சாட்டை அடி

Discussion in 'Short Stories' started by Yazhvenba, Jul 30, 2018.

 1. Yazhvenba

  Yazhvenba Pillars of LW LW WRITER

  Messages:
  442
  Likes Received:
  1,572
  Trophy Points:
  113
  சாட்டை அடி
  _______________


  காக்கை, குருவிகள் தங்கள் இருப்பிடம் நோக்கி பறந்து கொண்டிருக்கும் பொன்மஞ்சள் வேளை அது. அந்த அழகிய வீட்டின் சமையலறையில் பலகாரம் செய்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பெயர் கனகவள்ளி, ஐம்பதை கடந்த வயதிருக்கும்.

  “அம்மா! இன்னும் ரெண்டு நாள் இருப்பேன் மா. இன்னைக்கே போண்டா சுடணுமா?” என்றபடி தாயின் சிரமத்தை குறைக்க விரும்புவது, அவருடைய மகள் காயத்ரி. அசலூரில் திருமணம் முடித்திருந்ததால், அத்தி பூத்தாற் போன்று வருகை தருபவள்.

  “எவ்வளவு நேரம் ஆகிட போகுது காயு. இதோ சத்த நேரத்துல முடிஞ்சுடும். நீ பஸ்’ல வந்ததுல அலுப்பா இருக்கும். போ போய் சுஜி கூட ரெஸ்ட் எடு. முன்னமே நீ வரேன்னு சொல்லியிருந்தா முறுக்கு சுட்டு வெச்சிருப்பேன். சரி விடு நாளைக்கு சுட்டுடலாம்” என்று உறங்கும் பேத்தி சுஜித்ராவுடன் மகளையும் ஓய்வெடுக்க சொல்லி பணித்தார் அவர்.

  தாய்க்கு தெரிந்ததெல்லாம் குழந்தைகளின் பசியும், ருசியும் மட்டுமே. வகை வகையாய் சமைத்து, தம் செல்வங்கள் வயிறார உண்பதை பார்த்தே மனம் நிறையும் நடமாடும் தெய்வங்கள் அவர்கள்.

  “போம்மா. இப்போ தூங்கிட்டா, இராத்திரிக்கு தூக்கம் வராது. அப்பா தான் போன் பேசறப்ப எல்லாம், சுஜியை பாக்கணும் சொல்லிகிட்டு இருந்தாரு. அதான் சொல்லாம வந்து சர்ப்ரைஸ் தரலாம்னு பாத்தேன் மா”

  காயத்ரி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, வாசலில் தந்தை வெற்றியரசனின் குரல் கேட்க, “அம்மா நான் வந்திருக்கறத சொல்லாத” என மென்குரலில் சொல்லிவிட்டு, தந்தையை சமையலறையில் இருந்து நோட்டம் விட்டாள்.

  பக்கத்து வீட்டு வாயிலில் ஒரு ஒன்பது வயது சிறுமி, தனது தளிர் கரங்களால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவளோடு தான் தந்தை உரையாடிக் கொண்டிருந்தார்.

  “என்ன பாப்பா இன்னும் பழைய கோலத்தையே போட்டுக்கிட்டு இருக்க. இந்தா வா நெட் ல புது டிசைன் காட்டறேன்”

  “எங்க தாத்தா காமிங்க” என்று சிறுமி ஆர்வமாக கேட்கவும், தன்னுடைய கைபேசியில் காட்டிக் கொண்டிருந்தார்.

  “தாத்தா இது அழகா இருக்கு. நான் வரைஞ்சுக்கவா?” அந்த மழலை மொழியில் யாராகினும் வீழ்ந்து விட தோன்றும். காயத்ரியும் புன்னகைத்துக் கொண்டாள்.

  “போ புள்ள நோட்ட தூக்கிட்டு வா. நான் உள்ளே இருக்கேன்” என்றவர் உள்ளே வந்தார்.

  தந்தை அறைக்குள் நுழைந்ததும், சுஜியை எழுப்பி தந்தை முன் நிறுத்த, சுஜி உறங்கிக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தாள் காயத்ரி.

  நான்கு வயது குழந்தை, கொள்ளை அழகுடன் துயில் கொண்டிருந்தது. துயிலை களைக்க விருப்பமே இல்லை என்ற பொழுதிலும், தந்தைக்காக மகளிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

  “என் பட்டு இல்ல… தங்கம் இல்ல… கொஞ்சம் எந்திரி மா… ஆச்சி உனக்கு போண்டா எல்லாம் செஞ்சு இருக்காங்க” என்று கொஞ்சி, குலாவி ஒரு வழியாய் எழுப்பியிருந்தாள்.

  குழந்தையின் முகம் கழுவி, அவளை தூக்கிக்கொண்டு சப்தம் எழுப்பாமல் தந்தையின் அறைக்கு செல்ல, அங்கே அவள் கண்ட காட்சியில், ஒரு தாயாய் அவள் உயிரே துடித்தது.

  பக்கத்து வீட்டு சிறுமி, நெகிழ்ந்து கொண்டு இருக்க அவளை வெற்றியரசன் தன் மடியில் அமர்த்தி… ஒரு கையை அவள் ஆடையினுள் விட்டு, கழுத்தை அவள் தாடையில் இதழ்கள் பதியும் அளவு அழுத்தி… அந்த குழந்தை தன்க்கு என்ன நடக்கிறது என்று புரிந்தும், புரியாமலும் தவித்துக் கொண்டிருக்க, சாவகாசமாய் மொபைலில் இருக்கும் கார்டூனை காட்டிக் கொண்டிருந்தார்.

  கார்டூனில் மனம் பதியாமல் அந்த சிறுமிக்கு ஏதோ உறுத்தலாய் இருக்க, “தாத்தா நான் வீட்டுக்கு போவனும்” என்று அழுகுரலில் கூற,

  “இரு உனக்கு இன்னும் நிறையா காட்டறேன். கேம் கூட இருக்கு விளையாடரயா?”

  அத்தனை நேரமும் அரை தூக்கத்தில், அன்னையின் தோளில் முகம் புதைத்து கொண்டிருந்த சுஜி, தாத்தாவின் குரல் கேட்டு, “தாத்தா...” என கூவி அன்னையிடம் இருந்து இறங்கினாள்.

  அதுவரை உறைநிலையில் இருந்த காயத்ரிக்கு பிரக்ஞை வர, ஓடும் குழந்தையை இழுத்து பிடித்தாள்.

  சுஜித்ராவின் குரல் கேட்டதில் வேகமாக சிறுமியிடம் இருந்து நகர்ந்த வெற்றியரசன், தடுமாற்றத்தை மறைக்க முயன்றபடி, “வாம்மா! வா! எப்ப வந்த? பக்கத்து வீட்டு பொண்ணு, அதான் விளையாட்டு காட்டிட்டு இருக்கேன்” என சமாளிக்க முயலவும், அருவருப்பாய் ஒரு பார்வை பார்த்தாள் காயத்ரி.

  புழுவை பார்த்து முகம் சுளிப்பது போன்ற பார்வை அது. விட்டால் போதும் என வெளியே வந்த சிறுமியை நிறுத்தி, “இனிமே அம்மாவை தவிர, யாரெல்லாம் உன்னை” என்ற காயத்ரி அவளுடைய கழுத்துக்கு கீழிருந்து, தொடை வரை இருக்கும் பகுதி வரை சுட்டிக்காட்டி, “இங்க கை வெச்சாலும், உடனே கத்தி யாரையாவது கூப்பிடனும். அம்மா கிட்ட சொல்லணும் புரிஞ்சுதா? இப்போ போய் அம்மா கிட்ட சொல்லி கூட்டிட்டு வரணும். சரியா?” என சொல்லி அனுப்பி வைத்தாள்.

  குழந்தையை தாத்தாவிடம் விடாமல் இழுத்து பிடித்ததில் அவள் அழத்தொடங்க, அழும் குழந்தையை சமாதானம் செய்யாது, அறைக்கு சென்று தன் இல்லத்திற்கு கிளம்ப தயாரானாள்.

  பெற்ற தந்தையின் இந்த முகம் அவளுக்கு புதிது. இனி அவர் முகத்தில் விழிப்பாளா என்பதும் சந்தேகமே. அவர் அவமானப் பட வேண்டும், இதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம். வெற்றியரசனின் மகளுக்கு இந்த எண்ணம் வர வாய்ப்பில்லை. சுஜித்ராவின் தாய்க்கு உதிர்த்த எண்ணம் இது.

  தவறு யார் செய்திருப்பினும், தண்டனை அவசியம். உறவுகளின் நிராகரிப்பும், உதாசீனமும் கண் முன்னே தோன்றினால் தவறு செய்யும் எண்ணம் வருமா? பிஞ்சு குழந்தைகளிடம் இச்சை தீர்க்க நினைப்பவன், மிருகத்தை விட மோசம் அல்லவா? பள்ளி செல்லும் பிள்ளையை பள்ளியறையில் தள்ள நினைப்பவனுக்கு என்ன தண்டனை தருவது?
   
  Last edited: Jul 30, 2018
   
 2. sridevi srini

  sridevi srini Bronze Wings New wings

  Messages:
  655
  Likes Received:
  746
  Trophy Points:
  113
  nenju porukuthilaye............. pachilam kulanthaikalaiyum than valluru kankalal, karankalal kotha thutikum kayavarakalai kandal.........:mad::mad::mad::mad::mad::mad::mad::mad:.hats off gayathri. thanthai endralum kamuganai samuthayathirku aadaiyalam katta ninaipatharku. nice story sis
   
  Yazhvenba likes this.
   
 3. sujamakil

  sujamakil Wings New wings

  Messages:
  61
  Likes Received:
  39
  Trophy Points:
  38
  Nethiyadi martin Illa Ithu manana thandanai kodukkavendiya seaial. Every one should think and react for this kind of act/feelings. Superb pro. Hats off to u
   
  Yazhvenba likes this.
   
 4. Srjee

  Srjee Bronze Wings New wings

  Messages:
  1,678
  Likes Received:
  3,076
  Trophy Points:
  133
  வெற்றியரசனின் மகளுக்கு இந்த எண்ணம் வரவாய்ப்பில்லை. சுஜித்ராவின்தாய்க்கு உதிர்த்த எண்ணம்

  எதார்த்த உண்மை
  Yaravadu thandika mattangala nu parthuttu irukkamal Ande nerathil awalal mudintha thandanai ..... ​
  Nice mam​
   
  Yazhvenba likes this.
   
 5. Yazhvenba

  Yazhvenba Pillars of LW LW WRITER

  Messages:
  442
  Likes Received:
  1,572
  Trophy Points:
  113
  Thanks sri...
   
   
Loading...
Similar Threads - சாட்டை அடி
 1. revathisiva
  Replies:
  0
  Views:
  827

Share This Page