Super Writer Contest 2019 - Chandrika's Urave Unnai Arivaaya

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by starbliss, Feb 8, 2019.

 1. starbliss

  starbliss Webmaster Administrator Moderator New wings

  Messages:
  665
  Likes Received:
  298
  Trophy Points:
  83
  Admin Post
  Dear readers,
  Our member @chandrika krishnan joined into our contest with her beautiful story.
  Urave Unnai Arivaaya.

  All the best wishes to her :)
   
   
 2. chandrika krishnan

  chandrika krishnan Wings New wings

  Messages:
  79
  Likes Received:
  492
  Trophy Points:
  73
  உறவே உன்னை அறிவாயா -1

  "நித்தி இன்னும் கிளம்பாம அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?" என்ற அவளது தாய் ராகினியின் அதட்டலை சட்டை செய்யாமல் ,அவளுக்காக கட்டிலில் அவள் தாயார் எடுத்து வைத்திருந்த நகைகளையும், பட்டு சேலையையும் களைத்து விளையாடி கொண்டிருந்தாள் நித்தி ,என்கிற நித்யலோக்சனா.

  அவளிடம் இருந்து பதில் வராததை கண்ட ராகினி கோவத்தோடு ,அவள் அறைக்குள் நுழைந்த போது, அந்த விலை உயர்ந்த பட்டு சேலையின் ஜரிகைகளை ஒவ்வொன்றாக உருவி கொண்டிருந்தாள் நித்தி . அதை கண்டு மேலும் கோவம் அடைந்த ராகினி "என்னடி இப்படி எல்லாம் பண்ணா உன்ன விட்ருவேனு நெனப்போ ? ஒழுங்கா மாப்பிள்ளை வீடு வரதுக்குள்ள ரெடி ஆகு " என்று அவர் கத்த

  "சும்மா கத்தாத மா, நீ கல்யாணம் பண்ணியே , அது புட்டுக்கிட்டு போயிருச்சு ! எந்த லச்சணத்துல இப்போ எனக்கும் வேற பண்ண பாக்கற ? எதுக்கு ? நானும் உன்ன மாறியும் உன் புருஷன் மாரியும் சண்டை கோழியா சுத்தவா ? எனக்கு ஒன்னும் வேணாம் " என்றவள் விட்டேற்றியாக கூற , ராகினி மௌனமானார் .

  தனக்கும் தன் கணவனுக்கும் நடந்த நிகழ்வுகள் இவளை ரொம்பவும் பாதித்து விட்டதோ ? மகளுக்காகவாது தான் கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாமோ ? என்றெல்லாம் காலம் கடந்து அவர் சிந்திக்கும் போதே ,காலிங் பெல் அடித்தது .

  முகத்தில் கடுமையை வரவழைத்து கொண்டவர் ,கதவை திறந்தார். அங்கே நின்ற நித்தியின் தந்தை ரத்னவேலுவை கண்டவர் , "வாங்க " என்று கூட அழைக்காமல் முகம் திருப்பி கொண்டு சென்றுவிட்டார்.

  இதை எதிர்பார்த்தே அவரும் வந்ததால் ,இந்த முகம் திருப்பல் அவரை பெரிதாக பாதித்து விடவில்லை .

  நேராக மகளின் அறைக்குள் அவர் சென்றதும் , அவர் கண்ட காட்சி வழக்கம் போல அவரை வருத்தியது .

  "மகளையும் இப்படி பொறுப்பில்லாமல் வளர்த்து விட்டாலே ?" என்று வருந்தியவர் , "நித்திமா " என்றழைத்ததும், " வாங்கப்பா " என்று மகிழ்ச்சியாக கூவிய மகள் ,அதற்கு மேல் அவரை கண்டுகொள்ள வில்லை .

  இதுவும் வளமை தானே .எப்போதாவது வரும் அப்பாவை வரவேற்பதில் மட்டும் மகள் குறை வைக்க மாட்டாள் .ஆனால் அதற்கு பிறகு ,அந்த வீட்டில் மூவருமே தனி தனி தீவுகளாக ஆளுக்கு ஒரு மூளையில் ஒதுங்கி விடுவார்கள் .

  அன்று நித்தியை பெண் பார்க்க வருவதால் தான் , இன்று அவர் வந்ததே ! நித்தி கிளம்பாமல் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தது ,அவரையும் பாதித்தது ."ஆனால் அவர் சொன்னால் கேட்க கூடியவளா நித்தி ?" என்று எண்ணியவர் ,ஏதும் கூறாமலையே சென்று அமைதியாக சோபாவோடு சோபாவாக அமர்ந்து விட்டார் .
  ஆனால் முகத்தில் பதற்றமும் பயமும் மட்டும் முழுதாக நர்த்தனம் ஆடிக்கொண்டிருந்தது .

  மாப்பிள்ளை வீட்டார் இன்னும் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்து விடுவார்கள் , என்று தகவல் வந்ததும் ,ராகினியும் பதற்றம் ஆனார் .

  எவ்வளவு உருட்டி மிரட்டியும் அலங்காரம் பண்ணாமல் , வீடியோ கேம் விளையாடி கொண்டிருந்தவளை ,அடிக்க அவர் கைகள் பரபரத்தது .

  "ஏண்டி இப்டி பண்ற , மாப்பிளை எல்லாம் வந்துருவாங்க , அவங்க கொஞ்சம் ஊர் பக்கம் வேற நித்திமா ?ப்ளீஸ் டி ..என் மானத்த வாங்கிறாத ,அதுவும் இல்லாம பெரிய இடம் டி ! அதுவா தேடி வருது ..நீ என்னடானா ராங்கி பண்றியே ?" என்றவர் கெஞ்சும் போதே ,வெளியே காரின் ஹாரன் ஒலி கேட்டது .

  அவளை ஒருமுறை முறைத்தவர் ,விசுக்கென திரும்பி வந்தவர்களை வரவேற்க சென்றுவிட்டார் .

  வாசலில் அவர்களோடு கைகுலுக்கி பேசிக்கொண்டிருந்த ரத்னவேலுவை கண்டதும் ,அவளுக்கு எரிச்சல் வந்தது . இருப்பினும் இன்முகதோடே அவர்களை வரவேற்று உபசரித்தார் ராகினி .

  மாப்பிளை வீட்டில் இருந்து அவரது தாய் தந்தை , இரு தங்கைகள் ,ஒரு தம்பி ,மாப்பிள்ளையின் அக்கா அவரது கணவர் என்று மொத்தம் ஏழு பேர் வந்திருந்தனர் .

  அநத கூட்டத்தை கண்ட ராகினிக்கு உள்ளே அவ்வளவு உவப்பாக இல்லை ." இது என்னடா பொண்ணு பாக்கவே ஒரு பட்டாளம் கெளம்பி வந்துருக்கு , நாளைக்கு கல்யாணம் ஆயிட்டா ,மொதோ வேலையா நித்திய தனி குடித்தனம் வெக்கணும் " என்று அவள் சந்திக்க , ரத்தனவேலுவோ "கடவுளே , இந்த கூட்டு குடும்பத்துலையே வாக்கப்பட பொண்ணு ஒதுக்கணும் சாமி ,என் மவ இனியாச்சு ஒண்டியா இல்லாம கூட்டா வாழனும் " என்று வேண்டிக்கொண்டிருந்தார் .

  கொஞ்ச நேர கலந்துரையாடலுக்கு பிறகு "பெண்ணை பார்க்க வேண்டும்" , என்று மாப்பிள்ளையின் தாயார் ஆரம்பிக்கும் போதே , பட்டென கதவு திறக்கும் ஒலி கேட்டு ,அனைவரும் திரும்பி பார்த்தனர் .

  அங்கே அழகாக பட்டுடுத்தி ,மிதமான அலங்காரத்தோடு நித்யலோக்சனா நின்று கொண்டிருந்தாள் .

  அவளது கோலம் கண்டு வந்தவர்கள் திருப்தியோடு ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொள்ள , ராகினியும் ரத்னவேலுவும் இன்ப அதிர்ச்சியில் இருந்தனர் .

  "நித்தி என்னென்ன ஆர்ப்பாட்டம் செய்வாளோ ? " என்றெண்ணி உள்ளே பயந்து கொண்டிருந்தவர்கள் ஆயிற்றே !!

  மாப்பிள்ளையின் தங்கைகள் கனிமொழியும் கவிமொழியும் ,நித்தியை அழைத்து அவர்களுக்கு நடுவில் அமர்த்தி கொண்டார்கள் .அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த சிவப்ரகாஷை நிமிர்ந்து பார்த்த நித்தி , ஒரு புருவம் தூக்கி " என்ன ?" என்பது போல பார்க்க , அவனோ அவளை பார்த்து கண்ணடித்தான்.

  மனதிற்குள் காண்டான நித்தி , சட்டென " நா மாப்பிள்ளையோடு பேசணும் ?" என்று பிடிவாத குரலில் கூறவும் , ஒருநிமிடம் அங்கே மௌனம் நிலவியது .

  அதை முதலில் களைத்த ராகினி " அதுலா பேச என்ன இருக்கு நித்திமா ..நீ தான் மாப்பிள்ளையோட போட்டோ பாத்ததுமே ,பிடிச்சுருக்குனு சொல்லிட்டியே ?" என்று கூற ,சிறிதும் பாரபச்சம் இன்றி " நா அப்படி சொல்லவே இல்லையே மா " என்று நித்தி உண்மையை சொல்லிவிட , ராகினியின் முகம் கன்றியது .

  அதை கவனித்த , சிவாவின் அன்னை தேன்னான்டாள் , " பரவலா மா, புள்ள ஏதோ பேசணும்னு பிரியப்படுத்துல , போய் பேசிட்டு வரட்டும் " என்று கூறிவிட , சற்றும் தாமதிக்காமல் எழுந்து விட்ட நித்தியும் , "அந்த ரூம்ல பேசலாம் " என்று அப்பட்டமாக கூறி சிவாவை அழைத்து கொண்டு , அவளது அறைக்கு அருகில் உள்ள ட்ராயிங் ரூமுக்குள் சென்றாள் .

  ஹாலில் அமர்ந்திருந்த சிவாவின் குடும்பத்தினர் , நித்தியின் செய்கைகளை கண்டு கொஞ்சம் அதிர்ந்து இருந்தனர் . நித்தியின் தந்தையோ "கடவுளே , இந்த பொண்ணு ஏதும் குழப்பிர கூடாதே " என்ற கவலையோடு இருந்தார் .

  அறைக்குள் நுழைந்ததும் ,அங்கிருந்த மேசையின் மேல் ஏறி அமர்ந்த நித்தி , அதன் எதிரே இருந்த நாற்காலியில் சிவாவை அமரும் மாறு சைகை செய்தாள் .

  அவன் அமராமல் அவளையே பார்த்து கொண்டிருக்க ,'எனக்கு என்ன வந்தது?' என்பது போல ஒய்யாரமாக கால் மேல் கால் போட்டு கொண்டு , நித்தி அமர்ந்திருந்தாள் .

  அவளது அலங்காரத்தில் ஏதோ உறுத்த ,சிவா உற்று பார்க்கவும் ,அவன் பக்கம் நித்தி திரும்பினாள் ." ஏய் எனது இது ? பாண்ட் மேல சாரி கட்டிருக்க ? "என்றவன் சிரித்து கொண்டே கேட்கவும் , " கட்டுனா என்ன தப்பு ?காட்டக்கூடாதுனு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா ?இல்ல காட்டுனா நிக்காதாமா ?" என்று அவள் பொறிய " ஏய் ஈஸி ஈஸி ,ஏன் இவ்ளோ டென்ஷன் ?" என்று அவளை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினான் சிவப்ரகாஷ் .

  ஆனால் அதுவும் அவனுக்கு எதிராக திரும்பியது ." ஹலோ மிஸ்டர் ..யாரு டென்ஷன் ஆகறாங்க ? டென்ஷன் ஆகற மாறி கேள்வி கேட்டது நீங்க ?" என்று மீண்டும் நித்தி எகிற ,"சரியான பஜாரியோ ?" என்று எண்ண தொடங்கினான் சிவா .

  "சரி ஏதோ பேசணும்னு சொன்னேங்களே ?" என்றவன் பேச்சை மாற்ற ,"வாடா ராசா , அப்படி வா வழிக்கு " என்று மனதுள் நினைத்து கொண்டவள் ,"ஆமா , ரொம்பவும் முக்கியமா விசியம் ..." என்று பீடிகை போட, அசால்டாக நின்றான் சிவா .

  "இருடா மவனே , என்னையவ பொண்ணு பாக்க வர , உன்ன எப்படி தெறிக்க விடறேன் பாரு ?" என்று எண்ணி கொண்ட நித்தி " உங்களுக்கு இது ஷாக்கா இருக்கலாம் ..பட் நா சொல்றதெல்லாம் உண்மை ..நா நீங்க நெனைக்கற மாறி நல்ல பொண்ணுலாம் இல்லை .. ஐ அம் எ பிலேகேர்ள் ..பல பசங்களோட வாழ்க்கைல வாலிபால் விளையாடி இருக்கேன் " என்று கூறி அவள் நிறுத்த , சிவாவுக்கு சிரிப்பு வந்தது .

  அதை அடக்கி கொண்டவன் ,சீரியசாக முகத்தை வைத்து கொண்டு " அய்யயோ அப்படியா ? சொல்லவே இல்ல " என்று சோகமாக கேட்க ,"உங்க கிட்ட சொல்லிட்டா வெளயாடுவாங்க " என்ற நித்தியின் பதில் அவனுக்கு மேலும் சிரிப்பை வரவழைத்தது .

  தன்னை கட்டுப்படுத்தி கொண்டவன் "நா இப்போ என்னங்க பண்ணட்டும் ?" என்று கேட்க , நிம்மதியான நித்தியும் "ஒன்னும் பிரச்னை இல்லைங்க ,எங்கம்மா நா சொன்னாலும் கேட்கமாட்டாங்க , சோ நீங்களே என்ன பிடிக்கலைனு சொல்லுங்க ?பிராப்லம் சால்வ்டு " என்று கூறி சிரித்தாள் .

  "சரிங்க " என்று பூம் பூம் மாடு போல தலையாட்டிய சிவா , வெளியே சென்றதும் முதல் வேலையாக "எனக்கு பொண்ண ரொம்ப புடுச்சுருக்குமா " என்று கூற , உள்ளே பத்ரகாளியாக மாறி இருந்தால் நித்தி .
   
   
 3. Monies

  Monies Bronze Wings New wings

  Messages:
  2,695
  Likes Received:
  2,799
  Trophy Points:
  133
  Nice update
   
  chandrika krishnan likes this.
   
 4. chandrika krishnan

  chandrika krishnan Wings New wings

  Messages:
  79
  Likes Received:
  492
  Trophy Points:
  73
  TQ SIS
   
   
 5. Kalai Saran

  Kalai Saran Wings New wings

  Messages:
  33
  Likes Received:
  35
  Trophy Points:
  38
   
Loading...

Share This Page