அப்பா என் அன்பு அப்பா..

Discussion in 'Kaleidoscope (Life Snippets)' started by Maya, Jun 16, 2013.

 1. Maya

  Maya Wings

  Messages:
  2
  Likes Received:
  2
  Trophy Points:
  0
  அப்பா என் அன்பு அப்பா


  அப்பா உங்களின் நெஞ்சின் மீது ஏறி விளையாடியதில்லை,முதுகில் உப்பு மூட்டை ஏறியதில்லை,உங்கள் தோளில் சவாரி போனதில்லை,உங்களின் கண் வழியே இந்த உலகத்தை நீங்கள் எனக்கு காட்டியதில்லை. ஒரு சராசரி இந்தியனாக பெண் குழந்தைகளான எங்களை தூரவே நிறுத்தினீர்கள்,கண்டிப்பும் கறாறுமாகவே வளர்த்தீர்கள்.

  "சொல்லிக்கொடுத்ததில்லை,
  திட்டியதும் இல்லை,
  இல்லை.. வேண்டாம்
  என்றும் சொல்லியதில்லை,
  இருந்தும் எதோ ஒன்றினால்
  கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு"


  உங்களின் அதீத கண்டிப்பு,அன்பை வெளிபடுத்தாத தன்மை என்னை எப்போதும் உங்களை விட்டு எட்டவே நிறுத்தியது.வாழ்க்கையின் அதி முக்கிய முடிவுகள் அனைத்தையும் எனக்கென முடிவெடுக்கும் வயது வந்ததும் உங்களை உதாசீனபடுத்தி விட்டு நானே சுயமாக படிப்பு,வேலை,வெளிநாடு,கல்யாணம் என அனைத்து முடிவுகளையும் எடுத்து உங்களை காயபடுத்தினேன்.


  எனக்கு உங்கள் மீது சிறுதும் அன்பில்லை என அனைவரும் நினைத்தது போல தான் நானும் நினைத்திருந்தேன் பா, ஆனால் இவர் "உனக்கு உன் அப்பாவை பிடிக்காதுனு சொல்லிட்டு எப்பவும் அவர் புராணமே பாடிகிட்டு இருக்க" உங்க அப்பாவை ஏன் பிடிக்காது? அவர் அதிகம் பேசுவதில்லை,அன்பை காட்டுவதில்லை,எங்கு போனாலும் உன்னுடனே வருகிறார்,அமைதியாக ஒரு வார்த்தையில் உன் வாழ்க்கை முடிவுகளை எடுக்கிறார்" இது தானே ?? ஆனால் இதே காரணங்களுக்காக தானே நீ என்னை நேசிப்பதாக கூறினாய்;நேசிக்கிறாய் என பொட்டிலடிதார் போல கூறிய பொது தான் பா நான் உங்களை எவ்வளவு நேசிக்கறேன் என என் மரமண்டைக்கு விளங்கியது.

  உங்களை பிடிக்கவில்லை எனில் எப்படி உங்களை போலவெ எப்படி ஒரு கணவரை தேர்தெடுத்து இருபேன்.

  என் தவறை உணர்ந்ததும் உங்கள் மீது பாசம் காட்ட ஆரம்பிதேன் ஆனால் உங்களின் உண்மையான முகம் நான் தாயானதும் தான் நான் உணர்ந்தேன் பா, எனக்கு கிடைக்காத பாக்கியம் அனைத்தையும் என் மகளுக்கு கொடுத்தீர்கள். உங்களை அவள் ஒரு பொம்மை,வரம் கொடுக்கும் சாமி, எங்களை மிரட்ட உதவும் பூச்சாண்டியாக தான் பார்த்தாள் ஆனால் எனக்கு அன்பின் முழு உருவமாக தெரிந்திர்கள் நீங்கள்.

  அதிகம் பேசியதில்லை அப்பா நீங்கள் ஆனால் ஒரு பார்வையிலும், புன்னகையாலும் உங்களின் அன்பை,பாதுகாப்பை எப்போதும் உணர்த்தினிர்கள் அப்பா.

  நான் இன்று வாழும் வாழ்க்கை,நல்ல பேர்,உதவும் குணம் என பலவும் நீங்கள் கற்று கொடுத்தது அப்பா ஆனால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கவே இல்லையே அப்பா. நான் அந்த பேச்சை எடுக்கும் போதெல்லாம் ஒரு சிரிப்பின் மூலம் மழுப்பி என்னை மன்னிப்பு கேட்க்கும் நிலைக்கும் நீங்கள் தள்ளியதில்லை. அப்பா இதற்கு முன் ஜென்மத்தில் என் அப்பா எப்படி இருந்து இருப்பார் என தெரியவில்லை ஆனால் இனி வரும் ஜென்மங்கள் அனைத்திலும் நான் உங்களின் மகளாகவே பிறக்க வேண்டும்.மறவாமல் உங்கள் சொல் பேச்சு கேட்பேன் அப்பா.:s1865:

  எல்லா பெண்களை போலவும் நீங்கள் தான் அப்பா என் நிரந்தர ஹீரோ,இந்த தலைமுறையில் பிறந்திருந்தால் உங்களின் கை பிடித்து "லவ் யு டாட் " என கண்டிப்பாக கூறி இருப்பேன் பா.


  எப்படி எப்படி எல்லாமோ தன்
  பாசம் உணர்த்துவாள் அம்மா.
  ஒரேயொரு கை அழுத்தத்தில்
  எல்லாமே உணர்த்துவார் அப்பா.

  முன்னால் சொன்னதில்லை,
  பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்,
  என்னைப்பற்றி பெருமையாக
  அப்பா பேசிக்கொண்டிருந்ததை.

  அம்மா எத்தனையோ முறை
  திட்டினாலும் உறைத்ததில்லை,
  உடனேயே உறைத்திருக்கிறது
  என்றேனும் அப்பாவின் முகம் வாடும்போது.

  உனது தந்தை எவ்வளவு அற்புதமானவராக
  இருக்கிறார் தெரியுமா என்று,
  நண்பர்கள் என்னிடம் சொல்லும்போது
  தான் தெரிந்தது,
  எத்தனை பேருக்கு கிடைக்காத தந்தை
  எனக்கு மட்டுமென.

  கேட்ட உடனே கொடுப்பதற்கு
  முடியாததால் தான்
  அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள் .

  எத்தனை பேர் நான் இருக்கிறேன்
  என்று சொன்னாலும்,
  அப்பாவைப் போல் யார் இருக்க இயலும்?.

  சொல்லிக்கொடுத்ததில்லை,
  திட்டியதும் இல்லை,
  இல்லை.. வேண்டாம்
  என்றும் சொல்லியதில்லை,
  இருந்தும் எதோ ஒன்றினால்
  கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு.

  வெளிப்படையாக நானும் காட்டியதில்லை,
  அவரும் காட்டியதில்லை,
  எங்கள் பாசத்தை.

  அம்மாவிடம் பாசத்தையும்
  அப்பாவிடம் நேசத்தையும்
  இன்றே உணர்த்துங்கள்.
  சில நாளைகள் இல்லாமலும் போகலாம்.


  லவ் யு அப்பா. உலகின் தலை சிறந்த அப்பாவிற்கு என் தந்தையர் தின வாழ்த்துகள்.


  உங்களின் அன்பு மகள்

  கவிதை: இணையம்
   
  venila likes this.
   
 2. shaadha

  shaadha Contributor New wings

  Messages:
  1,675
  Likes Received:
  29
  Trophy Points:
  48
  ஹாய் மாயா ..ரொம்ப அருமையா இருக்குது.. share பண்ணினதுக்கு ரொம்ப நன்றி..

  மிஸ் யூ டட்

   
  venila likes this.
   
 3. Maya

  Maya Wings

  Messages:
  2
  Likes Received:
  2
  Trophy Points:
  0
  Thank you saadhaa :)
   
  venila likes this.
   
 4. nayagam

  nayagam Wings New wings

  Messages:
  952
  Likes Received:
  7
  Trophy Points:
  18
  hi maya
  thank youma
   
   
 5. anuarun

  anuarun Contributor New wings

  Messages:
  3,857
  Likes Received:
  15
  Trophy Points:
  38
  Hi Maya,

  Thnxs for sharing. very nice.
   
   
Loading...

Share This Page