சின்னஞ்சிறு ரகசியம் நீ

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Anusuya chellapandiyan, Aug 13, 2019.

dO you like this story??

 1. Yes

  0 vote(s)
  0.0%
 2. NO

  0 vote(s)
  0.0%
 3. Do better

  0 vote(s)
  0.0%
 1. Anusuya chellapandiyan

  Anusuya chellapandiyan Wings

  Messages:
  4
  Likes Received:
  4
  Trophy Points:
  23
  காதல் கதைதான் தோழிகளே....

  பனியும் ரோரோஜாச்செடியும் போல ஒரு ஜோடியோட காதல் சில்லுனு.....

  காதல் வருவதற்கு காரணம் இருப்பதில்லை
  காரணம் இருந்தால் அது காதலாக இருப்பதில்லை

  விமலேந்திரன்
  பவித்ரா

  கையில் துப்பாக்கியை எடுத்து சத்தம் வந்த திசையை நோக்கி நீட்டிய விமலுக்கு தன்னெதிரில் தெரிந்த பெண் ஆச்சரியத்தை கொடுத்தாலும் அவன் துப்பாக்கியின் முனை இன்னும் எதிரிலிருந்த உருவத்தின் தலைக்கு நேராகதான் இருந்தது. அவளின் மிரண்ட பார்வை அவனுள் ஏதோ செய்ய துப்பாக்கியை கீழிறக்கியவன் மேஜையிலிருந்த பாட்டில் நீரை அவள் முன் நீட்ட அதை பருகியவளின் படபடப்பு குறைந்தது.

  யார் நீ? மணி என்ன தெரியுமா? இந்த இராத்திரியில் இந்த இடத்துக்கு எதற்கு வந்த? என்றவனின் கேள்விக்கு பதில் கூறாமல் அவன் முன் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.
  சற்று முன் பயந்தது அவள்தானா என்று அவனே ஆச்சரியப்படும் அளவுக்கு அவள் புன்னகையுடன் அவனை நோக்கியவள், "ஏன் இவ்வளவு கோவம் விமல்? நேரம் தற்போது அதிகாலை 2.20. உங்களோட பேசணும் அதனால தான் இப்போதே வரவேண்டியதாகி போச்சு. நைட் சாப்டீங்களா இல்லையா?" என்று உரிமையோடு கேட்டுகொண்டே எழுந்து சமையலறைக்குள் நுழைய அவனுக்கு தலை சுற்றாத குறைதான்.
  கோவம் தலைக்கேற அவள் பின்னே சென்றான்.

  "ஹே யார்டி நீ ? நீ பாட்டுக்கு ஏதோ உன் வீடு மாதிரி சமையல் கட்டுக்கு போய் என்ன பண்ணிகிட்டு இருக்க? நான் யார்னு தெரியாம விளையாடிட்டு இருக்க..." என்றவனின் உதடுகளின் மீது அவள் தனது வலது ஆள்காட்டி விரலை வைக்க மேற்கொண்டு பேசாமல் மந்திரத்திற்கு கட்டுபட்டவனை போல நின்றான்.
  இருவரது பார்வைகளும் கலந்து இனம்புரியாத இதத்தை தர அவனுக்கே ஆச்சர்யம் தான் எப்போதும் மற்றவர்கள் அவன் பார்வைக்கு கட்டுப்பட்டுதான் பழக்கம். ஆனால் இன்றோ ??? எத்தனை நிமிடங்கள் கழிந்ததோ ....பொங்கி வரும் பால் வாசனையும் அதன் மெல்லிய சத்தமும் உணர்ந்து முதலில் மந்திர கட்டை உடைத்து வெளியேறியதும் அவளே.
  பாலில் அவனுக்கு பிடித்த பனை வெல்லத்தை தட்டிப்போட்டு ஆற்றி அவன் கைகளில் தந்தவளின் பார்வை எனக்கா உன்னை தெரியாது என்று தம்பட்டம் அடித்தது.
  Friends ithu oru chinna intro. 1st time pannirukken. Ungaloda anbhum comments
   
   
Loading...
Similar Threads - சின்னஞ்சிறு ரகசியம் நீ
 1. Anusuya chellapandiyan
  Replies:
  2
  Views:
  554

Share This Page