எவனோ என் அகம் தொட்டு விட்டான்!!! -நிலா கிருஷி

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Nila krishi, Oct 2, 2019.

 1. Nila krishi

  Nila krishi Wings New wings LW WRITER

  Messages:
  77
  Likes Received:
  546
  Trophy Points:
  73
  images (1).jpg


  அத்தியாயம் 8


  அன்று மாலை.....ஹாஸ்டலுக்குத் திரும்பிய நித்திலாவை....அவளது தோழி காவியாவின் அழுகை ஒலியே வரவேற்றது.நந்தினியும்...வர்ஷினியும் அவளைச் சுற்றி நின்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தனர்.

  "காவ்யா...!என்னடி ஆச்சு...?எதுக்கு இப்படி அழுதுக்கிட்டு இருக்க...?",என்று கேட்டபடி அவளருகே வந்த நித்திலாவை நிமிர்ந்து பார்த்தவள்....மேலும் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

  நின்று கொண்டிருந்த தன் தோழிகளைப் பார்த்தவள்,"ஹே....நந்து!வர்ஷி...!நீங்களாவது சொல்லுங்க....எதுக்கு இவ அழுகறா...?",என்று விசாரிக்க,

  "அவ லவ் மேட்டர் அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சிடுச்சாமாடி.....?",வர்ஷிதான் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினாள்.

  "ஓ....இதுக்குத்தான் இப்படி அழுதுக்கிட்டு இருக்கிறாயாடி காவ்யா....?எப்ப இருந்தாலும்...உங்க வீட்ல சொல்லித்தானே ஆகணும்....?அது இப்போவே தெரிஞ்சிடுச்சுன்னு நினைச்சுக்க....",என்று தோழியை சமாதானப் படுத்தினாள் நித்திலா.

  "இல்ல டி....அவங்க வீட்ல பெரிய பிரச்சன்னையாகி....இப்போ இவளுக்கு வேற பக்கம் மாப்பிளைப் பார்த்துகிட்டு இருக்காங்க....",தயங்கித் தயங்கி நந்தினி கூற,

  இதைக் கேட்டு காவ்யாவின் புறம் திரும்பியவள்,"இந்த விஷயம் ரமேஷ் அண்ணாவுக்குத் தெரியுமா காவ்யா...?",என விசாரிக்க,

  "அவருக்குத் தெரியும் நித்தி....!அவரு...நீ வீட்டை விட்டு வந்திடு....நாம கல்யாணம் பண்ணிக்கிட்டு நம்ம வாழ்க்கையை வாழாலாம்ன்னு சொல்றாரு....", விசும்பல்களுக்கிடையே வந்து விழுந்தன காவ்யாவின் வார்த்தைகள்.

  காவ்யா கூறியதைக் கேட்டு...கோபத்தில் முகம் சிவக்க நிமிர்ந்தவள்....அவளை வறுத்தெடுக்க ஆரம்பித்து விட்டாள்.

  "என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க...?ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா....?கஷ்டப்பட்டு உன்னைப் பெத்து...வளர்த்து....படிக்க வைச்சு ஆளாக்கின உங்க அம்மா அப்பாக்கு....நல்ல பரிசு கொடுக்கப் போற டி....அந்த ரமேஷ் அண்ணாவை உனக்கு ஒரு....ஒரு வருஷம் தெரியுமா...?மிஞ்சிப் போனா...ஒரு ஒன்றரை வருஷம்...?அவங்களுக்காக...22 வருஷம் உன்னைப் பெத்து வளர்த்தின...உன் அம்மா அப்பாவை விடப் போறியா...?".எனத் திட்ட ஆரம்பித்ததாள்.

  நித்திலா திட்டியதைக் கேட்டு முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் காவ்யா.

  "எனக்கு வே...வேற வழி தெரியல டி....அவரு இல்லாத ஒரு வாழ்க்கையை....என்னால நினைச்சுக் கூ...கூட பார்க்க முடியல...",

  பரிதாபமாக தன் முகத்தைப் பார்த்து அழுது கொண்டே கூறியத் தோழியைப் பார்த்தவளுக்குப் பாவமாக இருந்தது.அமைதியாக அவள் தலையை வருடிக் கொடுத்தவள்,"நல்லா யோசிங்க காவ்யா....!இதுக்கு வேற வழி இருக்கும்....ரமேஷ் அண்ணாவைக் குடும்பத்தோட வந்து பொண்ணுக் கேட்க சொல்லு....",எனப் பொறுமையாக எடுத்துக் கூறினாள்.

  தேம்பிக் கொண்டே 'இல்லை' என தலையசைத்தவள்,"அவரு என் அப்பாட்ட பேசிட்டாரு டி....என் அப்பாதான் இரண்டு பேரும் வே...வேற ஜாதின்னு சொல்லி....அவர அவமானப்படுத்தி அனுப்பிட்டாரு....!அந்தக் கோபத்திலதான் அவரு...'உன் அப்பா அம்மாவை விட்டுட்டு வா...நாம கல்யாணம் பண்ணிக்கலாம்....உனக்கு நான் முக்கியமா...?இல்ல....உன் அப்பா முக்கியமான்னு கேட்கிறாரு....",என்றாள்.

  "அதுக்காக....உங்க வீட்டை விட்டு வெளிய வந்து கல்யாணம் பண்ணிக்குவீங்களா....?இது தப்பு காவ்யா....!கொஞ்சம் யோசிச்சுப் பாரு....உன் மேல நம்பிக்கை வைச்சு இருக்கற...உங்க அம்மா அப்பாக்குத் துரோகம் பண்ற மாதிரி இல்ல...",அதற்கு மேல் நித்திலா என்ன சொல்லி இருப்பாளோ,அதற்குள் நந்தினி குறுக்கேப் புகுந்து பேச ஆரம்பித்தாள்.

  "விடு நித்தி....!அவளே ஏற்கனவே குழப்பத்துல இருக்கா....இதுல...நீ வேற அவளை இன்னும் குழப்பற.....இது அவளுடைய வாழ்க்கை....!எதுவா இருந்தாலும்...அவளே முடிவு பண்ணட்டும்...!".

  "அவ வாழ்க்கைதான் டி....நான் ஒத்துக்கிறேன்....!இந்த வாழ்க்கை அவளுக்குக் கிடைக்கக் காரணமா இருந்தது அவளைப் பெத்தவங்கதான....அப்போ...அவங்களுக்கு இல்லாத உரிமையா...?",

  இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த காவ்யா,தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு....ஒரு முடிவோடு நிமிர்ந்தாள்.

  "ஐயோ...!ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கறீங்களா....?நித்தி....!நீ சொல்றது எல்லாமே சரிதான்.....நான் ஒத்துக்கிறேன்....!இந்த வாழ்க்கை என் அம்மா அப்பா எனக்குப் போட்ட பிச்சைதான்....!நான் இல்லைன்னு சொல்லல.... ஆனா.... அதே சமயம் இது என்னோட வாழ்க்கையும் கூட.....என் சந்தோஷப்படி வாழ எனக்கு உரிமையில்லையா....?

  நீ சொல்ற விஷயங்களை....நான் ரமேஷை லவ் பண்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்....இப்ப யோசிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல....!நீ சொல்ற மாதிரி....பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணாம....என் அம்மா அப்பா பேச்சைக் கேட்டு நான் அவங்க பின்னாடி போனா....அப்ப....நான் ரமேஷ்க்கு செய்யறதுக்குப் பேர் என்ன....?அவருடையக் காதலுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்....?",தன்னைப் பார்த்துக் கேள்வி கேட்ட காவ்யாவிற்கு என்ன பதில் சொல்வது என்று நித்திலாவிற்குத் தெரியவில்லை.

  இந்தக் கோணத்தில் அவள் யோசிக்கவேயில்லை.....இருந்தாலும்...நித்திலாவினால் அவள் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை....

  காவ்யாவே மேலும் பேச ஆரம்பித்தாள்."எங்க அப்பா எதுக்காக எங்க காதலை மறுக்கறார்ன்னு தெரியுமா டி.....!ஏன்னா....நாங்க ரெண்டு பேரும்....வேற....வேற ஜாதியாம்....!இந்த உப்பு சப்பில்லாத காரணத்துக்காக நான் என் காதலை விட்டுக் கொடுக்கணுமா.....?"

  "எனக்குப் புரியுது....!நான் எடுக்கப் போற முடிவால...என்னைப் பெத்தவங்க என்ன பாடுபடப் போறாங்கன்னு எ...எனக்குப் புரியுது...பட்....எனக்கு வேற வழி தெரியல நித்தி.....!எங்க குடும்பத்தை மதிச்சு நாங்க அவங்களுக்கு....எங்க காதல பத்தி சொன்னோம்....!ஆனா....அவங்க....",சிறிது இடைவெளி விட்டுத் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவள்,

  "அவங்களுடைய வறட்டு கவுரவுத்துக்காக....என்னால என் காதலை விட முடியாது....!",தீர்மானமாகச் சொன்னவள் எழுந்து சென்று விட்டாள்.

  நீளமாகப் பேசி முடித்த காவ்யாவின் உரையாடலில் மற்ற மூவரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.முதலில் சுதாரித்து....நித்திலாதான் பேச ஆரம்பித்தாள்.

  "என்னடி.....!இப்படி சொல்லிட்டுப் போறா.....?காதலுக்காகப் பெத்தவங்களை விடப் போறேன்னு சொல்றா....?",எனப் பல்லைக் கடித்தவளிடம்,

  "சும்மா கோபப்படாத நித்தி....!காதலிக்கறவங்களுக்குத்தான் அதனோட அருமை தெரியும்....!காவ்யா ஒன்னும் சந்தோஷமா இந்த முடிவை எடுத்திருக்க மாட்டா.....!அவளுக்கும் அவளைப் பெத்தவங்க மேல பாசம் இருக்கும்ல....அதையும் மீறி இந்த முடிவு எடுத்திருக்கான்னா....அவளோட நிலைமையை நாம புரிஞ்சுக்கணும்.....அவளோட நிலைமையில் இருந்தும் நாம யோசிக்கணும்....!",என்று விட்டு சென்று விட்டாள் நந்தினி.

  'அப்படி என்னதான் காதலோ....?அம்மா அப்பாக்குத் தலை குனிவு ஏற்படுத்தற அளவுக்கா.....காதல் இருக்கும்.....!இந்த லட்சணத்துல...காதலிச்சுப் பார்த்தாதான் அதனோட அருமை தெரியுமாம்.....இந்தக் கருமத்துக்காகவே காதல்ங்கிற வார்தையைக் கூட மனசுல நெருங்க விடக் கூடாது....!இப்படிப்பட்ட அவஸ்தையைத் தர காதல் தேவைதானா....?' என்று கசப்பாக எண்ணியவள் மனதில்.....காதலின் மேல் ஒரு வெறுப்பு தோன்றியிருந்தது.

  அவளுக்குத் தெரியவில்லை.....!காதல் அவஸ்தைதான்.....!ஆனால்.....அது சுகமான அவஸ்தை என்று....!!

  பெற்றவர்களை எதிர்த்து திருமணம் செய்வது என்பது தவறுதான்.....!ஆனால்....அங்கு உண்மையான....ஆழமான காதல் இருக்கும் பட்சத்தில்.... தேவையில்லாத வறட்டுப் பிடிவாதத்திற்க்காக காதலை விட்டுத் தர வேண்டிய அவசியமில்லையே....?

  அதைத்தான் காவ்யாவும் செய்தாள்.....!கேவலம் இருவரும் வேறு வேறு ஜாதி என்று அப்பா சொல்லும் காரணத்திற்காக....அவர் பேச்சைக் கேட்டு அவர் பின்னால் சென்றால்....ரமேஷ் என் மேல் வைத்திருக்கும் உண்மையான காதலுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் என்று கேட்டாள்.....?என்னை நம்பி....அவர் மனதை என்னிடம் கொடுத்திருக்கும் போது....எப்படி அவர் மனதுக்கு நான் துரோகம் செய்யட்டும்....?என்று கேட்டாள்.....!!

  அவள் எடுத்த முடிவு ஒருவகையில் சரியானதுதான்....!தேவையில்லாத காரணத்திற்காக உண்மையான காதலை விட்டுத் தர வேண்டிய அவசியமில்லையே.....?ஆனால்.....நித்திலாவினால்தான் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.....!!!

  இப்பொழுது இப்படி யோசிப்பவள்....காதல் தேவன் தன் பூ வலையை அவள் மீது வீசியப் பிறகும்....இதே நிலையில் இருப்பாளா....?பாப்போம்....!!!

  .................................................................................................
   
   
 2. Nila krishi

  Nila krishi Wings New wings LW WRITER

  Messages:
  77
  Likes Received:
  546
  Trophy Points:
  73
  இறுதியாக ரமேஷ் மற்றும் காவ்யாவின் திருமணம் இன்னும் பத்து நாட்களில் என்று முடிவு செய்யப்பட்டது.ரமேஷ் வீட்டில் இவர்களது காதலை ஏற்றுக் கொண்டதால்.... திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தது.

  அன்று ஞாயிற்றுக்கிழமை.......

  அலுவலகத்திற்கு விடுமுறை என்பதால்....தோழிகள் அனைவரும் நேரங்கழித்து எழுந்து....சோம்பலுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். நித்திலா,எண்ணெய் தேய்த்துத் தலைக்குக் குளித்து....முடியை உலர வைத்துக் கொண்டிருந்தாள்.

  அவளருகில் வந்து அமர்ந்த காவ்யா,"என் மேல கோபமா நித்தி....?",என்று மெதுவாகக் கேட்க,

  "சேச்சே....கோபமெல்லாம் இல்ல டி.....!",என்றவள் தன் செல்போனை எடுத்து விளையாட ஆரம்பித்தாள்.அவளது செய்கையே கூறியது....அவளுக்குக் கோபம்தான் என்று...!

  அவளது செல்போனைப் பிடுங்கிக் கீழே வைத்தவள்,நித்திலாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு,"எனக்குத் தெரியும் நித்தி....!உனக்கு என்மேல கோபம்ன்னு.....கொஞ்சம் என் நிலைமையையும் யோசிச்சுப் பாருடி....வேற ஜாதிங்கிறதைத் தவிர...வேற என்ன காரணத்தை சொல்லி இருந்தாலும்....கடைசி வரைக்கும் எங்க அப்பா கூட...அவர் மகளாகவே கூட இருந்து அவருக்கு என் காதலைப் புரிய வைச்சிருப்பேன்.....ஆனா....அவரு....ஏண்டி நீ கூட என்னைப் புரிஞ்சுக்க மாட்டேங்கிற....?இந்த முடிவை நான் சந்தோஷமாவா எடுத்திருப்பேன்னு நினைக்கிற....?",என்றவள் கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

  அவளது அழுகையில் தனது கோபத்தை உதறியவள்,எழுந்து காவ்யாவை அணைத்துக் கொண்டாள்.

  "இல்ல காவ்யா....!அழுகாத.....எனக்கு உன் நிலைமை புரியுது டி....!எனக்கு எந்த கோபமும் இல்ல...ப்ளீஸ்.....அழாத டி....!",என்று அவள் தலையை வருடிக் கொடுத்தாள்.

  இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு அங்கு நின்றிருந்த நந்தினியும்.... வர்ஷாவும்,நிலைமையை மாற்றும் பொருட்டு,"ஹே.....கல்யாணப் பொண்ணு இப்படி அழலாமா.....?இப்படி அழுதுட்டே இருந்தா....முகம் வீங்கிடும்....!அப்புறம் ரமேஷ் அண்ணா,'என் டார்லிங்கை என்ன பண்ணுனீங்கன்னு' கேட்டா நாங்க என்ன பதில் சொல்றது....?",என்று கேலியில் இறங்கினர்.

  அவர்களது கேலி கொஞ்சம் வேலை செய்தது.காவ்யாவின் அழுகைக் கொஞ்சம் மட்டுப்பட்டது.

  அவளை சகஜ நிலைக்குக் கொண்டு வர எண்ணி,"கேர்ள்ஸ்.....!நாம ஷாப்பிங் போலாமா....?காவ்யா மேரேஜ்க்காக நிறைய பர்ச்சேஸ் பண்ணனும்....அவ கல்யாணத்தப்ப நாம எல்லாரும் பட்டுப் புடவைக் கட்டிக்கலாம்.....போலாமா...?",என நித்திலா கேட்க,

  "ஓ....போலாமே.....!வாங்க....வாங்க....!எல்லாரும் ரெடி ஆகுங்க....!காவ்யா.....!கெட்டப்.....எழுந்திருச்சு கிளம்பு.....",என அவளை எழுப்பி குளிக்க அனுப்பிய வர்ஷா,மற்ற இருவரையும் பார்த்து,"நீங்களும் ரெடியாகுங்க....!",என விரட்டினாள்.

  ஒரு வழியாக அனைவரும் கிளம்பி கடைவீதிக்குச் சென்றனர்.தோழிகள் அனைவரும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி....தங்களுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கி முடிக்க மதியம் ஆகியிருந்தது.

  ஒரு பிரபல மாலில் சுற்றிக் கொண்டிருந்தனர்.அங்கிருக்கும் ஒரு கடையில் தொங்க விடப் பட்டிருக்கும் சல்வார் அழகாக இருக்கவும்....அதைப் பார்த்த நித்திலா,"ஏய்.....!அந்த சல்வார் அழகா இருக்கல்ல.....?வாங்கப்பா.....போய் அது என்ன விலைன்னு கேட்போம்....?",என்றபடி முன்னால் செல்ல,

  அவளை இழுத்துப் பிடித்து நிறுத்திய நந்தினி,"ஏய்....!எரும மாடே...!இன்னும் எத்தனை கடைடி ஏறி இறங்குவீங்க....?முதல்ல என் வயித்துக்கு எதாவது வாங்கிக் கொடுத்துட்டு....எங்கேயோ போய்த் தொலைங்க....",என்று கத்தினாள்.

  "அடிப்பாவி....!அதுதான் அப்பப்ப பாப்கார்ன்...ஜூஸ்...மில்க்ஷேக்....ஐஸ்கிரீம்ன்னு உள்ள தள்ளிக்கிட்டே இருந்தயேடி.....இருந்தும் பசிக்குதுன்னா....இது என்ன வயிறா...?இல்ல...வண்ணாந்தாழியா.....?",என்று காவ்யா கிண்டலடிக்க,

  "ஹ.....அதெல்லாம் சைடு டிஷ்....நான் கேட்கறது மெயின் டிஷ்....!இப்போ வாங்கித் தர முடியுமா....முடியாதா....?",

  "சரி....சரி...!வாங்க....!ஃபுட் கோர்ட் போய் சாப்பிட்டுட்டுக் கிளம்பலாம்....",என்றபடி நித்திலா அழைத்துச் சென்றாள்.

  தங்களுக்குத் தேவையானதை ஆர்டர் செய்து,வயிறு முட்ட உண்டவர்கள்.... ஹாஸ்டலுக்குத் திரும்பத் தயாரானார்கள்.நித்திலாவின் சித்தி வீடு அருகில் இருப்பதால்....அவள் மட்டும் அங்கு சென்று விட்டு மாலையில் ஹாஸ்டலுக்கு வருவதாக சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

  அங்கு சென்று சித்தியிடம் கதையளந்து விட்டு.....அவரது குழந்தைகளிடம் விளையாடி விட்டு...அங்கிருந்து நித்திலா கிளம்பும் போது மாலையாகியிருந்தது.

  நகத்தைக் கடித்துத் துப்பியபடி....பதட்டத்துடன் அந்த பஸ் ஸ்டாப்பில் ஒற்றை ஆளாக நின்று கொண்டிருந்தாள் நித்திலா.'பஸ் ஸ்டாப் வரை வந்து பஸ் ஏற்றி விடுகிறேன்...' என்று கூறிய சித்தியையும் மறுத்து விட்டு....இவள் மட்டும் தனியாகக் கிளம்பி விட்டாள்.

  ஊருக்கு வெளியே இருந்த புறநகர் பகுதியில் அவளது சித்தி வீடு இருந்தது. இப்பொழுதுதான்....அங்கங்கே புது வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன. அதனால்,அவ்வளவாக ஆள் நடமாட்டம் இல்லை.

  'ச்சே....!பேசாம சித்தியைத் துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம்.சித்திக்கு போன் பண்ணலாம்னா இந்த போன்ல சார்ஜே இல்ல....மழை வேற வர மாதிரி இருக்கு....ஒதுங்கி நிக்கறதுக்குக் கூட ஒரு இடம் இல்ல....'என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மழை கொட்ட ஆரம்பித்து விட்டது.

  நித்திலாவிற்கு கழிவிரக்கத்தில் கண்ணீரே வந்துவிட்டது.நேரமாக ஆக மழை வழுத்துக் கொண்டிருந்ததே தவிர குறையவில்லை.மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி அழுது கொண்டிருந்தவளின் அருகே சீறிக் கொண்டு வந்து நின்றது அந்த வெளிநாட்டுக் கார்....!

  பயத்தில் முகம் வெளிறி ஓட நினைத்தவளை....காரின் உள்ளிருந்து நீண்ட....வலிய கரம் ஒன்று அவளை இழுத்து உள்ளே தள்ளி...கார்க்கதவை அறைந்து சாத்தியது.

  பயத்தில் கத்தவும் மறந்தவளாய்....உடல் நடுங்க நிமிர்ந்து பார்த்தவள் சந்தித்தது ஆதித்யனின் அனல் கக்கும் விழிகளைத்தான்.....இனம் புரியா நிம்மதியில்... விழிகளை மூடி பெருமூச்சு விட்டவள்,"ஓ....காட் .....!சார்....!நீ....நீங்கதானா.....?",எனத் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள்.

  அவளது முகத்தில் படர்ந்த நிம்மதியைப் பார்த்தும் பார்க்காமல் விட்டவன்,"உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா...?இப்போ மணி என்னன்னு தெரியுமா...?இந்த நேரத்துல இங்க வந்து நின்னுக்கிட்டு இருக்க....?",எனக் கோபத்தில் கத்த ஆரம்பித்தான்.

  "இ...இல்ல....!என் சித்தி வீட்டுக்கு வந்தேன்....",என அவள் தடுமாற,

  "மண்ணாங்கட்டி.....!இது சிட்டிக்கு அவுட்சைட்ல இருக்கிற ஏரியா.....இங்க ஆள் நடமாட்டம் அவ்ளோக்கா இருக்காது....இந்த மாதிரி இடத்துக்கு வர்றதுன்னா.... ஒண்ணு டாக்ஸி புக் பண்ணி அதுலேயே போய்ட்டு வர்ற மாதிரி ஏற்பாடு பண்ணனும்.... அதுவும் இல்லையா....துணைக்கு யாராவதை கூட்டிட்டு வரணும்...இப்படி தனியா வந்து மாட்டிக்கிட்டு....பேந்த பேந்த முழிச்சிட்டு இருக்கக் கூடாது....",என சரமாரியாக திட்ட ஆரம்பித்தான்.

  ஆதித்யனின் நண்பன் வீடு அந்த ஏரியாவில்தான் இருந்தது.அவனைச் சென்று பார்த்து விட்டுக் காரில் திரும்பி வரும் போது மழை பிடித்துக் கொண்டது.

  சாலையோரத்தில் ஒரு பெண் நிற்பது போல் தோன்றவும்....'யார்...?இந்த நேரத்தில்...?' என்று எண்ணியபடி உற்றுப் பார்த்த போதுதான் தெரிந்தது அது நித்திலா என்று....!

  மழையில் நனைந்தபடி பயந்து கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு நெஞ்சு பதறியது....'இவளை யார் இந்த நேரத்தில இங்கு வரச் சொன்னா....?' என்று எண்ணிக் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது.அந்த கோபத்துடனேயே...அவளைக் காரில் இழுத்துத் தள்ளியவன் அவளிடம் கத்த ஆரம்பித்தான்.

  "சாரி....!இப்படி பஸ் கிடைக்காதுன்னு எனக்குத் தெரியாது....ரொ...ரொம்ப தேங்க்ஸ்....!நீங்க மட்டும் வரலைன்னா....",என்றவள் அதற்கு மேல் பேச முடியாமல் வார்த்தைகள் தொண்டைக்குள் உருண்டன.

  கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்குக் கோபம் கொஞ்சம் குறைந்தது."சரி...அழுகாத....!மழை வர்ற மாதிரி இருக்கும் போதே உங்க சித்திக்கு போன் பண்ணி இன்பார்ம் பண்ணிருக்கலாம்ல.....",அவளை அந்த நிலைமையில் பார்த்தவனுக்கு முழுவதுமாக கோபம் குறைய மறுத்தது.

  "இல்ல....என் மொபைல்ல சார்ஜ் தீர்ந்து போய்டுச்சு....",தயங்கித் தயங்கி கூறியவளைப் பார்த்தவனுக்குப் போன கோபம் திரும்பி வந்து சேர்ந்தது.

  "உன்னையெல்லாம் என்ன செஞ்சா தகும்....?எங்கேயாவது வெளியில போகும் போது மொபைல்ல பேட்டரி ஃபுல் பண்ணிக்கணும்ங்கிற பேசிக் சென்ஸ் கூடவா இல்ல....?",என மீண்டும் பொரிய ஆரம்பித்தவனை கையமர்த்தித் தடுத்தவள்,

  "போதும்...போதும் சார்....!நான் செஞ்சது தப்புன்னு எனக்குப் புரியுது.....அதுதான் போதும்ங்கிற அளவுக்குத் திட்டிட்டீங்களே.....நான் கண்டேனா....?உங்க ஊர்ல வெயில் அடிச்சாலும் மண்டை காயற அளவுக்கு அடிக்குது.....மழை பெய்தாலும் 'சோ'ன்னு கொட்டுது....",என்று முணுமுணுத்தவளைக் கண்டவனுக்கு சிரிப்புதான் வந்தது.

  'எங்க ஊரா.....?இனி....உன் ஊரும் இதுதான் டி.....!',என்று மனதிற்குள் நினைத்தவன் வெளியே,"இனி இப்படி எதைப் பத்தியும் யோசிக்காம வெளில கிளம்பாத.....", என்றபடி காரைக் கிளப்பினான்.

  வெளியே மழை பெரும் சத்தத்துடன் கொட்டிக் கொண்டிருக்க....காருக்குள் அதற்கு எதிமாறாக பெரும் அமைதி நிலவியது.

  எதேச்சையாக அவள் புறம் திரும்பியவனின் பார்வை....பார்த்தது பார்த்தபடி அவள் மீதே நிலைத்து இருந்தது.

  மழையில் நனைந்திருந்ததால்....உடலுடன் ஒட்டிய ஆடை அவளது மேனியழகை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்ட....ஈரக் கூந்தலுடன்.... நெற்றியிலும்.... கன்னங்களிலும் துளித் துளியாய் மழைத்துளி ஒட்டியிருக்க.....ஒரு தேவதை போல் அமர்ந்திருந்தாள் நித்திலா....!

  இவை அனைத்திற்கும் முத்தாரம் வைப்பது போல்....ஒரு ஒற்றை மழைத்துளி ஒன்று....அவள் இதழின் மேல் ஒய்யாரமாய் வீற்றிருந்தது...!

  அவள் முகத்திலிருக்கும் மழைத்துளிகளை தன் முகம் கொண்டு துடைத்து....அவள் இதழின் மேல்ஒய்யாரமாய் சயனித்திருக்கும் அந்த ஒற்றை மழைத்துளியை தன் இதழ் கொண்டு சுவைக்க வேண்டும் என்ற தாபம் எழுந்தது ஆதித்யனுக்குள்....!

  அப்பொழுது....அவள் நெற்றியிலிருந்து வழிந்த மழைத்துளி அவள் கன்னத்தில் உருண்டோடி.....அவள் சங்கு கன்னத்தில் பயணித்து....அதற்கும் கீழே இறங்க....அவ்வளவுதான்....!அவன் காரை நிறுத்தி விட்டான்.....!

  "கிறீச்....!" என்ற சத்தத்துடன் கார் நிற்கவும் அவனைத் திரும்பிப் பார்த்தவள், "என்னாச்சு சார்...?",என்று கேட்க,

  அவள் விழிகளைப் பார்ப்பதை தவிர்த்தவன்,"தெ...தெரியல....!நான் போய் பார்க்கிறேன்....!",என்றபடி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கார்கதவைத் திறந்து இறங்கினான்.

  ஆர்பரித்துக் கொண்டு மண்ணில் வந்து விழுந்த மழைத்துளிகளைப் போலவே....அவன் மனதிற்குள் உணர்வுகள் ஆர்பரித்துக் கொண்டிருந்தன....!

  இதுவரை அவன் அறியாத உணர்வுகள்....எந்தப் பெண்ணைப் பார்த்தும்....கிளர்ந்து எழாத உணர்வுகள்....இன்று நித்திலாவினால் அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன...!

  கைகளால் தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தவன்,"ப்பா....என்ன உணர்வுடா இது....!இன்னும் கொஞ்ச நேரம் காருக்குள் இருந்திருந்தாலும்....அவளை முத்தமிட்டிருப்போம்.....!கூடிய சீக்கிரம்....என் காதலை அவகிட்ட சொல்லி....அவளை என்னவளாக்கிக் கொள்ள வேண்டும்...!",என்று நினைத்தவன் ஒருவாறாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு காரில் ஏறினான்.

  காரில் ஏறி அமர்ந்து வண்டியைக் கிளப்பியவனிடம்,"என்னாச்சு சார்...?",என்று நித்திலா மீண்டும் கேள்வி எழுப்ப,

  அவளை ரசிக்கச் சொன்ன மனதை அதன் தலையில் கொட்டி அடக்கியவன்.... முயன்று அவள் விழிகளைப் பார்த்து புன்னகைத்து,"ஒரு சின்ன ப்ராப்லம்....!சரி பண்ணிட்டேன்....",என்றவன்,

  பின்னாடி சீட்டிலிருந்து ஒரு டவலை எடுத்து அவளிடம் நீட்டியபடி,"ரொம்ப நனைஞ்சிருக்க.....துவட்டிக்கோ....!",என்றான்.

  அதை வாங்கி தன் தலையையும்....முகத்தையும் துடைத்தவள்,"நீங்களும்தான் நல்லா நனைஞ்சிட்டீங்க...!",என்றபடி டவலை அவனிடமே திருப்பிக் கொடுத்தாள்.

  ஒரு கையால் அந்த டவலை வாங்கித் தன் முகத்தில் வைத்து....ஆழ்ந்து சுவாசித்தான்....!டவல் முழுவதும் அவள் வாசனைகள்...!பின் அதைக் கொண்டு தன் முகத்தை அழுந்தத் துடைத்தவன்....அதைப் பத்திரப்படுத்தவும் மறக்கவில்லை....!

  கார் சீரான வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தது.பரபரவென்று தன் இரு கைகளையும் தேய்த்து....தன் கன்னத்தில் வைத்தவள்....,"ரொம்ப குளிரா இருக்கல்ல....?",என்று ஆதித்யனைப் பார்த்துக் கேட்க,

  அவளை ஒரு மார்க்கமாக திரும்பிப் பார்த்தவன்,"ஹ்ம்ம்....!எனக்கு ரொம்ப சூடா இருக்கு....!",என முணுமுணுத்தான்.

  "என்ன சார் சொன்னீங்க....?எனக்கு சரியா கேட்கல....?",என்றவளிடம்,

  "ம்ம்....சூடா ஹீட்டரை ஆன் பண்ணறேன்னு சொன்னேன்....",என்று பெருமூச்சு விட்டபடி காரின் ஏ.ஸி யை நிறுத்திவிட்டு ஹீட்டரை ஆன் செய்தான்.

  அதன் பிறகு காரில் அழகான மௌனமே ஆட்சி செய்தது.

  ஹாஸ்டலின் வாசலில் அவளை இறக்கிவிட்டவன்,"எங்கேயும் தனியாப் போகாதே....!பிரெண்ட்ஸ் யாரையாவது கூட்டிட்டுப் போ....",என்று எச்சரிக்கவும் தவறவில்லை.

  'சரி' என்பதாய் தலையாட்டியவள்.....கண்களில் நன்றி பெருக்குடன் அவனைப் பார்த்து,"தேங்க் யூ சார்....!",என்க,

  அவனோ....கண்களில் காதல் பெருக்குடன் அவளைப் பார்த்து தலையசைத்தான்.
  இவர்கள் இருவரையும் சந்திக்க வைத்த காதலோ....மயக்கும் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தது....!!!


  அகம் தொட வருவான்...!!!
   
   
 3. Nila krishi

  Nila krishi Wings New wings LW WRITER

  Messages:
  77
  Likes Received:
  546
  Trophy Points:
  73
  ஹாய் பிரெண்ட்ஸ்.....

  லைக் போடும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....!

  அடுத்த வாரத்திலிருந்து செவ்வாய்,வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் அத்தியாயம் பதிவிடப்படும்....தவறாமல் படித்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்....
   
   
 4. Nila krishi

  Nila krishi Wings New wings LW WRITER

  Messages:
  77
  Likes Received:
  546
  Trophy Points:
  73
  download (2).jpg


  அத்தியாயம் 9 :

  ஆதித்யா குரூப் ஆப் கம்பெனீஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்-


  வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க,நித்திலாவும் லீலாவும் தங்களுக்குள் வேலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

  "ஹப்பா.....!போதும் நித்தி.....!நீ டவுட் கேட்டு கேட்டு என் மூளை சூடாகிடுச்சு...... வா....!சில்லுன்னு ஒரு ஜூஸ் குடிச்சுட்டு வருவோம்....",என்று லீலா அழைக்க,

  "ம்ம்....போலாம் க்கா...!",என்றபடி எழுந்தவள்,சுமித்ராவைப் பார்த்து,"நீயும் வா சுமி....!கேன்டீன் போயிட்டு வரலாம்....",என்று அவளையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.

  மூவரும் தங்களுக்குத் தேவையான ஜூஸை வாங்கிக் கொண்டு வந்து டேபிளில் அமர்ந்தனர்.லீலாதான் ஆரம்பித்தாள்,

  "நித்தி....!இப்ப உனக்கு அல்மோஸ்ட் எல்லா வேலையும் தெரிஞ்சிடுச்சில்ல....ஒரு செக்ரெட்டரிக்கு என்னென்ன வொர்க் இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கிட்டல்ல....?",என்று கேள்வி எழுப்ப,

  "ம்ம்....அதுதான் எல்லாமே எனக்குக் கத்துக் கொடுத்திருக்கீங்களே....?",தன் ஜூஸை உறுஞ்சிக் கொண்டே பதிலளித்தாள் நித்திலா.

  "குட்...!நித்தி...!நான் ரிலீவ் ஆகலாம்னு ஒரு ஐடியால இருக்கேன்....உனக்கும் என் ஹெல்ப் இனித் தேவைப்படாது...",என்க,

  கையில் வைத்திருந்த ஜூஸ் கிளாஸை மேசையில் வைத்தவள்,"என்னக்கா சொல்றீங்க...?நான் ஜாயின் பண்ணினப்ப மூணு மாசம் கழிச்சுத்தான் ரிலீவ் ஆகறன்னு சொன்னீங்க....?அப்படிப் பார்த்தால் இன்னும் இரண்டு மாசம் இருக்கே....?",என்று பதட்டத்துடன் கேட்டாள்.சுமித்ராவும் நித்திலா கூறியதை ஆமோதிப்பதைப் போல லீலாவைப் பார்க்க,

  "அந்த பிளான்லதான் இருந்தேன் நித்தி....!பட்....இப்ப குடும்ப சூழ்நிலை...நான் ரிசைன் பண்ணிதான் ஆகணும்...நம்ம M.D கிட்ட இன்னைக்கு பேசலாம்னு இருக்கேன்...."

  "நீங்க போய்ட்டா நான் எப்படித் தனியா சமாளிப்பேன்...?",என்று தயங்கியவளை,

  "கமான் நித்தி ...!நான் இல்லாமலும் உன்னால மேனேஜ் பண்ணிக்க முடியும்...இப்போ நீ ஒரு பெர்ஃபக்ட் செக்ரெட்டரி....!",என்று ஏதேதோ கூறி அவளை சமாதானப்படுத்தினாள்.

  அவளுடைய சமாதானத்தில் சிறிது மனம் தெளிந்தவள்,"ஒகே அக்கா....!உங்க குடும்பத்தையும் பார்த்துதானே ஆகணும்...இன்னும் எவ்ளோ நாள் ஆபிஸ் வருவீங்க....?",என மேற்கொண்டு விசாரித்தாள்.

  "ஒரு டூ டேஸ்தான் வருவேன்னு நினைக்கிறேன்.....ஆதி சார்கிட்ட பேசிட்டுதான் முடிவெடுக்க முடியும்....",

  "எனிவே....வீ வில் மிஸ் யூ அக்கா...!",என சுமித்ரா கூற,

  "நானும்தான் சுமி....உங்க எல்லோரையும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்....",என்று வருத்தமாகக் கூறினாள் லீலா.

  மூவரும் சிறிது நேரம் பேசிவிட்டு தங்கள் இடத்திற்கு திரும்பினர்.மதிய உணவு இடைவேளையின் போது,லீலா ரிசைன் செய்யப் போகும் விஷயம் பாலாவிடம் பகிரப்பட்ட...அவனும் தன் பங்கிற்கு தனது வருத்தத்தை தெரிவித்தான்.

  இடைவேளைக்குப் பிறகு மூவரும் தங்களது வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க,"நான் போய் ஆதி சார்கிட்ட பேசிட்டு வர்றேன்....",என்றபடி லீலா எழுந்து சென்றாள்.

  சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்தவள்,"கேர்ள்ஸ்....!நம்ம சார் ஒகே சொல்லிட்டாரு....இன்னும் ரெண்டு நாள்தான் ஆபீஸுக்கு வருவேன்..",என்ற தகவலைப் பகிர,

  "அப்பாடா....!டூ டேஸ்க்கு பிறகு லீலாக்காவோட தொல்லை இருக்காது....",என்று நித்திலா கிண்டலடிக்க,அதன்பிறகு நேரம் கலகலப்பாக சென்றது.

  நித்திலா தன் சந்தேகங்களை லீலாவிடம் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்வதிலேயே அடுத்த இரண்டு நாட்களும் கழிந்தது.

  நித்திலா,சுமித்ரா,பாலா மற்றும் லீலா நால்வரும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அன்றுதான் அந்த அலுவலகத்தில் லீலாவிற்கான கடைசி நாள்.
  இவ்வளவு நாட்கள் அனைவரும் ஒன்றாகப் பழகியதால்...அந்தக் கூட்டிலிருந்து ஒருவரைப் பிரிவது என்பது அனைவருக்குமே சிறிது வருத்தத்தைக் கொடுத்தது.

  "ஹே....என்னப்பா....?எல்லாரும் இவ்வளவு அமைதியா இருக்கீங்க...?பிரிஞ்சு போனா என்ன....?அதுதான் நம்ம எல்லார்க்கிட்டேயும் மொபைல் இருக்கே....நாம நாலு பேரும் எப்பவும் கான்டாக்ட்லேயே இருப்போம்....",லீலாதான் மற்ற மூவரையும் தேற்றினாள்.

  "என்ன இருந்தாலும்....நாங்க மூணு பேரும் உங்களை ரொம்பவும் மிஸ் பண்ணுவோம்க்கா....!" ,என்று பாலா வருத்தத்துடன் கூற,மற்ற மூவரும் அதை ஆமோதிப்பதைப் போல் தலையசைத்தனர்.

  பிறகு சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு,"ஆனாலும் நித்தி...!உனக்கே இது நல்லாயிருக்கா....?மூணு மாசம் கழிச்சு ரிலீவ் ஆகறேன்னு சொன்னவங்கள....நீ உன் டவுட்டை கேட்டுக் கேட்டு...ஒரு மாசத்துலேயே ஓட வைச்சுட்டாயே...?",என்று பாலா கிண்டலடிக்க,

  அவனைப் பார்த்து முறைத்த நித்திலா...அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டு குட்ட, சரியாக அந்த நேரம் பார்த்து....ஏதோ வேலையாக அந்தப் பக்கம் வந்த ஆதித்யன் இவர்களைக் கவனித்து விட்டான்.

  பார்த்த வேகத்தில் சுறு சுறுவென்று கோபம் ஏற,'இவன்கிட்ட இவளுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு....?அதுவும் இவ்வளவு க்ளோஸா....'என்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்தவனை....அவனது மொபைல் ஒலி கலைக்க...அவளை முறைத்தபடியே போனைக் காதுக்குக் கொடுத்த்தபடி வெளியேறிவிட்டான்.

  அன்று மாலை...சில பல அணைப்புகளுடனும்....மிஸ் யூக்களுடனும் லீலாவை ஆபிசில் இருந்த அனைவரும் வழியனுப்பி வைத்தனர்.நித்திலா,சுமித்ரா மற்றும் பாலா மூவரும் இவர்களது நினைவாக ஒரு பரிசு வாங்கிக் கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

  ......................................................................................

  லீலா கிளம்பி விட்டதால்....அடுத்த நாளில் இருந்து நித்திலாவிற்கு நேரம் சரியாக இருந்தது.இதுவரை இருவர் இணைந்து பார்த்து வந்த வேலைகளை,இனி இவள் ஒருத்தியே கவனிக்க வேண்டும் என்பதால் வேலைப்பளு அதிகரித்திருந்தது.

  ஆதித்யனுக்கோ நிமிடத்திற்கு ஐந்து முறை நித்திலா தேவைப்பட்டாள்.
  அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,'இந்த பைல் எங்கே....?அந்த லெட்டர் ரெடி பண்ணிக் கொண்டு வா....',என நிமிடத்திற்கு ஒரு முறை நித்திலாவை அழைத்துக் கொண்டிருந்தான்.

  ஆதித்யனின் அறைக்கும்....தனது டேபிளுக்கும் நடந்து நடந்தே நித்திலாதான் ஒருவழி ஆகியிருந்தாள்.

  அன்றும் அப்படிதான்....ஆதித்யனின் அறையிலிருந்து வெளியே வந்தவளைப் பார்த்த சுமித்ரா,"நித்தி....!இப்படி அலையறதுக்குப் பேசாம நீ அவரோட ரூம்லயே குடியிருந்துக்கலாம்....",என்க,

  "சரியா சொன்ன சுமி...!நடந்து நடந்து எனக்குதான் கால் வலிக்குது...",பொத்தென்று தனது சேரில் அமர்ந்தவளைப் பார்த்து,

  "சரி....இப்போ எதுக்கு கூப்பிட்டாராம்....?",என்று சுமித்ரா நமட்டு சிரிப்புடன் கேட்க,

  "ஏதோ முக்கியமான மெயில் வந்திருக்காம்...அதுக்கு ரிப்ளை பண்ணச் சொன்னாங்க...!",

  "இதை போன்லேயே சொல்லியிருக்கலாமே....இதுக்காக உன்னை நேர்ல கூப்பிடணுமா...?",ஒரு மாதிரியாகத் தன்னைப் பார்த்த தோழியிடம்,

  "ஏய்...எருமை...!இப்ப எதுக்கு என்னை இப்படி பார்க்கிற...?அந்த மெயில பத்தி டிஸ்கஸ் பண்ணணும்ல...?அதை போன்லயா பண்ண முடியும்....?அதுக்குத்தான் நேர்ல கூப்பிட்டாரு...இப்ப நீ உன் வேலையைப் பாரு...!கூடவே....என்னையும் என் வேலையைப் பார்க்க விடு...!",என்று படபடத்தாள்.

  இப்போதைக்குத் தோழியிடம் எதையோ கூறி சமாளித்து விட்டாலும்.... நித்திலாவிற்குமே நெஞ்சம் படபடக்கத்தான் செய்தது.'இப்படி அடிக்கடி கூப்பிட்டுக்கிட்டே இருந்தா....ஆபிஸ்ல இருக்கறவங்க என்ன நினைச்சுக்குவாங்க...?இன்னைக்கு சுமி சந்தேகப்பட்ட மாதிரி...நாளைக்கு வேற யாராவது சந்தேகப்பட மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்...?'என்ற கேள்வி மனதினுள் எழுந்தது.

  'அதிலேயும் இப்போவெல்லாம் ஆதி சாரோட பார்வையே சரியில்ல... என்னவோ... உரிமை இருக்கிற பொருளைப் பார்க்கிற மாதிரி பார்த்து வைக்கிறாரு...!',என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

  உண்மைதான்...!இப்பொழுதெல்லாம் நித்திலாவைப் பார்க்கும் ஆதித்யனின் பார்வை மாறியிருந்தது.அவன்...அவளை விழுங்கி விடுவதைப் போலத்தான் பார்த்து வைத்தான்....!

  ஏதேதோ எண்ணிக் கொண்டிருந்தவள்,இறுதியில்,'இல்ல...!அப்படி எல்லாம் இருக்காது...நாமதான் ஏதோ பைத்தியம் மாதிரி நினைச்சுக்கிட்டு இருக்கோம்...!',என்று தலையை உலுக்கிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தாள்.

  அன்று மாலை...வேலை முடிந்துக் கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தவளை...ஆதித்யன் தனது அறைக்கு அழைத்தான்.

  "சார்....கூப்பிட்டிங்களா...?",என்றபடி வந்தவளை எப்பொழுதும் போல் அப்பொழுதும் ரசித்தவன்,

  "யெஸ் நித்திலா....!உன் டேபிளை என் ரூமுக்கே ஷிஃப்ட் பண்ணச் சொல்லிட்டேன்.... நாளையில் இருந்து நீ என் கேபினிலேயே வொர்க் பண்ணலாம்...!"

  "வாட்...?நோ சார்...!நான் எப்பவும் போலேயே இருந்துக்கிறேன்....ப்ளீஸ் சார்...",என்று அவசர அவசரமாக மறுத்தாள்.

  அவளை அழுத்தமாக நிமிர்ந்து பார்த்தவன்,"நோ நித்திலா...!எவ்வளவு நாள்தான் என் கேபினுக்கும்...உன் டேபிளுக்கும் அலைஞ்சுக்கிட்டு இருப்ப...?நீ இங்கேயே வொர்க் பண்றதுதான் சரி...!",என்றான் முடிவாக.

  "சார்...ப்ளீஸ்...!எனக்கு...நான் அங்க வொர்க் பண்றதுதான் வசதி...",என்று மறுக்க,

  அவனோ,"பட்...எனக்கு நீ இங்கே வொர்க் பண்றதுதான் வசதி...!",என்றான் அசால்ட்டாக.

  அப்பொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாமல்,"சார்...ப்ளீஸ்...",என்று தயங்கியவளை நோக்கி அழுத்தமான பார்வையை வீசியவன்,"நித்திலா...!நாளையில் இருந்து நீ இங்க...என் கேபினிலேயேதான் வொர்க் பண்ணப் போற...!அவ்வளவுதான்....!இதுக்கு மேல எதிர்த்துப் பேசி உன் டைமோட...என் டைமையும் வேஸ்ட் பண்ணாத....!",தெளிவாக உரைத்தவன் அவளைக் கண்டு கொள்ளாது தன் வேலையில் ஆழ்ந்தான்.

  அவனுடையப் பிடிவாதமானப் பார்வையும்....அதை விட அழுத்தமான குரலும்...,'இனி தான் என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான்...',என்பதை அவளுக்கு வலியுறுத்த....வேறு வழியில்லாமல்,அமைதியாக "சரி...!",என்று முணுமுணுத்துவிட்டு வெளியேறிவிட்டாள்.

  ஆதித்யனின் இதழோரம் ஒரு குறுஞ்சிரிப்பு வந்தமர்ந்தது.... 'இப்படித்தான் பேபி...உன்னையும் என் வாழ்க்கைக்குள்ள கொண்டு வந்துருவேன்.....!உனக்கு விருப்பம் இருக்குதோ....இல்லையோ...!',என்று அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது.  அகம் தொட வருவான்...!!!
   
   
 5. Nila krishi

  Nila krishi Wings New wings LW WRITER

  Messages:
  77
  Likes Received:
  546
  Trophy Points:
  73
  images (5).jpg


  அத்தியாயம் 10 :


  அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த நித்திலாவை....வெறுமையான டேபிளே வரவேற்றது.

  "குட் மார்னிங் நித்தி....!என்னப்பா இங்க வந்திருக்கிற...?இனி உன் இடம் அதுதான்...",என சுமித்ரா ஆதித்யனின் அறையைக் கை காட்ட,

  "தெரியும்...!நீ வாய மூடிட்டு உன் வேலையைப் பாரு...",என எரிந்து விழுந்தாள் நித்திலா.

  "ஹே...கூல் டா...!எதுக்கு இப்ப இவ்ளோ கோபப்படற....?"

  "உனக்கென்ன....நீ ஜாலியா இங்க உட்கார்ந்துகிட்டு....எல்லார்கிட்டேயும் அரட்டை அடிச்சிக்கிட்டு வொர்க் பண்ணுவ...நான்தான் அங்க தனியா மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்கணும்....",

  "டோன்ட் வொரி டி....!லன்ச் டைம் அண்ட் பிரேக் டைம்ல மீட் பண்ணிக்கலாம்....ஒகே வா...?",என சமாதானப்படுத்த முயல,

  "வேற வழி....!சரி ஒகே....நான் கிளம்பறேன்...!",என்றவள் ஆதித்யனின் அறையை அடைந்து கதவை ஒரு விரலால் தட்டி அனுமதிக் கேட்க,

  உள்ளிருந்து "கம் இன் நித்திலா....",என்ற ஆதித்யனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.கதவைத் திறந்து உள்ளே சென்றவள்,"குட் மார்னிங் சார்....!",என்று புன்னகைக்க,

  "வெரி குட் மார்னிங் நித்திலா....!இனி நீ இங்கேதான வொர்க் பண்ணப் போற....ஸோ...ஒவ்வொரு முறையும் உள்ளே வர்ரதுக்கு என்கிட்டே பெர்மிஷன் கேட்க வேண்டாம்....ஃபீல் லைக் யுவர் கேபின்...",எனக் கூறி 'பளிச்' என்று புன்னகைக்க....அந்தப் புன்னகையில் அவளது கோபம் மறைந்து மாயமாய் போனது என்னவோ உண்மைதான்....!

  "ஒகே நித்திலா....உன் டேபிள் ரெடி...!",என்றபடி அவனது டேபிளுக்கு அருகில் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த டேபிளைக் காட்டினான்.அவள் வேலை செய்வதற்கு ஏதுவாக அந்த டேபிள் வடிவமைக்கப்பட்டிருந்தது.அவளுக்குத் தேவையானப் பொருட்கள் அனைத்தும் நேர்த்தியுடன் அதில் அடுக்கப்பட்டிருந்தன.அவளுடைய வசதிக்காக ஒவ்வொன்றையும்...பார்த்துப் பார்த்து செய்திருந்தான்.

  "வாவ்...!எல்லாத்தையும் யோசிச்சுப் பண்ணியிருப்பீங்க போல....இனி ஃபைல் எடுக்கறதுக்கு எழுந்திருக்க வேண்டியதில்ல....உட்கார்ந்த இடத்தில இருந்தே கை நீட்டி எடுக்கற மாதிரி கப்போர்ட் செட் பண்ணியிருக்கீங்க....சூப்பர் சார்...!",எனக் குதூகலமாய் கூறியவளைப் பார்த்தவன்,

  "யெஸ் நித்திலா....!அப்புறம்....என் செக்ரெட்டரியுடைய வசதி எனக்கு ரொம்ப முக்கியம்ல.....",எனக் கூறிப் புன்னகைத்தான்.

  எதுவும் கூறாமல் சிறு புன்னகையை மட்டும் சிந்தியவளைக் கண்டவன்,"வெல் நித்திலா....!உன் வொர்க்கை ஸ்டார்ட் பண்ணிடு...!ஃபர்ஸ்ட் முக்கியமான மெய்ல்ஸ்க்கு எல்லாம் ரிப்ளை பண்ணிடு...",என்க,அதன் பிறகு இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினர்.

  ஊடும் பாடும் அவளைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வது ஆதித்யனுக்குப் பிடித்திருந்தது.அவளது விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒரு வித லாவகத்துடன் விளையாடுவதையும்.....அவள் வேலை செய்யும் போது முன் நெற்றியில் வந்து விழும் கற்றைக் கூந்தலை....ஒரு விரலைக் கொண்டு ஒதுக்கி...அதைக் காதிற்குப் பின்னால் செருகிக் கொள்ளும் அழகையும்....அவளுக்குத் தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.

  இருவரும் தங்களுடைய அலுவலில் ஆழ்ந்திருக்க நித்திலாவின் போன் அலறியது.சுமித்ராதான் மதிய உணவிற்காக அழைத்திருந்தாள்.தனது சிஸ்டமை ஆஃப் செய்து விட்டு எழுந்தவளைக் கண்டு ஆதித்யன் கேள்வியாக நோக்க,

  "லன்ச் டைம் சார்...நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்....!",என்றவளுக்கு,

  "அதுக்குள்ள லன்ச் டைம் வந்துடுச்சா...?நேரம் போனதே தெரியல....ஒகே நித்திலா...!யூ கோ...!",என அனுமதியளித்தான்.

  இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பாலாவும் வந்து சேர்ந்து கொண்டான்.
  சுமித்ராதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்."அப்புறம் நித்தி...!ஃபர்ஸ்ட் டே எப்படி இருந்துச்சு...?",எனக் கேள்வி எழுப்ப,

  "என்ன பர்ஸ்ட் டே வா...?அவ வந்து ஜாயின் பண்ணி ஒரு மாசத்துக்கு மேலே இருக்குமே...?",என்றான் பாலா.

  "நான் அதைக் கேட்கல....அவ ஆதித்யன் சார் கூட வொர்க் பண்றதுல இன்னைக்குத்தான் முதல் நாள்..அதைக் கேட்டேன்...!",

  "என்னங்க சுமித்ரா சொல்றீங்க...?எனக்குப் புரியல...?",என பாலா விழிக்க,

  "ப்ச்....பாலா...!ஆதி சார் இன்னையில இருந்து என்னை...அவரோட கேபினிலேயே வொர்க் பண்ண சொல்லிட்டாரு....அவ அதைத்தான் சொல்றா...",சாப்பாட்டை விழுங்கியபடி நித்திலா விளக்க,

  ""வாட்...?பட்...ஏன்...?",அவன் விடாமல் கேள்வி கேட்க....சற்று எரிச்சலடைந்த நித்திலா,

  "அய்யோ...!அதெல்லாம் பழைய கதை....விட்டுத் தள்ளு....இப்போதைய மேட்டருக்கு வா....நீ என்ன சாப்பாடு...?",என்றபடி அவனது டிபன் பாக்ஸை தன் பக்கம் இழுத்தாள்.

  அவள் கூறியதில் பாலாவின் முகம் யோசனைக்கு மாறியது.'ஆதி சார் அவரோட கேபின்க்கு ஒரு பொண்ணை அலோவ் பண்ராருன்னா....யோசனையா இருக்கே....!அவரு அப்படியெல்லாம் ஒரு பொண்ணு கூட க்ளோஸா பழகர ஆள் இல்லையே....?நித்திலா கூட மட்டும் பழகறார்னா....ஒரு வேளை....',அதற்கு மேல் யோசிக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.

  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ....அவ்வளவு சீக்கிரம் தன்னுடையக் காதலை நித்திலாவிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற உறுதியான முடிவு அவனுக்குள் எழுந்தது.

  இவ்வாறாக இருவரும் தங்களது காதலை தன்னவளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்க....அந்தக் காதலுக்கு உரியவளோ....'காதல்' என்ற சொல்லையே தன்னிடம் நெருங்க விடாது நெருப்பாய் எரிந்துக் கொண்டிருந்தாள்.

  ............................................................................................


  நாட்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறக்க...காவ்யாவின் திருமண நாளும் வந்தது.அதிகாலையிலேயே முகூர்த்தம் என்பதால்...முழு நாள் விடுமுறை எடுக்காமல்... இரண்டு மணி நேரம் மட்டும் பெர்மிஷன் கேட்டிருந்தாள் நித்திலா.அந்த இரண்டு மணி நேரம் பெர்மிஷன் வாங்குவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது நித்திலாவிற்கு.

  அவளைத் தினமும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்...அவளுக்கு விடுமுறை அளிப்பதையே மறுத்தான் ஆதித்யன்.

  ரமேஷின் வீட்டில் காவ்யாவை ஏற்றுக் கொண்டதால்....இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து அவளை அழைத்துச் சென்று விட்டனர்.தோழிகள் அனைவரும் பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டுத் தயாராகினர்.

  நித்திலாவும் அழகிய இளம்பச்சை நிற பட்டுப்புடவையில்....அதற்குத் தோதாக முத்துக்கள் பதித்த நகை செட் அணிந்து கொண்டு....தளரப் பின்னியக் கூந்தலுடன்....தோளின் இருபுறமும் வழியுமாறு வைத்துக் கொண்ட மல்லிகைப் பூவுடனும்....அழகியத் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

  நந்தினி கூட கிண்டல் செய்தாள்."வாவ்....!அழகா இருக்க நித்தி...!இப்ப மட்டும் எவனாவது உன்னைப் பார்த்தான்....அப்படியே தூக்கிட்டுப் போயிடுவான்...",என்க,

  சிறு வெட்கப் புன்னைகையைப் பதிலாகத் தந்தவள்,"போகலாம் டி....நேரமாச்சு...!",என்றாள் நாணத்துடன்.

  அனைவரும் ஒரு டாக்சி பிடித்துக் கோவிலுக்குச் சென்றனர்.கண்களில் கனவுகளுடனும்....செம்மைப் பூசியக் கன்னங்களுடனும்....ஒரு மணப்பெண்ணிற்குரிய சர்வ லட்சணங்களுடன் காணப்பட்டாள் காவ்யா,
  இவர்களைப் பார்த்ததும் ஆவலுடன் வரவேற்றவளை....கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்லினர் தோழிகள்.நண்பர்களின் கேலியுடனும்...பெரியவர்களின் ஆசியோடும்....இனிதே நடந்தேறியது காவ்யா-ரமேஷின் திருமணம்.

  திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை ரமேஷின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.எனவே....தோழிகள் அனைவரும் தாங்கள் வாங்கி வந்தப் பரிசை மணமக்களுக்குக் கொடுத்து விட்டு....சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர்.

  நித்திலா அலுவலகத்தை அடைந்த போது மணி பதினொன்று ஆகியிருந்தது. லேசாகக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்.....கண்ணிமைக்கவும் மறந்து போனான்.இதுவரை சுடிதாரில் மட்டுமே அவளைப் பார்த்திருந்தவன்....முதன் முதலாக அவளைப் புடவையில் பார்க்கிறான்.

  அதுவும் தழையத் தழையப் பட்டுப்புடவைக் கட்டி....அதற்குத் தோதான அணிகலன்கள் அணிந்து கொண்டு....அழகாக இருந்தவளைக் கண்டவனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.

  குறு குறுவென்று தன்னையேப் பின்தொடர்ந்த ஆதித்யனின் பார்வையை உணர்ந்தவளுக்குப் படபடப்பாக வந்தது.

  'என்ன இவர் இப்படி பார்க்கிறாரு....?',என்று மனதில் நினைத்தவள் அமைதியாகத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.மறந்தும் அவன் பக்கம் அவள் பார்வையைத் திருப்பவில்லை.

  சிறு ஏக்கப் பெருமூச்சுடன் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தவனுக்கு...தன் மனம் தன் வசம் இல்லை என்பது புரிந்தது.அடிக்கடி அவளைப் பார்வையிட்டவாறு வேலை செய்து கொண்டிருந்தவனை அவள் கண்டு கொண்டாள்.ஒருமுறை அவள் புறம் திரும்பிய....அவனது விழிகளை தனது விழிகளால் சிறையிட்டு நிறுத்தினாள் நித்திலா.

  அங்கு....நான்கு விழிகளின் சங்கமம் நிகழ்ந்து...ஒரு புதுக் கவிதை மிக அழகாகப் பிறந்து கொண்டிருந்தது....!அவன் விழிகளுடன் கலந்த தன் விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....தத்தளித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.'வேறு பக்கம் பார்வையைத் திருப்பு...!',என்று அவளது மூளை கட்டளையிட....அவளது மனமோ....மூளையின் கோரிக்கையை நிராகரித்துக் கொண்டிருந்தது.

  தன் உள்ளத்துக் காதல் மொத்தத்தையும் தன் விழிகள் வழியாக....அவள் இதயத்துக்குள் பாய்ச்சி விட வேண்டும் என்ற வேகத்துடன்....தன் விழிகளை அவள் விழிகளோடுப் பிணைத்திருந்தான் ஆதித்யன்...!

  எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனரோ..... தெரியவில்லை...?நித்திலாதான் முதலில் சுய உணர்வை அடைந்து தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.

  "எ...என்ன சார்...?",அவள் தடுமாற,

  தனக்குத் தானேப் புன்னைகைத்துக் கொண்டவன்,"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்...?புடவையெல்லாம் கட்டியிருக்க...?",அவள் தடுமாற்றத்தை ரசித்தபடி கேட்க,

  "அதுதான் நேற்றே சொன்னேனே சார்....என் பிரெண்ட் மேரேஜ்ன்னு...அங்க போய்ட்டு அப்படியே வந்துட்டேன்...",

  "ஓ...நைஸ்...!ரொம்ப அழகாயிருக்க...!",இடக்கையால் தன் முடியைக் கோதியவாறு சொன்னவன்....அவனுக்கேப் புதிதாகத் தெரிந்தான்.ஏதோ டீனேஜ் பையனைப் போன்று இந்த குறுகுறுப்பும்....மனதுக்குள் வரும் படபடப்பும் அவனுக்குப் புதிது.

  ஏன் என்று தெரியாமலேயே கன்னம் சிவந்தவள்....அவனை ஏறிட்டும் பார்க்காமல்."தே...தேங்க் யூ...",என்று விட்டுத் தன் முகத்தை.... பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் புதைத்துக் கொண்டாள்.

  இதழோரங்கள் புன்னைகையில் விரிய...தலையைக் குலுக்கிக் கொண்டவன்...லேப்டாப்பின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினான்.

  சிறிது நேரத்திற்குப் பிறகு....,"நித்திலா...!",என்று அவன் அழைக்க,"சார்...!",என்றபடி நோட்பேடும்...பேனாவுமாக அவன் முன் வந்து நின்றாள்.

  "நமக்கு வந்திருக்கிற ஒரு கம்பெனியோட ப்ரொஜெக்ட்டுக்கு கொட்டேஷன் ரெடி பண்ண வேண்டி இருக்கு...நான் சொல்றதை நோட் பண்ணிக்க...!",என்றபடி மளமளவென்று விபரங்களைக் கூற ஆரம்பித்தான்.

  அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி...அனைத்தையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் நித்திலா.

  "இதைக் கொஞ்சம் ஃபார்மலா ரெடி பண்ணனும்...",என்றபடி நிமிர்ந்தவனின் பார்வையில்...அவளது புடவை மறைக்காத இடுப்பு பிரதேசம் விழுந்தது. வளவளவென்று....பளபளப்பாக இருந்த அந்தப் பகுதியிலிருந்து விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....கண்களை ஓட விட்டவனின் பார்வையில்....அவள் இடையில் இருந்த கரு மச்சம் வந்து விழுந்தது.

  'எங்க எல்லாம் மச்சத்தை வைச்சிருக்கறா பாரு....?',என்று எண்ணியவனின் இதழ்களில் ரகசியப் புன்னகை ஒன்று குடிவந்தது.

  அவன் எதுவும் கூறாமல் இருக்கவும்...அவனைக் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள் நித்திலா.அவன் ஒரு மார்க்கமாக சிரித்துக் கொண்டிருக்கவும்,"என்னாச்சு சார்...?ஏன் சிரிக்கிறீங்க...?",என்றாள் அப்பாவியாக அவன் பார்வையை உணராது.

  அவளது கேள்வியில் தன்னை சுதாரித்துக் கொண்டவன்,"ஹ...ஒண்ணுமில்ல...நீ போய் கொட்டேஷன் ரெடி பண்ணு...!",என்றபடி திரும்பிக் கொண்டான்.

  மதிய உணவின் போது அவளைப் பார்த்த பாலாவும் மெய் மறந்துதான் போனான்...!
  "ஹேய்...என்னப்பா....இங்கே ஏதாவது பட்டுப்புடவை விளம்பரம் எடுக்கறாங்களா....?",என்றபடி சுற்றும் முற்றும் தேடுவதைப் போல் பாவனை செய்தவனின் கையில் 'நறுக்'கென்று கிள்ளியவள்,

  "ஏய்...கிண்டல் பண்ணாதப்பா...",என்று சிணுங்கினாள்.

  அவளது சிணுங்களில் தன்னைத் தொலைத்தவன்,"ச்ச்சும்மா டா...!பட்...ரியலி யூ ஆர் லுக்கிங் வெரி பியூட்டிஃபுல்...!",என்றவனின் விழிகள் இதமாக அவளை வருட....குரலும் குழைந்து இனிமையாக வந்தது.

  ஆனால்....அவனிடம் நிகழ்ந்த எந்த மாற்றத்தையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை...!தனக்கு மிகவும் பிடித்த பனீர் பிரைட் ரைஸை உள்ளே தள்ளியபடி, "அதெல்லாம் எனக்கே தெரியும்....!நீ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்ல....",என்று பழிப்புக் காட்டினாள்.

  பாலாவுடன் இருக்கும் போது...நித்திலாவின் அத்தனைக் குறும்புத் தனங்களும் வெளிவந்து விடும்...அவன் தோழமையுடன் பழகுவதாலோ...என்னவோ....அவனுடன் அவளால் இயல்பாக ஒன்ற முடிந்தது.ஆனால்...அந்த உணர்வில் நட்பு என்பதைத் தவிர வேறு எந்த உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை....!

  அவள் கூறிய விதத்தை ரசித்துச் சிரித்தவன்...தன் உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

  "ஏண்டி நித்தி...உன் பிரெண்ட் காவ்யா லவ் மேரேஜ்தான...?",என சுமித்ரா கேட்க,

  "ம்ம்...ஆமாம்...",

  "அப்ப நீயும் லவ் மேரேஜ்தான் பண்ணிக்க போறயா...?",சுமித்ரா ஆர்வத்துடன் கேட்க,

  "செருப்பு பிஞ்சிடும்....",அவளைப் பார்த்து முறைத்தபடி கூறினாள் நித்திலா.

  "ஏன் நித்தி...?காதலிச்சு கல்யாணம் பண்றதுல நம்பிக்கை இல்லையா...?",முகம் இருள கேட்டான் பாலா.

  "நம்பிக்கை இல்லைன்னு இல்ல....பட்...பிடிக்காது...!",

  "ஏன்...?",

  "ஏன்னா....அந்தப் பொறுப்பை நான் என் அப்பா அம்மாகிட்ட கொடுத்துட்டேன்...!"

  "ஹ்ம்ம்...வெரி நைஸ்...!",ரசித்துக் கூறினாள் சுமித்ரா.

  அதைக் கேட்ட பாலாவிற்குத்தான் முகம் வாடிப் போனது.மூவரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் வரை....அவன் முகம் குழப்பத்துடன்தான் இருந்தது.

  மதியத்திற்கு மேல் ஆதித்யனை அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை.ஏதோ வேலையாக வெளியே சென்றிருப்பதாக...நித்திலாவிற்கு தகவல் மட்டும் வந்தது.அவன் இல்லாத அறையில் வேலை செய்வது...ஏனோ வெறுமையாக இருந்தது அவளுக்கு.

  ....................................................................................................................
   
   
Loading...

Share This Page