காதலை தேடி... - Devamathi

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by devamathi, Apr 5, 2019.

 1. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  50
  Likes Received:
  45
  Trophy Points:
  38
  இதோ... காதலை தேடி... ஆறாம் அத்தியாயம் போட்டுட்டேன் மக்களே.. படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்கோ..

  காதலை தேடி... - 6

  மறுநாள் ருத்ராவின் டீமிற்கு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டது. அன்றே அந்த வேலையை முடித்து தர வேண்டுமென கிளையண்ட் கேட்க, இவர்களும் ஒத்து கொண்டனர்.

  ருத்ராவின் டீமில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். அவரின் டீம் லீடர் அனைவருக்கும் வேலையை பிரித்து கொடுத்துவிட்டு அதை டெலிவெர் செய்யும் பொறுப்பை ருத்ராவிடம் ஒப்படைத்தார்.

  அனைவரும் வேலையை முடிக்க இரவு எட்டு மணியாகியது. தீபக் இன்னும் அரை மணி நேரத்தில் கொடுப்பதாக சொல்ல, இவள் மற்ற மூவரின் ரிப்போர்ட்டையும் சரி பார்த்து கொண்டிருந்தாள்.

  ச்சே! இந்த வெங்கட் (ருத்ராவின் டீம் லீடர்) போன மாசம் ஒரு ரிப்போர்ட்டை தாமதமா கொடுத்தேன்னு இந்த மாசம் என்னை இப்படி பழிவாங்கிட்டானே. மணி வேற ஒன்பதாக போகுது. அம்மா வேற திட்ட போறாங்க. ஏற்கனவே மூணு முறை போன் பண்ணிட்டாங்க என தன் எண்ணங்களில் இருந்தவளை, "ருத்ரா ரிபோர்ட் முடிச்சு உனக்கு மெயில் பண்ணிட்டேன்
  என தன் கணினியை அணைத்தவன், பை ருத்ரா" என சென்றுவிட்டான்.

  அடப்பாவி! இவன் இருக்கன்ற தைரியத்துல தான நாம இவ்ளோ நேரம் உட்கார்ந்து இருந்தோம்.

  யாருமில்லாத அந்த அறை சற்றே பயமுறுத்தியது. ஏற்கனவே கிருஷ்ணா சொல்லியிருந்த பல்வேறு பேய் கதைகள் வேறு நேரம் காலம் தெரியாமல் நியாபகம் வந்து தொலைத்தது. பேசாம டெலிவெர் பண்ணாம கிளம்பிடலாமா என யோசித்து கொண்டிருந்தவள் சடாரென கதவு திறக்கும் சத்தத்தில் பயந்து கண்களை பொத்திக் கொண்டாள். கிளம்புறேன் என சொல்லி சென்ற தீபக் என்ன நினைத்தானோ திரும்பி வந்தவன் ருத்ரா இருந்த நிலை பார்த்து வாய்விட்டு சிரித்து கொண்டிருந்தான்

  ஏற்கனவே பயத்தில் இருந்தவள் திடீரென்று கேட்ட சிரிப்பு சத்தத்தில் அழுக ஆரம்பித்துவிட்டாள்.

  அவள் அழுவதை கண்டவன், ருத்ரா நான் தன் தீபக் அழாத என சமாதானப்படுத்தினான். தீபக்கின் குரல் கேட்டு கண் திறந்தவள் தன் பக்கத்திலிருந்த புத்தகத்தால் சரமாரியாக அடிக்க தொடங்கினாள்.

  ஐயோ அம்மா வலிக்குதே! ஏதோ தனியா இருப்பியே. கூட துணைக்கு இருக்கலாம்னு வந்தா இப்படி அடிக்கிறியேமா?

  உன்ன யாரு வர சொன்னது? என அவள் கோபமாக கேட்க, சரி அப்போ நான் கிளம்புறேன் என கதவை நோக்கி நடந்தான். அவன் செல்வதை கண்டவள் "சரி சரி அதான் வந்துட்டல ஒரு பத்து நிமிஷம் இரு என சமாதான கொடியை பறக்கவிட்டாள்".

  வேலையை முடித்து இருவரும் கிளம்ப பத்து மணியாயிற்று. "ருத்ரா மணி பத்தாச்சே. எப்படி போவ வீட்டுக்கு?"

  "என் வண்டில தான்".

  என்னது இந்த இராத்திரி நேரத்துல அதுவும் தனியா வண்டியில போறீயா? பேசாம நானே உன்னை வீட்ல இறக்கிவிடுறேன். உன்னோட வண்டியை இங்கேயே இருக்கட்டும் என தீபக் கூற ருத்ரா தயங்கினாள். என்னதான் தீபக் நல்ல நண்பனாக இருந்தாலும் இரவு நேரத்தில் அவனுடன் செல்வது தேவையில்லாத பிரச்சனை ஏற்படுத்தும்.

  அவள் தயங்குவதை புரிந்து கொண்ட தீபக்கும் "சரி, நீ உன்னோட வண்டியில போ. நான் உன் பின்னாடியே வரேன்" என கூற, அதெல்லாம் நான் பத்திரமா போயிடுவேன். நீ கிளம்பு என கூறியும் அவன் மறுத்துவிட வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டாள்.

  தன் வண்டியை நிறுத்திய ருத்ரா பின்னால் வந்த தீபக்கிடம், நீ கிளம்பு தீபக். அந்த நீல கலர் வீடு தான். ரொம்ப தேங்க்ஸ் தீபக் என கூறிவிட்டு செல்ல, தீபக் அவள் வீட்டுக்குள் நுழையும் வரை நின்றிருந்தான்.

  அவளின் வண்டி சத்தத்தை கேட்டு வெளியே வந்த அவளின் அம்மா பார்வதி திட்ட தொடங்க, அம்மா பசுக்குது மா என தன் ஆயுதத்தை எடுக்க, அது வெற்றிகரமாக வேலை செய்தது.

  சாப்பிட்டு முடித்தவுடன் தன் தாயிடமும் திட்டு வாங்கியவள் தன் அறைக்கு வந்து தீபக்கிற்கு மெசேஜ் செய்து அவன் வீட்டிற்கு சென்று விட்டதை உறுதி படுத்தி கொண்டாள்.

  எப்பொழுதும் தீபக்கின் மேல் நல்ல எண்ணம் இருந்தாலும், இன்று அவன் கூடவே இருந்து பத்திரமாக வீடு வரை வந்தது அவனின் மேலிருந்த மரியாதையை உயர்த்தியது.


  வெள்ளிக்கிழமை தோறும் பக்கத்தில் உள்ள முருகன் கோவிலில் சென்று விளக்கேற்றுவது காவ்யாவின் வழக்கம்.

  குளித்து முடித்து வெளியே வந்தவளிடம் வசந்தா ஒரு புடவையை நீட்டினார். இன்னைக்கு வரலஷ்மி நோம்பு. இந்த புடவையை கட்டிட்டு அப்படியே பக்கத்துல இருக்குற அம்மன் கோவிலுக்கும் போய்ட்டுவா.

  மா புடவைலா கட்டி நடக்க முடியாது. நான் சுடிதாரே போட்டுக்குறேன்.

  ஏண்டி ஒரு நாள் தானே கட்ட சொல்றேன். போய் கட்டிட்டு வா என கூற, சரியென்று தன் அறைக்கு சென்றாள்.

  சுமார் முக்கால் மணிநேரம் கழித்து வெளியே வந்தவளை பார்த்த வசந்தா அவளுக்கு திருஷ்ட்டி கழித்தார். அவள் கையில் பணத்தை கொடுத்து, அம்மனுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்னு வேண்டிகோ .


  அதை காதில் வாங்காமல் காற்றில் பறக்கவிட்டவள், தன் வண்டியில் ஏறி உட்கார புடவை தடுக்கி விழப்போனவள் ஒருவராக சமாளித்து கோவிலை சென்றடைந்தாள்.

  கோவிலில் பிரகாரம் சுற்றும் பொழுதும் புடவை தடுக்க தன் தாயை திட்டியாவாறே சுற்றி முடித்தாள்.

  ஒருவழியாக வீட்டிற்கு வந்தவளிடம் ஒரு கவரை கொடுக்க, என்ன மா இது?

  சாமி பிரசாதம் டி. சரோஜா ஆன்ட்டிட்ட கொடுத்துட்டு வா.

  இரு மா. நா போய் சுடிதார் போட்டுட்டு வந்துடுறேன்.

  ஏண்டி பக்கத்து வீட்டுக்கு போகறதுக்கு துணி மாத்தணுமா?

  புடவை ரொம்ப கால் தடுக்குதும்மா. பாலா கிட்ட கொடுத்துவிடு மா.

  அவன் குளிச்சிட்டு இருக்கான் காவ்யா. எனக்கு நிறைய வேலை இருக்கு. நீயே போய் கொடுத்துட்டு வா.

  சரோஜா வீட்டிற்குள் நுழைந்தவளை, "புடவைல ரொம்ப அழகா இருக்க காவ்யா".

  அம்மா கொடுக்க சொன்னாங்க ஆண்ட்டி என சரோஜாவிடம் கொடுத்துவிட்டு கிளம்புகையில், காவ்யா கொஞ்சம் இரு என நெருக்க கட்டிய நித்தியமல்லி சரத்தை தலையில் வைத்துவிட்டார்.

  சரி நான் கிளம்புறேன் ஆன்ட்டி.

  வெளிய படியில தண்ணியா இருக்கும் பாத்து போமா.

  சரி ஆன்டி என கூறி விட்டு இரண்டு படி இறங்கியவள் மூன்றாவது படியில் கால் வைக்க, அந்நேரம் தன் வண்டியை நிறுத்திவிட்டு வந்த வினோத்தும் வர, அவனுக்கு வழிவிட்டு காவ்யா சற்று நகர, கால் வழுக்கி விழ இருந்தவளை தாங்கி பிடித்தான்.

  பிடிக்கையில் எக்குத்தப்பாக அவனின் கை காவ்யாவின் வெற்றிடையில் பதிய, அவளின் இந்த நெருக்கமும், மல்லியின் வாசமும் அவனை வசமிழக்க வைக்க, ஒரு வாரமாய் பாராமுகமாய் இருந்தவனை நேரில் கண்டவுடன் தான் நின்ற கோலம் கருத்தில் பதிய சில வினாடிகள் செல்ல, அவனின் பார்வை மாற்றத்தை வைத்து சட்டென விலகி ஓடியவள் மெல்ல வினோத்தின் மனதினுள் நுழைந்தாள் .

  தேடல் தொடரும்....
   
  vens likes this.
   
 2. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  50
  Likes Received:
  45
  Trophy Points:
  38
  வணக்கம் தோழிகளே...கொஞ்சம் வேலை இருந்ததால் கதையை அப்டேட் கொடுக்க முடியவில்லை...அப்டேட் தாமதமாக கொடுப்பதற்கு அனைவரும் மன்னிக்கவும்..இதோ காதலை தேடி அத்தியாயம் 7 கொடுத்து இருக்கேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும்....

  காதலை தேடி - 7


  தன் வீட்டுக்கு வந்தவள் அறைக்குள் சென்று தாழிட்டுவிட்டு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தினாள்.இதயம் தாறுமாறாக அடித்து கொள்ள காவ்யாவினுள் சில பல தடுமாற்றங்கள்..

  தடதடவென கதவு தட்டும் சத்தத்தில் சுயஉணர்வு பெற்றவள் கதவை திறக்க "ஏண்டி உனக்கு நேரமாகலையா?"

  இன்னும் கிளம்பாம என்ன பண்ற? மணி ஒன்பதாச்சு.

  மா முதல்லயே சொல்லமாட்டியா?

  சரி சரி சீக்கிரம் புடவைய மாத்திட்டு கிளம்பு.

  நான் இனிமே சுடிதார் மாத்திட்டு கிளம்பு நேரமாகிடும். இப்படியே கிளம்புறேன் என தன் வண்டி சாவியை எடுத்து கொண்டு கிளம்பினாள்.

  கொஞ்சம் சாப்பிட்டுட்டு போ காவ்யா என வசந்தா சொல்ல வேண்டாம் என்றுவிட்டு கிளம்பினாள்.

  என்னாச்சு இவளுக்கு கொஞ்ச நேரம் கோவிலுக்கு புடவை கட்டிட்டு போக சொன்னதுக்கே அந்த குதி குதிச்சா. இப்போ ஆபிஸ்க்கு புடவை கட்டிட்டு போறா. தலைல வேற என்னைக்கும் இல்லாம இன்னைக்கு பூ வச்சுட்டு போறா என தன் யோசனையிலிருந்தவரை வசந்தா, உன் பொண்ண ரசிச்சது போதும் வந்து சாப்பாடு எடுத்துவை என்றார் காவ்யாவின் தந்தை பெருமாள்.

  தனக்கு உடம்பு சரியில்லாததால் தான் இன்று அலுவலகம் வரவில்லையென மதுரா கூறிவிட, காலையில் நடந்ததை மனதுக்குள் ரசித்து கொண்டே அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

  அலுவலகம் வந்தவளை பார்த்த கிருஷ்ணாவிற்கு மயக்கம் போடாத குறைதான்.

  காவி நீயாடி இது? இன்னைக்கென்ன பொண்ணா லட்சணமா வந்திருக்க?

  அப்போ இத்தனை நாள் பாக்க பொண்ணு மாதிரி தெரியலையா?

  ம்ம் தெரியலையே காவி என அவளிடம் வம்புவளத்துக் கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் மதுராவின் உடல்நிலை குறித்து கூற "திங்கட்கிழமையாவது வருவாளா? நாம வேற அவளோட பிறந்தநாளுக்கு கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்" என கிருஷ்ணா கேட்க அதெல்லாம் வந்துடுவா.

  அதெல்லாம் சரி தான். இன்னைக்கு என்ன விசேஷம்? மேடம் இன்னைக்கு புடவை கட்டி என்னைக்கும் இல்லாத திருநாளா பூ வெச்சிட்டு பொண்ணா அடக்க ஒடுக்காம வந்துருக்கீங்க?

  கிருஷ்ணா கேட்டவுடன் காலையில் வினோத்துடன் நடந்தது நினைவுவர சிரித்து கொண்டே நின்றவளை பார்த்து "மேடம் கொஞ்சம் கனவுல இருந்து ஆபீஸ்க்கு வாங்க" என கூற நிகழ்வுக்கு வந்த காவ்யா சமாளித்து கொண்டு "ஒண்ணுமில்ல கிருஷ். காலையில கோயிலுக்கு போய்ட்டு வர லேட் ஆகிடுகிச்சு. அதான் அப்படியே வந்துட்டேன்" என கூற நம்பிட்டேன் என்றபடி தன் வேலையை பார்க்க சென்றாள்.

  மாலை தன் வீட்டிற்கு வந்த காவ்யாவை பார்த்த அவள் தாய் வசந்தா "என்ன இன்னைக்கு அதிசயமா இருக்கு? சீக்கிரம் வந்துட்ட?"

  இன்னைக்கு மதுரா வரலாமா. அதுவும் இல்லாம கொஞ்சம் தலைவலி வேற. அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்". ஒரு காபி கொடுங்காம.

  பத்து நிமிடத்தில் சூடான காபியுடன் வந்தவர் "இன்னும் புடவைய மாத்தமா என்ன பண்ற?"

  மா நான் கொஞ்ச நேரம் மாடியிலே இருக்கேன் என காபி கோப்பையுடன் மாடிக்கு சென்றாள்.

  பக்கத்து மாடியில் வினோத்தின் தம்பி சுகுமாரும் அவனின் நண்பர்களும் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். வினோத் மாடியில் உள்ள அறையில் படித்து கொண்டிருந்தான். காவ்யாவை பார்த்த சுகுமார் அவளிடம் பேச வர மற்றவர்களும் அரட்டையில் இணைந்து கொள்ள ஒரே சத்தமாய் இருக்க வெளிய வந்து பார்த்த வினோத் காவ்யா இருப்பது தெரியாமல் சுகுமாரை திட்டி கீழே செல்ல சொன்னான். அவனும் தன் நண்பர்களுடன் கீழே செல்ல காவ்யாவும் கீழே செல்ல எழுந்தாள். அப்பொழுதுதான் காவ்யாவை பார்த்த வினோத் அவளை கூப்பிட "நீயும் இங்க தான் இருக்கியா? நீ கிளாஸ் போய்ட்டானு நினைச்சேன். லீவா இன்னைக்கு?

  ஆமா காவ்யா. நீ என்ன இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?

  கொஞ்சம் தலைவலி வினோத். அதுதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். மேலே என்ன பேசுவதென்று இருவருக்கும் தெரியவில்லை. இருவரும் காலையில் நடந்ததை எண்ணி அமைதியாக நிற்க வினோத் மௌனத்தை களைத்தான்.

  "சாரி காவ்யா. காலையில உன்கிட்ட அப்படி நடந்ததுக்கு. நீ விழக்கூடாதுன்னுதான் உன்னை பிடிச்சேன். ஆனா கை எக்குத்தப்பா பட்ருச்சு" என அவளின் இடையை பார்த்து கொண்டே சொல்ல அவனின் பார்வை சென்ற இடத்தை உணர்ந்து எதுவும் பேச முடியாமல் நின்றாள்.

  எதுவும் சொல்லாமல் நான் கீழே போறேன் என சொல்லிவிட்டு செல்ல அவள் கோபமாக இருப்பதாக வினோத் நினைத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்றான்.

  அடுத்து வந்த சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாளும் வினோத்தால் காவ்யாவை பார்க்கமுடியவில்லை. காவ்யாவும் வினோத்தை பார்ப்பதை தவிர்த்தாள். தன் மனசுக்கும் புதிதாக வந்திருக்கும் உணர்வு என்னதென்று புரியாமல் குழம்பி இருக்கையில் வினோத்தை பார்த்தால் மேலும் குழம்பும் என்பதால் அவனை காண்பதை தவிர்த்தாள். இதை அறியாத வினோத் அவளின் கோபத்தை எப்படி சரியாக்குவது என யோசித்து கொண்டிருந்தான்.

  தேடல் தொடரும்...
   
  vens and sarah rose like this.
   
 3. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  50
  Likes Received:
  45
  Trophy Points:
  38
  காதலை தேடி - 8

  ஹாய் பிரண்ட்ஸ். .. காதலை தேடி அத்தியாயம் - 8 போட்டுட்டேன். படிச்சுட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க தோழிகளே !!!!

  திங்கட்கிழமை தன் தாய் தந்தையரிடம் ஆசிர்வாதம் வாங்கிய மதுரா அவர்கள் கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாலும் அருளிடம் இருந்து மேற்கொண்டு எந்தவொரு பதிலும் வராததால் சற்றே உற்சாகமிழந்து காணப்பட்டாள்.

  "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" மதுரா என கிருஷ்ணா, ருத்ரா வாழ்த்தினர்.

  என்ன மது இன்னைக்கு எங்க டிரீட்?

  எங்க போகலாம்? நீயே சொல்லு கிருஷ்.

  ம்ம் சாயங்காலம் ஆறு மணிக்கு ஐஸ்கிரீம் பார்லர் போறோம் ஓகேவா? காவ்யா, ருத்ரா உங்களுக்கு ஓகேவா?

  எங்களுக்கும் ஓகே தான். சரி மதுரா எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு. அப்புறம் பாக்கலாம் என ருத்ரா கிளம்பு அனைவரும் தங்கள் வேளையில் மூழ்கினர்.

  மதுரா மட்டும் தன் கவலையை மறைத்து வெளியில் சிரித்து கொண்டிருந்தாள். என்ன தான் அவள் மறைத்தாலும் காவ்யாவின் கண்கள் அவளை கண்காணித்து கொண்டே இருந்தது.

  பதினோரு மணிக்கு ருத்ராவிடமிருந்து கேபிடேரியாக்கு வருமாறு மற்ற மூவருக்கும் மெசேஜ் வர அனைவரும் அங்கே ஆஜராகினர். அவர்கள் வருவதற்குள் ருத்ரா கேக் வெட்ட ஏற்பாடு செய்திருந்தாள். மதுராவிற்கு இவை அனைத்தும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஏதோ ஒன்று மனதிற்குள் அழுத்தி கொண்டிருந்தது.

  மாலை அனைவரும் ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்று அவரவர்க்கு பிடித்தமானதை ஆர்டர் கொடுத்துவிட்டு பேசிக்கொண்டிருக்க, மதுரா இரண்டு நாட்காளாக செல்லாத முகநூலுக்குள் சென்றாள். அருளிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது. உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாது உள்பெட்டியை திறந்து பார்த்தால் "பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்றிருந்தது. அவனிற்கு எப்படி தெரியும் என யோசித்து கொண்டிருக்கையில் அவளின் பிரெண்ட் ரிக்வஸ்ட் அக்செப்ட் செய்திருந்தான். அவள் இருதினங்களாக முகநூல் செல்லாததால் அவளிற்கு தெரியவில்லை.

  அருளின் பிறந்தநாள் வாழ்த்தை பார்த்தவளின் முகம் பிரகாசமாய் மாற உடனடியாக அவனிற்கு நன்றி என பதில் அனுப்பினாள்.

  பின் அனைவரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பு காவ்யாவும், மதுராவும் தத்தம் நினைவுகளில் இருக்க அமைதியாக வீடு வந்து சேர்ந்தனர்.

  இன்றுடன் வினோத்திடம் பேசி மூன்று நாட்களாகியது. அவனிடமிருந்து வந்த மெசேஜ் எதற்கும் காவ்யா பதில் அனுப்பவில்லை. காவ்யா அவளின் சிந்தனையில் மூழ்கியிருந்த அதே வேளையில் மதுராவிற்கு அருளிடமிருந்து பதில் வந்தது.

  சம்பிரதாய கேள்விகளான சாப்பிட்டாயா? தூங்கலையா? என்று ஆரம்பித்தது இருவரின் உரையாடல்.

  என்னை உங்களுக்கு நியாபகம் இருக்கா அருள்?

  உண்மைய சொல்லனும்னா என்னொட பிரெண்ட்ஸ்ல யாரோ தான் என்ன கிண்டல் பண்றாங்கனு நினைச்சேன்.

  இன்னமும் என்னை நம்பலையா நீங்க? – மதுரா

  என்னோட வண்டி நம்பர், பிரெண்ட்ஸ் பத்தி நீங்க சொன்னதவச்சு பார்க்கும்போது உண்மை தான் சொல்றீங்கனு தோணுது. ஆனா உங்கள யாருனு தான் நினைவு வரல. ஒருவேளை உங்க போட்டோ பார்த்த நியாபகம் வரும்னு நினைக்கிறேன்.

  லேபிள் தன் தோழிகளுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அருளிற்கு அனுப்பினாள்.

  உங்க கூட இருக்குற மத்தவங்கள பார்த்த மாதிரி இருக்கு. இதுல நீங்க யாரு?

  பச்சை கலர் சுடிதார்ல இருக்க பொண்ணு தான் நான்.

  ம்ம்ம் எங்கேயோ பார்த்த மாதிரி தான் இருக்கு. – அருள்

  ரொம்ப சமாளிக்காதிங்க அருள். உங்களுக்கு நியாபகம் இல்லனு தெரியும்.

  ஹிஹிஹி.. கண்டுபிடுச்சுட்டிங்களா? எனக்கு கொஞ்சம் நியாபகசக்தி கம்மிங்க.

  பனைமரத்துல பாதி உயரம் படைச்ச கடவுள் கொஞ்சம் அந்த மண்டைகுள்ள மூளையும் வச்சுயிருக்கலாம்.

  ஹலோ.. யாருக்கு மூளை இல்லனு சொல்ற? பார்க்க வாத்து மாதிரி இருந்துட்டு என்னையே கலாய்க்குறீயா?

  என்னது வாத்தா? மிஸ்டர் ஒட்டகசிவிங்கி. நீங்க ஒவரா வளந்துட்டு என்ன வாத்துனு கிண்டல் பண்றீங்களா?

  நீங்க, வாங்க என மரியாதையாய் ஆரம்பித்த உரையாடல் நீ, வா என மாறியது. நள்ளிரவை தாண்டியும் இருவரும் பேசிகொண்டிருக்க எப்பொழுது தூங்கினர் என இருவருக்கும் தெரியாது.

  இரவு வெகு நேரம் விழித்திருந்ததால் காலையில் கண்கள் சிவந்திருக்க குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி கொண்டு கிட்சனிற்கு வந்தாள் மதுரா.

  தன் அன்னைக்கு சமையலில் உதவியவள் அருளிடம் பேசிய உற்சாகத்திலே அலுவலகம் கிளம்பி சென்றாள்.

  காவ்யா, அந்த கொசுவ (டீம் லீடர்) ஏதாவது பண்ணனும் டி. இன்னைக்கு காலைல என்னோட ரிப்போர்ட்ல மிஸ்டேக் இருக்குனு சொல்லி மெயில் அனுப்பினான். சரி எந்த இடத்துல கரெக்‌ஷன் பண்ணனும்னு கேட்டதுக்கு நீயே கண்டுபிடுச்சு சரி பண்ணுன்னு சொல்லிட்டான். இன்னைக்கு முழுக்க உட்கார்ந்து முண்ணூறு பக்கத்த படிச்சு பார்த்து கண்ணெல்லாம் எரியுது. இதே அந்த திவ்யாவோட ரிப்போர்ட்டா இருந்தா எவ்ளோ தப்பு இருந்தாலும் ஒன்னும் சொல்லமா சிரிச்சுகிட்டே டெலிவர் பண்ணுவான் என கிருஷ்ணா புலம்பி கொண்டிருந்தாள்.

  சரி விடு கிருஷ். அந்த கொசுவ மருந்தடிச்சு விரட்டிடலாம் என மதுரா சொல்ல கண்டிப்பா ஏதாவது பண்ணனும் மது.

  ஏய் கிருஷ்! விடு இதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற? அடுத்த வாரம் எங்காவது வெளிய போகலாமா? என ருத்ரா கேட்க காவ்யா மாலுக்குப போகலாம் என்றாள்.

  ருத்ரா பீச் என சொல்ல ஆளாளுக்கு ஒரு இடம் சொல்ல கடைசியாக சினிமாவுக்கு போகலாம் என முடிவு செய்தனர்.

  சரி. அப்போ அன்னைக்கு நம்ம மதுராவோட டிரீட்.

  அடிபாவிங்களா.. இப்போ தானே நான் ஐஸ்கிரிம் பார்லர்ல டிரீட் கொடுத்தேன்?

  சரி விடு மது. மாச கடைசில. நீயே கொடுத்துடு என மற்ற மூவரும் சொல்ல, வேற என்ன பண்றது? கொடுத்து தொலையிறேன் என ஒத்துகொண்டாள்.

  அடுத்த புதன்கிழமை எல்லாருக்கும் ஓகேவா? டிக்கெட் புக் பண்ணிடுறேன். கடைசி நிமிஷத்துல யாரும் சொதப்பிடாதிங்க தெய்வங்களா…

  ஹே மது. இந்த இரண்டு பேரையும் கூட்டிட்டு வர வேண்டியது என் பொறுப்பு என கிருஷ் உறுதி மொழி கொடுக்க அனைவரும் கிளம்பினர்.

  எந்த வித அரவாரமுமின்றி அந்த வாரம் இனிதே முடிந்தது. மதுரா அருளிடம் பேசும் நேரம் நள்ளிரவையும் தாண்டி சென்று கொண்டிருந்தது. காவ்யா வினோத்தை பார்த்து இரண்டுவாரமாகியது. வினோத் தொடர்ந்து காவ்யாவிற்கு மெசேஜ், போன் கால் செய்து கொண்டிருந்தான். ஏதாவது காரணம் கூறி காவ்யாவை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றால் அங்கும் அவள் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.

  பாலாவிடம் மின்னூட்டி (Charger) வாங்குவது போல், வசந்தாவிடம் ஏதாவது கொடுப்பது போல் என எத்தனை முறை வந்தாலும் காவ்யாவை அவனால் சந்திக்க முடியவில்லை.

  பாலா எங்க உங்கவீட்டு குட்டி பிசாசு? இன்னும் ஆபீஸ்ல இருந்து வரலையா?

  அதெல்லாம் அக்கா எப்போவோ வந்தாச்சு. உள்ளே ரூம்ல இருக்காங்க.

  இவர்களின் குரல் கேட்டும் காவ்யா அறையை விட்டு வெளியே வரவில்லை. சிறிது நேரம் பாலாவிடம் பேசிக்கொண்டு காவ்யாவின் வருகைக்காக காத்திருந்தவன் அவள் வேண்டுமென்றே வராமலிருப்பது புரிய தன் வீட்டிற்கு கிளம்பினான்.

  திமிரு பிடிச்சவ. இந்த இரண்டு வாரத்துல எத்தனை மெசேஜ், போன் கால் பண்ணாலும் எடுக்க மாட்டிங்குற. அன்னைக்கு தெரியாம நடந்த விஷயத்துக்கு மன்னிப்பு கேட்டும் என்னை வேணும்னே பார்க்காம தவிர்க்குறா என வினோத் காவ்யாவின் விலகலை தாங்க முடியாமல் புலம்பி கொண்டிருக்க அங்கே காவ்யவோ சுய சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.

  இத்தனை வருஷமா இந்த வினோத் கூட பழகிட்டு இருக்கோம். ஏன் இந்த இரண்டு வாரமாவே அவன் முகத்தை பார்த்து பேசமுடியல? ஒருவேளை இதுக்கு பேருதான் வெட்கமா? ஐயோ காவ்யா உன்ன இப்படில யோசிக்கவச்சுட்டானே இந்த வினோ. இதுக்கு முன்னாடில எத்தனையோ தடவ வினோ தொட்டு பேசிருக்கான். இப்போ மட்டும் என்ன புதுசா இருக்கு? அன்னைக்கு மாடில நின்னு பேசுறப்ப வேற அந்த பார்வை பார்த்து வச்சானே. அத தாங்க முடியாம தானே கீழ ஓடிவந்துட்டேன். அதுசரி அவன் ஏன் அப்படி பார்த்தான்?
  என காவ்யா சுய ஆராய்ச்சி நடத்தி கொண்டிருந்தாள்.

  தேடல் தொடரும்.....
   
  Rophina Sibi likes this.
   
 4. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  50
  Likes Received:
  45
  Trophy Points:
  38
  ஹாய் டியர்ஸ்... அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். போன அத்தியாயத்துக்கு லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி... அதே மாதிரி இதையும் படிச்சுட்டு லைக், கமெண்ட் தட்டிவிடுங்க டியர்ஸ்...

  உங்க கமெண்ட்ஸ் தான் என்னை மாதிரி வளர்ந்து வரும் எழுத்தாளருக்கு எனர்ஜி டானிக்... நிறைய தோழிகள் படிச்சுட்டு சைலண்டா இருக்கறதுனால என்னோட கதை உங்களுக்கு பிடிச்ச்சுருக்க? இல்லையானு தெரியல பிரண்ட்ஸ்.... ஏதாவது குறை இருந்தால் சுட்டி காட்டுங்க... உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கேன் தோழிகளே....


  காதலை தேடி - 9

  அன்று தீபக், ருத்ராவிற்கு உதவி செய்ததிலிருந்து இருவருக்குமான நட்பு இன்னும் நெருக்கமானது. ருத்ரா வீட்டிற்கு கிளம்ப நேரமானால் தீபக்கும் உடனிருந்து அவளுடன் கிளம்புவான்.

  ஹாய் தீபக்.... என்ன இன்னைக்கு இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட?

  முக்கியமான ரிபோர்ட் ஒன்னு டெலிவெர் பண்ணனும். அதுசரி நீ என்ன அதிசயமா எட்டு மணிக்கு வந்துட்ட?

  ஓ அதுவா... இன்னைக்கு படத்துக்கு போகலாம்னு பிளான் பண்ணிருக்கோம்.

  எத்தனை மணி ஷோ?

  சாயங்காலம் ஆறு மணி.

  வீட்டுல சொல்லிட்டியா ?

  ஈவ்னிங் ஷோனு சொன்னா எங்க அம்மா என்னை பேயோட்டிடுவாங்க. அதான் காவ்யா கூட வெளிய போறன்னு சொல்லிருக்கேன்.

  சரி சரி வீட்டுக்கு பத்திரமா போ. நானும் இணைக்கு நைட் ஊருக்கு கிளம்புறேன். சனிக்கிழமை தான் வருவேன்.

  என்னது மூணு நாள் லீவா? உனக்கு மட்டும் எப்படி லீவ் கொடுத்தாங்க?

  தங்கச்சிய பொண்ணு பார்க்கவராங்க. அதான் அம்மா வேலூர்க்கு வர சொல்லிருக்காங்க. உனக்கு தான் எங்க அப்பாவை பத்தி தெரியுமே. எப்போதும் குடி தான். மாப்பிளை வீட்ல இருந்து வரும்போது நானும் கூட இருந்த அம்மாக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும்.

  ம்ம் சரி... இந்த இடம் கண்டிப்பா அமைஞ்சிடும். கவலைப்படாம போய்ட்டு வா.

  இந்த சம்பந்தம் முடிஞ்சுடுச்சுனா கல்யாணத்துக்கு கொஞ்சம் பேங்க்ல லோன் போடணும். அப்புறம் ஆபீஸ்லயும் லோன் போடலாம்னு இருக்கேன்.

  ம்ம் நம்ம மேனேஜர் கையெழுத்து போட்டா சீக்கிரம் கிடைச்சிடும் தீபக். கவலைப்படாம வேலையை பாரு. எல்லாம் நல்லபடியா நடக்கும். தீபக்கிடம் பேசிவிட்டு ருத்ரா தன் இடத்திற்கு வந்து வேலையை தொடர்ந்தாள்.

  ருத்ராவுடன் பேசியபின் சமாளிக்கலாம் என தைரியத்துடன் தன் வேளையில் மூழ்கினான்.

  மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள் சுமார் பதினைந்து நிமிடத்தில் அந்த வணிக வளாகத்தை அடைந்தனர்.

  படம் ஆரம்பிக்க இன்னும் அரை மணிநேரம் இருக்கவே அங்குள்ள கடைகளில் சுற்றி திரிந்து படம் ஆரம்பிக்க பத்து நிமிடம் இருக்கும்முன் தங்கள் இருக்கையை தேடி உட்கார்ந்தனர். படம் முடிந்து வெளியே வந்த போது மணி ஒன்பதரையை நெருங்கி கொண்டிருந்தது. காவ்யாவும், மதுராவும் ஒரு வண்டியில் சென்றுவிட ருத்ரா, கிருஷ்ணாவை பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.

  பாதி வழியிலேயே வண்டி நின்றுவிட என்ன தெய்வதென்று தெரியாமல் பக்கத்தில் ஏதேனும் வாகனம் பழுது பார்க்கும் கடை உள்ளதா? என ஒரு கடையில் விசாரித்து கொண்டிருந்தாள்.

  ச்சே! நேரங்காலம் தெரியாமா இந்த வண்டி வேற படுத்துதே. ஏற்கனவே அம்மா வேற இரண்டு தடவ போன் பண்ணிட்டாங்க. அன்னைக்கு பத்து மணிக்கு போனதுக்கே அவ்ளோ திட்டு விழுந்தது.

  இப்போ என்ன பண்றது என யோசித்து கொண்டிருக்கையில் தீபக்கின் நினைவுவர அவனது செல்பேசிக்கு அழைத்தாள். இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்காமல் போக இவன் வேற ஊருக்கு கிளம்பிறேன்னு சொன்னான். ஒருவேளை ஊருக்கு கிளம்பிட்டானோ.

  பாப்பா உன்ன ரொம்ப நேரமா பார்த்துட்டு இருக்கேன். ஏதாவது பிரச்சனையா.

  அது வண்டி பாதிலேயே நின்னுடுச்சு. என்ன பிரச்சனைன்னு தெரியல.

  அய்யயோ... உங்க வீடு எங்க மா பாப்பா இருக்கு?

  ராயபுரம் ணா...

  இங்க இருந்து ராயபுரம் போகணும்னா இரண்டு பஸ் மாறனுமே பாப்பா... சரி எனக்கு தெரிஞ்ச கடை ஒன்னு இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல மூடிடுவான். நீ இப்போ என்கூட வந்தா வண்டிய சரி பண்ணிடலாம்.

  அந்த டீக்கடை அண்ணா பக்கத்துல எதுவும் கடை இல்லனு சொன்னாங்க...

  அது அந்த ஆளுக்கு தெரியாது பாப்பா.... தோ அந்த சந்து தெரியுது பாரு அங்க தான் இருக்கு. இங்க இருந்து அஞ்சு நிமிஷம் தான் ஆகும் என ஒரு இருட்டு பாதையை காண்பிக்க ருத்ரா சுத்தரித்தாள். அவள் பதில் கூறுவதற்குள் தீபக்கிடமிருந்து அழைப்பு வந்தது.

  ஹலோ தீபக்...

  சொல்லு ருத்ரா.... என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?

  அதுவந்து... ஒண்ணுமில்லை... நீ ஊருக்கு கிளம்பறேன்னு சொன்னியே கிளம்பிட்டியா?

  ம்ம்... இப்ப தான் வீட்ல இருந்து கிளம்புறேன்... சரி நீ எங்க இருக்க? வீட்டுக்கு வந்துட்டியா?

  அது... வரவழியில வண்டி நின்னுடுச்சு. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல...இங்க பக்கத்துல கடையும் இல்ல... பக்கத்துல ஒருத்தன் நின்னுகிட்டு ஒருமாதிரி பாக்குறான்... எனக்கு பயமா இருக்கு தீபக் என்று சொல்லும்போது அவள் குரலில் உள்ள பதற்றத்தை கண்டுகொண்டவன் "சரி நீ இப்போ எங்க இருக்க சொல்லு?

  அவள் இடத்தை கூறியவுடன் பத்து நிமிடத்தில் தன் வண்டியில் அங்கு வந்து சேர்ந்தான். தீபக் வரும்வரை அந்த ஆளும் அங்கேயே நின்று கொண்டு அவளிடம் பேச்சு கொடுக்க, ருத்ரா எதற்கும் பதிலளிக்காமல் அவனின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தவள் அவனை பார்த்தவுடன் வேகமாக அவனிடம் சென்றாள்.

  ருத்ரா பேச வாய் திறக்கும் முன் "அறிவில்லை உனக்கு? சினிமா போறதுக்கு வேற நேரமே கிடைக்கலையா உனக்கு?" இந்த நேரத்துல அதுவும் இந்த மாதிரி இடத்துல தனியா நிக்குற? அப்படி என்ன உனக்கு சினிமா முக்கியமாப்போச்சு? என அவன் திட்டி கொண்டு போக "வண்டி இப்படி பாதியிலேயே நிக்கும்னு எனக்கு எப்படி தெரியும்?"

  "எதிர் கேள்வி கேட்க தெரியுதுல்ல? அப்போ ஜான்சி ராணி தனியாவே போக வேண்டியது தானே? என்ன எதுக்கு கூப்பிட்ட?"

  ஏற்கனவே பயத்தில் இருந்தவள் தீபக் திட்டவும் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவள் அழுவதை பார்த்தவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அவளை பின்னாடி ஏற சொன்னான். அவள் ஏறாமல் யோசித்து கொண்டிருக்க, "என்ன வீட்டுக்கு போற எண்ணம் இருக்கா? இல்லையா?"

  "அதுவந்து என்னோட வண்டிய என்ன பண்றது?" சற்று யோசித்தவன் பக்கத்தில் உள்ள கடையில் நாளை வந்து வண்டியை எடுத்து கொள்வதாக சொல்லி அங்கே வண்டியை விட்டுவிட்டு கிளம்பினர்.

  உங்க வீட்ல போன் பண்ணி சொல்லிடு. நேரமாச்சுனு அவங்க பயப்படப்போறாங்க. சரி என தலையாட்டியவள் தன் அம்மாவிற்கு போன் செய்து வண்டி பழுதடைந்து விட்டதாகவும் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக கூறி செல்லை அணைத்தாள்.

  ருத்ரா வீட்டிற்கு திரும்பும் முனையில் வண்டியை நிறுத்தியவன் "இங்கேயே இறங்கிடு ருத்ரா. இந்த நேரத்துல உன்னோட வீட்ல இறக்கிவிட்டா தேவையில்லாத பிரச்சனை வரும்".

  சாரி தீபக். என்னால உனக்கும் தேவையில்லாத சிரமம்.

  அதெல்லாம் ஒன்னும் சிரமம் இல்ல.. நீ கிளம்பு... நாளைக்கு மறக்காம வண்டியை அந்த கடையில இருந்து எடுத்துடு.

  அவள் கிளம்பாமல் இருப்பதை பார்த்து இன்னும் என்ன?

  நீ ஊருக்கு போறத வேற கெடுத்துட்டேன். என்னை மன்னிச்சுடு.

  இதுக்கு ஏன் இவ்ளோ கவலைப்படற? இப்போ கிளம்பினால் கூட காலைல போயிடுவேன்.

  ரொம்ப நன்றி தீபக்... நீ மட்டும் சரியான நேரத்திற்கு வரலைனா என்ன பண்ணிருப்பேனோ.

  நன்றியெல்லாம் வேண்டாம். இனியாவது கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ....
  நா கிளம்புறேன்...

  தன் வீட்டிற்கு வந்தவள் தன் தாயிடமும் தாமதமாக வந்ததற்கு சிலபல திட்டுக்களை பெற்றுக்கொண்டு தன் அறைக்கு வந்தாள்.

  கட்டிலில் படுத்தவள் தற்பொழுது நடந்த அனைத்தும் படமாய் ஓட, "ஏன் தனக்கு ஒரு துன்பம் என்றதும் தீபக்கின் நினைவு வரவேண்டும் என சிந்தனையில் மூழ்கினாள்".

  தேடல் தொடரும்.....
   
   
 5. devamathi

  devamathi Wings New wings LW WRITER

  Messages:
  50
  Likes Received:
  45
  Trophy Points:
  38
  காதலை தேடி - 10

  ஹாய் டியர்ஸ்... அடுத்த அத்தியாயம் போட்டுட்டேன். போன அத்தியாயத்துக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவரும் நன்றி... அதே மாதிரி இதையும் படிச்சுட்டு லைக், கமெண்ட் தட்டிவிடுங்க டியர்ஸ்...


  அடுத்த நாள் ருத்ரா தன தோழிகளிடம், இரவு நடந்த அனைத்தையும் சொல்லி கொண்டிருந்தாள்.

  "ருத்ரா, எனக்கு ஒரு சந்தேகம்?"

  "என்ன சந்தேகம்?"

  எனக்கு ஒரு போன் பண்ணியிருந்தா நானே வந்திருப்பேனே? பக்கத்தில இருக்க என்ன விட்டுட்டு ஊருக்கு கிளம்புற தீபக் எதுக்கு கூப்பிட்ட?

  ஐயோ பயபுள்ள சரியா கேள்வி கேட்குதே... எனக்கு தெரிஞ்சா சொல்லமாட்டேனா? சரி சமாளிப்போம்.... என மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தவளை "அதுதானே. காவ்யா நீயா இவ்ளோ புத்திசாலியா கேள்வி கேக்குற?" என கிருஷ் கேட்க, ஆமா இப்போ அது தான் ரொம்ப முக்கியம். ருத்ரா நா கேட்டதுக்கு முதல்ல பதில சொல்லு.

  அது... அது ரொம்ப நேரமாகிடுகிச்சு... நீ எப்படி தனியா வருவ? உங்க வீட்டிலேயும் திட்டுவாங்க... அதுதான் தீபக்கை கூப்பிட்டேன்.

  அவளை நம்பாத பார்வை பார்த்த தோழிகளை எப்படி சமாளிப்பது என யோசித்து கொண்டிருக்க "நேத்து படம் சூப்பர்ல... என கிருஷ் பேச்சை மாற்ற...

  ஜெயம் ரவி செம்மயா இருந்தாருல்ல?

  ஆமா மது... அவருக்காகவே இன்னொரு தடவ அந்த படத்தை பார்க்கலாம் போல...

  காவ்யாவும் சேர்ந்து கொள்ள ருத்ரா மனதிற்குள் கிருஷ்ணாவிற்கு நன்றி கூறிக்கொண்டிருந்தாள்.

  அடுத்து வந்த ஒரு மாதமும் காவ்யா, வினோத்தின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர, மதுரா, அருளின் உறவிலும் எந்த மாறுதலும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.

  தன் பல்பொருள் அங்காடியை அடைத்துவிட்டு இரவு பதினோரு மணிக்கு வீட்டிற்கு வந்த சந்திரன் சாப்பிட்டுவிட்டு சரோஜாவை கூப்பிட்டு வினோத்தை கூப்பிட சொல்ல "ஏங்க அவன் மாடில படிச்சுட்டு இருக்கான்".

  பரவால்ல வர சொல்லு.

  எதுக்கு இவரு கூப்பிடறாருன்னு தெரியலையே என்ன பிரச்சனை பண்ண போறாரோ என பயத்துடன் வினோத்தை அழைக்க, சொல்லுங்கப்பா என்று வந்து நின்றான்.

  என்னடா பரிட்சைக்கு ஒழுங்கா படிக்குறீயா? இன்னும் இருபது நாள் தானே இருக்கு? கடைசி தடவ மாதிரி இந்த முறையும் கோட்டவிடாம ஒழுங்கா தேர்ச்சியாகுற வழிய பாரு.

  சரிப்பா என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றேன்.

  என்னது முயற்சி பண்றியா? பாத்தியா சரோஜா. இவன் என்ன சொல்றான்னு? முயற்சி பண்றானாம். அப்போ உனக்கு தேர்ச்சி அடையணும்னு எண்ணம் இல்லை. அப்படித்தானே?

  நா அப்படிசொல்லல பா. நானும் கஷ்டப்பட்டு தான் படிச்சிட்டு இருக்கேன்.

  உன்னோட சின்ன பசங்களாம் நல்லா படிச்சிட்டு வேலைக்கு போறாங்க. நா உன்ன வேலைக்கா போக சொல்றேன்? நல்லா படிச்சு ஒரு அரசாங்க வேலைக்கு தானே போக சொல்றேன்.

  அருகிலிருந்த சரோஜா எதுவும் பேசாதே என கண்ணை காட்ட, வினோத் அமைதியாக நின்று கொண்டிருந்தான்.

  "நா இவ்ளோ பேசிட்டு இருக்கேன். அவன் பதில் சொல்லாம அமைதியா இருக்கான் பாத்தியா?" என சந்திரன் அதற்கும் பேச அவன் இந்த முறை ஒழுங்கா எழுதுவான். நீங்க வந்து தூங்குங்க".

  "எரும மாடு மாதிரி வளர்ந்துருக்கான். இன்னும் இவன உட்காரவைச்சு நான் தான் சோறு போடவேண்டியதா இருக்கு".

  "அப்பா, இப்போ கூட எனக்கு இந்த அரசாங்க வேலைல ஆர்வம் இல்ல. நீங்க ஆசைபட்டிங்கனு தான் இதுக்கு முயற்சி பண்றேன். நான் படிக்கும் போதே தேர்வாகியிருந்த வேலைல கூட சேராம உங்களுக்காக தான் எனக்கு பிடிக்கலைனாலும் படிச்சுட்டு இருக்கேன்".

  என்னைக்கும் எதிர்த்து பேசாதவன் இன்னைக்கு பேச ஒருகட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த சந்திரன் வினோத்தின் மேல் கையை நீட்டிவிட்டார்.

  "என்னங்க தோளுக்கு மேல வளர்ந்த புள்ளைய அடிக்கிறீங்க?" என சரோஜா இருவருக்குமிடையே வர அவருக்கும் இரண்டு அடி விழுந்தது. எதிலும் தலையிடாமல் நின்று பார்த்து கொண்டிருந்த சுகுமார் ஏதாவது பேசுனா அப்பாக்கு இன்னும் கோபம் தான் வரும் என்று வினோத்தை மாடிக்கு அனுப்பினான்.

  எல்லாம் முடிந்து படுக்க சென்ற சுகுமாருக்கு, பாலவிடமிருந்து அழைப்பு வந்தது.

  உன்னோட மடிக்கணினி வேணும்டா. நா இப்போ வீட்டுக்கு வரட்டுமா??

  இப்போ வேண்டாம் பாலா. நானே காலைல வந்து தரேன். வீட்ல அப்பா ஒரே பிரச்சனை. அண்ணணனை வேற அடிச்சுட்டாரு.

  என்னடா சொல்ற? என்னாச்சு?

  சுகுமார் நடந்ததை அனைத்தும் பாலாவிடம் கூற, சரிடா நீ காலையிலேயே கொடு.

  பாலா நடந்த அனைத்தையும் காவ்யாவிடம் கூற காவ்யாவிற்கு வினோத்தை அப்போதே பார்த்து ஆறுதல் கூற வேண்டும் போலிருந்தது. தன் கைபேசியில் இருந்து பல நாட்களுக்கு பிறகு வினோத்திற்கு மெசேஜ் செய்தாள்.

  ஆனால் கைபேசியை பார்க்கும் மனநிலையில் வினோத் இல்லை. பல முறை மெசேஜ் செய்தும் பதில் இல்லாததால் அவனிற்கு அழைத்தாள். இரண்டு முறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படாமல் போக யாருக்கும் தெரியாமல் மாடிக்கு சென்றாள். மறுபடியும் ஒருமுறை கைபேசியிலிருந்து அழைக்க இம்முறை அழைப்பை எடுத்த வினோத் பதில் பேசாமல் அமைதியாக இருக்க "ஹலோ வினோத். வெளிய வா. நான் எங்க மாடியில தான் இருக்கேன்".

  "காவ்யா இப்போ உன்கிட்ட பேசுற மனநிலைமைல நான் இல்லை. கொஞ்சம் என்னை தொந்தரவு பண்ணாம நீ போய் தூங்கு".

  "இப்போ நீ வெளிய வரலைனா நான் எகிறி குதிச்சு உன்னோட அறைக்கு வருவேன்".

  "சரி வரேன் என வினோத் வெளியே வந்தான்".

  மதுராவின் அப்பா சண்முகம் ஒரு வரனை பற்றி விஜியிடம் பேசிக்கொண்டிருக்க, இனியும் தாமதிப்பது சரியில்லையென முடிவுக்கு வந்தவள் அருளிற்கு ஹாய் என மெசேஜ் செய்தாள். அருளிடமிருந்து உடனடியாக பதிலும் வந்தது.

  "மதுரா என்ன இன்னைக்கு ரொம்ப அமைதியா இருக்க?"

  "அப்படியா? நான் எப்பவும் போல தான் இருக்கேன் அருள்".

  "இல்லையே.. எப்பவும் நீ தான் அதிகம் பேசுவ... இன்னைக்கு நான் தான் பேசிட்டு இருக்கேன்..."

  "வீட்ல கல்யாணத்துக்கு வரன் பார்த்துட்டு இருக்காங்க.."

  "சூப்பர் மதுரா... உனக்கு பிடிச்சிருக்கா?" என அருள் கேட்க மதுராவிடமிருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. அருளும் மதுராவின் பதிலுக்காக காத்திருக்க பதிலும் வரவில்லை

  ஒரு மணிநேரம் கழித்து அருளிற்கு பதில் மெசேஜ் அனுப்பினாள். "உங்களோட சரிபாதியாய் உங்ககூட வாழக்கை முழுக்க பயணிக்கணும்னு ஆசைப்படுறேன் அருள்..." என தன் மனதில் உள்ள காதலை ஒருவழியாக அருளிடம் வெளிப்படுத்திவிட்டாள். அருளிடம் கூறிவிட்டாளே தவிர அவனின் பதில் என்னவாக இருக்குமென தடதடக்கும் இதயத்துடன் காத்து கொண்டிருந்தாள்.

  அவன் மெசேஜை பார்த்துவிட்டு பதில் கூறாமல் இருக்க, மதுராவிற்கே அவன் தன் காதலை ஒத்துக்கொள்வான் என்று தோன்றவில்லை. எப்படியோ தன்னுடய காதல் தன்னுள்ளே மரித்துப்போக அவள் தயாரில்லை. அருள் தன் காதலை ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும் மதுரா நினைக்கவில்லை. அவளை பொருத்தவரை அவள் காதலை உரியவனிடம் வெளிப்படுத்திவிட்டாள்.

  அருளின் பதில் எப்படி இருந்தாலும் அவள் ஏற்றுகொள்ள தயாராகிருந்தாள். நான் ஒருத்தரை காதலிக்கறேன்னு சொன்னா, அவங்களும் திரும்பி காதலிக்கனும்னு அவசியம் இல்லையே. எதையுமே எதிர்பார்க்காதது தானே காதல் என பலவற்றை யோசித்தவளை அருளின் மெசேஜ் நிகழ்விற்கு கொண்டுவந்தது.

  "சாரி மதுரா. எனக்கு அந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லை. ஆனா நீ கடைசி வரைக்கும் என்னுடைய வாழ்க்கை பயணத்துல ஒரு தோழியாய் கூட வரலாம்".

  "நான் உங்களோட முடிவுக்கு மதிப்பு கொடுக்கிறேன் அருள். ஆனா காதலிச்சவரை என்னால நண்பனாக மட்டும் பார்க்க முடியாது. அப்படியே நான் பழகினாலும் ஏதாவது ஒரு கட்டத்துல என்னையும் மீறி என்னோட காதலை வெளிப்படுத்திடுவேன். அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை உங்களுக்கு கொடுக்க நான் தயாராக இல்லை".

  "இன்னைக்கு தான் உங்ககூட பேசுறது கடைசி. இனிமே உங்கள எந்த விதத்துலையும் தொடர்பு கொள்ளமாட்டேன்" என சொல்லியவள் தன் கைபேசியை அணைத்துவிட்டு தலையணையில் முகம் புதைத்தாள். மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாய் வந்து கொண்டிருந்தது.

  தேடல் தொடரும்.....
   
  sarah rose likes this.
   
Loading...

Share This Page