தென்னங்கீற்றும்... தென்றல்காற்றும்..!கதைத்திரி - வதனி

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Madhuvathani, Oct 13, 2019.

Thread Status:
Not open for further replies.
  1. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,464
    Likes Received:
    5,341
    Trophy Points:
    113
    என்ன திங்க்ஸ்கோவிலுக்கு எதுக்குசிவா என்ன சொன்னான்…” ஒரு விதப் பயத்துடனே வந்தது அவளது குரல்

    அதுவாநம்ம ரெண்டு பேரையும் இனி தனியா விடக கூடாது, நமக்கு மேரேஜ் செய்து வச்சுடலாம்னு சொல்றான்அதான், நானும் சரின்னு சொல்லிட்டேன்இனியும் உன்னைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது பேபி…” முகம் தீவிரமாய் இருந்தாலும் கண்களில் குறும்பு வழிந்தது

    ஐயோநான் மாட்டேன், உனக்கு இன்னும் நான் ஓகேன்னு சொல்லவே இல்ல, என்னை வீட்ல விட்டுடா, ப்ளீஸ்…” என அரண்டவளைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தவன், “அது ஒரு பிரச்சனையே இல்ல பேபிநமக்கு ரெண்டு பேபிஸ் பிறந்த பிறகு கூட நீ ஓகே சொல்லலாம்நல்லா டைம் எடுத்துக்கோபட், இன்னைக்கு நம்ம மேரேஜ் கண்டிப்பா நடக்கும்…” என்று மேலும் அவளை சீண்டி விட,

    நோநோஅர்வி, நீ நல்ல பையன், இப்படியெல்லாம் செய்யக் கூடாதுநம்ம ரெண்டு வீட்லயும் நமக்குத் தான் மேரேஜ் செய்து வைப்பாங்க, முன்னாடியே அப்பா சொல்லியிருக்கார் தானேப்ளீஸ் அர்வி இப்படித் திருட்டுக் கல்யாணம் எல்லாம் வேண்டாம்நான் சிவாக்கிட்ட வேணும்னா பேசுறேன்டா…”

    இதோ வந்து விடுவேன்என இருந்த கண்ணீரோடு பேசியவளை, ஒரு நிமிடம் நேராகப் பார்த்தவன், “ஓகே. உன்னோட விருப்பம் இல்லாம எதுவும் நடக்காது…” பட், “நீ நினைக்குற மாதிரி நம்ம கல்யாணத்தை நம்ம ரெண்டு வீட்லயும் செய்து வைக்க மாட்டாங்க…” என்றான் இறுக்கமாய்

    இவ்வளவு நேரம் இருந்த இலகு நிலை போய், இப்போது ஏன் இப்படி பேசுகிறான் என்பது போல அவனைப் பார்க்க,

    உனக்கும் சிவாவுக்கும் உன் அப்பா வேற இடத்துல மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டார்அதுவும் பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்குற மாதிரி ப்ளான்…”

    வாட்இது எப்படி முடியும்அப்போ அங்கிள் ஒன்னும் சொல்லலயாஏன்சஷ்டிஅவளை அண்ணா லவ் பண்றான்…” அதிர்ச்சியாய் பேச

    ஹான்அங்கிளாஅவர் என்ன சொல்ல முடியும்அவரை தான் உன்னோட டாடி தன் பிஸ்னஸ்ல இருந்து கழட்டி விட்டுட்டார்சிவா பிரச்சனை தெரிஞ்சு தான், என்னைக் கூடவே வச்சிருக்கான்லவ் பண்ணா பண்ணட்டும், ஆனா அதை எப்படி உடைக்கிறதுன்னு உன் அப்பாவுக்குத் தெரியாதா என்ன…? ஆல்ரெடி ஒரு லவ்வை ப்ரேக் பண்ண ஆள் தானே டேமிட்…” என்று கார்க் கதவைக் குத்த,
     
     
  2. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,464
    Likes Received:
    5,341
    Trophy Points:
    113
    என்ன சொல்ற, எதையும் முழுசா சொல்லாம எனக்கு எப்படி புரியும்சொல்லு அர்விஎன்ன நடக்குது, யாருக்கு என்ன நடந்துச்சு…” பயந்தவளாய் கேட்க,

    சஷ்டி ஏன் இங்க வந்தான்னு தெரியுமா உனக்கு…? உன்னைப் பார்க்க, உன் கூட இருக்க எல்லாம் வரல, உன் குடும்பத்தை பழி வாங்கஆனா, அப்படி எதையும் செய்யல, ஏன் தெரியுமா…? அவளும் சிவாவை லவ் பண்றா அதான்…. ஆனால் என்னைக் கேட்டா மொத்தக் குடும்பத்தையும் அவ ஏதாவது பண்ணியிருக்கனும், அவ சிச்சுவேசன்ல நான் இருந்தா, அதைத் தான் செஞ்சிருப்பேன்…” என்றான் கோபம் கொஞ்சமும் குறையாத குரலில்

    அர்விநீ என்ன சொல்ற, சஷ்டி என்னோட ப்ரண்ட், அவ எப்படி இதை செய்ய முடியும், ஏன் செய்யனும், சொல்லு அர்வி எனக்கு ஒன்னும் புரியவே இல்ல…” என்றதும்,

    என்ன புரியல, சஷ்டி இன்னைக்கு அவ அப்பா இல்லாம இருக்குறதுக்கு முழு காரணமும் உன்னோட ப்ளடி கிரிமினல் மைண்ட் அப்பா தான்…” என்று கத்தியவன்

    அவள் முகத்தில் தெரிந்த பயத்தில், தன்னை சமன் படுத்திக் கொண்டு, ஷ்ரவந்தியைப் பற்றி அனைத்தையும் சொல்லி, கார்த்திக்கைப் பற்றியும் முழுதாக சொல்லிவிட்டான்

    அனைத்தையும் கேட்டவளுக்கு எதுவும் பேசவேத் தோணவில்லை… “அப்பாவா இப்படி…” நம்பவே முடியாமல் திரும்பத் திரும்ப அதையேக் கேட்டாள்

    அவளது அலைப்புறுதலை காண சகிக்காமல், “ரதிம்மாஇங்கே பாரு, ரதி என்னைப் பாரு. நாம எல்லாத்தையும் சரி பண்ணிடலாம்கார்த்திக்கையும், ஷ்ரவந்தியையும் சேர்த்து வைக்கனும், அவங்களுக்கு செய்த துரேகத்துக்கு உன் அப்பா கஷ்டப்படனும்…”

    அதோட சிவா சஷ்டிப் பத்தியும் ஏதோ டவுட் வந்துருக்கும் போல, அதான் ப்ராப்ளமே இல்லாத கம்பெனிக்கு எங்க ரெண்டு பேரையும் சென்னை அனுப்பிக்கார்நாங்க சென்னை போன கேப்ல, இவர் போய் அவங்க வீட்டுல ஓகே சொல்லிட்டு வந்துருக்கார்உங்க அப்பா தான் அப்படின்னா உங்க அம்மா அதுக்கும் மேலஇப்படியெல்லாம் உங்களுக்கு ஒரு பேரண்ட்ஸ்…” என்று பல்லைக் கடித்தான்

    அப்போ, கார்த்திண்ணா USA இல்லைடாடி சொன்னார், அவன் மேரேஜ் செய்துட்டு நம்மளை அசிங்கப் படுத்திட்டுப் போயிட்டான்னு…” எனவும்,

    எல்லார்க்கிட்டையும் அதையே தான் சொல்லி ஏமாத்தி வச்சுருக்கார்உண்மைத் தெரியும் வர நாங்களும் நம்பினோம்சரி விடு இனி பேசி நேரத்தை வீணாக்க முடியாதுஉனக்கு என்ன தெரியனுமோ, அதை உன் அண்ணனும் அப்பாவும் தான் சொல்லனும்இப்போ நாம கல்யாணத்துக்கு என்ன வாங்கனுமோ அதை வாங்கலாம்உனக்கு அந்த அறிவு கொஞ்சமாவது இருக்கா…” என கிண்டலில் இறங்க,
     
     
  3. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,464
    Likes Received:
    5,341
    Trophy Points:
    113
    அப்போ நிஜமாவே கல்யாணம் நடக்கப் போகுதாநீ என்னை மிரட்ட சொல்றன்னு நினைச்சேன்…” உள்ளே போன குரலில் சொல்ல

    உன் டாடி பிசினஸ்ல இருந்து என் அப்பாவை ரிலீவ் பண்ணவுமே, இப்படி எதாவது செய்வார்னு தோணிச்சு, நீயும் உன் டாடி சொல்றதை அப்படியே கேட்ப, என்னை லவ் பண்றேன்னு சொல்லியிருந்தா கூட, எனக்கும் பயம் இருக்காதுஆனா, நீ அதுவும் சொல்லல…”

    உன்னை லவ் பண்றது உண்மை, உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதும் உண்மைஉனக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கனும் அதுவும் எனக்குத் தெரியும், ஆனா அந்த டைம் கல்யாணத்துக்கு முன்னாடி என்னால கொடுக்க முடியல…”

    நம்ம மேரேஜ் வேனும்னா உன்னோட மனக் குழப்பத்துல நடக்கலாம்ஆனா, நம்ம வாழ்க்கை உன்னோட விருப்பம் இல்லாம அடுத்த கட்டத்துக்கு கண்டிப்பா போகாதுட்ரஸ்ட் மீ…” என்றதும்

    என்னோட வாழ்க்கையில வர எல்லா மொமன்ட்லையும் நீ என் கூட இருக்கனும் அர்விநீ இல்லாத வாழ்க்கை எனக்கு எப்பவுமே கிடையாதுகண்டிப்பா கிடையவே கிடையாது…”

    அப்பா சொன்னா கேட்பேன் தான், ஆனா அதுக்காக எல்லாமே கேட்பேன்னு நீ சொன்னது தப்புஎன்னோட வாழ்க்கை அது என் அர்வி கூட மட்டும் தான்அதை யாராலும் மாத்தவே முடியாதுஇன்குலீடிங் மை டாடிஉனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா…? என்னை நம்புவியா அர்வி…” என்று கேட்டவளை விழியகலாமல் பார்த்தவன்,

    சட்டென தனக்குள் இழுத்துக் கொண்டு, “அடிக் குள்ளச்சி அப்போ இத்தனை நாளா, அந்த செம்பட்டையன் கூட சேர்ந்து என்னை வெறுப்பேத்திருக்கஹாஹாகாட் தேங்க்யூதேங்க்யூ சோ மச் ரதி பேபிலவ் யூ டி குள்ளச்சிலவ் யூ சோ மச்…” என்று தன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளுக்கு முத்தத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தான் அரவிந்த்….
     
     
  4. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,464
    Likes Received:
    5,341
    Trophy Points:
    113
    ஹாய் ப்ரண்ட்ஸ்..
    நேற்றைக்கு போட வேண்டிய எபி தான், இன்னைக்கு போடுறேன்... நாளைக்கு எபி கண்டிப்பா போட்டுடுறேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... நன்றி மக்களே...
     
    mithralingam likes this.
     
  5. Madhuvathani

    Madhuvathani Bronze Wings New wings LW WRITER

    Messages:
    1,464
    Likes Received:
    5,341
    Trophy Points:
    113
    அத்தியாயம் – 05
    என்னுள் நீயும்
    உன்னுள்
    நானுமாய்
    இருந்தாலும்....
    என்றும்
    உன்னுளே
    நான்
    இருக்க
    விரும்புகிறேன்...
    காதலனாக
    கணவனாக
    காவலனாக
    என்றும்
    நீயிருக்கும் வரை
    ஏதோ நியாபகத்தில் இணைந்திருந்த அந்தக் கைகளைப் பற்றியேக் கவலைப்படாமல் இருவரும் அமர்ந்திருந்தனர்தன்னையறியாமலே ஒரு இனம் புரியாத சுகம் சூழ்வதையும், பெரும்பலத்தை அந்த தீண்டல் தருவதையும், அவளால் புரிந்துகொள்ள முடிந்தது

    சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி முத்தாக உருமாறும் இயற்கையின் ரசவாதமாய்அவனுடைய நினைவுத்துளி இதயத்தில் வீழ்ந்து காதலாய் உருமாறி குளிர்ச்சியாய் உள்ளே பரவுவதை அவளால் உணரமுடிந்தது

    இருவரிடமும் ஆழ்ந்த அமைதியை சஷ்டியே கலைத்தாள்… “சிவா நான் போகனும், அம்மா ரொம்ப பயந்துட்டு இருக்காங்கநான் கூட இருந்தா பெட்டரா பீல் பண்ணுவாங்க இந்த டைம்ல ஷ்ரவ் கூட நான் இருக்கனும்…” என்றதும்,

    ம்ம்போலாம், கண்டிப்பா போகலாம்பட், நீ மட்டும் தனியா இல்லை, உன் கூட நானும் வரேன்இனி தனியா எதையும் பேஸ் செய்து கஷ்டப்பட வேணாம்நான் உன்கூட எப்பவும் இருப்பேன்ஆனா, அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணனும்நான் என்ன செய்தாலும், என்கூட துணையா இருப்பேன்னு உறுதி கொடுக்கனும்…” என்று அவன் கூற,

    அவன் கைகளுக்குள் இருந்த தன்கைகளை எடுத்து அவன் கன்னத்தைப் பற்றியவள், “தேங்க்ஸ் சிவா, வேற என்ன சொல்ல, நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்உங்க மேல எனக்கு முழுநம்பிக்கை இருக்குநான் இந்த உலகத்தை விட்டு போறவரைக்கும் உங்களை விட்டுப் போகமாட்டேன்இட்ஸ் ப்ராமிஸ் சிவாமதர்ப்ராமிஸ்…”

    லூசுதாண்டி நீஇன்னும் லைப்பே ஸ்டார்ட் பண்ணல, அதுக்குள்ள, என்னென்னமோ பேசுற, இனி இதுமாதிரி பேசினா, நான் உன்கூட பேசமாட்டேன்…”
    இல்லஇல்லஇனி இப்படி பேசவே மாட்டேன்நீங்க சொல்லுங்க…”
    ஓகேஅதுவந்து, “உனக்கு கார்த்திக் மேல கொஞ்சமாச்சும் நம்பிக்கை இருக்காஅவன் நல்லவன்னு, ஏதோ ஒருகாரணம் இருக்கு, அவன் இப்படி ஒதுங்கிப் போகன்னு உன்னாலப் புரிஞ்சுக்க முடியுதா…” என்றான்சிறுதயக்கத்துடன்

    சில நொடி மௌனத்திற்குப் பிறகு, “பல இளைஞர்களுக்கு வழிகாட்டியா இருக்குற ஒரு ப்ரொபசர் தப்பானவரா இருக்க வாய்ப்பில்லை சிவாஅதோட ஷ்ரவ் ஒரு தப்பானவரை செலக்ட் பண்ணியிருக்க மாட்டான்னு எனக்குத் தெரியும்…”
     
     
Loading...
Similar Threads - தென்னங்கீற்றும் தென்றல்காற்றும் கதைத்திரி
  1. Madhuvathani
    Replies:
    13
    Views:
    2,056
Thread Status:
Not open for further replies.

Share This Page