எனை ஈர்த்தவை ...!!!

Discussion in 'Poems' started by Krishna..., Feb 19, 2018.

 1. Krishna...

  Krishna... Wings New wings LW WRITER

  Messages:
  39
  Likes Received:
  72
  Trophy Points:
  38
  எனை ஈர்த்தவை ...!!!
  அரச மரத்தடி விநாயகர் ...
  ஆலம் விழுது ஊஞ்சல் ...
  துயில் பயின்ற அன்னையின் மடி ...
  கூந்தல் வருடிய உறக்கம் ...
  எனைத் தீண்டிச் சிலிர்க்கும் மழைத்துளி...
  குழலோசை ...
  கூவும் குயிலோசை ...
  வீணை மீட்டிய பதுமை ...
  மரத்தடி நிழல் ...
  தோகை விரித்தாடும் மயில் ...
  எதிர்பார்ப்பில்லா நட்பு ...
  நேர்க்கொண்ட பார்வை ...
  பௌர்ணமி நிலவு ...
  மின்மினிப்பூச்சி ...
  வைகறைப் பொழுது ...
  ஒன்றோடொன்று கதைபேசும்
  கண்ணாடி வளையல் ...
  உச்சி வகிடு குங்குமம் ...
  எந்தன் பாதம்
  வருடிச் செல்லும் அலைக்கடல் ...
  சாரை சாரையாய் ஊரும் எறும்புக்கூட்டம்...
  பெண்மையின் நாணம் ...
  காக்கையின் குளக்கரை குளியல் ...
  காதோடு சொல்லும் ரகசியம் ...
  மழைத்துளி முத்தமிட்ட
  மண்துகளின் வாசம் ...
  புல்லின் நுனியில் பனித்துளி ...
  ஜன்னலோர பயணம் ...
  கைவிரல்களுக்கிடையே
  முகம் மறைத்த வெட்கம் ...
  மனதோடு கதைபேசும் மௌனம் ...
  மனம் விரும்பும் நேரம் தனிமை ...
  என் தனிமையை ஆளும் எண்ணங்கள் ...
  இனிய நினைவுகளால்
  இதழோரம் ஒட்டிக்கொள்ளும் புன்னகை...
  வானை வளைத்த வானவில் ...
  நிறைமாத பெண்மையின் பூரிப்பு ...
  புத்தகம் மூடிய மயிலிறகு ...
  நெஞ்சில் பொதிந்த அழுகை ...
  மருதாணியில் சிவந்த கைகள் ...
  எனை சூழ்ந்த நட்பு வட்டம் ...
  மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
  புத்தகம் வாசிப்பது ...
  மெல்லிய மனம் வருடும் இசை ...
  மனம் நிறைந்த பாராட்டுக்கள் ...
  தவறிழைத்த தருணம்
  நேர்மையான மன்னிப்பு ...
  நிலவை சிறைக் கொண்ட தடாகம் ...
  நெற்றியில் பொதிந்த முத்தம் ...
  எப்போதும் இதழோரம் உறைந்த புன்னகை ...
  பேசாமல் பேசும் கண்கள் ...
  இமை மூடப் பார்வை ...
  வாய்மூடாப்பேச்சு ...
  அமைதியான சூழல் ...
  மழலையின் பரிபாசனை ...
  தளிர் நடைப்பாதம் ...
  சிரிக்கும் புத்த சிலை ...
  கட்டாயமாய் சுழலும் கடிகார முட்கள் ...
  பஞ்சுமிட்டாய் ...
  என் மூச்சுக்காற்றை சிறைக்கொண்ட பலூன்கள் ...
  திருட்டு மாங்காய் ...
  முகம் காட்டும் கண்ணாடி ...
  முதல் காதல் கடிதம் ...
  தொலைதூரக் கார் பயணம் ...
  அம்மாவின் கைமணத்தில்
  பிடி உருண்டைச்சோறு ...
  ஒருவரின் உணர்வுகளுக்கு கொடுக்கும் மதிப்பு ...
  சாலைக் கடக்கையில்
  சுட்டு விரல் துணை ...
  மூச்சு முட்ட முட்ட அனுபவிக்கும் அன்பு ...
  தாவணிப் பெண்கள் ...
  நிலாச்சோறு ...
  கூட்டாஞ்சோறு ...
  கண்ணீராய் கரையும் சோகம் ...
  கண்ணீரில் நனையும் ஆனந்தம் ...
  காட்டு மல்லி பூச்சரம் ...
  இடையோடு தழுவிய மேகலை ...
  என் குழல் கோதும் கைவிரல்கள் ...
  நான் உந்தன் தோள் சாயும் தருணம் ...
  இழுத்து அணைத்த முத்தம் ...
  மூச்சு முட்ட முத்தமிட்டு
  மூச்சுக்கு ஏங்கி உறையும் நொடிகள் ...
  நீ என்னுள் நடத்திய தடயவியல் சோதனை ...
  உனக்கு மட்டும்
  வெட்கங் களைந்த
  என் பெண்மையின்
  கற்பியல் பரிணாமம்...
  பத்து விரல்கள் கோர்த்துக்கொண்ட
  ஒற்றையடிப் பாதை நடைப்பயணம் ...
  உன்னோடு தோள் உரசிக்கொண்ட
  ஒரு குடை நிழல் ...
  என் மூச்சோடு
  காற்றின் கைகளில் மிதந்தாடும்
  சோப்பு நுரைக் குமிழிகள் ...
  இரட்டைக் குழந்தை ...
  என்னை நீ களவாடிய பொழுதுகள் ...
  உன்னைக் கண்டால் மட்டும் படபடக்கும் இதயம் ...
  படகு வீடு ...
  உன்னோடு ஒரு தனிமை ஏகாந்தம் ...
  நீ எந்தன் மடியில் துயிலும் தருணம் ...
  உள்ளங்கையின் வெப்பம் ...
  நாக்கின் நுனி துருத்தல் ...
  செல்லச்சிணுங்கல் ...
  உதட்டுச் சுளிவு ...
  நெற்றி முட்டல் ...
  மூக்கின் நுனி உரசல் ...
  வில்லாய் வளைந்து ஏறி இறங்கி
  என்னை ஏனென்று கேட்கும் புருவம் ...
  காதலாய் மின்னிடும் கண்கள் ...
  ஓர விழிப்பார்வை ...
  கண்டுக்கொள்வேன் என தெரிந்தே
  கூறும் பொய்கள் ...
  முத்தமிட நேர்கையில் மீசையின் குறுகுறுப்பு ...
  எதிர்பார்க்கும் நேரத்தில்
  எதிர்பாராமல் உனது வருகை ...
  நீ மட்டுமே அழைக்கும் செல்லப்பெயர் ...
  இறுகக் கட்டிக்கொண்டத்
  தலையணை உறக்கம் ...
  மொட்டைமாடி நிலாவெளிச்சம் ...
  பசித்து ருசித்த பழையசாதம் ...
  எதையும் கடந்து செல்லும் நேர்மறை எண்ணம் ...
  விடை தெரியா நேரத்தில்
  விடை அறிந்து பழகும் வாழ்க்கை ...
  என் தேடல், தடமறிந்து
  கண்ட முதல் வெற்றி ...
  முதல் பாராட்டை பெரும்
  படைப்பாளியின் களிப்பு ...
  என் தேடலின்
  முட்பாதையில் கிடைத்த
  “நான்” என்கின்ற சுயம் ...

  _ கவியுடன்,
  கிருஷ்ணா...​
   
   
 2. Manisha Rajendran

  Manisha Rajendran Pillars of LW LW WRITER

  Messages:
  108
  Likes Received:
  160
  Trophy Points:
  63
   
 3. Archanaraga29

  Archanaraga29 Wings New wings

  Messages:
  94
  Likes Received:
  160
  Trophy Points:
  53
   
 4. K.Ramya

  K.Ramya Bronze Wings New wings

  Messages:
  572
  Likes Received:
  967
  Trophy Points:
  113
   
 5. Krishna...

  Krishna... Wings New wings LW WRITER

  Messages:
  39
  Likes Received:
  72
  Trophy Points:
  38
  Thanks da...☺️
   
   
Loading...

Share This Page