ஒரு சிறிய வீடும் கொடுத்து அத்தோடு அவள் பிள்ளைகளின் படிப்பு செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார். வாணியின் மூத்த மகள் மூன்றாம் வகுப்பும் இளைய மகன் எல்.கே.ஜி உம் படிக்கின்றனர். அமிர்தம் அவர்களை ஆங்கில வழி கல்வி பயிலும் பள்ளியில் சேர்க்கவே படிப்பில் சற்று திணறிய அவர்களை படிக்க வைக்கும் பொறுப்பை மித்ரா ஏற்று கொண்டாள்.

  சிறுவர்களுடன் சேர்ந்து சிறுது நேரம் ஓடி குதித்து என விளையாடி முடித்து இறுதியாக அவர்களுக்கு டியூஷன் எடுக்க அமர்ந்தாள் மித்ரா. சிறிது நேரத்தில் மோட்டி அதன் இருப்பிடத்தில் இருந்து குறைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து மோட்டி குறைக்கவும் பிள்ளைகளின் கவனம் சிதறுவதை உணர்ந்த மித்ரா எரிச்சலுடன் மோட்டியை நோக்கி சென்றாள்.

  “ஏய். மோட்டி இப்போ ஏன் நாய் மாதிரி குறைக்குற” ( நல்லா பாரும்மா அது நாய் தான் ). “அதான் நாளைக்கு உன் முதலாளி வரானே, அவன் கூட சேர்ந்து கத்து அவன் உனக்கு நல்ல கம்பெனி தருவான் என்று அவள் சப்தமிட்டத்தில் மோட்டி அமைதியானதும் அவள் ‘மித்ரா இந்த மூணு நாள்ல நீ இவனை சிறப்பா கவனிச்சு டார்ச்சர் பண்ணத்துல உனக்கு கொஞ்சம் அடங்கிட்டான்’ என்று தன்னை மெச்சிக்கொண்டவள் அதனிடம் “இப்படி அமைதியா இரு இல்லை உன் வாயில பெவிக்கிவிக் வச்சு லிப்ஸ்டிக் போட்டிடுவேன்” என்று கூறவும்,

  “எங்க முடிஞ்சா பண்ணு பாக்கலாம்” என்று அவள் பின்னாலிருந்து அந்த அழுத்தமான குரல் கேட்கவும் அதிர்ந்து நின்றாள்.

  ஆஹா... அவனேதான் அகில்... அகில் குமார்... இந்த வீட்டின் இளவரசன், அமிர்தத்தின் ஒரேயொரு தவப்புதல்வன்.

  ‘அடப்பாவி பிரண்ட்ஸ் கூட ட்ரெக்கிங்க்கு போனவன் இப்படி திடீர்னு வந்து நிக்குறான் நாளைக்கு தானே வருவான்னு சொன்னாங்க. ஒருவேளை முக்கால்வாசி மலை ஏறியே டையர்ட் ஆகிட்டான் போல பாவம் இவனோட பார்க் ஹோட்டல் சாப்பாடு இவனை சொங்கியா மாத்திடுச்சு’ என்று எண்ணும்போதே அவள் புறம் நகர்ந்து கொண்டிருந்தான் அகில்.

  மஞ்சள் கலந்த வெள்ளை நிறம் கூர் நாசி அலை அலையென முடி முன்னுச்சியில் புரண்டிருக்க அதை கோதி விட்டுக்கொண்டே நெடுநெடுவென வளர்ந்த தேக்கு மர உடற்கட்டுடன் அவள் அருகில் வந்து நின்றவனை சற்று மிரட்சியுடன் தான் பார்த்தாள் மித்ரா பின்பு சுதாரித்தவளாக ‘அட மித்ரா இவனுக்கு எல்லாம் நீ இவ்ளோ ஷாக் ஆக வேண்டிய அவசியம் இல்லை இப்போதைக்கு இவன் முறைப்புல இருந்து எஸ்கேப் ஆகுற வழிய பாரு.... பாக்க சகிக்கல’ என்று மனதில் அவன் முறைப்புக்கு கவுண்டர் கொடுத்தாள்

  அவன் அவளை உறுத்துவிழித்துக் கொண்டே தன் கைபேசி திரையை அவள் பார்வைக்கு நீட்டினான் அதில் அவள் தூங்கி கொண்டிருக்கும் மோட்டியின் மேல் தண்ணீர் குழாய் மூலம் தண்ணீர் அடித்து விரட்டும் காட்சி தெள்ள தெளிவாக ஓடியது. ஒரு நிமிடம் அதை அதிர்ச்சியாக நோக்கியவள் பின் அவனை நோக்கி ஓர் அலட்சிய பார்வை வீசினாள் அதில் கடுப்பானவன்,

  “நீ என்ன மோட்டியோட ஆயாவா அவனை டைமுக்கு எழுப்புறது சாப்பாடு கொடுக்கிறது தான் உன் வேலையா” என்று கூறவும் அவளின் அலட்சிய பார்வை தீயாக மாறியது.

  “ஓ.. இந்த உலகத்திலே நாய்க்கு செக்யூரிட்டி கேமரா வச்ச ஒரே ஒரு உத்தமன் நீ தான். அது உனக்கு காவலா இல்லை நீ அவனுக்கு காவலா, வர வர உங்க ரெண்டு பேருக்கும் வித்தியாசமே தெரியல” என்று காமிராவில் தன் குட்டு வெளிப்பட்டதை மறக்கடிக்க முயன்றாள்.

  “ஹி இஸ் மை பிரென்ட் அண்ட் மை பாடிகார்டு அவனை சேஃபா வச்சிருக்குறது என் பொறுப்பு” என்றபோது இடையிட்டு ‘வச்சுக்க வச்சுக்க நல்லா வச்சுக்க’ என்று தன் மனதில் எண்ண அவனோ அதை அறியாமல் தொடர்ந்து, “உன்னை மாதிரி ஒரு பேய் கிட்ட இருந்து அவனை காப்பாத்த தான் கேமரா” என்று நக்கலாக கூறினான்.

  “பார்ரா... நீ என்னை பேய்ன்னு சொன்ன நான் கடுப்பாகுவேன்னு நெனச்சியா. ஹையோ... ஹையோ... இப்போ ஒரு பைத்தியம் என்னை பார்த்து பைத்தியம்னு சொன்னா நான் ஏன் பீல் பண்ண போறேன் சொல்லு எனக்கு நீ சொன்னதுல கோவமே வரலை” என்று ரீவீட் அடித்தாள் அந்த வாயாடி.

  அகில் ஒன்றும் பேசாமல் அமைதியாக தன் கைகளை கட்டிக்கொண்டு அவளை உறுத்து விளித்துக்கொண்டு நின்றான்.

  ‘இவன் இப்படி அமைதியா இருந்தா சரியில்லையே நாம நைசா எஸ்கேப் ஆகலாம்’ என்று எண்ணி அவனை கடந்து சென்றாள் மித்ரா.

  “நில்லு” என்ற அவனது கம்பீர குரல் அவளை தேக்கியது. நின்று அவனை திரும்பி பார்த்தாள்.

  “ஒரு தடவை நான் அவனை ட்ரெக்கிங் கொண்டு போகாம இருந்தப்போ நீ உன் வேலைய காட்டுற. இதுக்கு அப்புறம் நீ அவன் பக்கத்துல நெருங்காத உன்னை நான் வார்ன் பண்றேன் தேவை இல்லாமல் என்கிட்ட வம்பு வளர்க்காத” என்று எச்சரித்தான்.


  “ஆமா உன்கிட்ட வம்பு வளக்குறது தான் என் பொழப்பு பாரு சும்மா என்னை மொறைக்கமா உன் அல்லக்கைய போய் கவனி கொஞ்சம் தண்ணிய அவன் மேல வீற்றினத்துக்கு இவ்ளோ கோவப்படுற நீயும் அவனும் சேர்ந்து என்னை எவ்ளோ நாள் இந்த வீட்டை சுத்தி சுத்தி ஓட விட்டிருப்பீங்க அதுக்கு எல்லாம் நான் பதிலடி தர வேண்டாமா” என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும்போதே அவள் இரு கைகளையும் தன் கைகளால் எட்டி பிடித்த அவன் அவளை தர தரவென்று இழுத்து சென்றான்.

  “டேய்! விடுறா என்னை, என் கை வலிக்கிது விடுடா எருமை” என்று கூறியபடியே தன் கைகளை அவனிடம் இருந்து விடுவிக்க போராடி கொண்டு இருந்தாள்.

  அகில், “யாரு நான் எருமையா டெய்லி ஜிம்முக்கு போய் சிக்ஸ் பேக்கோட இருக்குற நான் எருமைனா வீட்டுல சாப்பிடுறதையே வேலையா வச்சிருக்குற நீ யாரு... உன் வாய்க்கு தாண்டி முதல்ல லிப்ஸ்டிக் போடணும் அதுக்கு முன்னாடி உன்னை தூக்கி மோட்டி வீட்டுல போடுறேன் வீட்டை சுத்தி ஓடுறது உனக்கு கஷ்டமா இருக்கு இல்லையா, அதுக்கு தான்” என்று அவள் கத்த கத்த அவளை இழுத்துக்கொண்டு செல்லும்போது மோட்டியும் இவளை பார்த்து உற்சாகமாக குறைத்தது. அதை பார்த்த மித்ரா


  ‘ஐயோ! இவனுங்க உன்னை இன்னைக்கு கந்தல் ஆக்காம விட மாட்டாங்க போல இருக்கே! எஸ்கேப் ஆகுற வழிய பாரு’ என்று அவனிடம்
  “டேய் பொம்பளை பிள்ளை கைய பிடிச்சு இழுக்குற உனக்கு அசிங்கமா இல்லை” என்றாள் அவன் கவனத்தை சிதைக்க.

  வாய்விட்டு சிரித்த அகில், “ஹே.. ஹ..ஹா... நான் கைய பிடிச்சி இழுக்காத பொண்ணுங்கள்ளா... உனக்கே அது தெரியுமே. ஆனா உன்னை நான் பொண்ணுங்க லிஸ்ட்ல சேக்கலடி; பஜாரி” என்று கூறி அவளை கடுப்பேற்றினான்.

  இதற்கு மேல் பொருக்க முடியாது என்பது போல் அவள் அவன் காதின் புறம் அவள் முகத்தை கொண்டு வந்து “ஆ......” என்று அலறினாள். அவளது அலறலில் கண்களை இறுக்கமாக மூடிய அவனிடம் இருந்து தன் கைகளை விலக்க முயன்றாள் அப்போதும் அது முடியாமல் போகவே அவளின் பொருமைக்கு குட் பை சொல்லி அவனது கையை தன் பற்களால் நறுக்கென்று கடித்து வைத்தாள்.

  அவன் சற்றும் எதிர்பாராத வகையில் அவள் அவனை தாக்கவும் அவளது கைகளை விட்டான் அகில். வலித்த தன் இடது கையை தடவிக் கொண்டே ஓடும் மித்ராவை வெறித்துப் பார்த்தான்.

  வீட்டினுள் ஓடி வந்த மித்ரா அங்கு சோபாவில் அமர்ந்து இருந்த தெய்வாவை பார்த்து சடன் பிரேக் அடித்து நின்றாள். அவரோ அவளை தன் இரு விழியால் பொசுக்கி விடுவதுபோல் முறைத்துக்கொண்டு நின்றார்.

  தொடரும்...
   
  Last edited: Jan 24, 2018
  Bhuvanaa Shankar, crypt, SKN and 70 others like this.
   
 5. Shanu Shanthini

  Shanu Shanthini Pillars of LW LW WRITER

  Messages:
  394
  Likes Received:
  6,679
  Trophy Points:
  113
  ஹாய் மக்கா, "என் இரவின் கனவு நீ" கதையின் முதல் அத்தியாயம் போட்டாச்சு. படிச்சு உங்களின் மேலான கருத்துக்களை கமெண்ட் திரியில் போடுங்க. நாளைக்கே அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்கிறேன்...
   
   
Loading...

Share This Page