உன்னை விட மாட்டேன்... என்னுயிரே-1

Discussion in 'Writer's Spot (Serial Stories)' started by Padmini Selvaraj, Mar 14, 2020.

 1. Padmini Selvaraj

  Padmini Selvaraj Wings New wings

  Messages:
  30
  Likes Received:
  42
  Trophy Points:
  38
  ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
  நான் இந்த தளத்திற்கு புதுசு.. என்னுடைய சில கதைகள் வேற ஒரு தளத்தில் வெளியிடப்பட்டது.. அதில் சிலவற்றை இங்கே பகிந்து கொள்ள விரும்புகிறேன்..முதலாவதாக உன்னை விட மாட்டேன்... என்னுயிரே என்ற கதையுடன் உங்களை சந்திக்க வருகிறேன்..
  இது ஒரு மோதல்+காதல்+கலாட்டாக்கள் கலந்த ஜாலியான கதை. கதாநாயகன் நாயகிக்கு என்ன மோதல் வந்தது. அது எப்படி காதலாக மாறப் போகிறது என்பதை கொஞ்சம் சுவாரசியமாக எழுத முயற்சி செய்திருக்கிறேன்.. இந்த கதையை படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள். Happy Reading!!!
  - அன்புடன் பத்மினி செல்வராஜ்

  **************
  அத்தியாயம்-1
  பொழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம் வண்ண வண்ண பூமாலை தோரணங்களுடனும், அலங்கார விளக்குகளுடன் அழகாக மின்னி கொண்டிருந்தது.
  வாயிலில் இரண்டு பெரிய வாழை மரங்கள் கம்பீரமாக நின்று எல்லோரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது..
  பவித்ரா வெட்ஸ் ஆதித்யா” என்று மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த அந்த திருமண வரவேற்பு பலகை, அந்த விழாவின் நாயகன், நாயகி பெயர்களை அனைவருக்கும் அறிவித்து அழகாக வீற்றிருந்தது.

  மண்டபத்தின் உள்ளே எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் அதற்கு பொருத்தமாக அணிகலன்களும் அணிந்து ஜொலித்தனர். எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

  அதுவும் மணட்பத்தின் வெளியே அணி வகுத்திருந்த கார்களும், மண்டபத்தின் உள்ளே உள்ள பெண்களின் கழுத்துகளில் மின்னிய வைரங்களும் அது ஒரு VIP வீட்டு திருமணம் என்பதை சொல்லாமல் சொல்லியது...

  திருமண மேடை மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.. இந்த மேடைக்கு மட்டுமே பல லட்சங்கள் ஆகியிருக்கும்..

  மேடையின் நடுவில் வீற்றிருந்த ஐயர் ,திருமண சடங்குகளுக்கான வேலைகளை ஆரம்பித்து இருந்தார்..
  அந்த விழாவின் நாயகனும் நாயகியும் தயாராகி கொண்டிருந்தனர்..

  (இன்னும் திருமணம் ஆரம்பிக்க சிறிது நேரம் இருப்பதால் வாங்க ப்ரென்ட்ஸ், நாம் அவங்க என்ன செய்யறாங்கனு பார்த்துட்டு வரலாம் .. )
  மணமகன் அறை:

  மணமகன் அறையில் நம் கதையின் நாயகன் ஆதித்யா மணமகனுக்கான ஆடையில் தயாராகிக் கொண்டிருந்தான்..

  ஆதித்யா, சென்னையில் பிரபல தொழிலதிபர்களில் முதல் பத்து இடத்தில் இருப்பவன். ஆறடி உயரம், அலை அலையாக அடர்ந்த கேசம், ஆனால் முகத்தில் மலித்த மீசை கொழுகொழு கன்னங்கள், பார்த்த உடன் பெண்களை கவரும் கம்பீரம் என அனைவரும் விரும்பும் சாக்லெட் பாய்..

  மிகவும் சிறிய வயதிலேயெ, தன் தந்தையின் தொழிலில் ஈடுபட்டவன் தன் கடும் உழைப்பால் கிடுகிடுவென வளர்ந்து தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தனக்கென தனி இடத்தை பிடித்தவன்... தொழில் தொடங்க விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு ரோல்மாடலாக விளங்குபவன். .

  சாதாரணமாகவே பெண்களை கவர்பவன், இன்று திருமண உடையில் ராஜகுமாரனாக விளங்கினான்...

  ஆதித்யா தயாராகி கொண்டிருக்கும் பொழுது அவன் நண்பன் அவனை பார்த்து
  “டேய் மச்சான், சூப்பர் ஆ இருக்கடா.. கல்யாண கலை அப்படியே தெரியுது.
  ஆனால் என்னடா இதெல்லாம்??? கல்யாணமே வேண்டாம் . கல்யாணம் என்பது ஒரு குடும்ப சங்கிலி.. அதிலெல்லாம் மாட்டிக்க மாட்டேன்.. லைப் புல்லா சுதந்திரமா இருக்கனும், லைப் என்ஜாய் பண்ணனும் அப்படினு பக்கம் பக்கமா வசனம் பேசுவ....


  இப்படி திடீர்னு கல்யாண பத்திரிக்கைய நீட்டிட்ட? என்னடா ஆச்சு உனக்கு? “
  ஆதித்யா பதில் எதுவும் சொல்லாமல் புன்னகைத்தான்....

  “டேய் அதுவும் உன்னோட அந்தஸ்த்துக்கும் , அழகுக்கும் எத்தனையோ தொழிலதிபர்கள் வரிசையில் நின்னாங்களே உனக்கு பொண்ணு கொடுக்க.. எத்தனை அழகான, வசதியான வீட்டு பொண்ணுங்க உன் பின்னாடி வந்தாங்க.. அவங்களை எல்லாம் விட்டுட்டு ஒரு மிடில் கிலாஸ், சுமாரான பொண்ணை போய் எப்படிடா புடிச்ச?? என்னால இன்னும் நம்பவே முடியலை..

  “ஒருவேளை உனக்கு கல்யாணம் ஆசை வந்திருச்சுனா, நீ தான் எத்தனையோ பொண்ணுங்களோட சுத்தின. அதில் ஒரு பொண்ணை நிரந்தரமா வச்சுக்க வேண்டியதுதான..

  அதை விட்டுட்டு போயும் போயும் இந்த பொண்ணை எப்படிடா செலக்ட் பண்ணின???

  ஒரு வேளை அந்த பொண்ணு உன் வசதியை பார்த்து, உன்னை மடக்க , உனக்கு வசியம் எதுவும் வச்சிட்டாளோ? “

  “வசியம் னா ? “ என்று புரியாமல் தன் நண்பனை பார்த்தான் ஆதி...
  “அதான்டா கேரளாவுக்கு போய் ஏதோ ஒரு மை வாங்கி வச்சிட்டா, அப்புறம் நீ அவங்க சொல்றதெல்லாம் கேட்பியாம்.. எனக்கு என்னவோ அப்படி தான் ஏதோ உனக்கு வச்சுட்டாங்கனு தோணுது..


  இல்லனா நீ எங்க... அந்த பொண்ணு எங்க.. இப்படி ஒரு கல்யாணம் உனக்கு தேவையா..

  பேசாமல் இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு வேற ஒரு நல்ல பொண்ணா பாருடா” என்று புலம்பினான் நண்பன்..

  அவனுக்கு பதில் சொல்ல திரும்பிய பொழுது,

  "என்ன நிஷாந்த்.. இன்னும் ரெடியாகலையா? ஐயர் சடங்கை ஆரம்பிச்சுட்டு மாப்பிள்ளையை வர சொல்லிட்டார். " என்று உள்ளே வந்தார் அவனின் பெரியம்மா மரகதம்..

  உள்ளே வந்தவர் ஆதியை பார்த்து
  “ராஜாவாட்டம் இருக்க கண்ணா. உங்க அம்மா அப்பாவுக்குதான் இப்படி பார்க்க கொடுத்து வைக்கலை.. “ என்று கண் கலங்கினார்.


  "இதோ பெரிமா.. நான் ரெடியாயிட்டேன்.. இந்த ப்ரேம் தான் என்னை ரெடியாக விடாமல் தொண தொணன்னு பேசிட்டே இருக்கான்.

  அப்பா அம்மா இல்லைனா என்ன. அதான் நீங்க இருக்கீங்களே எனக்கு“ என்று புன்னகைத்தான்....

  "நான் பேசினது உனக்கு தொண தொணப்பா.. எல்லாம் என் நேரம்டா" என்று மனதுக்குள் புலம்பினான் ப்ரேம்..

  "ப்ரேம்.. நீ நிஷாந்த் ஐ கூட்டிட்டு வா. அங்க ஐயர் எல்லாம் ரெடி பண்ணிட்டார்.. “
  "சரி ஆன்டி.. நீங்க போங்க. இதோ வந்துடறோம்.. பைனல் டச் அப் பாக்கி இருக்கு எனக்கு..."


  "ஹே!! கல்யாணம் உனக்கா, இல்ல எனக்கா? நீ மாப்பிள்ளை மாதிரி ரெடியாகுற? "
  “ஹி ஹி உனக்கு என்னப்பா. நீ மேக்கப் இல்லாமலயே ஹேன்ட்ஸமா இருப்ப. நமக்கு அப்படியா . ஏதோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா போட்டா தான் இரண்டு மூனு பொண்ணுங்களாவது நம்மள பார்க்கும்..

  அதுவும் இன்று அந்த ஸ்ரேயா வேற வருவா.. இவ்ளோ நாளா உன்னையே சுத்திகிட்டு இருந்தா.. இப்பதான் நீ குடும்பஸ்தன் ஆகப் போற இல்லை. இனிமேலாவது அவள் பார்வை என் மேல படுதானு பார்க்கலாம் .
  உன் கல்யாணத்துல எனக்கு என்ன ஒரு சந்தோஷம்னா, இனிமேல் என் ரூட் கிளியர் ஆகிடும்.. இனிமேலாவது பார்ட்டில இந்த பொண்ணுங்க என் மேல கருணை காட்டறாங்களானு பார்க்கலாம்.. "

  “டேய்.. ஸ்ரேயா தான் வேணும் னா நான் வேணும்னா அவ கிட்ட ரெகமண்ட் பண்ணவா?”
  “ஐயா சாமி, நீங்க ரெகமண்ட் பண்ணி ஊத்திகிட்ட கதையெல்லாம் போதும். இத நானே பார்த்துக்கறேன்.. நீ உன் கல்யாண வேலையை மட்டும் பாரு "

  " நிஷாந்த்...." என்று மரகதம் குரல் மீண்டும் கேட்கவும்
  “டேய் வாடா போலாம். இல்லைனா ஐயர் நேரா இங்கயே வந்திடுவார்" என்று இருவரும் அறையை விட்டு வெளியில் வந்து மணமேடையை நோக்கி நகர்ந்தனர்...


  மணமகள் அறை:

  மணமகள் பவித்ராவை அழகு நிலைய பெண்கள் அலங்கரித்து கொண்டிருந்தனர்..
  அப்பொழுது தான் உள்ளே வந்த அவளின் நெருங்கிய தோழி சரண்யா பவித்ராவை பார்த்து

  “ஹே ஜான்சி ராணி.. என்ன டீ . இப்படி பண்ணிட்ட?
  மேரேஜ் னு ஒரு வார்த்தை கூட சொல்லலை.. என்ன?? கல்யாண மயக்கத்தில என்னை எல்லாம் மறந்திட்டியா? ஆன்ட்டி தான் பத்திரிக்கை கொண்டு வந்தாங்க.. பத்திரிக்கை குடுக்க கூட முடியலையா மேடம்க்கு? “


  “சாரி டி. கோவிச்சுக்காத.. திடீர்னு மேரேஜ் பிக்ஸ் ஆயிடுச்சு. ஆபிஸ்லயும் நிறைய வேலை முடிக்க வேண்டி இருந்தது.. அதான் அம்மாவையே எல்லாம் பார்த்துக்க சொல்லிட்டேன்”

  “ஹ்ம்ம்ம்... நம்ம செட்ல கல்யாணமே பண்ணிக்க மாட்டேனு சொன்ன ஒரே ஆளு நீ, பார்த்தா உனக்கு தான் முதல்ல கல்யாணம் ஆகுது.. “
  “என்னடி சீக்ரெட்?? " என்று குறும்பாக கண்ணடித்தாள்


  “சீக்ரெட் இல்ல.. ஒரு மண்ணும் இல்ல டீ. ..

  என்னை எங்கயோ ஏதோ பங்சன் ல பார்த்தானாம் “

  “யாருடி அது ? “

  “அதான் இந்த கல்யாண மாப்பிள்ளை.. .”

  “ஆஹா மரியாதை சூப்பரா இருக்கே.. மேல சொல்லு..”

  “ஹேய்!! நான் என்ன கதையா சொல்றேன்? “

  “சரி சரி கோவிச்சுக்காம சொல்லு டி “ என்று தோழி கெஞ்சவும் பவித்ரா மேலே தொடர்ந்தாள்..

  “பார்த்தவன் எங்கிட்ட வந்து பேசாமா நேரா என் அட்ரஸ் விசாரிச்சு எங்கம்மா கிட்ட போய் கல்யாணம் பேசிட்டான்..
  எங்க அம்மாவும் எங்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை. அவன் சொன்னதுக்கு எல்லாம் மண்டையை ஆட்டி வச்சிருக்கு.. “


  “சரி விடுடி , ஆன்ட்டி உன் நல்லதுக்கு தான செய்வாங்க.. சரி உன் ஆளோட போட்டோ இருந்தா காமி.."

  “போட்டோ எல்லாம் இல்லை டீ ..”

  “ஹ்ம்ம்ம். சரி அவரோட வாட்ஸ்அப் நம்பர் ஐ யாவது கொடு. டிபி ல போட்டோ இருக்கும் இல்ல. நான் பார்த்துக்குறேன்.. “

  “எங்கிட்ட நம்பர் இல்லை டீ”

  “வாட் ??? நம்பர் இல்லையா? .. ஏன் டீ அப்ப அவர்கிட்ட போன்ல பேசவே இல்லையா?
  “ம்ஹும்ம் “ என்று தலையை இரு பக்கமும் ஆட்டினாள் பவித்ரா.

  “மேடம் கொஞ்சம் தலைய ஆட்டாம இருங்க.. பைனல் ஸ்டேஜ். முடிச்சிருவோம் “ என்றனர் அழகு நிலைய பெண் ஒருத்தி..

  அப்பொழுது தான் கவனித்தாள் மூன்று பெண்கள் இருந்தனர்..

  “என்னடி இது?? உனக்கு மேக்கப் போட மூன்று பேரா? “ என்று வியந்தாள் சரண்யா...
  “காலேஜ் ல மேக்கப் னா காத தூரம் ஓடுவ. இப்ப என்னடான்னா மூன்று பேரா உனக்கு மேக்கப் போட“
  “நீ வேற கடுப்பேத்தாதடி.. இதெல்லாம் அவனோட ஏற்பாடு.. நான் வேண்டாம் என்றாலும் கேட்காம இவங்க வந்திட்டாங்க.. திரும்பி போக சொன்னா பாஸ் ஆர்டர்.. நாங்க நிறை வேற்றனும்னு கடந்த 2 மணி நேரமா என்னை பிடிச்சு உட்கார வச்சிட்டாங்க “ என்று முறைத்தாள்..


  “ஹ்ம்ம்..... சரி.. போன்ல தான் பேசலை. நேர்லயாவது பார்த்தியா இல்லையா? எப்படி இருந்தார்??? ” என்று மெதுவாக கேட்டாள்..

  “எல்லாம் மெதுவா பார்த்துக்கலாம். காலம் பூரா அந்த மூஞ்சிய தான பார்க்க போறேன்..”

  “என்னடி இது??? நேர்லயும் பார்க்கல. போன்லயும் பேசலை.. அப்புறம் எப்படி அவரை பற்றி தெரிஞ்சுக்கறது.. “

  "ஆமாம் நிச்சயத்திற்கு வந்திருப்பார் இல்லயா. அப்ப கூடவா பார்க்கலை ??”

  “ஹ்ம்ம் நிச்சயத்திற்கு சார் வரல. அவங்க பக்கம் இருந்து அவங்க பெரியம்மாவும் கொஞ்ச பேர் மட்டும் வந்தாங்க.. சார் ரொம்ப பிசியாம்.. அதனால் வரலையாம்...
  நானும் பெரிசா எதுவும் கண்டுக்கலை.. எனக்கு ஆபிஸ்லயும் நிறைய வேலை.. அவங்களே எல்லா ஏற்பாடுகளும் பாத்துகிட்டாங்க. கல்யாண சேலை முதல் கொண்டு….
  “ஓ ஹோ கதை அப்படி போகுதா.. உன் மேல ரொம்பவும் லவ்ஸ் போல டீ . உனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்றார் போல..
  ஆமாம் வரும்பொழுது பார்த்தேன்.. நிறைய பெரிய ஆளுங்களா இருந்தாங்க.. நான்கூட மண்டபம் மாறி வந்திட்டனோ என்று ஒரு முறை கன்பார்ம் பண்ணிட்டு தான் உள்ளே வந்தேன்..


  மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடம் போல.. நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரி டீ... எத்தனை பேருக்கு இப்படி பெரிய இடம் கிடைக்கும் சொல்லு.. “

  “நீதான் மெச்சிக்கனும் பணத்தை.. ஒன்னு செய். நீ வேணா எனக்கு பதிலா போய் உட்கார்ந்திடேன்.. அவனுக்கு தெரிய வா போகுது.. ? “ என்று கண்ணடித்தாள் பவித்ரா..
  “உனக்கு ரொம்ப கொழுப்பு டீ..


   
  fatima20, Charu, sumee and 1 other person like this.
   
 2. Padmini Selvaraj

  Padmini Selvaraj Wings New wings

  Messages:
  30
  Likes Received:
  42
  Trophy Points:
  38
  இரு இரு மாப்பிள்ளை வந்திட்ட மாதிரி இருக்கு.. உங்கிட்ட கெஞ்சிட்டு இருக்கறதுக்கு நானே நேர்ல போய் பார்த்துட்டு வந்திடறேன்.. “ என்று வெளியில் சென்றாள் சரண்யா..

  சிறிது நேரம் கழித்து திரும்பி வந்தவள்
  “வாவ். மாப்பிள்ளை செம ஹேண்ட்சம் அன்ட் சாம் டீ .. நம்ம அஜித்...
  ம்கூம் இல்ல சூர்யா... ம்ஹும்ம் சாருகான்... ஷல்மான்... இல்ல டீ இவர் எல்லாரோட கலவையா இருப்பார் போல... “
  “ஹே...
  நீ முன்ன சொன்ன மாதிரி உனக்கு பிடிக்கலைனா சொல்லு நான் வேனா போய் மணமேடையில உட்காந்திடறேன்..” என்று பேசி கொண்டே வந்தவள் அப்படியே ஷாக் ஆகி நின்றாள்..

  பவித்ரா அலங்காரம் முடித்து எழுந்து நின்றிருந்தாள்..

  “ஹே!!!
  ஜான்சி ராணி, நீயாடி இது??? .. இப்படி அம்மன் சிலையாட்டம் இருக்க.. எங்க ஒளிச்சு வச்சிருந்த இந்த அழகையெல்லாம் இவ்வளவு நாளாக.. காலேஜ் ல ஒரு நாள்கூட நீ மேக்கப் போட்டதே இல்லையே.. அதான் தெரியலை போல ”
  “இப்ப தான் தெரியுது...
  ஏன் ஹீரோ சார் உன்னை பார்த்து மயங்கினார்.. என்று.. “

  “ஓகே மேடம். எங்க வேலை முடிஞ்சிருச்சி.. உங்க ப்ரெண்ட் சொன்ன மாதிரி ரொம்ப சூப்பரா இருக்கீங்க.. சார்க்கு பெர்பெக்ட் மேட்ச். நாங்க கிளம்பறோம். எதுவும் உதவினா இந்த நம்பர் க்கு கால் பண்ணுங்க “ என்று வெளியேறினர் அழகு நிலைய பெண்கள்..

  அதே சமயம் மாப்பிள்ளையின் பெரியம்மாவும், பவித்ரா அம்மா பார்வதியும் உள்ளே வந்தனர்..

  பார்வதிக்கு தன்
  மகளை பார்த்து பெருமிதமாக இருந்தது..
  பெரியம்மா மரகதம்

  “ரொம்ப அழகா மஹாலட்சுமி மாதிரி இருக்க மா.. எங்க நிஷாந்த் க்கு பொருத்தமா தேடி கண்டு பிடிச்சிட்டான்.. எங்க கல்யாணம் பண்ணிக்காம இப்படியே இருந்திடுவானோ என்று பயந்திட்டு இருந்தேன்..

  உன்னை பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று வந்து சொன்னப்ப தான் நிம்மதியா இருந்தது..”

  “இந்தாம்மா.. இது . என்
  தங்கை... நிஷாந்த் அம்மாவோட நகை. இதை போட்டுக்கோ” என்று கையில் கொண்டு வந்திருந்த பெட்டியை திறந்தார்..
  விளக்கு வெளிச்சத்தில் பளபளத்தது வைர
  நெக்லஸ்..

  “ஐயோ
  அம்மா!!! . இது எல்லாம் எனக்கு வேண்டாம்.. நான் ஏற்கனவே மாட்டி இருக்கறதே அதிகம்.. இதுக்கு மேல போட்டா
  , நான் தாங்க மாட்டென்” என்று மறுத்தாள் பவித்ரா...

  “எத்தனை நகை
  போட்டாலும் வைரத்திற்கு ஈடாகுமா
  ?? . அதுவும் இல்லாமல் இது பரம்பரை நகை.. வீட்டிற்கு வரும் மருமகளுக்கு என்று வழி வழியா குடுத்துட்டு வரதுமா.. மறுக்காத.. போட்டுக்கோ...”

  பார்வதியும், “பெரியவங்க சொன்னா
  ஒரு காரணம் இருக்கும் பவி. மறுக்காமல் போட்டுக்கோ “ என்றார்

  மரகதமே நெக்லஸை போட்டு விட்டார்..

  “இன்னும் அழகாயிட்டமா.. “ என்று நெட்டி முறித்தார்..

  “என்னை ஆசிர்வாதம்
  பண்ணுங்க” என்று காலில் விழுந்தாள் பவித்ரா ..

  “மஹராசியா இரும்மா” என்று தூக்கி

  “அப்புறம் நான்
  அம்மா இல்லை. உனக்கு பெரிய அத்தை.. அதனால அத்தைனு கூப்பிடு
  “சரிங்க அத்தை
  “ என்றாள்..

  இவர்கள் பேசி முடிக்கவும் பெண்ணை அழைச்சிட்டு வாங்க என்று ஐயர் குரல் கொடுத்தார்..

  பார்வதி ”சரண்யா
  , நீயே கூட்டிட்டு வாம்மா. நாங்கள் முன்னாடி போறோம் “ என்று கிளம்பினர்..
  சரண்யா
  ,
  “ஹே ஜான்சி ராணி
  ,, கொஞ்சம் தலையை குனிஞ்சிட்டே வா.. நீ பாட்டுக்கு எப்பவும் போல ஸ்ட்ரெய்ட் ஆ பாத்திட்டு வராத.. மாப்பிள்ளை எழுந்து ஓடிடுவார். “ என்று மெல்ல கிசு கிசுத்தாள்..
  “போடி” என்று முறைத்தாள் பவித்ரா..
  மாப்பிள்ளைக்கான சடங்கு முடிந்து, எல்லாரும் மணப்பெண் வரும் வழியை பார்த்து இருந்தனர்.
  பவித்ரா, பட்டுபுடவை சரசரக்க மெதுவாக வெளியில் வரவும்,
  ஆதித்யாவின் பார்வை தானாக அவள் இருந்த பக்கம் சென்றது.. அப்படியே மெய் மறந்து இருந்தான் ஒரு சில
  விநாடிகள்.. பின் ஏதோ ஞாபகம் வரவும் அவன் பார்வை மாறியது..

  அதே நேரம் சரண்யாவும் அவனை கண்டாள்.. அவன் பார்வை மாறியதை கவனித்தாள்.. ஏதோ வித்தியாசமாக இருக்கே அந்த பார்வை.
  காதலும் இல்லாமல்
  , திருமண எதிர்பார்ப்பும் இல்லாமல் வித்தியாசமாக இருக்கே என்று குழம்பியவள் மீண்டும் அவனையே நோக்கினாள்..

  அதற்குள் அவன் பழைய மாதிரி இருக்கவும்

  “சே .. நான் தான் ஏதோ தப்பா யோசிச்சிருக்கேன் போல ... “ என்று மானசீகமாக தலையை கொட்டி கொண்டாள்...


  அப்பொழுது ப்ரேம் அவனிடம் குனிந்து ,
  “டேய் மச்சான்.... இதுவா நான் நேற்று போய் கூட்டிட்டு வந்த பொண்ணு
  ? நேற்று ரொம்ப சுமாரா இருந்தாங்க.. இப்ப எப்படிடா இவ்ளோ சூப்பரா ஆயிட்டாங்க..
  அதுதான் மேக்கப்போட ரகசியமா? பொண்ணுங்க எப்பவும் ஒரு ஹேன்ட் பேக் ஓட சுத்திகிட்டு இருக்க இதுதான் காரணமா...

  மச்சான்...
  இப்ப புரியுது நீ ஏன் இந்த பொண்ணை செலெக்ட் பண்ணினனு... செமயா இருக்காடா”

  “டேய்
  , பாத்து.. ஷி இஸ் மை வைப்..யுவர் சிஸ்டர்...” பழய நினைப்புல சைட் அடிச்ச கொன்னுடுவேன்” என்று முறைத்தான் ஆதித்யா..
  "ஹீ ஹீ ஹீ சாரிடா... இனிமேல்
  அப்படி பார்க்க மாட்டேன்.. எனக்கு என்ன பொண்ணுங்களா இல்ல... ஏன் என் ஸ்ரேயா வர்றா ... அவளையே கவனிச்சுக்கறேன்.. நீ உன் வைப் ஐ சைட் அடிக்கிற வேலையை கன்டினுயூ
  பண்ணு.. “ என்று புலம்பியவாறு நகர்ந்தான்..

  பவித்ரா மணமேடை அருகில் வந்து அவனிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே அமர்ந்தாள்.
  நிமிர்ந்தும் இவனை பார்க்கவே இல்லை.. அவன் பார்வை மட்டும் அவளை விட்டு அகல வில்லை..

  ஐயர் பவித்ரா வை பார்த்து
  “அம்மா கொஞ்சம் நெருங்கி உட்காருமா. நடுவில நிறைய இடம் இருக்கு பாரு” என்றார்

  “நான் ஏன் உட்காரணும்.. வேணும் னா அவன் நெருங்கி உட்காரட்டும்” என்று திட்டிகொண்டே அசையாமல் இருந்தாள் பவித்ரா..

  அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டு மனதுக்குள் சிரித்து கொண்டே அவள் அருகில் நெருங்கி அமர்ந்தான் ஆதித்யா...


  “ஐயோ..
  நானே பேசாமல் தள்ளி உட்கார்ந்து இருக்கலாம்..எரும மாதிரி இப்படியா இடிச்சுகிட்டு உட்காருவான்” என்று திட்டி கொண்டெ ஐயர் சொன்ன மந்திரங்களை சொல்ல தொடங்கினாள் பவித்ரா...

  அதற்குள் சரண்யா அவளிடம் குனிந்து,

  “பவி
  , கொஞ்சம் சிரிடி.. மூஞ்சிய ஏன் இப்படி வச்சிருக்க.. எல்லாரும் பார்க்கிறாங்க பாரு “என்றாள்..

  “ரொம்ப தேங்ஸ் சிஸ்டர்.. நானே இவ கிட்ட எப்படி சொல்றது என்று யோசிச்சிட்டு இருந்தேன்.. நீங்களே சொல்லிட்டீங்க.. கொஞ்சம் என்ன நிறையவே சிரிக்க சொல்லுங்க“ என்று சிரித்தான் ஆதித்யா மெதுவாக...

  அதை கேட்டதும் பவித்ராவு க்கு, இந்த குரலை எங்கயோ கேட்டு இருக்கேனே “என்று இருந்தது..
  ஆனால் அவனை நிமிர்ந்து பார்க்க தைரியம் வரவில்லை.. ஒரு வழியாக ஐயர் மந்திரங்கள் எல்லாம்
  முடித்து மாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்கி ஆதியின் கையில் குடுத்தார்..

  ஒரு வெற்றி களிப்புடன் மாங்கல்யத்தை அவள் கழுத்தின் அருகில் கொண்டு வந்தான்..
  எதுவோ உந்த
  , பவித்ரா நிமிர்ந்து அவனை பார்த்தாள்..

  பார்த்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தாள்....

  “இவனா என் அருகில் அமர்ந்து இருப்பது? .. இவன் எப்படி இங்கே என்ற கேள்வி அவள் மனதில்
  ??” ..
  அவனோ இவளின் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக நானே தான் பேபி“ என்று குறும்பாக கண்ணடித்தான் தாலியை கையில் பிடித்தபடி.....
  ********தொடரும்*********
   
  Lachulals, fatima20, Charu and 4 others like this.
   
 3. anithasweetheart

  anithasweetheart Wings New wings

  Messages:
  377
  Likes Received:
  361
  Trophy Points:
  83
  Good starting
  Want regular updates
   
   
Loading...

Share This Page