டூர் போகும்போது இதெல்லாம் கவனிங்க

Discussion in 'General Discussion' started by arunthathi, Apr 7, 2018.

 1. arunthathi

  arunthathi Roots of LW Staff Member Administrator New wings

  Messages:
  220
  Likes Received:
  89
  Trophy Points:
  48
  Admin Post
  [​IMG]
  கோடை விடுமுறையை குடும்பத்துடன் சென்று கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. இப்படிச் செல்லும் சுற்றுலா சில நேரங்களில் பல அசௌகரியங்களையும் ஏற்படுத்திவிடுகிறது. இன்பச் சுற்றுலாவை மனநிறைவாகவும், உடலளவிலும் அனுபவிக்க என்னென்ன முன்னேற்பாடு களோடு செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பொதுநல மருத்துவர் சங்கீதா பதிலளிக்கிறார். ‘‘வெளியிடங்களில் உள்ள அசுத்த உணவு, நீர், பதற்றம், பயணச்சோர்வு ஆகியவை வயிற்றுப் போக்கை உண்டாக்கும். அதனால் பாதுகாப்பான உணவு, நீர் ஆகியவைகளையே உண்ண வேண்டும்.

  சாப்பிடும் முன் கைகளை மிகச் சுத்தமாக கழுவ வேண்டும். குறிப்பாக, வெளியிடங்களில் விற்கப்படும் வெட்டி வைத்த பழங்கள், சாலட்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதில் முழு பழங்களை வாங்கி கழுவிய பிறகு, ஃப்ரெஷ்ஷாக நாமே வெட்டி சாப்பிடலாம். முடிந்தவரை கொதிக்கவைத்த தண்ணீரை அருந்தவும். நீர் குறைபாடுக்கான அறிகுறிகள், வறண்ட நாக்கு, காய்ந்த சருமம், கண் சுருக்கம் போன்றவை தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம். ஸ்கூஃபா டைவிங் போன்ற தண்ணீர் சம்பந்தப்பட்ட பொழுதுபோக்கு மேற்கொள்வதாக இருந்தால் காது, மூக்கு, தொண்டை மருத்துவரிடம் முன்னரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

  தங்குமிடம், பயணச்சீட்டு போன்றவற்றை இணையதளத்தில் தேடும்போது, சுற்றுலா செல்லும் ஊரில் அருகில் உள்ள மருத்துவமனை, மருந்தகங்கள் பற்றிய விபரங்களையும் தேடி குறித்துக் கொள்ள வேண்டும். ஏற்கெனவே உட்கொள்ளும் மருந்துகளை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். முக்கியமாக, எல்லா வயதுடையவர்களும், பயணத்துக்கு முன் நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது. அப்போதுதான் கோடை விடுமுறைக் கொண்டாட்டம் இன்பமாகவும், ஆரோக்கியமாகவும் அமையும்.’’
   
  Punitha1193 likes this.
   
Loading...
Similar Threads - டூர் போகும்போது இதெல்லாம்
 1. kamatchi devi
  Replies:
  0
  Views:
  534
 2. Rawalika
  Replies:
  8
  Views:
  1,520

Share This Page