தென்னங்கீற்றும்... தென்றல்காற்றும்..!கதைத்திரி - வதனி

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Madhuvathani, Oct 13, 2019.

Thread Status:
Not open for further replies.
 1. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,339
  Trophy Points:
  113
  ஹாய் ப்ரண்ட்ஸ்...
  தென்னங்கீற்றும்.. தென்றல் காற்றும் கதையின் அத்தியாயங்கள் திங்கள் புதன் சனி என மூன்று நாட்கள் பதிவிடப்படும்..
  படிக்கத் தவறியவர்கள் படிக்கலாம்..
  நன்றி
   
  Charu likes this.
   
 2. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,339
  Trophy Points:
  113
  தென்னங்கீற்றும்.. தென்றல் காற்றும்...

  அத்தியாயம் – 01
  உன்னுடன் வாழும்
  கனவு வாழ்க்கையை
  நிஜமாக்கி கொடுத்து
  விடு என்னிடம்..
  இல்லையென்றால்
  கனவோடு சேர்ந்து
  நானும் கரைந்து போவேன்
  காற்றில்….!

  திருவனந்தபுரம் பன்னாட்டு விமானநிலையம்

  அந்த அதிகாலை வேலையிலும் ஜனத்தினரலோடும் விமானங்களின் அறிவிப்போடும் பரபரப்புடன் காட்சியளித்ததுஅடுத்துவரும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமாத்திற்காக, பயணிகள் காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள் சஷ்டிகா

  தன்னைச்சுற்றிலும் ஒருமுறைப் பார்வையை சுழற்றியவள், உடைகளையும் உடமைகளையும் ஒருபார்வைப் பார்த்துவிட்டு கண்ணீர் பொங்கி அவளது இருபுறமும் செவியின் ஓரம் வழிய, அதை ஒடரு பொருட்டாய் கூட உணராமல்எப்போது அழைப்பார்களோஎன்று ஒருவித அவசரத்துடனே தலையை பின்னோக்கி சாய்த்து அமர்ந்திருந்தாள்

  நொடிகள் நிமிடங்களானதோ, நிமிடங்கள் மணிகளானதோ, ஒர் இரும்புக்கரம் தன்தோள் மேல் கொடுத்த அழுத்தத்தில் பட்டென்று விழித்தவள் எதிரே சிவந்தவிழிகளுடன் முகமெல்லாம் கோபத்தில் ஜொலிக்க, இறுகிய தோற்றத்துடன் நின்றிருந்தவனைப் பார்த்து அரண்டு போய்எழுந்துநின்றாள்

  சென்னையில் இருப்பவன் அதற்குள் இங்கு எப்படிவந்தான்…” என்ற குழப்பத்தில் நெற்றி சுருங்க நின்றவளுக்கு விடைகொடுத்தது போல் அவனுக்குப் பின்னேபாலாவெயிட் பாலா…” என்று மூச்சிரைக்க கிட்டத்தட்ட அவனை தள்ளிவிடுவது போல் வந்து நின்றாள் ஸ்ருதிபாலானின் தங்கை, சஷ்டிகாவின் உயிர்த்தோழி

  மூன்று கோணங்களாய் நின்று கொண்டிருந்த மூவரின் மத்தியிலும் அடுத்த சில நொடிகள் அமைதியே ஆட்சி செய்ததுஅந்த அமைதியை களைக்கும் பொருட்டு, “சஷ்டிநான் வந்து…”என்று தோழியை சமாதானம் செய்ய முயன்ற ஸ்ருதியை ஒரு பொருட்டாய் கூட மதிக்காமல், அங்கிருந்தவர்கள் அவர்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை கூட இல்லாமல் தன்னுடன் வந்த தங்கையையும் கவனிக்காமல் சஷ்டியை இழுத்துக் கொண்டு நகர்ந்தான் சிவபாலன்
  விடுவிடுடாஎன்னைவிடுடா…” என்றவளின் திமிறலை சற்றும் பொருட்படுத்தாமல் இழுத்துக் கொண்டு காரில் தள்ளியவன், தானும் ஏறி அதை புயல் போல் இயக்கினான்

  பாலனின் இந்த செய்கையை கண்டு, அவனிடம் உண்மையைக் கூறிய தன்னையே நொந்து கொண்ட ஸ்ருதி, அங்கிருந்த சஷ்டியின் லக்கேஜை பார்த்தபடி தன்னை தனியாக அம்போவென்று விட்டுச்சென்ற தன் அண்ணனை என்ன செய்யவது என்ற யோசனையில் அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.

  ஆனால் அதற்குமாறாக அவளது எண்ணங்கள் தன் உயிர்த் தோழியான சஷ்டியிடமே சென்றது

  காரின் உள்ளே இருந்தவள் தன் இருபக்கமும் உள்ள கதவுகளைத் திறக்க முயற்சித்து தோற்றுப்போய் அவனை முறைத்துக் கொண்டிருக்க, அவனோ முகத்தில் இருந்த இறுக்கம் குறையாமல், காரை ஓட்டுவது மட்டுமே தன் வேலை என்பது போல், அதிலேயே குறியாக இருந்தான்
   
   
 3. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,339
  Trophy Points:
  113
  தன்னுடைய எந்த செயலுக்கும் அவனிடம் ஒரு பிரதிபலிப்பும் இல்லை என்று உணர்ந்தவள், தலையைக் கைகளில் தாங்கிய படி குணிந்திருந்தாள்

  கண்களில் உதிரும் நீர் அவளது மனதின் வலியயைக் கூறியது
  முன்பக்கம் இருந்த கண்ணாடியின் வழியே அவளது ஓய்ந்த தோற்றம் தெரிய அவன் முகமும் வலியயைக் காட்டியதுமனம் அவளுக்காய் இளகத் தொடங்கியது அதுவும் ஒரு நொடியே


  அவள் தன்னை விட்டு போவதற்கான முடிவை எடுத்தவள்என்ற உண்மை உணர, முகத்தை மீண்டும் கடுமையாக்கினான்கார் மார்த்தாண்டத்தை தாண்டிய நெடுஞ்சாலையில் செல்லாமல், கிளைச்சாலையில் செல்லவுமே அவளுக்கு புரிந்துவிட்டது

  கடவுளே…’ என்று மனம் கூக்குரலிட, தனக்குள் உருவாக்கிய கட்டுப்பாட்டையும் மீறிசிவாப்ளீஸ் நான் உன்கிட்ட சொன்னேன் தானே, மறுபடியும் நீ அதேயே செய்தா என்ன அர்த்தம். ப்ளீஸ் அண்டர்ஸ்டேன்ட்யூ ஆர் போர்ஸிங் மீ, நான் ஒன்னும் சென்டிமென்டல் இடியட் இல்ல, இப்படியெல்லாம் செய்து என்னை மயக்க முடியாது…”

  எத்தனை தடவை எங்க வச்சு எப்படி கேட்டாலும் என்னோட பதில் ஒன்னே ஒன்னுதான்ஐஹேட்யூநான் உன்னை வெறுக்கிறேன். என்னால உன்னை மேரேஜ் பண்ணிக்க முடியாதுஎப்பவுமே முடியாதுநான் என் பேமிலிக்குத் துரோகம் செய்யமாட்டேன்…”என்று பலவாறு கத்திக் கொண்டே வந்தாள்

  சடன் ப்ரேக் போட்டுக் காரை நிறுத்த, அதுவும் ஒரு குலுக்கலுடன் நிற்க, அதிர்ந்து போய் பயத்துடன் அவனையேப் பார்த்தாள் சஷ்டிகா

  என்னைக் கல்யாணம் செய்துக்க மாட்ட? ரைட்.. ஓகேநான் உன்னை போர்ஸ் பண்ணல, யூ டோண்ட் வொரிஐப்ராமிஸ் யூ. பட்..” என்று நிதானமாய் இழுத்தவன்நான் உன்னை மேரேஜ் செய்துருக்கேனே, அத என்ன செய்ய, அதுவும் ரிஜஸ்டர் மேரேஜ்உன்னால எதுவும் செய்ய முடியாதுஇப்போ நான் என்ன செய்யனும்னு சொல்லிட்டா, நான் என்னோட வேலையைப் பார்த்துட்டு போயிட்டே இருப்பேன்…” மிகவும் கூலாக வந்தது அவனிடமிருந்து

  வாட்மேரேஜாஅதுவும் ரிஜிஸ்டர் மேரேஜ்இது எப்போ நடந்ததுநான் எப்போ சைன் பண்ணேன்நோநோ…. நீ என்னை ஏமாத்துறபொய் சொல்ற…” அவனது மனநிலைக்கு எதிராய் கத்தினாள் சஷ்டி

  அவளது கத்தலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல், காரின் டேஷ்போர்டில் இருந்து ஒருகவரை எடுத்து அவளிடம் நீட்டினான்அதைப்பறித்து வேகவேகமாய் பார்வையை ஓட்டியவளின், முகத்தில் தெரிந்த உணர்வுகளை மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா

  இதுஎப்படிசாத்தியம்….’ கண்களை மூடி யோசித்தவளுக்கு நொடியில் விடை கிடைத்ததுஸ்ருதிஸ்ருதியோட வேலைதான் இதுஅன்று ஊருக்கு கிளம்பும் அவசரத்தில் தன்னிடம் கையெழுத்து வாங்கியது யாபகம் வந்ததுஆனால், அது ப்ரபசர் கேட்டதாகத்தானே சொன்னாள்படிக்காமல் அவள்மேல் இருந்த நம்பிக்கையில் செய்ததன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டு, அனல் பார்வையை அவனை நோக்கி வீசினாள் சஷ்டி
   
   
 4. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,339
  Trophy Points:
  113
  பெண்ணவள் முகத்தில் தோன்றிய அடுத்தடுத்த உணர்வுகளை, மௌனமாய் உள்வாங்கியவன், அவளுக்கு எதிரே வந்து நின்று, “நீ என்னை அவாய்ட் பண்றது கூடத் தெரியாத அளவுக்கு நான் என்ன முட்டாளா…? லாஸ்ட் டைம் நீ என்கிட்ட இயல்பா பேசினது நடந்துக்கிட்டது, உன்னோட காதலை உணர்ந்து என்னை காதல் மழையில் நனைய வச்சது எல்லாம் இதோ இந்த அருவிக்கரையில்தான்தெரியுமா..? ” என்று ரசனையாய் சொல்ல,

  அவனை வெறுமையாய் பார்த்தவள், தலையை குனிந்து கொண்டாள். “நீ ஹர்ட் ஆகனும்னு சொல்லல, இட்ஸ் மை ஃபீல்..” என்றபடியே தலையை வருட, பட்டென்று அவனை தள்ளீ விட்டு, “ஏண்டா.. உன்னை நான் பார்க்கனும்எதுக்கு உன்மேல லவ் வரனும்என்னோட சிச்சுவேஷன் தெரிஞ்சும் நான் ஏன் இப்படி பன்னேன்.. உன்னை விடவும் முடியாம, விலக்கவும் முடியாம நான் படுற கஷ்டம் உனக்கு புரியுதா…” எனக் கத்தியவளின் இரு கைகளையும் பிடித்தவன்..

  எனக்கு புரியாம வேற யாருக்கு புரியும்நீ ஒட்டி வரது போல தெரியும்.. ஆனா அப்படி எதுவுமே நடக்காத மாதிரி ஒதுங்கி போயிடுவ.. உன்னை உனக்கு தெரியனும்.. என் மேல இருக்க லவ் உனக்கு புரியனும்னு தான் அன்னைக்கு இங்க கூப்பிட்டு வந்தேன்.. இந்த மாதிரி ஒரு சூழல்ல நீ வேற எதைப் போட்டும் குழப்பிக்க மட்டேன்னு நம்பினேன்.. அது தான் நடக்கவும் செஞ்சது..”

  இங்க வந்ததும் உன்னை சுத்தி இருக்குற எல்லாத்தையும் மறந்துட்ட.. உன் முன்னாடி நான் மட்டும் தான் தெரிஞ்சேன்உன்னால என்னை தள்ளி வைக்க முடியல.. உன் ஆழ்மனசுல இருக்குற நேசத்தை வெளியில் கொண்டு வரனும்னு தான் இப்படியெல்லாம் பன்னேன்ஏன்னா நான் உன்னை என்னோட உயிருக்கும் மேலா விரும்புறேன்.. ‘ லவ் யு சோ மச்..’ உன்னை எப்பவும் எந்த சூழ்னிலையிலையும் விட முடியாது. விடவும் மாட்டேன்…” என தீர்மானமாய் ஆழ்ந்த குரலில் கூறினான் சிவா.

  நோசிவாஉனக்கு என்னைப் பத்தி தெரிஞ்சாநான் இங்கே ஏன் வந்துருக்கேன்னு தெரியும் போது உனக்கு என்னை பிடிகாதுயு ஹேட் மீ நோ….” என்றவள், பின்நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கேன் தெரியுமா…? கடவுளே..! இது வெளியேத் தெரிஞ்சா உன்னோட பேரன்ட்ஸ் என்னைப் பார்க்குற பார்வையும் எப்படி மாறும்அதை நினைக்கும் போதே நான் ஏன் உயிரோட இருக்கேன்னு தோனுதுஎன்னையே நம்பி இருக்க என் அம்மா என்னைப்பத்தி என்ன நினைப்பாங்கஅவங்க வளர்ப்பு தப்பாயிடுச்சோன்னு தினம்தினம் அவங்க மனசளவுல செத்துப் போயிடுவாங்க…” என்று முகத்தை மூடிக் கதறியவளை தன்மேல் வலுக்கட்டாயமாய் இழுத்துப் போட்டுக் கொண்டவன் இறுக்கமாய் அனைத்துக் கொண்டான்
   
   
 5. Madhuvathani

  Madhuvathani Bronze Wings New wings LW WRITER

  Messages:
  1,464
  Likes Received:
  5,339
  Trophy Points:
  113
  சசிம்மாப்ளீஸ் இவ்வளவு எமோசன் ஆகாத, நான் சொல்றதை பொறுமையா கேளு, நீ பயப்படுற அளவுக்கு இன்னும் எதுவும் நம்ம கையை விட்டுப் போயிடல. புரிஞ்சுக்கோடா, தப்பு உன்மேல இல்லஎல்லாத் தப்பும் என்னோடது தான்நான்தான் வேண்டாம் வேண்டாம்னு விலகிப்போனவளை வலுக்கட்டாயமாக காதலிக்க வச்சேன்உன்னைப்பத்தி யோசிக்காம சுயநலமா இருந்துட்டேன்சாரிடாவெரிசாரிதயவுசெய்து மன்னிச்சுடு ப்ளீஸ் அழாதேஎன்னால உன்னை இப்படி பார்க்க முடியல…” என்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் அவனது இறுக்கம் கூடிக்கொண்டே போனது

  அவனது செய்கையில் முதலில் திமிறியவள் அதுமுடியாமல் போக அவனது மேலேயே சாய்ந்து கதறினாள்மங்கையவள் முதுகை வருடிவிட்டவன் அவள் இயல்புக்கு வந்துவிட்டாள் என்று புரிய, நேராக நிமிர்த்தி அவளது விழிநீரைத் துடைத்து விட்டவன் மீண்டும் தன்மேலே சாய்த்துக் கொண்டான்அவளுக்கும் அதுதேவையோ என்பது போல் வாகாய் சாய்ந்துக் கொண்டாள்நிமிடங்கள் கடந்த நிலையில், தன் உணர்வு பெற்றவள் அவனிடம் இருந்து விலகி, காரைவிட்டு வெளியே வந்தாள்.

  ஹேய் சசிசசிஎன்ன…” என்றபடியே அவளைப்பின் தொடர்ந்தவன், அவள் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் அவன் முகமும் தீவிரமடைந்ததுஏதோ கிறுக்குத்தனமாகப் பேசப் போகிறாள் என்றும் புரிந்தது மன்னவனுக்கு….

  மீண்டும் சில நொடிகள் மௌனம்

  எதிரில் ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவியின் நீரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், ஒரு பெருமூச்சுடன் திரும்பி, “சிவாநான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும், நீங்க அதை முழுசா கேட்கனும்அதுக்குப் பிறகு உங்க முடிவை சொன்னா போதும் சரியா…” என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள்

  அவளது ஆரம்பமே சிவாவுக்கு பயத்தை கொடுத்ததுஅவன் எதிர்பார்த்ததைப் போலவே இவள் ஏதோ விபரீதமாக பேசப் போகிறாள் என்று புரிகிறதுஎன்னத்தான் சொல்லப்போகிறாள் அவள்தீர்க்கமாய் அவளையே பார்த்தான்

  ஹலோஸ்ருதிஸ்ருதி இருக்கியா…? என்னாச்சு? ஏன்..? இவ்வளவு நேரம் போன் எடுக்காம இருந்த…? ஹலோ ஸ்ருதிம்மா என்னடா…? என்று படபடப்புடன் கத்தியவன் மறுமுனையில்இம்சைஎன்று இவளால் அன்பாய் அழைக்கப்படும் அவள் இம்சைக்காதலன் அரவிந்த்

  ஹேய்ஸ்டாப்ஸ்டாப்எதுக்கு இப்படி கத்துற? நான் நல்லாத்தான் இருக்கேன்முதல்ல நீ எங்க இருக்க? இந்த பாலா என்னை ஏர்போட்ல அம்போன்னு விட்டுட்டு போயிட்டான்…” என அவனின் படபடப்பைக் கண்டுக்கொள்ளாமல், தன் பிரச்சனையை எரிச்சலாய் கூறிக் கொண்டிருந்தாள். ராட்சசி என்று அவனால் காதலாய் அழைக்கப்படும் காதல் ராட்சசி ஸ்ருதி

  இவள் பேசி முடிக்க, அவள் முன்னே வந்து நின்றான் அரவிந்த்அவனைப் பார்த்ததும்ஊப்ஸ்என்று தன் பெருமூச்சையெல்லாம் ஊதியவள், “ஷ்ப்பாவந்துட்டியாஎங்கடா இவ்வளவு லக்கேஜையும் அள்ளிக்கிட்டு எப்படிடா தனியா மேனேஜ் பன்றதுன்னு நினைச்சேன் நல்லவேளை வந்துட்ட, வா.. வாசீக்கிரம் இந்த லக்கேஜை எடு போவோம்டென்ஷன்ல அலைஞ்சது பசி எடுக்குது…” என்று நிறுத்தாமல் பேச,
   
   
Loading...
Similar Threads - தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் கதைத்திரி
 1. Madhuvathani
  Replies:
  13
  Views:
  1,990
Thread Status:
Not open for further replies.

Share This Page