முதல் முத்தம்

Discussion in 'Poems' started by Tamizhkaathali, Jul 3, 2019.

 1. Tamizhkaathali

  Tamizhkaathali Wings New wings

  Messages:
  12
  Likes Received:
  2
  Trophy Points:
  23
  முதல் முத்தம்

  பனித்துளி ஏந்திடுமே
  சூரியனின் முதல் முத்தம்
  வண்ணமலர் ஏந்திடுமே
  வண்டுகளின் முதல் முத்தம்
  வானமழை ஈந்திடுமே
  மண்ணிற்கு முதல் முத்தம்
  எனக்கான முதல் முத்தம்
  உன்னில் ஏந்திடும்
  நாள் எந்நாளோ

  -தமிழ் காதலி
   
   
 2. Tamizhkaathali

  Tamizhkaathali Wings New wings

  Messages:
  12
  Likes Received:
  2
  Trophy Points:
  23
  முன்னாள் காதலி

  முதல் பார்வையிலேயே ஈர்த்த
  முன்னாள் காதலியே
  வரிவரியாய் கவியெழுதி
  வரித்தேன் உனை முழு மனதில்
  அணுவணுவாய் உன்னை ரசித்து
  அகமகிழும் நிலவிரவில்
  தனித்தனியாய் திரிந்தாலும்
  இணைந்திருந்தோம் மனதளவில்
  இனித்திருந்த காதல் தனை
  ஏன் பிரிந்தாய் எனதுயிர்
  முன்னாள் காதலியே

  - தமிழ்காதலி
   
   
 3. Tamizhkaathali

  Tamizhkaathali Wings New wings

  Messages:
  12
  Likes Received:
  2
  Trophy Points:
  23
  கனவு

  கண்ணிரண்டும் கும்மிருட்டில் வழிகாட்டும் ஒளி விரலாய்
  உனைத் தேடி ஓடிவந்தேன் ஓடிமறைந்தாய் வழிகாட்டி
  காட்டியவழியில் கால்தொடர கண்சுற்றி பார்வையிட
  என்னென்று நானறியேன் உள்ளமதில் பயமுருல
  உணர்வுகள் தடம்புரள உன்குரலை
  செவிமடுக்க
  விதிர்விதிர்த்து விழித்தெழுந்ததேன் விடியலின் கனவினிலே

  - தமிழ்காதலி
   
   
 4. Tamizhkaathali

  Tamizhkaathali Wings New wings

  Messages:
  12
  Likes Received:
  2
  Trophy Points:
  23
  சம்மதம்
  கண்களின் மொழிதனிலே
  கவிவடிக்க
  எண்ணங்களை எழுத்தினிலே
  வரிவடிக்க
  முத்த அச்சாரம் தனைப்
  பதித்து
  சந்தோஷச் சான்றிதழைப் பெற்றிட
  வேண்டும் உன்
  சம்மதமே

  - தமிழ்காதலி
   
   
Loading...

Share This Page