பியூட்டி பிளவுஸ்கள்! - 1 (அவள் விகடன்)

Discussion in 'Sewing / Tailoring / Stitching' started by Rawalika, Apr 23, 2013.

 1. Rawalika

  Rawalika Contributor

  Messages:
  3,022
  Likes Received:
  29
  Trophy Points:
  0
  பியூட்டி பிளவுஸ்கள்! - 1

  நன்றி அவள் விகடன் - புதிய தொடர்
  பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்து... இன்று வரை பெண்களுக்கான ஆடைகளில் எப்போதுமே ஃபேஷன் அப்டேட் ஆகிக்கொண்டேதான் இருக்கிறது... கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல்! சென்னைப் பெண்களிடம் ஜனவரி மாதம் ஒரு ஃபேஷன் உருவாகிறது என்றால், அடுத்த சில நாட்களிலேயே கிராமத்து அக்காக்கள் வரை சென்று சேர்ந்துவிடுகிறது இப்போதெல்லாம்!

  இப்படி உடை விஷயத்தில் பெண்களின் தேடல் என்றும் தீராதது. குறிப்பாக, பிளவுஸ்! நூறு புடவைகளைப் புரட்டி ஒன்றை எடுத்துவிடுவார்கள். ஆனால் அந்தப் புடவைக்கான பிளவுஸை ஸ்டிட்ச் செய்து வாங்குவதற்குள், தாங்களே ஃபேஷன் டிசைனராக உருவெடுத்து, டெய்லர்களை தங்களுடைய காஸ்ட்யூம் டிசைனராக்கி, இறுதியில் அந்த வித்தியாசமான பிளவுஸை அணியும்போது... தன்னையே ஒரு செலிப்ரிட்டியாக உணரும் பெண்களை நாம் அறிவோம்.

  அவர்களின் அந்த ஜாக்கெட் காதலுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கத்தான், இந்த 'பியூட்டிஃபுல் பிளவுசஸ்' எனும் புதிய பகுதி!

  [​IMG]

  ஸ்கொயர் நெக், ரவுண்ட் நெக், வி நெக், த்ரீ ஃபோர்த் ஸ்லீவ், மெகா ஸ்லீவ், நாட், எம்ப்ராய்டரி, ஜரி வொர்க், சில்க் த்ரெட் வொர்க், பேக் பட்டன் என்று ஆரம்பித்த பிளவுஸ் டிசைனிங், இன்று நித்தமும் புதிய எண்ணங்களோடும் வண்ணங்களோடும் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

  நகரங்களில் பெருகி வரும் பொட்டீக் கடைகளும், பிளவுஸ் டிசைன் செய்து தருவதை பலரும் தொழிலாகவே எடுத்துச் செய்ய ஆரம்பித்து வெற்றி பெற்றிருப்பதும், ஜாக்கெட் விஷயத்தில் பெண்களின் தீரா தேடலுக்குச் சான்று.

  இனி, ஒவ்வொரு இதழிலும் ஃபேஷன் எக்ஸ்பர்ட்கள் உங்களுக்கு பிளவுஸ் டிசைனிங்கில் உள்ள அப்டேட்களை அள்ளித் தர வருகிறார்கள் இங்கு. கட்டிங், வொர்க், நெக் பேட்டர்ன் என்று எல்லாவற்றிலும் உங்களின் பிளவுஸ் டிசைனிங் இனி கலக்கப் போவது உறுதி. செய்முறையையும் சேர்த்தே தரவிருக்கிறோம்.

  பிரின்சஸ் கட், காக்ரா கட் உள்ளிட்ட கட்டிங்குகள், ஸ்பிரிங், சீக்வன்ஸ், குந்தன், ஜர்தோஸி, ஸ்டோன் முதலான வொர்க்குகள், பாட் நெக், கிளாஸிக் நெக், டீப் பேக் நெக், போட் நெக் போன்ற நெக் பேட்டர்ன்கள் என்று உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கப் போகின்றன இந்தப் பக்கங்கள்.
  [​IMG]
  இனி, விசேஷங்களில் 'டாக் ஆஃப் த லேடீஸ்’ ஆக உங்கள் பிளவுஸை மாற்றலாம். பிளவுஸ் டிசைன்களுக்கு ஆயிரங்கள் செலவழிப்பதற்குப் பதிலாக, பேட்டர்ன்-ஐ மட்டும் தைத்து வாங்கி, உங்கள் பிளவுஸ்களுக்கு நீங்களேகூட வொர்க் செய்துகொள்ளலாம். தையல் தெரிந்தவர்கள், ஒரு பிளவுஸ் எக்ஸ்பர்ட் ஆகி பொட்டீக் கடையும்கூட ஆரம்பிக்கலாம். எதுவும் உங்கள் சாய்ஸ்!

  அடுத்த இதழில் ஆரம்பமாகிறது அசத்தல் ஃபேஷன். இந்த ஃபேஷன் ரேஸை துவக்கி வைக்கப் போவது... சென்னை, 'ஆத்ரேயா பிளவுசஸ்’!

  - வே.கிருஷ்ணவேணி

  படம்: ரா.மூகாம்பிகை
   
  shanspriya1 and Srjee like this.
   
 2. Rawalika

  Rawalika Contributor

  Messages:
  3,022
  Likes Received:
  29
  Trophy Points:
  0
  பியூட்டி பிளவுஸ்கள்! - 2

  பியூட்டி பிளவுஸ்கள்! - 2


  நன்றி - அவள் விகடன்

  ஃபேஷன்
  வசந்தா ராஜகோபால்
  பெண்களைப் பொறுத்தவரை, புடவை எப்படியோ... ஆனால், பிளவுஸ் என்பதுதான் முக்கியம். அதற்காக அவர்கள் மெனக்கெடும் அழகே அழகு! அணிந்து கொள்ள வாகாக... புத்தம்புது டிசைன்களோடு... புதுமையான ஸ்டைலோடு... எனத் தேடித் தேடிக் களைத்தாலும், சரியானதை தேர்ந்தெடுக்காமல் ஓயமாட்டார்கள்!

  பிளவுஸை தேர்ந்தெடுப்பவர்களாக இருந்தாலும் சரி... இதையே ஒரு தொழிலாக மேற்கொள்பவர்களாக இருந்தாலும் சரி... உங்கள் அத்தனை பேருக்குமே வழிகாட்டத்தான்... 'பியூட்டி பிளவுஸ்கள்!'

  இதோ... உங்களுக்கு வழிகாட்ட தயாராகிறார் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே இருக்கும் 'ஆத்ரேயா டிசைன்' உரிமையாளர் வசந்தா ராஜகோபாலன்.
  [​IMG]
  ''எங்களோட ஒரே நோக்கம் எல்லாத் தரப்பினரும் அவங்கவங்க எதிர்பார்க்கற டிசைன்களை அடை யணும்கிறதுதான். 1993-ம் வருஷத்துல என்னோட கணவர் ராஜகோபாலன் துணையோடு சின்ன பட்ஜெட்ல ஆரம்பிச்சதுதான் இந்த 'ஆத்ரேயா'! இப்போ பல பேரோட பேராதரவால முப்பதுக்கும் மேற்பட்ட ஆட்களுக்கு வேலை கொடுக்கற அளவுக்கு வளர்ந்திருக்கு. இதைவிட வேற என்ன வேணும்?'' என்று பெருமையோடு சொல்லும் வசந்தாவின் சொந்த ஊர் திருச்சி.

  ''சென்னையிலதான் வாக்கப்பட்டேன். திருமணம் ஆகி இங்க வந்த பிறகுதான் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். ஏதாவது ஒரு விஷயத்துல முழுமையா ஈடுபடலாம்னு யோசிச்சப்பதான்... பெண்களுக்கு முழுக்க முழுக்க பிடித்தமான வகையில, முழு ஃபிட்னஸ் கொடுக்கக்கூடிய வகையிலான பிளவுஸ் அவ்வளவா கிடைக்கறதில்லைங்கற விஷயம் என் மனசுல பட்டுச்சு. இதையே கையில எடுத்தா என்னனு தோணுச்சு. அப்படி உருவானதுதான் இந்த ஆத்ரேயா.

  ஆரம்பத்துல, இரண்டு தையல்காரர்களை வெச்சு, ஒவ்வொரு வாடிக்கையாளர்கிட்டயும் என்ன சைஸ் வேணும்கிறதை முதல்ல குறிச்சுக்கிட்டோம். 32, 34, 36 இப்படி சில முக்கியமான அளவுகள மட்டும் கையில எடுத்துட்டு... ரெடிமேட் பிளவுஸ் செய்ய ஆரம்பிச்சோம்... நல்ல வரவேற்பு! அது அப்படியே படிப்படியா வளர்ந்துதான்... இந்த இடத்துக்கு வந்திருக்கோம்!'' என்று சொல்லும் வசந்தா, ''சாதாரணமா ஒரு பிளவுஸுக்கு 150 ரூபாய் வாங்குறோம். லைனிங்கா இருந்தா... 300 ரூபாய் வித் லைனிங் கிளாத்தோட. இது பேஸிக். டிசைனர் பிளவுஸ்னா... டிசைன்களுக்கு தகுந்தபடி விலை மாறுபடும்'' என்றவர், வாசகிகள் கற்றுக் கொள்வதற்காக பிளவுஸ் டிசைன் ஒன்றை பரபரவென தன் ஆட்களின் மூலமாக அசத்தலாகச் செய்து காட்டினார்.

  தேவையான பொருட்கள்: ஆயில் பேப்பர் (டிரேஸ் பேப்பர்), பிளவுஸ் துணி, மண்ணெண்ணெய், சில்க் காட்டன் நூல் மற்றும் சிவப்பு கலர் நூல், ஜமிக்கி (சீக்குவன்ஸ்), கோல்ட் கலர் ஜர்தோஸி கோரா (ஸ்பிரிங் டைப்), ஆரி ஒர்க் ஊசி, சாக் பவுடர் (டிரேசிங் பவுடர்).

  செய்முறை: பிளவுஸ் துணியை விரித்து வைத்து கழுத்து மற்றும் கை டிசைன்களுக்கான அவுட் லைன்களை மார்க்கர் கொண்டு வரைந்து கொள்ளவும் (படம் - 1). துணியில் அவுட் லைன் செய்த அளவுக்கு ஏற்ப, டிரேஸ் பேப்பரில் விருப்பமான ஏதாவது ஒரு டிசைனை வரைந்து கொண்டு, அதை அப்படியே பிளவுஸ் கிளாத்தில் அவுட் லைன் வரைந்திருக்கும் பாகத்தில் வைக்கவும். பிறகு, சாக் பவுடரில் மண்ணெண்ணெயை சிறிதளவு ஊற்றி கலந்து, தடிமனான காட்டன் நூலை (பம்பரக் கயிறு போன்றது) இந்தக் கலவையில் நனைத்து எடுத்து, டிரேஸ் பேப்பர் மீது வைத்து தேய்க்கவும் (படம் - 2). இப்போது டிசைன் அப்படியே துணி மீது அழகாகப் படிந்திருக்கும் (படம் - 3).

  அடுத்து, சில்க் காட்டன் நூலைக் கொண்டு அவுட்லைன் டிசைன்களின் அனைத்து பார்டர்களையும் கோத்துக் கொள்ளவும் (படம் - 4).

  பிறகு... படம் 5-ல் காட்டியுள்ளது போல, சில்க் காட்டன் நூலைக்கொண்டு டிசைன்களை கோக்கவும். படம் 6-ல் உள்ளது போல் டிசைனுக்குத் தகுந்தாற்போல் கோல்ட் கலர் ஜர்தோஸி கோராவை (ஸ்பிரிங் டைப்) கட் செய்து கொள்ளவும். அதை ஆரி ஒர்க் ஊசியை கொண்டு படத்தில் காட்டியுள்ளது போல கோக்கவும்.

  அடுத்து ஜமிக்கிகளையும் இடையிடையே உங்களுக்கு விருப்பமான விதத்தில் மாற்றிக்கூட கோத்துக் கொள்ளலாம் (படம் - 7).

  இறுதியாக படத்தில் காட்டியுள்ளதுபோல கலர் ஸ்டோன்களை இடையில் வைத்து கோத்து முடிக்கவும் (படம் - 8).

  [​IMG][​IMG]

  தேவையென்றால் சில்வர் ப்ளஸ் கோல்ட் கலர் ஸ்பிரிங் டைப் ஜர்தோஷி கோராவையும் இந்த டிசைனைச் சுற்றி கோக்கலாம் (படம் 9). இப்போது பாருங்கள்... அனைவரையும் அசத்தும் அழகான ஒரு டிசைன் ரெடி!

  இதே போல் பின் கழுத்துப் பகுதி (படம் 10) மற்றும் கை பார்டர் உள்ள இடங்களில் வரிசையாக இந்த டிசைன்களை மேலே சொன்னதுபோல் கோக்கவும்.

  - தைப்போம்...
  - வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்
  மாடல்: தீப்தி பிரசன்னா​
   
  Srjee likes this.
   
 3. Mathu8

  Mathu8 Wings New wings

  Messages:
  986
  Likes Received:
  4
  Trophy Points:
  18
  Hello Rawalika,

  Super design...Thanks for sharing
   
   
 4. rosetamil1

  rosetamil1 Contributor

  Messages:
  2,484
  Likes Received:
  15
  Trophy Points:
  0
  Hi Rawalika,

  Nice Design,Thanks for sharing.
   
   
 5. Rawalika

  Rawalika Contributor

  Messages:
  3,022
  Likes Received:
  29
  Trophy Points:
  0
  பியூட்டி பிளவுஸ்கள்! - 3

  பியூட்டி பிளவுஸ்கள்! - 3


  காவியா ஸ்பெஷல் பிளவுஸ்!

  Thanks - vikatan - வசந்தா ராஜகோபாலன்

  ''சென்ற முறை பிளெய்ன் பிளவுஸில் வேலைப்பாடுகள் செய்வது பற்றிப் பார்த்தோம். இப்போது பார்டர் வைத்த பட்டுப் புடவையின் பிளவுஸில் என்ன மாதிரியான வேலைப்பாடுகள் செய்யலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.

  பட்டுப்புடவையின் பார்டர் டிசைன்தான்... பெரும்பாலும், அதற்குரிய பிளவுஸிலும் இருக்கும். எனவே, அந்த பிளவுஸ் பிட்டில் உள்ள பார்டர் டிசைனின் வடிவத்துக்குத் தகுந்தாற்போல பிளவுஸில் வேலைப்பாடுகளை செய்யலாம். எங்களிடம் பிளவுஸ் தைக்க வருபவர்கள் பலரும் செய்து தரச்சொல்லி கேட்பது, இந்த 'காவியா ஸ்பெஷல்' டிசைனைத்தான்'' என்று சொல்லும் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள 'ஆத்ரேயா பிளவுஸஸ்’ உரிமையாளர் வசந்தா ராஜகோபாலன், அந்த டிசைனை உங்களுக்காக செய்து காட்டுகிறார்.

  தேவையான பொருட்கள்: பட்டுப் புடவையின் பிளவுஸ் துணி, பிங்க் நிற நூல் மற்றும் சில்க் காட்டன் நூல், தங்க நிற ஜர்தோஸி கோரா (ஸ்பிரிங் டைப்), ஜமிக்கி சீக்குவன்ஸ், கோல்டு பிளேட்டேட் மணிகள், டிரேஸ் பேப்பர், டிரேசிங் பவுடர், மண்ணெண்ணெய், ஆரி வொர்க் ஊசி, வெள்ளை நிற காட்டன் நூல்.

  செய்முறை:
  முதலில், ஒரு சின்ன கப்பில் தேவையான அளவு டிரேசிங் பவுடரை கொட்டி, மண்ணெண்ணெயை ஒரு சில சொட்டுக்களை விட்டு, வெள்ளை நிற நூல்கொண்டு நனைத்து வைத்துக் கொள்ளவும் (வெள்ளை நூல் தவிர வேறு எந்த நிற நூலையும் பயன்படுத்த வேண்டாம். சிலநேரம் கலர் காட்டன் நூலில் உள்ள நிறம், துணியைச் சேதப்படுத்திவிடக் கூடும்).

  படம் 1: பிளவுஸின் கை டிசைனை எந்த அளவு வரை வெட்டப் போகிறோமோ... அந்த அளவுக்கு அவுட்லைன் வரைந்து கொள்ளவும்.

  படம் 2: பிளவுஸில் கைக்கான பார்டர் பகுதி மீது, உங்களுக்கு விருப்பமான டிசைன்கள் வரையப்பட்ட டிரேஸ் பேப்பரை வைக்கவும்.

  படம் 3: டிரேஸ் பவுடர், மண்ணெண்ணெய் கலவையில் நனைக்கப்பட்ட வெள்ளை நிற காட்டன் நூலை, டிரேஸ் பேப்பர் மீது தேய்க்கவும்.

  படம் 4: அந்த டிசைன் அப்படியே பிளவுஸ் துணியில் அழகாக பதிந்திருக்கும்.

  படம் 5: பிளவுஸில் வரும் வளைவு பார்டர் டிசைனுக்கான கோடுகளையும் வரைந்து, அதையும் பிளவுஸ் துணியில் ஏற்கெனவே வயைரப்பட்ட பெரிய டிசைனுக்கு அருகில் வைத்து, முன்பு சொன்னது போலவே காட்டன் நூல் கொண்டு தேய்க்கவும்.

  படம் 6: பிளவுஸுக்குள் வரையத் தேவையான குட்டிக் குட்டியான டிசைன்களையும் உங்களின் கற்பனைத் திறனுக்கேற்ப வரைந்து, துணியில் டிரேஸ் எடுத்துக் கொள்ளலாம்.

  படம் 7: இப்போது ஊசியைப் பயன்படுத்தி, சில்க் காட்டன் நூலைக் கொண்டு டிரேஸ் டிசைன் மீது தைக்கவும்.

  படம் 8: முதலில் வரைந்த பெரிய டிசைனை சுற்றி பிங்க் நிற காட்டன் நூலைக் கொண்டு, கோக்கவும். இதேபோல எல்லா பகுதிகளின் இடையேயும் போட்டு முடிக்கவும். பிளவுஸ் பார்டர்களின் வளைவுகளையும் பிங்க் நிற காட்டன் நூலைக் கொண்டு கோத்துக் கொள்ளவும்.

  [​IMG]

  படம் 9: இந்த டிசைனின் நடுப்பகுதியில் வெள்ளை ஜமிக்கியை வைத்து தைக்கவும்.

  படம் 10: தங்க நிற ஜர்தோஸி கோராவை வைத்து, நடுப்பகுதியிலிருந்து தைத்துக் கொள்ளவும். தங்க நிற மணிகளை, ஏற்கெனவே சில்க் கட்டன் நூல் கொண்டு தைக்கப்பட்ட டிசைனின் இடைவெளிகளில் வைத்துக் கோக்கவும்.

  படம் 11: சின்னச் சின்ன இடைவெளிகளில் (படத்தில் காட்டியுள்ளது போல்), சிறிய பட்டன் சைஸுக்கு பிங்க் நிற நூல்கொண்டு முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

  'காவியா ஸ்பெஷல்’ பிளவுஸ் ரெடி!

  ''இந்த பிளவுஸ் பிங்க் நிறத்தில் இருப்பதால், பிங்க் நிற காட்டன் நூலை தேர்ந்தேடுத்தோம். இதுபோல பிளவுஸின் நிறத்துக்கு ஏற்ப நூலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த 'காவியா ஸ்பெஷல்’ பிளவுஸ் டிசைன் எல்லா பெண்களுக்கும்... புடவையை ப்ளீட் வைத்தாலும், ஃப்ளோவாக விட்டாலும் பொருத்தமாக இருக்கும் என்பதோடு, புடவையின் மெருகையும் உங்களின் அழகையும் கூட்டிக் காட்டும்!'' என்று சர்டிஃபிகேட் தருகிறார் வசந்தா ராஜகோபாலன்.

  தைப்போம்...

  - வே.கிருஷ்ணவேணி, படங்கள்: ரா.மூகாம்பிகை

  மாடல்: ஐஸ்வர்யா​
   
  Srjee likes this.
   

Share This Page